வர்ணம் 23

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 56
Thread starter  

அத்தியாயம் : 23

   அவளுடைய தோழி லாவண்யா பஸ் ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருக்க, இவளும் பதட்டத்தோடு அங்கே சென்று, "என்னடி ஆச்சு அவனுக்கு? ராம் என்ன எல்லாமோ சொல்றான் எனக்கு பயமா இருக்கு" என கயல் கூறினாள்..

"எனக்கும் தெரியல கிஷோர் பிரண்ட் ராம் தான் என்னையும் கூப்பிட்டான்.. நீ தனியா வர துணைக்கு என்னையும் வர சொன்னான்" என்று கூற அதற்குள் ராம் அவர்கள் நிற்கும் பஸ் நிறுத்தத்தின் அருகே காரில் வந்தவன், "வாங்க கார்ல ஏறுங்க" என்று கூற இருவரும் பதட்டத்தோடு ஏறி அமர்ந்தார்கள்..

"கிஷோருக்கு என்ன ஆச்சு ராம்?" என அவள் கேட்க, "பைக்ல போகும்போது ஆக்சிடென்ட் ஆகி தலையில் அடிபட்டு இருக்கு.." என அவன் கூற அதை கேட்டதும் அவள் பதறி துடித்து அழ துவங்கிவிட்டாள் லாவண்யா, "அழாதடி தைரியமா இரு அண்ணாவுக்கு ஒன்னும் ஆகாது" என ஆறுதல் கூற அவளோ தேம்பி அழுதாள்..

"அழாத கயல் அவனுக்கு ஒன்றும் ஆகாது அவனை தானே பார்க்க போயிட்டு இருக்கோம் டென்ஷன் ஆகாத" என்று கூறிக்கொண்டு காரை வேகமாக செலுத்தினான் கிஷோரின் நண்பன் ராம்..

நீண்ட நெடிய தூர பயணத்தின் முடிவில் எங்கு  இருக்கிறார்கள் என அவர்களுக்கு தெரியாத ஒரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் கார் நிறுத்தப்பட்டது.. அதுவரை எங்கு செல்கிறோம் என தெரியாமல் கயல் அழுது கொண்டே வர, லாவண்யா சமாதானம் செய்து கொண்டே இருக்கவும் கார் நிற்கவும் இருவரும் என்ன என பார்க்க, "ஒரு நிமிஷம் காருக்கு ஏதோ ரிப்பேர் என்று தோணுது ஸ்டாப் ஆகிடுச்சு நான் பார்த்துட்டு வந்துடறேன் நீங்க இங்கேயே இருங்க" என்று கூறி காரில் இருந்து வெளியே இறங்கினான்..

ராம் காரின் போனட் கதவை திறந்து வைத்து கிஷோரை ஃபோனில் அழைக்க அவனும் அவனுடைய நண்பர்களும் மெல்ல பின்னால் இருந்து வர அவர்களோ காருக்குள் அமர்ந்து கொண்டு வெளியே என்ன நடக்கிறது எனக்கு தெரியாமல் அவள் பல தெய்வங்களை வேண்டிக்கொண்டு காருக்குள் இருந்தாள் கயல்...

அதற்குள் கேக் எல்லாம் கொண்டு வந்து வைக்கப்பட்டு எல்லாம் செட் செய்யப்பட்டது..ஆம் இன்று  கிஷோரின் பிறந்த நாள்..தன்னுடைய பிறந்தநாள் அன்று தன் காதலி தன்னோடு இருக்க வேண்டும் என்ற கருதி பொய் சொல்லி பக்கா பிளான் போட்டு ராமை அனுப்பி அவளை அழைத்து வர சொல்லி விட்டான்.. இது தெரியாத அவளோ காருக்குள் இருந்து அழுது கொண்டிருக்க, ராம் வந்து, "கொஞ்சம் இரண்டு பேரும் வெளியே  வாங்க" என கூற,

அப்போது தான் நினைவு வந்தது போல, "இவ்வளவு தூரமா? ஹாஸ்பிடல் இன்னும் வந்தபாடில்லையே வண்டிக்கு என்ன ஆச்சு?" என கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே காரில் இருந்து இறங்க, அப்போது கிஷோரும், கிஷோரின் நண்பர்களும் சேர்ந்து சப்ரைஸ் என கத்தினார்கள்..

