வர்ணம் 24
அத்தியாயம் 24
கிட்டத்தட்ட அவள் வீடு வந்து சேர கிட்டத்தட்ட பத்து மணிக்கு மேல் ஆகி விட்டது..
இங்கு நிரஞ்சன் எரிச்சலும் அவள் மீது கொலை காண்டிலும் இருக்க, அவளோ வீட்டுக்குள் நுழையும் போதே என்ன ஆக போகுதோ என்ற பதட்டம் அதிகம் ஆகியது..
அவள் உள்ளே நுழைய அவனோ சோபாவில் அமர்ந்து புகை பிடித்து கொண்டு இருந்தான்..
அவனை கண்டாலும் அவள் மெல்ல தன் தவறை மறைக்கும் விதத்திலும் அவன் தன்னிடம் எதுவும் கேட்டு விட கூடாது என வேண்டி கொண்டே அவனிடம் ஒன்றும் பேசாமல் அவனை பார்த்து கொண்டே அவளுடைய அறைக்கு செல்ல போக,
அவனோ, "உன்னோட பிரண்டுக்கு எப்படி இருக்கு?" என கேட்டான்..
அதைக் கேட்டதுமே அவளுக்கு அதிர்ச்சி ஆனது இருந்தாலும் என்ன சொல்வது என தெரியாமல், "நல்லா இருக்கு" என வார்த்தைகளை மென்று மிழுங்க,
அவனோ அழுத்தமாக பார்த்து, "என்ன ஆச்சு திடீர்னு உன்னோட பிரண்டுக்கு?" என்க
"அது வந்து ஆக்சிடென்ட் ஆயிடுச்சு" என அவள் பொய் கூறினாள்.. ஏனெனில் கிஷோரை பார்க்கச் சென்றேன் என கூறினால் அவன் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும் என்ற பயம் அவளுக்குள் இருக்க,
"அது வந்து ஒரு கார் மோதி ஆக்சிடென்ட் ஆயிடுச்சு", என அவள் வாய்க்கு வந்த பொய்யை கூறும் போதே அவளின் கன்னம் நிரஞ்சனின் கையால் பதம் பார்க்க,
அவன் எதிர்பாராத அந்த அடியில் அவள் அப்படியே சுருண்டு கீழே விழ, அவன் ஆத்திரத்தின் உச்சியில் இருந்தவன், "எது இதுதான் ஆக்சிடென்ட்டா?" என இவர்கள் செய்த கூத்தை வீடியோவாக அவன் காட்ட அதை பார்த்த கயல் அப்படியே அதிர்ந்து போய் விட்டாள்..
"சொல்லு டி இது தான் நீ போன ஹாஸ்பிடலா? ஊரே சிரிக்குது டி உன்னை பார்த்து.. இதுக்குத்தான் என்கிட்ட நடிச்சிட்டு போனியாடி.. ஏண்டி எனக்கு தான் மரியாதை கொடுக்க வேண்டாம்..நான் கழுத்துல தாலின்னு ஒன்னை கட்டி இருக்கேன்ல அதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நீ எதுக்கு வந்த படிக்கத் தானே வந்த அந்த வேலையை விட்டுட்டு மத்தது எல்லாம் பார்க்குற ஒரு பொண்ணு காலைல போய் நைட்டு வர கேட்ட என்னமா பொய் சொல்ற?" என கேட்க அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை..
அவனுக்குத் தெரியாது என எண்ணி அவள் அந்த பொய்யை அவள் மீண்டும் அவனிடம் இருந்து தப்பிக்க அவள் முயல நிரஞ்சனுக்கு அனைத்தும் தெரிந்து விட்டது என்ற செய்தியை அவளுக்கு இடியாக விழுந்தது..
இதில் தவறு எல்லாம் அவள் பக்கம் தான் என்பதால் அவள் அமைதியாக இருக்க அவனும் விடவில்லை.. அவன் அவ்வளவு கடுப்பாக இருந்தான்..
"அப்போ அவன் கூட போகத்தான் இவ்வளவு நடிச்ச அப்படி தானே? நான் கூட உன்னை தப்பா நினைச்சுட்டேன் என் பெண்ணை பார்க்க வந்ததும், என்கிட்ட பேசுவதையும் வைத்து நான் உன்னை என்னமோ நெனச்சு வைத்திருந்தேன் ஆனால் நீ இப்படி ஒரு கழிசடைனு எனக்கு தெரியல
என்ன பார்க்குற எனக்கு மட்டும் இல்ல ஊர் முழுவதும் இந்த வீடியோ வைரல் ஆயிட்டு இருக்கு. இதோ டிவி நியூஸ் சேனல் பாரு அதுலயும் நீ தான் கல்லூரி இளைஞர்கள் கொண்டாட்டம் அப்படின்னு தலைப்புல நீங்க தான் வந்துட்டு இருக்கீங்க.." என்று நிரஞ்சன் கூறினான்..
