வர்ணம் 20

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 56
Thread starter  

அத்தியாயம் - 20

"அதுக்குன்னு நம்ம ரெண்டு பேரும் பேசாம இப்படியே இருக்க சொல்றியா? இங்க மட்டும் தான் நாம ரெண்டு பேரும் பார்த்துக்கிறோம் அதுவும் வேண்டாம் என்று சொன்னா என்ன அர்த்தம்? நீ படி உன்னோட நிலைமை எனக்கு நல்லா தெரியும்.. உன்னை யாரு வேண்டாம்னு சொன்னது ஆனால் என்னால் உன்னை பார்க்காமல் ஒதுங்கி எல்லாம் இருக்க முடியாது.. சரி அப்போ தினமும் என் கூட வெளில ஊர் சுத்த வருவியா என்னை பார்த்து சொல்லுடி" என கிஷோர் கேட்க

"என்ன சொல்றது? எனக்கு வெளியில சுத்துற பழக்கம் எல்லாம் இல்ல..நான் அப்படி வரவும் மாட்டேன்.. நான் சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்" என அவள் கூற,

"இதோ பார் என்னால உன்னோட இஷ்டத்துக்கு எல்லாம் வாழ முடியாது...சார் அப்படி சொன்னாலும் நான் கேட்க போறது இல்லை நீ என்னோட சொத்து.. நீ வேணும்னா அவருக்காக பயந்துட்டு இப்போ இப்படி பேசலாம் ஆனால் இவரால என்னை கன்ட்ரோல் எத்தனை நாளைக்கு பண்ண முடியும்? நான் காலேஜ் விட்டு வெளியே போறது வரைக்கும் தானே அதுக்கு மேல அவரால என்னோட எதையும் டச் பண்ண முடியாது.. அவர் சொன்னதுக்கு எல்லாம் நீ பயந்து சாகணும்னு இல்ல புரியுதா?? அவரு இந்த காலேஜ் கேம்பஸ் உள்ள தான் நம்மளை கண்ட்ரோல் பண்ண முடியும் வெளியே நம்மளை கன்ட்ரோல் பண்ண முடியாது"

அவளுக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை..அவள் வந்ததில் இருந்து அவனுடைய முகத்தை பார்க்காமல் பேச அவனுக்கு ஒரு மாதிரியாக இருக்க, "என்னை பார்த்து பதில் சொல்லு டி" என அவளின் முகத்தை நிமிர்த்தி பார்க்க அவளின் முகம் வீங்கி இருப்பதை பார்த்தான் கிஷோர்..

அவன் சட்டென்று இப்படி செய்வான் என அவள் எதிர்பாராத காரணத்தினால் அவளுக்கு பக்கென இருக்க, "என்ன டி இது முகம் வீங்கி இருக்கு" என அவன் பதறி கேட்டான்..

"அது வந்து ஒன்னுமில்லை கதவுல இடிச்சுக்கிட்டேன்.. அதுல இருந்த ஒரு கம்பி கிழிச்சு விட்டிருச்சு_ என்று வாய்க்கு வந்த பொய்யை திணறிக்கொண்டு அவள் கூற அவளின் முகத்தை ஆழமாக பார்த்த அவனும், "யாரோ அடிச்ச மாதிரி இருக்கு" என சந்தேகமாக கேட்க, அவளோ பதறி, "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல கிஷோர்" என்றாள்..

அந்த நேரம் கிஷோர் அவளின் கன்னத்தை மிருதுவாக வருடி கொடுத்து, "நிஜமா தான் சொல்றியா?" என கேட்டான்..அவளோ அவனின் தொடுகை அவளுக்கு என்னவோ போல இருந்தாலும் அவனின் உண்மையான அன்பை பார்த்தும் நிரஞ்சன் தாலி கட்டிய பின் அவளின் மனதில் பல குழப்பங்களுக்கு இடையே இவனின் அன்பை உணரக்கூட முடியாமல் தவித்து வரும் அவள் மனதை வெளிப்படுத்தவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கயல், "ஆமாம் கிஷோர் ஒன்னும் இல்ல சரியாயிடும் நான்தான் கவனிக்காம போய் இடிச்சிக்கிட்டேன்" என்று கூறிக் கொண்டிருக்க, அவனும் அவளின் கன்னத்தில் இருந்து கையை எடுக்காமல் மெல்ல வருடி கொடுக்க அதை தூரமாக நின்று இவர்களையே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிரஞ்சன் கண்கள் மேலும் அழுத்தம் ஆகியது..

