வர்ணம் 19
அத்தியாயம் : 19
வெளியே சென்றவன் தன்னை தானே அறவே வெறுத்தான்.. "சீ என்னோட பிரச்சினைக்காக அவ கிட்ட போய் சண்டை போட்டுட்டேன் அந்த பெண்ணை அடிச்சிட்டேனே.. ஜானகி எனக்கு மட்டும் சொந்தம் அவளுடைய நினைவுகள் என்னை மட்டும் சார்ந்தது..அவளை இழந்தது என்னோட மன கஷ்டம் இதுக்காக அந்த பொண்ணை கஷ்டப்படுத்துறதில் அர்த்தமில்லை.. அந்த பொண்ணுக்கு எப்படி தெரியும்? நான் சொல்லி இருந்தா அந்த பொண்ணு செஞ்சி இருக்க மாட்டா தப்பு பண்ணிட்டேன் இனி இது போல இருக்க கூடாது இதுதான் முதலும் கடைசியும் இருக்கணும்" என்று நினைத்தவன் மிகவும் வருந்தி இருவருக்கும் உணவை வாங்கிக் கொண்டு வர அங்கு அவளோ அவனுடைய செய்கையில் அவளின் தன்மானம் தீண்டபட, இனி இங்குள்ள எந்த பொருளையும் தேவையில்லாமல் தொடுவதில்லை என எண்ணி, நனைந்த அவளுடைய உடையை மீண்டும் அணிந்து தயாராகி கொண்டு இருந்தவளை வீட்டுக்கு வந்தவன் பார்த்து அதிர்ந்து என்னவென்று சொல்வான் எல்லாம் அவனின் அவசர புத்தி தானே இருந்தும், "நான் தான் வேற டிரஸ் கொடுத்தேனே" என கூற
அவளோ எங்கோ பார்த்து கொண்டு, "எனக்கு வேண்டாம் சார்" என்றாள்..அந்த சமயம் அவள் கன்னம் அவன் அடித்த அடியில் அவள் கன்னம் சிவந்திருக்க அதை பார்த்த அவனுக்கு மேலும் தர்ம சங்கடமான நிலை உண்டானது..
அதனால் தன் குரலை சுருக்கி, "அது ஜானகி யூஸ் பண்ண டிரஸ் அதனாலதான் நான் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன் சாரி நான் கொடுத்ததெல்லாம் புது டிரஸ் தான் அதை நீ யூஸ் பண்ணிக்கோ ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று நிரஞ்சன் கூற,
கயல் அழுத்தத்தோடு அவனைப் பார்த்து, "எனக்கு வேண்டாம் சார் எனக்கு யாரோட எந்த பொருள் மேலயும் ஆசை இல்லை வெயில்ல நின்னா இந்த டிரஸ் காய்ந்து விடும்..எனக்கு இது போதும்.. உங்க மனைவியோட உடைகளை உங்க அனுமதி இல்லாமல் உபயோகப்படுத்தியதற்கு என்னை மன்னிச்சிடுங்க.. இனி இங்கிருக்கும் எந்த பொருளையும் நான் இங்கு இருக்கும் வரை உங்க அனுமதியில்லாமல் தொட மாட்டேன்... நான் ஹாஸ்டல்ல போய் மாத்திக்கிறேன்" என கூறினாள்..
அதை கேட்டவன் அவளின் கோபத்தை பார்த்து இலேசாக அதிர்ந்து, "நான் பேசினது தப்பு தான் கயல்..நான் உன்னை கை நீட்டி இருக்க கூடாது" என்க அவளோ அதற்கு பதில் கூறாமல், அவள் தயாராகி கல்லூரிக்கு கிளம்ப பார்க்க அவனும், "சாப்பிடுட்டு போ" என்று கூறினான்..
"வேணாம் சார் நான் ஹாஸ்டல்ல இன்னைக்கு போட்டு சாப்பிட்டுக்குறேன் நாளையிலிருந்து நான் எனக்கு தேவையானதை செய்து கொள்கிறேன் உங்க உதவி எனக்கு தேவையில்லை" என்று அவள் கூற அவனுக்கு கடுப்பானது.. அவன் செய்த தவறுதான் ஆனால் அதற்காக அவனை சுத்தமாக அவள் ஒதுக்கி தள்ளவும் அவனால் பொறுத்து கொள்ள முடியவில்லை...
