வர்ணம் 26
அத்தியாயம் - 26
அவளின் முழியை பார்த்தவர், "என்ன டி முழிச்சிட்டு இருக்க?"
"அது வந்து பாட்டி" என இழுக்க..
"என்னடி ரொம்ப இழுக்குற?" என அவர் அவளை பார்த்து கூற அவள் எப்படி சொல்வாள் இன்று வரை அவள் அந்த கிச்சன் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை என்று அவனும் இவள் வந்த பிறகு அதனுள் செல்லவில்லை.. இவளுக்கும் அங்கு வேலை இல்லை அப்படி இருக்க, "இவ யார் கிட்ட பேசிட்டு இருக்கா காலங்காத்தால?" என கண்ணை கசக்கி கொண்டே நிரஞ்சன் வர அங்கு அவனுடைய பாட்டி நின்று கொண்டு இருக்க அதை கண்டவன் விழிகள் திகைக்க அவரோ அவனை பார்த்து, "என்ன டா நீயும் என்னை பார்த்து முழிக்கிற?"
"நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?" என அவன் இருக்கமாக கேட்க
அவரோ நக்கலாக, "நான் என்னோட பேரன் வீட்டுக்கு வந்து இருக்கேன் ஏன் நான் வர கூடாதா? என்னை ஒருநாள் வச்சு சோறு தான் நீ போட மாட்டியா? எனக்குத்தான் இங்க வர உரிமை இல்லையா" என அவர் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக,
அவனால் வரவேண்டாம் என கூற முடியுமா அதனால் அமைதியாக இருக்க அவரோ அவனை பார்த்து, "நான் கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருக்க போறேன்" என்று இருவரையும் பார்த்து கூற அதைக் கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்...இருவரின் பார்வை மோதி கொள்ளும் தருணத்தில் நேற்றைய பிரச்சனை நினைவில் வர இருவரும் அடுத்த நொடி இருவரும் பார்வையை மாற்றி கொண்டனர்..
அதை கண்ட பாட்டி, "உங்க ரெண்டு பேத்துக்கும் பிடிச்சாலும் சரி பிடிக்கலைனாலும் சரி நான் இங்கதான் இருக்க போறேன்" என்று மீண்டும் கூறி, "கயல் அதோ அங்க இருக்கு பாரு அந்த ரூம்ல இதை கொண்டு போய் வை" என்று அவள் தங்கியிருந்த அறையில் கொண்டு போய் அவருடைய பேகை வைக்கச் சொல்ல அவளோ பேய் முழி முழித்து நிரஞ்சனை பார்க்க அவனோ, "பிரச்சனை பண்ணனும்னு வந்து இருக்கீங்களா?" என கேட்டான்...
"ஏன் டா என்னை பார்த்த பிரச்சினை பண்ற மாதிரியா இருக்கு? நான் ஏதோ என் மேல கோபப்பட்டு இங்க வந்துட்டியே எப்படி இருக்க? என்ன பண்றேன்னு பார்த்துட்டு போலாம்னு வந்தா இப்படி பேசுற?" என அவர் சலித்துக் கொண்டு கூற, "நீ இன்னும் என்னடி இங்கு நின்னுட்டு இருக்க என்னுடைய பேக்கை கொண்டு போய் அங்க வெச்சுட்டு நீ சமையல் கட்டுக்கு வாடி எனக்கு பசிக்குது" என கயலை விரட்டினார்..
அவளோ வேகமாக அவர் சொன்னதை செய்து விட்டு வர அதற்குள் அவரோ சமையல் கட்டின் விளக்கை போட அந்த இடமே பொடி பிடித்து அழுக்காக இருக்க, அதை பார்த்தவர் கயலின் காதை பிடித்து இழுத்து, "ஏண்டி ஒரு பொம்பள புள்ள இருக்கிற அடுக்களையை இப்படித்தான் அசுத்தமா வச்சிருப்பியா? எவ்வளவு பொடி இருக்குன்னு பாரு" என்க
"அது வந்து பாட்டி நாங்க ரெண்டு பேரும் இங்க சமைக்கிறது இல்ல அதனால தான் பொடி பிடிச்சிருக்கு" என அவள் செவி அவருடைய கையில் சிக்கி இருக்க வலியால் துடித்துக் கொண்டு கூற,
அதை கண்டவன், "பாட்டி வந்ததுமே உங்க வேலையை காட்டிட்டிங்களா விடுங்க அவளை" என கூற
அதை கேட்ட அவரோ, "என்ன பொண்டாட்டியை சொன்னதும் உனக்கு ரோசம் வருதோ? நீ வாய மூடிட்டு இரு டா இதுல எல்லாம் நீ தலையிடாத நான் ஆச்சு அவளாச்சு" என கூற,
அவனும் கடுப்பாகி இவரை வெளியே தள்ள முடியாமல் இருக்கிறேனே என எண்ணி, "என்னமோ பண்ணி தொலைங்க" என கூறி அறைக்குள் செல்ல போக, "எங்கடா போற? போய் வீட்டுக்கு தேவையான சாமான் எல்லாம் வாங்கிட்டு வாடா எனக்கு பசிக்குது" என அவனையும் விரட்ட,
அவனோ, "அதெல்லாம் எதுக்கு நான் உங்களுக்கு ஹோட்டல் புட்டு வாங்கி தரேன்" என கூற,
"யாருக்கு வேணும் அந்த சாப்பாடு நான் வீட்ல சமைச்சா தான் சாப்பிடுவேன் நான் சொன்னதை மட்டும் செய் நீ போய் தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிட்டு வா" என்று கூறியவர் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அவளுடைய செவியை விட்டு, "எடு டி விளக்கமாரை இன்னும் அரை மணி நேரம் சமயம் தருவேன் அதுக்குள்ள இந்த வீடு சுத்தமா இருக்கணும் புரியுதா?" என்ன கூற அவளோ சரி என்பது போல தலையை மட்டும் ஆட்டி வேகமாக சுத்தம் செய்ய துவங்கினாள்..
