வர்ணம் 22
அத்தியாயம் - 22
வெங்கட்ராமன் அவரின் வயது 75 மனைவி சீதாவின் வயது 70 இருவருக்கும் திருமணம் ஆகி வெகுகாலமாக குழந்தையே இல்லாமல் இருக்க, கிட்டத்தட்ட அவரின் ஐம்பதாவது வயதில் தான் ஜானகி பிறந்து இருக்க, குழந்தைக்காக ஏங்கி ஏங்கி தவித்து ஜானகி கிடைத்ததாக என்னவோ ஜானகி மீது உயிரையே வைத்திருந்தார்கள் அவர்களின் வாழ்க்கையின் ஆணிவேரே ஜானகியாக இருந்தாள்.. ஆனால் ஜானகிக்கு பிறந்தது அடிக்கடி ஏதாவது உடல் நிலை சரியில்லாமல் போகும்..
அதை எல்லாம் மீறி ஜானகியும் நன்றாக படித்து வேலைக்கு செல்லும் போது தான் நிரஞ்சனை சந்தித்து அவனை தான் திருமணம் செய்வேன் என பிடிவாதமாக இருவரும் திருமணம் செய்து கொள்ள, இரு வீட்டாருக்கும் பெரிய விருப்பங்கள் இதில் இல்லை என்றாலும் அவரவர் பிள்ளைகளுக்காக இந்த திருமணத்தில் இணைந்து போக, அவர்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு பரிசாக ஆதிரா கருவுற்று இருக்க இரு பக்கமும் தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள்..ஆனால் பாவம் பிரசவம் ஜானகிக்கு அவ்வளவு இனிமையாக இல்லை பிரசவத்தின் போது அவளின் உடலில் உள்ள பிரச்சனையால் குழந்தை பெற்று ஒரு நாளில் எதிர் பாராத விதமாக ஜானகி மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றாள்..
ஆனால் தான் இறக்கும் தருவாயில் தன் கணவனிடமும் தன் தந்தையிடமும் சத்தியம் வாங்கி கொண்டு இறக்க, இருவரும் அந்த சத்தியத்தை காப்பாற்ற போராடுகிறார்கள் அவ்வளவுதான் விஷயம்.. அவன் பக்க விஷயத்தை எல்லாம் செய்து முடித்துவிட்டு இங்கு வர, வெங்கட்ராமன் நிரஞ்சன் மற்றும் கயலை பார்த்து, "நீங்க கேட்டதும் குழந்தையை கொடுக்க முடியாது எங்களுக்கோ வயசாயிடுச்சு இன்னும் எத்தனை காலம் நாங்கள் இருப்போம்னு தெரியாது எங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு சொத்து ஆதிரா மட்டும்தான் அவ ஒரு நல்ல கைக்கு போய் சேரனும் நீங்க நல்லவரு தான் குழந்தையோட அப்பா நீங்க ஆனால் உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையில் உள்ள உங்க மனைவியும் குழந்தை மீது அன்பாக இருக்காங்களான்னு எங்களுக்கு தெரிய வேண்டாமா? அதுவும் உங்களுக்கு பிடிக்காத கல்யாணம் பண்ணி இருக்கீங்க அப்படின்னு நான் கேள்விப்பட்டேன்.. தம்பி இந்த வயசானவனை ஏமாத்தி உனக்கு என்ன கிடைக்கப் போகுது சொல்லு" என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது கயல் ஆதிரா வந்தது முதல் ஆதிரா பின்னாலேயே இருக்க, ஆதிரா கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டி கொண்டாள்...
ஆதிராவுக்கு விளையாட்டு காட்டி கொண்டு இருக்க குழந்தை அவள் மடியிலேயே சிறுநீர் கழித்து விட, அவளோ சிறு அருவருப்பு கூட படாமல் குழந்தையை எடுத்து கொண்டு போய் குளியல் அறையில் வைத்து சுத்தப்படுத்தி சீதாவிடம் கொடுத்து அவளுடைய உடையையும் அப்படியே கழுவிக்கொண்டு வந்தவள் மீண்டும் குழந்தையோடு விளையாட ஆரம்பித்து இருந்தாள்..அவளை வேடிக்கை பார்க்கும் யாரையும் அவள் கண்டு கொள்ளவில்லை குழந்தை மீது தான் அவளுடைய கவனம் எல்லாம் இருந்தது..
அதை பார்த்த நிரஞ்சன் விழிகள் அமைதியாக கயலை பார்க்க கயலும் ஆதிராவை தூக்கி கொண்டு நேராக நிரஞ்சன் அருகே வந்தவள், "அப்பா சொல்லுங்க.. அப்பா இதுதான் ஆதிரா பாப்பாவோட அப்பா" என்று கூற அப்பா எனவும் குழந்தை வெங்கடராமனை பார்த்தது..