அதை கேட்டு அவள் பேரதிர்ச்சி அடைந்து, "சார் நான் நான் சொல்றதை கேளுங்க சார்.. நான் பண்ணினது தப்புதான் இல்லைன்னு சொல்லல ..ஆனால் எனக்கு அங்க போறது வரை எனக்கு உண்மையே தெரியாது.. அதுக்கு அப்புறம் தான் விஷயமே தெரிந்தது" என அவள் கூறும் போதே மீண்டும் ஒரு அறை அவள் கன்னத்தில் விழுந்தது..
"பொய்யா சொல்ற? நான் உன்னை எத்தனை முறை கூப்பிட்டேன் நீ என்னுடைய ஒரு ஆளுக்காவது அன்சர் பண்ணியா?" என கேட்டான்..அவள் தவறு செய்தால் என்பதை விட அவள் மீண்டும் மீண்டும் அவனிடம் பொய் கூறுகிறாள் என்பது தான் அவனுக்கு பிரச்சனையாக இருந்தது..அதனால் தான் அவன் கை நீட்டி கொண்டு இருந்தான்..
அவள் அடி வாங்கினாலும், "சார் நான் கிஷோர் கூட இருக்கறது உங்களுக்கு பிடிக்காது அதனால தான் நான் உங்க போன் அட்டென்ட் பண்ணல.." என கூற
அவன் மேலும் கடுப்பாகி கையை ஓங்கியவன் ஒரு கட்டத்தில் அவளின் பயத்தை பார்த்து, "ஓ என்னோட கால் உனக்கு டிஸ்டர்பா இருந்திருக்கும் அதனால தான் நீ எடுக்கல..நான் உனக்கு யாரோ தானே? ஒரு வேலை நீ அங்க போய் உனக்கு ஏதாவது ஆகி இருந்தா? உன்னோட வீட்டு ஆளுங்க என்கிட்ட கேட்பாங்களா இல்ல அவன் கிட்ட கேட்பார்களா அவங்களுக்கு தெரியுமா? உனக்கு கல்யாணம் ஆன பின்னும் உனக்கு ஒரு காதல் இருக்குன்னு" என அவன் கேட்க அவளுக்கு பேச்சே இல்லை.. சத்தியமான வார்த்தைதான் கிஷோர் அவளிடம் பலமுறை அந்த தருணத்தில் அத்துமீற முயன்று இருந்தான்.. ஆனால் அவளுக்கு இருந்த எரிச்சலில் அவள் அதை தவிர்த்து கொண்டே இருந்தாள்..
அப்படி இருக்க, அவளோ எதுவும் பேசாமல் இருக்க அவனுக்கு ஆத்திரமிகுதியில், "என்ன பர்த்டே பார்ட்டி மட்டும் தான் நடந்துச்சா இல்ல வேற ஏதாவது நடந்துச்சா ஹோட்டல், லாட்ஜ் அப்படி எல்லாம் போனீங்களா?" என வேண்டுமென்றே தன் கோபத்தை அவளிடம் காட்ட,
அவளோ அதற்கு மேல் முடியாமல் அவனுடைய காலை பிடித்து, "சார் அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார் நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.. அப்படியெல்லாம் எதுவும் நடக்கல.. நான் செஞ்சது தப்புதான் எனக்கு அங்க போனதுக்கு அப்புறம் தான் தெரியும்.. இனி நான் இந்த மாதிரி எதிலும் சிக்க மாட்டேன்.. என்னை பெரிய பெரிய வார்த்தை எல்லாம் கேட்காதீங்க.. சார் என்னால அதை எல்லாம் தாங்கிக்க முடியாது" என்று அவள் அழுது கொண்டே கூற,
அவனும் அவனுடைய காலை அவளிடம் இருந்து உதறியவன், "சீ நீ எல்லாம் ஒரு பொம்பளையா? ஏண்டி பிடிச்சு கல்யாணம் பண்ணினாலும், பிடிக்காம கல்யாணம் பண்ணி இருந்தாலும் நான் உனக்கு புருஷன், நீ எனக்கு பொண்டாட்டி தானடி அதுல எதுவும் மாற்றம் இல்லையே? நானா தானே இதெல்லாம் வேணாம்னு விலகி இருக்கேன் மத்தபடி வேற எதுவும் இல்லையே.. எனக்கு நம்பிக்கை துரோகம் என்கூடவே இருந்துட்டு எப்படிடி செய்ய முடியுது? என்கிட்டயே இப்படி நடந்துக்கிட்டயே டி.. வாயை திறந்தா எல்லாமே பொய் அப்படி தானே? இப்போ இந்த வீடியோ வைரல் ஆயிட்டு இருக்கு இதை எத்தனை பேர் பார்க்க போறாங்கன்னு எனக்கு தெரியல.. எவ்வளவு பெரிய அசிங்கத்தை நீ எனக்கு தந்திருக்க.." எனக் கூறும் போதே வெங்கட்ராமன் அழைத்திருந்தார்..