அவனுள் ஏனோ அந்த காட்சி அவனை மேலும் அழுத்தத்துக்கு கொண்டு செல்வது போல இருக்க, "காலேஜ்க்குள்ள என்ன கருமம் எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க" என்று தான் அவன் நினைத்தான்.. அவனுடைய கண்களுக்கு அவள் கன்னத்தை கிஷோர் தடவிக் கொண்டிருக்கிறான் இவளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ன ஒரு தைரியம் இரண்டு பேருக்கும் இருக்கும் என நினைத்தவனுக்கு இன்று காலை கயல் பேசியதை நினைவு கூர்ந்து கயலின் மீது தான் கூடுதலாக ஆத்திரம் வந்தது..

அந்த நேரம் அவன் தான், 'குழந்தை கிடைத்ததும் என் வாழ்க்கையை விட்டு வெளியே போய்விடு நீ உன் காதலுடன் போய்விடு' என்று கூறியதை அவன் மறந்து விட்டான்..

அவர்களின் நெருக்கம் அவனுக்கு அந்த நொடி பொறுக்கவில்லை..இவள் என்னிடம் இருக்கும் வரை மரியாதையுடன் அவனிடம் பேசாமல் இருந்து தான் ஆக வேண்டும் என்ற அகங்காரம் நிரஞ்சனுக்கு வந்தது.. அது ஒரு வித அழுத்தத்தை கொடுத்தது காலையில் அவன் செய்த செயலுக்கு வருத்தமாக அவன் இருந்தாலும் இந்த காட்சி அவனுக்கு உவப்பானதாக இல்லை.. அதனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த காட்சியால் காலையில் நடந்த நிகழ்ச்சி அவன் முழுவதுமாக மறந்து விட்டான்...

அப்படி இருக்க இன்று அவளை எச்சரிக்கை செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டான்...

கிட்டத்தட்ட இந்த கல்லூரிக்கு வந்து அவன் ஒரு மாதத்திற்கு மேலாகி இருந்தாலும் இதுவரை அவளை அவன் கண்டதில்லை.. அவன் தாலி கட்டிய பின் தான் இரண்டு நாட்களாக அவன் கண்களுக்கு அவள் மட்டும் தான் தெரிகிறாள்.. அது என்ன மாயம் என தெரியவில்லை.. அவனைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தாலும் அவள் எங்கு நின்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி, மிகச்சரியாக அவனின் கண்களுக்கு துல்லியமாக தெரிந்து விடுகிறது..

அது அவனுக்கு எரிச்சலை கொடுக்க, தன்னோடு இருக்கும் வரையாவது அவள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைத்தான்..அதனால் அன்றைய பொழுதும் கடுப்பாக இருந்தவன் வேண்டும் என்றே வகுப்பு இருக்கும் போது கிஷோரை வகுப்பு அறையில் இருந்து வெளியேற்றினான்..

கிஷோருக்கு நிரஞ்சனை பார்த்தாலே கடுப்பாக இருந்தது..அவரை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என கிஷோர் முடிவே செய்து விட்டான்..அப்படி இருக்க, மாலை ஆனதும் அவனோ நேரமாக வீட்டுக்கு வர அவளோ அவளுக்கு தேவையான துணியை மட்டும் எடுத்து கொண்டு வீட்டுக்கு வர அவனோ கடுகடு முகத்தோடு இருந்தான்..

அவளோ அவனை கண்டும் எதுவும் பேசாமல் அவளின் துப்பட்டாவை அவிழ்த்து கொண்டே அந்த அறைக்குள் செல்ல போக, "ஒரு நிமிஷம்" என்றான்..