"அவரும் என்னடா பாக்குற அப்பாடா உன்னோட அப்பா" என்று சிரித்தபடி கூற குழந்தையும், "அப்பா" என கூறவும் நிரஞ்சனின் விழிகள் நிறைய துவங்கியது..
"அப்பா கிட்ட போறீங்களா நான் பால் போடுறேன்" என கூற ஆதிறாவும் சரி என கூற கயல் மெல்ல நிரஞ்சன் மடியில் குழந்தையை அமர வைக்க, ஆரம்பத்தில் சற்று ஆதிரா நெளிந்தாலும் போக போக கொஞ்சம் சாந்தம் ஆக, அவனுக்கு தன் மடியில் குழந்தை அமர்ந்ததும் அவனுடைய மன நிலையை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை..
அவனும் எவ்வளவோ முறை குழந்தையை எடுக்க முயற்சி செய்தும் கிடைக்காமல் இதோ இப்போது குழந்தை கயலின் மூலம் வந்து அவன் மடியில் அமரவும் அவனுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது..
அந்தக் காட்சியை கண்ட வெங்கட்ராமன் மற்றும் சீதா இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர்கள் அமைதியாக இருக்க, கயல் வெங்கட்ராமனை பார்த்து, "அப்பா" என்க, அவரோ அதிர்ந்து திரும்பி பார்க்க, "உங்களை அப்பா என்று கூப்பிடலாம்ல்ல ஏன்னா நான் என்னுடைய அப்பாவை பார்த்ததில்லை" என்க
அவரோ, "கூப்பிடு மா ஆனால் எனக்கு உன்னோட தாத்தா வயசு இருக்கும் மா" என கூறி சிரித்தார்..
அவளோ, "வயசுக்கும் உறவுக்கும் வித்தியாசம் இல்லைப்பா. நீங்க உங்க மகளுக்காக யோசிக்கிறீங்க அதே நேரம் அவரும் அவருடைய மகள் கூட இருக்கணும்னு ஆசைப்படுவார் தானே நீங்க அதையும் யோசித்து பார்க்கணும் அவர் ரொம்பவே தவிச்சு போயிருக்காரு.. எங்க ரெண்டு பேரையும் பார்த்து நீங்க குழந்தையை கொடுக்காமல் இருக்காதீங்க நீங்க சொன்னதெல்லாம் உண்மைதான் என்னோட வீட்டிலும் இவரோட வீட்டிலேயும் இவருக்கு என்னைப் பற்றி எதுவுமே சொல்லாமல் கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க அந்த கோபத்தில் தான் அவர் வீட்டை விட்டு வெளியே வந்துட்டார் மத்தபடி எதுவும் இல்லை எங்களுக்குள்ள பெருசா எந்த உறவும் பலப்படலைனாலும் சண்டையும் இல்ல சார் மேல ரொம்ப மரியாதை வச்சு இருக்கேன் ரொம்ப நல்லவரு அவர் மனசுக்குள்ள ரொம்ப வலி இருக்கு நீங்க அதை புரிஞ்சுக்கணும்" என அவனுக்கு துணையாக பேச அதை கேட்டு அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.. அதேபோல ஆச்சரியம்தான் வெங்கட்ராமன் மற்றும் சீதா ஜோடிக்கும் இருந்தது..
"எனக்கு புரியும் மா.. அவரைப் பற்றி எனக்கு நல்லா தெரியும்.. அவரும் நல்லா இருக்கணும் அப்படின்னு நினைச்சு தானே இந்த கல்யாணம் பண்ணினால்தான் குழந்தையை கொடுப்பேன்னு பிடிவாதமா இருந்தேன் அவர் சொக்க தங்கம் யார் இல்லை என்று சொன்னா அவருக்கு என் மேல வருத்தம் இருந்தாலும் எனக்கு எப்போதும் அவர் மீது வருத்தம் இருக்காது மா.. குழந்தையை பார்க்க நீங்க எப்ப வேணுமானாலும் வாங்க குழந்தையோடு விளையாடுங்க நான் அதற்கெல்லாம் தடை சொல்ல மாட்டேன் முதலில் உங்க ரெண்டு பேரும் வாழ்க்கையும் எப்படி போகுதுன்னு பார்த்துட்டு நான் ஆதிராவை உங்க கையில ஒப்படைக்கிறேன் இது ஜானகியின் அப்பாவா எனக்குள்ள இருக்கிற எண்ணம் அதற்கு மட்டும் தடை விதிக்காதீங்க.. உங்க கிட்ட எல்லாம் சண்டை போட்டு எனக்கு என்ன கிடைக்கப் போகுது?" என்று அவர் பொறுமையாகவும், நிதானமாகவும் அதே நேரம் தான் நினைத்த விஷயத்தில் நிலையாகவும் அவர் நின்று கூற அதற்கு மேல் என்ன சொல்வது என இருவருக்கும் தெரியவில்லை..