அதை கண்டதும் லாவண்யா மற்றும் கயல் இருவரும் அதிர கேக் எல்லாம் வைக்கப்பட்டு ஹாப்பி பர்த்டே கிஷோர் என எழுதப்பட்டிருக்க, "ஹேய் கயல் இன்னைக்கு கிஷோரோட பர்த்டே உன்னை சர்ப்ரைஸ் பண்ணத்தான் அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று கூட்டிட்டு வந்தேன் பாவம் வர வழியில எல்லாம் அழுதுட்டே வந்தா எனக்கே பாவமா இருந்துச்சு எங்க உண்மையை சொல்லிடுவேனோன்னு நினைச்சேன்" என்று ராம் கிண்டல் செய்ய, அதைக் கேட்டு கிஷோர் சிரித்தான்..

அவனை கண்டதும் அவ்வளவு நேரம் அவனுக்கு என்ன ஆனதோ அவன் உயிர் பிழைப்பானா என பயந்து இருந்தவளுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது..தன்னுடைய எமோஷனலை அவன் உபயோகித்து கொண்டான் என எண்ணி அவன் அருகே சென்று அவனுடைய சட்டையை பிடித்து, "எதுல விளையாடனும்னு உனக்கு அறிவு இல்லை இப்படித்தான் விளையாடுவியா?" என கடுப்போடு கேட்டாள்.. அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...

அவனோ, "ஹேய் உன்னை டென்ஷன் பண்ணி கூட்டிட்டு வரணும்னு பிளான் பண்ணல.. ஆனால் நீ இப்படி சொன்னால் தான் வெளியே வருவ.. அதனாலதான் இப்படி வரவேண்டியது போயிடுச்சு..இப்போ என்ன பண்ண சொல்ற? நான் கூப்பிட்டா நீ வெளியே வரவா போற வர மாட்ட அதுக்கு தான் பொய் சொல்லிட்டேன்.. இப்ப என்ன அதுக்கு? இன்னைக்கு என்னோட பர்த்டே சோ இன்னைக்கு ஃபுல்லா ஜாலியா இருக்க போறோம் சண்டை எல்லாம் நாளைக்கு பாத்துக்கலாம்" என்று அவன் கூற அவளுக்கு எரிச்சலாக இருந்தது..

இவ்வளவு செய்துட்டு எவ்வளவு ஈசியா பேசுறான் என்னை பத்தி யோசிக்க கூட மாட்டானா அவள் எவ்வளவு பதறி இருப்பாள் ஆனால் இவன் தன்னை ஏமாற்றியதை அவளால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் கிஷோர் அவளுடைய மனநிலையை புரிந்து கொள்ளும் நிலையில் அவன் இல்லை.. அவன் அவனுடைய பிறந்த நாளை கொண்டாடும் மனநிலையில் இருந்தான்..

அவள் தன்னுடைய பிறந்த நாளுக்கு வந்து விட்டாள் அது போதும் என அவனும், அவனுடைய நண்பர்கள் மற்றும் லாவண்யா, கயல்விழி என அனைவரும் இருக்க, அங்கு நடு ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் கேக்கை வைத்து ஆர்ப்பரித்து கிஷோரின் பிறந்த நாளை கொண்டாட எங்கும் வண்ணக் காகிதங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஆட்டம் பாட்டு என நிறைந்து இருக்க இவர்களின் இந்த கொண்டாட்டம் ரோட்டில் வந்து கொண்டிருப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க அதில் ஒரு சிலர்  இந்த காட்சியை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார்கள் அவர்களோ அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை..