அவளோ பதில் பேசாமல் நிற்க,

"இதோ பாரு என் கூட இருக்கிற வரைக்கும் அந்த கிஷோர் கிட்ட இருந்து தள்ளி இரு. இது காலேஜ் எப்படி இருக்கணும்னு உனக்கும் தெரியல அவனுக்கும் தெரியல பலரோட கண்களுக்கு காட்சியா இருக்கீங்க.. உனக்கெல்லாம் வெட்கமா இல்ல ஒரு ஒரு தடவை சொன்னா புரியாது" என அவன் கூற,

அவளோ, "அப்படி நான் என்ன பண்ணிட்டேன்" என கடுப்பாக கேட்டாள்.. ஏற்கனவே அவளுக்கு தலை வலித்துக் கொண்டிருக்க அதில் இவனுடைய கேள்வியும் இணைந்து கொள்ளவும் அவளுக்கு கோபம் வந்தது...

"ஏன் என்ன பண்ணனும்னு நான் என்னோட வாயில சொல்லனுமா அதுதான் ஊரே பார்த்துச்சே. அவன் உன்னுடைய கன்னத்தை தடவுறதை" என்று கூற, அதைக் கேட்டதுமே அவளுக்கு புரிந்து போனது சார் இதையும் பார்த்துவிட்டார் என அதனால், "இத பாருங்க சார் நாங்க விலகி தான் இருக்கோம் சும்மா எங்களுக்கு குறை சொல்லிட்டே இருக்காதீங்க.. நீங்க நினைக்கும் மாதிரி நானும் கிஷோரும் தப்பான ஆளுங்க எல்லாம் கிடையாது" என்று கூற

"ஓ அப்படியா??.. கிஷோர் ரொம்ப நல்லவனா அவன் எத்தனை தடவை சஸ்பெண்ட் ஆகி இருக்கான்னு அவன்கிட்டயே கேளு என்ன சப்போர்ட்டா? அப்படித்தான் சொல்லுவேன் ஏன்னா நீ இப்போ என்னுடைய பாதுகாப்பில் இருக்கிற அதை மறந்துடாத" என அவன் கூற,

இவளோ மேலும் கடுப்பாகி, "அப்படிப்பட்ட பாதுகாப்பு எனக்கு தேவை இல்லை சார் நான் உங்க தேவைக்காக தான் உங்க வீட்ல இருக்கேன்.. அதை நீங்க மறந்துடாதீங்க" என்று அவள் பதில் கூறவும் பொதுவாகவே ஆண்களுக்கு எழும் திமிர் நிரஞ்சனுக்கும் எழுந்தது..

"என்ன எனக்காக இருக்கியா? புரியல அப்போ என்னுடைய மகளை என் கைக்கு கிடைக்கும் வரை நானா உன்னை பிடித்து வைத்திருக்க மாதிரி நீ சொல்ற?" என்று அவன் கூறவும்,

"அதை சொல்லித்தானே என்னை உக்கார வச்சிருக்கீங்க? காலேஜ்ல நான் யார் கூடவும் பேச கூடாதுன்னு சொன்னா என்ன அர்த்தம் கிஷோர் நான் காதலிச்சிட்டு இருக்க பையன் அவருக்கு, நமக்கு ரெண்டு பேருக்கும் நடந்த விஷயம் தெரியாது அப்படி இருக்கும்போது ஒரு காதலனா அவர் என்கிட்ட பேசறது இல்ல என்ன தப்பு?" என எதிர் கேள்வி கேட்க அந்தக் கேள்வி நிரஞ்சனை மேலும் சீண்டி விட்டது போல இருந்தது..

இவள் பார்க்கத்தான் அமைதியாக இருக்கிறாள். ஆனால் இவளிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனை சீண்டுவது போல இருக்க, அவனின் தன்மானம் சீண்டபட்டதை போல அவன் உணர்ந்தான்..