அங்கு வந்த பின் வெங்கட்ராமனின் மனநிலையை பற்றி நேரடியாக புரிந்த அவனுக்கு ஏனோ மனம் லேசாகியது போல இருந்தது...
அந்த நொடி நிரஞ்சனின் கைகளில் அவனுடைய மகள் இருக்கிறாள்.. அது மட்டும் தான் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது..சரி கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையுடன் பழகி அழைத்து செல்லலாம் என முடிவு செய்தான் அவன்..
திடீரென குழந்தை அழைத்துச் சென்றால் குழந்தைக்கு சிரமமாக இருக்கும் குழந்தை பிறந்த தினத்தில் இருந்தே சீதாவின் அரவணைப்பிலும், வெங்கடராமனின் அன்பிலும் தான் வளர்ந்து கொண்டு இருக்கிறாள்.. வேரோடு அப்படி எல்லாம் பிடுங்கி எரிய முடியாது என்பதை நிரஞ்சன் புரிந்து கொண்டு மனமே இல்லாமல் அவ்விடம் விட்டு சென்றான்..
அவளும் வரும் வழியில், "சார் நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க அவங்க ஆதிராவை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு நம்பிக்கை வந்தா மட்டும் தான் குடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.. அப்புறம் என்னை மன்னிச்சிடுங்க உங்க அனுமதி இல்லாமலேயே எனக்கு தோணினதை நான் பேசிட்டேன்" என்க
"நீ உண்மையைத்தானே பேசின அதுக்கு எதுக்கு மன்னிப்பு உண்மையில் நான் உனக்கு நன்றி தான் சொல்லணும் உன்னால தான் என் குழந்தையின் ஸ்பரிசத்தை என்னால உணர முடிஞ்சது... எனக்கும் தெரியும் என்னால சண்டை போட்டு குழந்தையை வாங்கிட்டு வர முடியாமல் இல்லை.. ஆனால் மகளை இழந்து தவிச்சிட்டு இருக்காங்க இந்த சமயம் நானும் சேர்ந்து பிரச்சனை பண்ண கூடாதுன்னு சொல்லித்தான் அமைதியா இருக்கேன்.. பரவால்ல என் குழந்தையை ரொம்ப நாளா பாக்கணும்னு ஆசைப்பட்டேன்.. இப்ப பார்த்துட்டேன் எனக்கு இப்போதைக்கு அது போதும் மெல்ல மெல்ல என் குழந்தை என்கிட்ட வரட்டும் வீக் எண்ட்ல போய் குழந்தை கூட இருக்கலாம்" என கூறினான் அவளும் சரியென கூறி விட்டாள்.. அந்த வகையில் கயல் மற்றும் நிரஞ்சனின் மனங்கள் ஒற்றுமையாக இருந்தது..
அவனுக்கோ எப்படி குழந்தையை அவரிடம் இருந்து மீட்டெடுப்பது என இருந்தது என்னதான் கூறினாலும் குழந்தையை விட்டுவிட்டு வர மனமில்லை சரி இப்போதைக்கு இப்படி போகட்டும் என நினைத்து விட்டான்.. அப்படி இருக்க இப்படியே ஒரு வாரம் போனது கூட தெரியவில்லை.. நாளை ஆதிராவை பார்க்க செல்ல வேண்டும் என எண்ணி அவன் குழந்தைக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி கொண்டு வந்து வைத்து விட்டான்..
அதை பார்த்த அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது..அவனுள் இருக்கும் அந்த பாசத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது..அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என அவள் நினைக்க அது நடக்க முடியாத படி ஒரு காரியம் ஒன்று நடந்தது..
ஆம் அடுத்த நாள் மாலை ஆதிராவை காண செல்லலாம் என இருக்கும் போது காலையிலேயே அவளுக்கு ஒரு ஃபோன் வந்தது..ஆம் கிஷோரின் நண்பன் தான் கிஷோரின் நம்பரில் இருந்து அழைத்திருந்தான்.. கிஷோருக்கு விபத்தாகி விட்டது அவன் ஐசி யூ வில் இருக்கிறான் என கூற அதை கேட்டதும் அவளுக்கு இடியே விழுந்தது போல இருந்தது..
ஆம் அவளுக்கு எதுவும் தலைக்கு ஏறவில்லை..கிஷோர் மட்டும் தான் நினைவில் இருக்க வேகமாக அவனை காண செல்ல தயாராக, அதை கண்ட நிரஞ்சன், "எங்க போற?" என கேட்டான்..
அவளோ அவனை கண்டதும் பதறி போய் இந்த சமயத்தில் கிஷோரின் பெயரை கூற வேண்டாம் என நினைத்து, "என்னோட பிரண்டுக்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிட்டல இருக்கா பார்க்க போகணும்" என்று கூற அவளின் பதட்டத்தையும் அவளின் முகத்தில் தெரிந்த கவலையும் பார்த்தவன் சரி என மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்காமல் விட அவளும் சென்று விட்டாள்…