அவனோ போனை எடுக்க, "மாப்பிள அந்த வீடியோவில் இருக்கிறது நம்ம கயல் தானே?" என அவர் கேட்க அவனும் ஸ்பீக்கரில் போட்டு பார்த்தியா என்பது போல பார்க்கவும் அவளுக்கு அழுகை வந்தது...
அவனும், "ஆமாம் பிரெண்ட்ஸ் கூட பர்த்டே பார்ட்டி என்று என்கிட்ட சொல்லிட்டு தான் போனா காலேஜ் பசங்க கொஞ்சம் விளையாட்டுத்தனமா இருந்துட்டாங்க" என்று அவன் விட்டுக் கொடுக்காமல் கூற, "அது தானே பார்த்தேன் இந்த நியூஸ் சேனல் காரங்களுக்கு எப்ப பார்த்தாலும் தப்பு தப்பா நியூஸ் போடறது தான் வேலை" என்று கூறிக் கொண்ட அவர் போனை வைத்து விட்டார்...
"இப்போ என்னடி சொல்ற ஒவ்வொருத்தரா கேட்க ஆரம்பிச்சுட்டாங்க இப்ப உனக்கு சந்தோஷமா?" என கூறும் பொழுதே அவளின் போன் அலறியது..
அவளின் அம்மா தான் அழைத்திருந்தார்.."போனை எடு" என்று அவன் கூற, அவளோ அழுது கொண்டே போனை எடுக்க, "நீ எல்லாம் படிக்கப் போனியா எதுக்கு போன இப்படி கூத்தடிக்க தான் போனியா? மாப்பிள்ளை கூட இணைஞ்சு வாழ உன்னால முடியல.. ஆனால் இதெல்லாம் நல்லா செய்ய தெரியுது அப்படித்தானே? உனக்கு எல்லாம் சீக்கிரம் கல்யாணம் நல்லது தான் அப்படின்னு இப்ப யோசிக்கிறேன்" என கூற அவளுக்கு பதிலே இல்லை..
"இப்படித்தான் நான் உன்னை வளர்த்தேனாடி நீ உன்னுடைய அக்கா மாதிரி இல்ல அப்படின்னு நினைச்சு என் மானத்தை காப்பாத்த உன்னை அவருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா நீ இப்படிப்பட்ட காரியத்தை செஞ்சா அந்த வீட்ல என்னை எப்படி மதிப்பாங்க எல்லாரும் என்னை கேள்வி கேட்க மாட்டாங்க? இங்க ஊரே நிரஞ்சனோட பொண்டாட்டி ரோட்ல சுத்திட்டு இருக்கா.. பசங்க புள்ளைங்க எல்லாம் சேர்ந்து ரோட்டில் ஆடுதுங்க அதுல இவளும் ஒன்னு அய்யா வீட்டு மானத்தை கயல் வாங்குவா போல அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க என் மானத்தை இப்படி வாங்கிட்டியேடி" என்று கூற
அதைக் கேட்டு அவளோ, "அம்மா நான் எதுவும் பண்ணலமா" என கூறினாலும் அவளை யாரும் நம்பவில்லை.. சாந்தி பேசிக்கொண்டே போனார்.. அவளோ இறுதியில் முடியாமல் போனை அணைத்து வைத்து விட்டாள்..இதை எல்லாம் கண்ட அவனும் அவளை முறைத்துக் கொண்டு அவனுடைய அறைக்கு செல்ல அவளுக்கு செய்யாத தப்புக்கு தண்டனை வாங்குகிறோமே என்ற வருத்தம் இருந்தது..
இதைவிட எல்லாம் நாளை இந்த செய்தியை கேட்டு கருணை அம்மாள் இங்கு வந்தால் எப்படி இருக்கும்.. ஆம் அதுதான் நடக்கப்போகிறது அதை அறியாத நிரஞ்சன் மற்றும் கயல் இருவரும் ஆளுக்கு ஒரு திசையில் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்…