அவளுக்கோ இது எல்லாம் ஒரு மாதிரியாக இருக்க அவளால் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்க ஆனால் அவனும் விடாமல் அவளை தன் அருகே இழுத்து பிடித்து நிறுத்தி அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வைத்தான்...அதோடு நில்லாமல் கேக் வெட்டி அவளுக்கு ஊட்டியும் விட்டான்.. அவளோ தயங்க அவன் விடாமல் அவளுக்கு ஊட்டி விட்டது மட்டுமின்றி அவள் முகத்தை கேக்கை தேய்க்க முயல அவளோ, "எனக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கல கிஷோர் என்க அவனோ விடாமல் அவளுடைய கையை இரண்டு பேர் பிடிக்க அவளின் முகத்தில் கேக்கை தேய்த்தும் விட்டான்.. இதெல்லாம் அங்கிருந்த வாகன ஓட்டிகளின் மொபைலில் உள்ள வீடியோவில் பதிவு ஆகி கொண்டு இருந்தது என்பது கூடுதல் தகவல்..

ஒரு வழியாக அவர்கள் அந்த சாலையில் சென்று கொண்டிருந்த பல ஆட்களின் திட்டுகளையும், ஏச்சுகளையும் வாங்கி பிறந்தநாள் விழாவை முடித்துவிட கயல் லாவண்யாவிடம் இனி அங்கு ஒரு நொடி கூட இருக்க முடியாமல், 'போலாம் போலாம்' என கூறிக் கொண்டே இருந்தாள்..

ஆனால் இவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று கூட இருவருக்கும் தெரியவில்லை.. அப்படி இருக்க கிஷோரிடம், "எங்களை கொண்டு போய் வீட்ல விடுங்க நாங்க வீட்டுக்கு போறோம் இனி எங்களால் இப்படி இருக்க முடியாது" என அவள் கூறி பார்க்க,

அவனும், "இன்னைக்கு ஒரு நாள் என் கூட ஸ்பென்ட் பண்ணு அவ்வளவுதான் சொல்லிட்டேன் நான் எப்போ உன்னை வீட்டுக்கு கொண்டு போய் விடுவேனோ அப்ப விட்டுக்கிறேன் போதுமா.. என்னை நம்பி இரு உன்னை எல்லாம் கடிச்சு இங்கே யாரும் தின்னுட மாட்டாங்க" என்று கூறியவன், அவளையும், அவனுடைய நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு அங்குள்ள ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டு அங்கேயும் அமர்க்களம் செய்து எல்லாம் முடிவதற்குள் இருட்ட துவங்கி விட்டது..அவள் எவ்வளவு முயன்றும் அவளை அவன் விடுவதாக இல்லை.. இங்கே சமயம் ஆக ஆக கயலுக்கு கை கால்கள் நடுங்கத் துவங்கி விட்டன..

அவள் மீண்டும் மீண்டும் நச்சரித்து இறுதியில், "இருட்டாகிடுச்சு எங்க  வீட்ல திட்டுவாங்க..என்னை கொண்டு போய் விட முடியுமா முடியாதா இல்லைன்னா சொல்லுங்க நானே போறேன்" என்று கயல் கிஷோரை பார்த்து இறுதியாக கேட்க,

பிறகு தான் கிஷோர், "வா போலாம் உன்னை எல்லாம் வெச்சுகிட்டு ஒண்ணுமே பண்ண முடியாது.. உன்னை போய் எந்த நேரத்தில் எனக்கு காதலிக்கனும்னு தோணுச்சுன்னு தெரியல" என்று அலுத்துக் கொண்டு அவளையும், லாவண்யாவையும் ராமின் காரில் கொண்டு போய் விட போக இங்கு கயலுக்கு இருட்ட துவங்கியதுமே மனதில் பயம் வந்து போனது வீட்டுக்கு போனால் என்ன ஆகுமோ நிரஞ்சன் என்ன சொல்வானோ என அவள் பயப்பட துவங்கி விட்டாள்..

ஏனெனில் அவன் அவளுடைய எண்ணுக்கு பலமுறை அழைத்து இருந்தான்..ஆனால் அவளோ கிஷோரோடு இருப்பதால் போனை எடுக்கவில்லை.. எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு சென்று பேசிக் கொள்ளலாம் என அவள் நினைத்திருக்க, ஆனால் அதற்கெல்லாம் தேவையே இல்லாதது போல அவள் எங்கு சென்றாள் என்பதை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்கள் கிஷோர் மற்றும் அவனுடைய நண்பர்கள்..