அப்படி இருக்க, அவள் பேச்சில் கடுப்பு ஆனவன் ஒரு அடி அவள் பக்கம் வந்து நின்று, "என்னோட தேவைக்கு இன்னும் நீ தேவையில்லை. என்னுடைய வேலையை பார்த்துக்க எனக்கு தெரியும்" என அவன் கடுப்பாக கூறினான்..

அவளோ,"அப்புறம் எதுக்கு என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்க அப்படியே விட்டு இருக்க வேண்டியது தானே குழந்தைக்காக தானே இரண்டாவது கல்யாணமே நீங்க பண்ணுனீங்க" என நிறுத்த,

அதை பார்த்தவன், "மேல சொல்லு" என்க,

அவளும், "இதோ பாருங்க சார் சும்மா நான் என்ன பண்ணனும் ஏது பண்ணனும்னு சொல்லிட்டு இருக்காதீங்க சார்.. எனக்கு தெரியும் என்னோட வாழ்க்கைய பார்த்துக்க.. நான் ஒன்னும் 90ஸ் கிட்ஸ் கிடையாது ஒவ்வொன்னுக்கும் அட்வைஸ் பண்ணிட்டு இருக்க.. நான் டூகே கிட்ஸ்.. எங்களுக்கு விவரம் தெரியும் நான் என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பண்றேன்.. எல்லா விஷயத்தையும் புரிஞ்சுதான் செய்கிறேன்..நீங்க சொன்னதைத்தான் நானும் சொல்றேன் உங்களுக்கு தேவை குழந்தை தானே அந்த குழந்தையை உங்க கையில் ஒப்படைச்சிட்டு நான் என்னுடைய வழியை பார்த்து போகிறேன் மத்தபடி நீங்க என்னை கட்டாயப்படுத்தாதீங்க சார் இதோட விடுங்க என்னால முடியல" என்றாள்..

அதை கேட்டவன் மேலும் அதிர்ந்து அவளை பார்த்து, "அப்போ நான் எதுவும் சொல்ல கூடாதுன்னு சொல்றியா??" என கேட்டான்.. அவளின் பேச்சு எல்லை மீறுகிறது என்ற எண்ணத்தில் அவன் ரொம்ப அவள் மீது ஆத்திரத்தில் நின்று கொண்டிருந்தான்... அவளை எப்படியாவது தான் நினைத்ததை செய்ய வைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் இருந்தான்..

அவளோ அதை எல்லாம் உணராமல் அமைதியாக இருக்க அதை கண்டவன், "காலேஜ் ப்ரொபஸரா நான் எதுவும் சொல்லக்கூடாது அப்படித்தானே? ஆனால் உனக்கு தாலி கட்டின புருஷனா உனக்கு நான் சொல்லலாம்ல" எனக்கூறி அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை தன் கைகளால் தூக்கி அவள் கண்முன்னே காட்ட கயல் அதிர்ந்தாள்..

அவனோ அழுத்தமாக அவளை பார்த்து, "என் கூட நீ இருக்கிற வரை எனக்கு பொண்டாட்டியாத்தான் நீ இருக்கணும் நீ அந்த கிஷோர் கூட இனி பேசக்கூடாது புரியுதா! இதை உன்னோட காலேஜ் ப்ரொபசரா சொல்லல.. உனக்கு தாலி கட்டின உன்னோட புருஷனா சொல்றேன் புரியுதா! என்கிட்ட ரொம்ப பேசிட்டு இருந்தேன் வை நானா கடுப்பில் உன் கூட வாழ ஆரம்பித்தாலும் ஆரம்பிச்சிடுவேன்.. நான் சொல்றதை கேட்டு நடந்தா உனக்கு நல்லது.. இல்லை அப்படின்னா காலத்துக்கும் இந்த நிரஞ்சனோட மனைவியா நீ வாழ்ந்து தான் ஆகணும்" என கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றான்...அவளோ அவன் செல்லும் திசையையே பார்த்து கொண்டு இருக்க, அவன் கடைசியாக பேசியது மட்டும் அவளுடைய செவியை விட்டு அகல மறுத்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top