வர்ணம் 18
அத்தியாயம் - 18
அவனோ அவளை பார்த்து, "ரொம்ப அதிர்ச்சி அடையாத கணவன், மனைவியா நடிக்க தான் சொன்னேன்.. அதுவும் என் வீட்டு ஆளுங்க, என்னுடைய மாமனார் வீடு அவ்வளவுதான் மத்தபடி நீ யாரோ நான் யாரோ நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.. நீயும் என்னை டிஸ்டர்ப் பண்ண தேவையில்லை.. நான் ஒரு சாதாரண மனுஷன் என்னால நீ பண்ணினதுக்கு உன்னை பழிவாங்கி எனக்கு ஒன்னும் ஆகப் போறது கிடையாது நான் எதார்த்தமா எனக்கு என்னை உன்கிட்ட இருந்து தேவையோ அதைத்தான் பேசிட்டு இருக்கேன்..
இது எனக்கே தெரியாமல் நடந்த தப்பு இதிலிருந்து எப்படி வெளியே வரணும்னு தான் நான் யோசிக்கிறேன்.. அதற்கான ஒரே வழி இதுதான் நீ இங்கிருந்தே படிக்கலாம் உனக்கு என்ன தேவையோ அதை நான் செய்ய தயாரா இருக்கேன்.. ஆனால் என் குழந்தை என் கைக்கு வரும் வரை நீ என்கூட இருக்கணும்.. என்னை சார்ந்தவங்க முன்னாடி நீ என்னுடைய மனைவியா நடிக்கணும் அவ்வளவுதான்" என அவன் அவளிடம் கூற,
அவளோ அவன் பேசியதை கேட்டு, "சரிங்க சார்" என இறுதியில் கூற அவனோ அவள் இவ்வளவு வேகமாக அவன் கூறியதை கேட்டதும் சரி என சொல்வாள் என எதிர்பார்க்கவில்லை அவனுக்கே ஆச்சரியம்தான் அதை காட்டிக் கொள்ளாமல் மறைத்தான்...அவன் அறைக்கு எதிர்பக்கம் இருக்கும் அறையை காட்டி, "அந்த அறையில் நீ தங்கிக்கோ நான் இங்கே இருக்கேன்.. நாம ரெண்டு பேரும் ஜஸ்ட் ரூம் மேட்ஸ் அவ்வளவுதான்" என்றவன் அவளுடைய பதிலுக்கு காத்திராமல் அவனுடைய அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டான்..
அவளோ அவனின் பேச்சையும், அவனின் வருத்தத்தையும் மிகச் சரியாக உள்வாங்கி அவருக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை அவர் கேட்டது போல அவருடைய குழந்தையை அவர் கையில் கொடுத்துவிட்டு நாம போயிடனும்.. இது ஒன்னு தான் அவருக்கு என்னால ஆகற உதவி நான் அதை செஞ்சே ஆகணும் பாவம் நல்ல மனுஷன் எல்லாரும் சேர்ந்து ஏமாத்திட்டாங்க.. அவர் சொன்ன மாதிரி அவர் எதுக்காக இரண்டாவது கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைச்சாரோ அது நடக்க நான் கண்டிப்பா உதவி செய்வேன் அதுக்காக நான் என்ன கஷ்டத்தை அனுபவிச்சாலும் சரி என்று அவனுக்காக அவள் வருத்தப்பட்டாள்..
ஆனால் அதுவே அடுத்த நாள் அந்த எண்ணம் தலைகீழாக மாற போகிறது என்பதை அவள் அந்நேரம் உணரவில்லை..
அறைக்குள் சென்ற அவளோ புதிதாக ஒன்றுமே விளங்காமல் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருக்க அந்த அறையில் ஒரு படுக்கை இருந்தது அங்கேயும் ஜானகி மற்றும் நிரஞ்சன் இருவரின் புகைப்படங்களும் மாட்டப்பட்டு இருக்க அதில் அவன் சிரித்து கொண்டு இருப்பதை கவனித்த அவள், 'சார் பாவம் எவ்ளோ சந்தோஷமா இருந்து இருக்கார் இப்போ தான் இப்படி ஆகிட்டார் போல இப்படிப்பட்ட நல்ல மனுஷனுக்கு நானும் தொல்லையா அமைஞ்சுட்டேன் அம்மா செத்துடுவேன் மிரட்டினாலும் நான் இதை செஞ்சிருக்க கூடாது சார் கிட்டயாவது வந்து சொல்லி இருக்கணும்' என்று இப்போது நினைத்தவள் அந்த படுக்கையில் போய் படுத்து கொண்டாள்..