ஆம் அவர்களின் ஆர்ப்பாட்டத்தை வீடியோ எடுத்த நபர்கள் சோசியல் மீடியாவில் போட்டு விட, அது வெகுவேகமாக வைரலானது நியூசிலும் அந்த காட்சி வந்தது.. 'இன்றைய இளைஞர்களின் அத்துமீறலான கொண்டாட்டங்கள் தேசிய நெடுஞ்சாலையில் கேக் வெட்டி கொண்டாட்டம்..வாகன ஓட்டிகளுக்கு இதனால் சிரமம்..வாகன ஓட்டிகள் புலம்பல்..நாடு எங்கு  சென்று கொண்டிருக்கிறது' என பல ஹேஷ்டேக்குகளில் செய்திகள் வந்த வண்ணமாக இருந்தது.. அதை பார்த்து அவனும் கடுப்பாகி விட்டான் நிரஞ்சன்.. இதற்கு தான் காலையிலேயே நடித்து வெளியே போனாளா என நினைத்தான்..அவளின் நடிப்பை அவனும் உண்மை என நினைத்து விட்டானே என மேலும் எரிச்சல் அடைந்தான்..

இப்போதுதான் அவளிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என அவள் பிரச்சனைக்கே போகாமல் அமைதியாக இருந்தான்..மகளோடு அவள் அன்பாக இருந்தது அவனோடு துணையாக நின்றது இதை எல்லாம் வைத்து அவன் தப்பு கணக்கு போட்டு விட்டான் என நினைத்தான்.. இவள் சரியில்லை அவள் மீது தவறான பிம்பம் அவனுடைய மனதுக்குள் விதைத்துக் கொண்டு இருந்தான் நிரஞ்சன்..அதுவே அவனுக்கு ஒரு வித அழுத்தத்தை கொடுத்தது..

என்ன தைரியம் இருக்க வேண்டும்.. என்னிடமே பொய் சொல்லி வெளியே போய் ஊர் சுற்றும் அளவுக்கு அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்? இவள் எல்லாம் ஒரு போதும் திருந்த மாட்டாள் என்றுதான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான்..

இங்கு அவளுடைய நிலைமை அவனுக்கு தெரியாது அல்லவா? அதனால் அவன் அவள் தவறான பெண் அவளை இனி வீட்டில் வைத்து இருக்க கூடாது என்ற முடிவுக்கே வந்து விட்டான் நிரஞ்சன்..

லாவண்யாவையும், கயலையும் இருவரின் வீட்டுக்கும் செல்ல பொதுவான ஒரு பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டவன், "வீட்டுக்கு வேணா கொண்டு போய் விடுகிறேன்" என கூற,

லாவண்யா, "வேண்டாம் நீங்க செஞ்ச வரைக்கும் போதும் நான் போய்க்கிறேன் இதுக்கே என்ன சொல்ல போறாங்கன்னு தெரியல" என புலம்பிக்கொண்டே செல்ல,

கயலிடம், "உன்னோட வீடு எதுன்னு சொல்லு நான் அங்க டிராப் பண்றேன்" என்றான் அவன்.. அதற்கு கயல் அவன் மீதுள்ள கடுப்பில், "ஒன்னும் தேவையில்லை உங்க பிறந்தநாள் கொண்டாட்டம் முடிஞ்சுதுல இனி இது மாதிரி என்கிட்ட வச்சுக்காதீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன்..எனக்கு நீங்க இன்னைக்கு செஞ்ச எதுவும் சுத்தமா பிடிக்கல..இப்படியே பண்ணிட்டு இருந்தீங்க அப்படின்னா என்னை மறந்துடுங்க உங்க போதைக்கு நான் ஊறுகாய் கிடையாது எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்கு இப்படி சுத்திட்டு எல்லாம் என்னால இருக்க முடியாது இது தான் முதலும் இறுதியுமா இருக்கட்டும்" என்று கூறிவிட்டு காரில் இருந்து இறங்கியவள் பஸ்ஸில் ஏறி சென்று விட்டாள்.. அவளின் பேச்சு கிஷோருக்கு எரிச்சலை கொடுத்தது.. என்ன தைரியம் இவளுக்கு என்னை எதிர்த்து  பேச இவளுக்கு எப்படி இத்தனை தைரியம் வந்தது என கடுப்பு ஆகினான் கிஷோர்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top