"ஏதோ தெரியாம நடந்துடுச்சு அதுக்குன்னு ஓவரா பண்ணிட்டு இருக்காத நீ என்னோட அண்டர்ல இருக்கு அத மறந்துடாத" என்று அவன் கூற
அதை கேட்டு அவளோ, "நீங்க நேத்து சொன்ன மாதிரி நம்ம ஜஸ்ட் ரூம் மேட்ஸ். அவ்வளவுதான் உங்களுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சார்.. எனக்காக நீங்க எதுவும் செய்யத் தேவையில்லை.. நானே என்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வேன்.. உங்களுக்கு தேவை உங்க குழந்தை அவள் கிடைத்ததும் நான் என் வழியை பார்த்து போயிட்டே இருக்கேன் இப்பவும் உங்களுக்குள்ள இருக்கிற அந்த வலிக்காக தான் நான் இதை செய்கிறேன் மத்தபடி வேற எதுக்காகவும் கிடையாது" என்று அவள் கூறினாள்..
அதைக் கேட்டவன் அப்படியே திகைத்து நிற்க அவளோ அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாள்...
அவளின் பேச்சை கேட்ட அவன் பார்க்க சிறு பெண் போல இருக்கும் அவளின் பேச்சு பச்சை மிளகாய் போல சுருக்கென குத்துவது போல அவனுக்கு இருந்தது..
அவளை ஊர்ப்பக்கம் இருந்து வந்த பெண் என்பதால் இவன் என்ன சொன்னாலும் கேட்டு விடுவாள் என நினைத்து விட்டானோ என்னவோ கயிலிடம் பணம் இல்லை..ஆனால் அதிகமாக உள்ள பெண் அவள்... தன் தன்மானத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அவள் பொங்கி எழுந்து விடுவாள்.. தவறு செய்தால் தவறு என ஒப்புக்கொள்ளும் மனம் அவளிடம் இருக்கிறது அதே நேரம் அவளிடம் தப்பு இல்லாமல் அவளை குற்றப்படுத்தி இருந்தால் அவனால் அதை தாங்கிக் கொள்ளவே முடியாது..அப்படி இருக்க அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் இதோ இப்போது அவள் நிரஞ்சனிடம் காட்டி கொண்டு இருப்பது அப்படி இருக்க அவனுக்கோ அவளின் செய்கை எல்லாம் அதிர்ச்சியாக தான் இருந்தது..
ஆனாலும் அவனுள் இவளை இப்படியே விட்டால் சரியாகாது என எண்ணினாலும் தன் வேலை எல்லாம் செய்து அவன் தயாராகி கல்லூரிக்கு சென்றான்..
அவளோ கல்லூரிக்கு சென்று அவள் நினைத்தது போல ஹாஸ்டலில் உடைமாற்றிவிட்டு ஹாஸ்டல் பொறுப்பாளரிடம், "நான் இனி முதல் ஹாஸ்டலில் தங்க மாட்டேன்" என்று கூற,
அவரோ அதற்கு, "உன்னுடைய அம்மா அல்லது உன்னுடைய கார்டியன் வந்து லெட்டர் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தா தான் நான் விடுவேன் இல்லாட்டி நீ பணம் கட்ட வேண்டி இருக்கும்" என கூற
அவளுக்கோ, இது வேறயா என்பது போல இருந்தது..பெரியவர்கள் ஏதாவது செய்து விடுகிறார்கள் ஆனால் அதன் பாதிப்பு என்னவோ இவர்களுக்கு தான் என்பதை மறந்து விடுகிறார்கள்.. அப்படி இருக்க அவளும் சரி என கூறி விட்டு அம்மாவை வர சொல்லணும் என நினைத்து வெளியேறி விட்டாள்..
வரும் வழியில் லாவண்யா எப்போதும் போல பிடிக்க, "என்ன டி ஓகே ஆகிட்டியா?" என நேற்று நடந்த சம்பவத்தை நினைத்து அவள் கயலின் முகத்தை பார்த்து கேட்க, அவளின் முகத்தில் காலையில் நிரஞ்சன் அடித்த அடியின் கைவிரலின் ரேகை பதிந்து சிவந்து போய் இருக்க, அதை பார்த்தவள் அதிர்ந்து, "என்ன டி ஆச்சு?" என கேட்க அப்போது தான் அவளுக்கு, 'ஐயோ இதை எப்படி மறந்தேன்' என்பது போல இருக்கவும் என்ன சொல்வது என தெரியாமல், "அது கதவுல இடிச்சுக்கிட்டேன்" என்று கூறினாள்..