அவர்கள் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும் அல்லவா?
மதியம் துவங்கி இதோ இந்த நொடி வரை அழுது அழுது அவளுடைய கண்கள் வீங்கி தலை வேறு வலித்தது.. தலை வலியை விட அவளுக்கு பசித்தது..
ஆனால் அவனிடம் சொல்ல பயம் அதனால் அப்படியே சுருண்டு படுத்து கொள்ள, அதே நேரம் அவனும் அந்த அறையில் படுத்து கொண்டு, 'இப்போ உனக்கு சந்தோஷமாடி சொல்லுடி' என தன் இறந்த மனைவியை நினைத்து கொண்டிருந்தான்..
33 வயதான தன்னை இவர்கள் ஏமாற்றி தனக்கே விபூதி அடிக்கும் பொழுது 19 வயது பெண்ணான கயலுக்கு இவர்கள் விபூதி அடிக்க இவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்னைப் போல ஏமாந்து விட்டாள் ஆனால் அவளுடைய வாழ்க்கை இப்படி என்னைப்போல கசங்கிய மலரோடு இருக்கக் கூடாது ஒரு நல்ல வாழ்க்கை வாழட்டும் நான் சொன்னது போல என்னுடைய குழந்தை கிடைத்துவிட்டால் அவள் அவளுடைய வாழ்க்கையை தேடி செல்லட்டும் அதற்கான எல்லா உதவிகளையும் அவன் செய்வதாக நினைத்து இருந்தான்..
அப்படியே நடந்த விஷயங்களை எல்லாம் அசை போட்டு கொண்டே உறங்கி போக உறக்கம் வராமல் தவித்த அவள் எப்போதோ உறங்கி விடியும் முன்னே எழுந்து விட்டாள்..
சுற்றுப்புறம் பார்த்து தன்னை நிலைப்படுத்தி கொண்டு குளியல் அறைக்குள் செல்ல அங்கு புதிய சோப், பேஸ்ட், பிரஷ் முதல் உபயோகம் செய்யாத தூவாலை வரை இருக்க, இந்த குளியல் அறையை பெரிதாக யாரும் உபயோகிக்கவில்லை என்பதை உணர்ந்த அவளோ சரி குளிக்கலாம் என நினைத்து குளிக்க போவதற்கு முன் பைப்பில் தண்ணீர் வருகிறதா என பார்க்க பைப்பை திறந்ததும் குற்றால அருவி போல ஷவர் திறந்து விட்டது அது அவளுடைய உடைய எல்லாம் தொப்பலாக நனைத்து விட அவளோ தடுமாறி போனாள்..
அவள் உடை எல்லாம் நனைந்து விட்டது.. பிறகு அவள் உடை எல்லாம் அவிழ்த்து குளித்து அங்கிருந்த தூவாலையை சுற்றிக்கொண்டு வந்தவள் உடுத்த மாற்றுடை இல்லை..
என்ன செய்வது எத்தனை நேரம் இப்படி துண்டோடு இருப்பது என நினைத்து அங்கிருந்த அலமாரியை இலேசாக திறக்க அந்த அலமாரி முழுவதும் பெண்கள் உடுத்தும் உடைகள்..
அதை கண்டவள் புதிய உடையெல்லாம் வைத்துவிட்டு அதில் இருந்து சுமாரான பழைய ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டாள்..
அதற்குள் சமயம் ஏழு ஆகி இருக்க, அவளோ தலையை துவட்டி கொண்டே வெளியே வர அதே சமயம் வெளியே வந்த அவனோ அவள் உடுத்தி இருந்த உடையை பார்த்தவனுக்கு எங்கிருந்து தான் அத்தனை ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை.. அப்படியும் அந்த உடையையும் பார்த்தவனுக்கு அவள் ஜானகியின் உடையை உடுத்தியிருப்பது பிடிக்கவில்லை..
ஏனெனில் இந்த உடையை அவன் ஆசையாக ஜானகிக்கு வாங்கி கொடுத்திருந்தான்.. அவள் அந்த உடையை வாரத்திற்கு ஒரு முறையாவது அணிந்து விடுவாள் அவனும் கிண்டல் செய்தாலும் போங்க, "நீங்க எனக்காக முதல் முறையா வாங்கி கொடுத்த உடை" என கூறி அவள் அணியும் உடை அப்படி இருக்க அந்த உடையை கயல் அணியவும் அவனுக்கு கடுப்பாகிவிட்டது..
அவளோ அவனை கண்டதும் தயங்கி நிற்க, வேகமாக அவள் அருகே வந்தவன், "யாரை கேட்டு இந்த டிரஸ் எடுத்து போட்ட கொஞ்சம் இடம் கொடுத்தா ஓவரா பண்ற? நானும் நேத்து நீ பேசுனதை வச்சு பாவம் என்று நினைத்தேன் ஆனால் நீ அப்படி இல்ல போல" என அவள் அந்த உடையை அணிந்து இருக்கிறாளே என எண்ணி கயலை ஓங்கி அறைந்தான்..
அவன் அவளை அடிப்பான் என எதிர்பாராத அவளோ கன்னத்தை பிடித்தபடி நிற்க, அவனும் அவளைப் பார்த்து, "எவ்வளவு தைரியம் இருந்தா இந்த டிரஸ் எடுத்து போட்டு இருப்ப? அடுத்தவங்க பொருளை எடுக்கும் போது கேட்டு எடுக்கணும்னு அறிவில்ல? ஒரு நிமிஷம் நீ இந்த டிரஸ் போட்டு என் கண்ணு முன்னாடி நிற்கக்கூடாது சொல்லிட்டேன்.. போய் டிரஸ் சேஞ்ச் பண்ணு" என்று அவன் கொந்தளித்து கூறினான்..
ஏற்கனவே இந்த வீடு ஜானகியின் நினைவை தான் அவனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தது ஜானகி இறந்ததும் அவன் இந்த வீட்டை விட்டு பெற்றோரின் வீட்டுக்கு குடி பெயர்ந்து விட்டான் ஆனால் வாரம் ஒரு முறை அல்லது அவனுக்கு எப்பொழுதெல்லாம் மனக்கஷ்டமாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் இங்கு வந்து தங்கி செல்வான் வாரம் ஒரு முறை இந்த வீட்டை ஆட்களை விட்டு சுத்தம் செய்வான் அப்படி அவன் அவளுடைய பொருட்களை எல்லாம் பராமரித்து வர அதை கயல் உபயோகிக்கவும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
"சார் எதுக்கு சார் அடிச்சீங்க? வான்னு சொல்லி இழுத்துட்டு வந்துட்டீங்க? எனக்கு போட ஓட்டு துணி கூட இல்லை? நான் எந்த டிரஸ் எடுத்து போடுவேன்?" என அழுது கொண்டே அவள் பக்கம் உள்ள நியாயத்தை கூற, அதைக் கேட்ட அவனும் அப்போது தான் அவள் கூறியதை உணர்ந்தாலும் கொஞ்சம் கூட கோபம் குறையாமல் வேகமாக சென்று அதே அலமாரியில் புதிதாக வைத்திருந்த உடைகளில் ஜானகி உபயோகம் செய்யாத நாலைந்து துணிகளை எடுத்து வந்தவன், "இதை போடு.. உனக்கு இந்த வீட்ல என்ன வேணும் என்றாலும் என்கிட்ட கேட்காம நீ எதுவாக இருந்தாலும் யூஸ் பண்ண கூடாது என்கிட்ட பெர்மிஷன் கேட்டு தான் யூஸ் பண்ணனும்" என்று கூறி கொடுத்து அவ்விடம் விட்டு நகர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்றான்..
அதைப் பார்த்தவள் அவன் அடித்த அடியின் வேகம் ஆழமாக அவள் கன்னத்தில் பதிந்து இருக்க, அவனின் பேச்சு அவளை மேலும் காயப்படுத்த அவளுக்கோ அவன் தீடிர் செய்கையில் பிரம்மை பிடித்தவள் போல இருந்தாள்..