"இல்லையே யாரோ அடிச்ச மாதிரி தெரியுது கை ரேகை மாதிரி இருக்கு" என்று லாவண்யா கேட்க அவளோ பதறி, "யாரும் அடிக்கல லாவண்யா" என்று கூறி செல்லும் போதே கிஷோர் வந்தான்..
அவனை கண்டதும் அவளுக்கு பக் என்று இருந்தது.. கிஷோரை அவளுக்கு பிடிக்கும்.. ஆனால் இப்பொழுது கிஷோரை பற்றி யோசிக்க கூட முடியாத நிலையில் கயல் இருக்க, எங்கேயாவது அவனை நிமிர்ந்து பார்த்து அவனும் லாவண்யாவை போல ஏதாவது கேட்டு விடுவானோ என்ற பயம் அவளுக்குள் இருந்தது..
ஏனெனில் கிஷோர் கொஞ்சம் முரடன் அதைவிட அவனுக்கு இவள் மீது பொசசிவ்னஸ் கொஞ்சம் அதிகம்.. அதனால் அவனிடம் அதிக நேரம் நின்று பேசினால் அவன் விஷயத்தை கண்டுபிடித்து விடுவானோ என்ற பயம் அவளுக்கு இருந்தது.. அதனால் அவனின் முகத்தை பார்க்காமலேயே அவள் முன்னேறி செல்ல பார்க்க,
"கிஷோர் என்னடி என் மேல கோபமா?" என கேட்டான்..
அவளோ, "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல டைம் ஆச்சு எனக்கு கிளாசுக்கு போகணும்" என்று விலக பார்த்தாள்..
"நேத்து நடந்ததை இன்னும் நெனச்சிட்டு இருக்கியா.. அந்த சாருக்கு கொஞ்சம் ஓவர் திமிர் அதிகம்.. ரொம்ப சட்டம் பேசிட்டு இருக்காரு.. எப்போ என்கிட்ட வாங்கி கட்டுவாருன்னு தெரியல அப்போ நான் யோசித்துக் கூட பார்க்க மாட்டேன்.. இனி என்னோட வழியில் அவர் மோதட்டும் அப்புறம் இருக்கு அவருக்கு சார் என்று கூட பார்க்க மாட்டேன் பொலந்து கட்டிடுவேன்" என்க
அதைக் கேட்டு அவள் பதறி ஐயோ கடவுளே இவன் ஏதாவது கோபத்தில் செய்து விடுவானோ என எண்ணி, "அவர் மேல என்ன தப்பு இருக்கு காலேஜ்ல வச்சு நாம பண்ணினது தப்பு அதைத்தானே அவர் தட்டி கேட்டார் அதுக்கு அவர் மேல கோபப்படுவதில்லை எந்த அர்த்தமும் கிடையாது" என்று அவனுடைய முகத்தை பார்க்காமலேயே கயல் கூற,
அதைக் கேட்ட கிஷோர் சினம் கொண்டு, "அதுக்குன்னு எல்லோர் முன்னாடியும் இப்படித்தான் பேசுவாரா? அவருக்கு இருக்கு சமயம் பார்த்து நான் வச்சுக்கிறேன்.. ரொம்ப கஞ்சி குடிச்சவர் மாதிரியே சுத்திட்டு இருக்காரு.. என்கிட்ட வசமா சிக்குவார் அப்ப இருக்கு அவருக்கு.. பசங்க எல்லாம் கொந்தளிச்சு போய்ட்டாங்க நாங்க ஏற்கனவே ப்ளான் போட்டுட்டோம் எப்போ அதை எக்ஸிக்யூட்டிவ் பண்ண போறோம் தான் தெரியல" என்று அவன் கூறினான்.. அவளோ அவன் கூறியதைக் கேட்டு பதறி அப்பொழுதும் அவனுடைய முகத்தை பார்க்காமல், "அதெல்லாம் தேவையில்லை.. சார் நமக்கு நல்லது தான் சொன்னாரு எனக்குமே இதெல்லாம் பிடிக்கல.. நான் காலேஜ் வந்தது. படிக்க எனக்கு வேலைக்கு போகணும் ஒரு நல்ல நிலைமைக்கு வரணும் என்னோட அம்மாவை உட்கார வைத்து சாப்பாடு போடணும் இதுதான் என்னோட ஆசை அந்த ஆசையில யாரும் கல்லை தூக்கி போடுறத நான் விரும்ப மாட்டேன்.. நாம காலேஜ் சமயத்துல இப்படி எல்லாம் இல்லாமல் ஒதுங்கி இருக்கிறது தான் நல்லது" என அவள் கூறினாள்..