அவனோ இதையெல்லாம் பார்த்து அவரை முறைக்க, "என்னடா முறைப்பு வேண்டி இருக்கு நீ இன்னும் போகல" என கூறி அவனையும் விரட்ட அவனும், "சரியான இம்சை" என புலம்பி கொண்டே சென்றான்..
அவளோ சுத்தம் செய்ய அவரோ, அவள் தங்கி இருந்த அறையில் நுழைந்து அங்கு இருக்கும் அவளுடைய பொருட்களை எல்லாம் பார்த்து, "ஓ இது தான் இத்தனை நாள் ஓடி இருக்கா?" நான் நினைத்தது, "சரி தான் இனி உங்க இரண்டு பேரை என்ன பண்ண போறேன் பாருங்க" என எண்ணி அவளுடைய பொருட்களை எல்லாம் அள்ளி கொண்டு வந்து அவனுடைய அறையில் போட அதை கண்ட அவள், "பாட்டி.." என கூற,
அவரோ, "என்ன டி..இனி நீ அவன் ரூம்ல தான் தங்கனும்.. புருஷன் பொண்டாட்டி எத்தனை நாள் தனித்தனியாக படுத்துட்டு கிடந்தீங்க இது எந்த ஊர்லயாவது நடக்குமா பெரிய இவன் மாதிரி கூட்டிட்டு வந்தானே இப்படி ஆளுக்கு ஒரு தீவில் இருக்கத்தான் கூட்டிட்டு வந்தானா?" என கூறி விட்டு செல்ல அவளுக்கோ, "ஐயோ அவர் கூட ஒரே ரூம்லயா ஐயோ கடவுளே இந்த பாட்டி ஏன் இப்ப வந்தாங்கன்னு தெரியலையே" என புலம்ப, "என்னடி சத்தம் சீக்கிரம் ஆகட்டும்.. இனி சமைக்கணும்" என அவர் மிரட்ட அவர் விரட்டியது போல நிரஞ்சன் வீட்டுக்கு வரும்போது அந்த வீடு சுத்தமாக இருந்தது..
அதைக் கண்ட அவனும் இதையெல்லாம் இத்தனை நாட்கள் இவள் வந்த பிறகு நான் கவனிக்காமல் விட்டு விட்டேனே என எண்ணினாலும் அவனுக்கும் இடம் சுத்தமாக இருந்ததை கண்டு மிகவும் சந்தோஷமாக இருந்தது..
அதை வெளிகாட்டாத அவன் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கிச்சனில் வைத்து விட்டு அழுத்தமாக பாட்டிக்கு ஒரு முறை போய் பார்சல் செய்துவிட்டு, அவனுடைய அறைக்குள் நுழைய, அங்கு அவள் அப்போது குளித்து முடித்து சுடிதார் டாப் மட்டும் அணிந்து இடுப்பில் துண்டையும் கட்டி கொண்டு வரவும் அவனும் நுழைய சரியாக இருந்தது..
இருவரும் எதிர்பாராத விதமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, அவளோ அவளுடைய உடையை எண்ணி ஐயோ என எண்ணி திரும்பி கொள்ள அவனோ தன் பார்வையை திருப்பி, "என்ன இங்கே?" என கேட்க,
"என்னை எதுவும் தப்பா நினைக்காதீங்க சார் பாட்டி தான் இனிமேல் நீ இந்த ரூம்ல இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டாங்க.. அந்த ரூம்ல என்னை உள்ளே கூட விடல அதனாலதான் உங்க பாத்ரூம் யூஸ் பண்ணிட்டேன்.. என்னோட டிரஸ் எல்லாம் இங்கே தூக்கி போட்டுட்டாங்க.." என்று கூறவும் அவனும் எங்கோ பார்த்துக் கொண்டு, "இந்த கிழவி ஒரு முடிவோட தான் வந்திருக்கு போல" என்று கூறிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான் அவன் சென்றதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது..
"என்ன டி குளிக்க இத்தனை நேரமா?" என பாட்டி கத்த ஐயோ இன்னும் என்ன எல்லாம் பாக்க போறேன் தெரியலையே கயல் புலம்ப,
நிரஞ்சன் அவர் அருகே வந்து, "வந்ததுமே உங்க வேலையை காட்டிட்டிங்க அப்படி தானே? இதுக்கு தான் நீங்க வந்தீங்களா?" என்று அவனுடைய அறையைக் காட்டி அவன் கேட்க, அவன் எதை சொல்கிறான் என்பதை புரிந்து கொண்ட அவரோ, "கல்யாணம் ஆனவங்க ஒட்டுக்கா ஒரே ரூம்ல தான் இருக்கணும் வார்த்தைக்கு வார்த்தை நாங்க ஒண்ணா இருக்கோம் அப்படின்னு சொல்லக்கூடாது வாழ்ந்து காட்டணும் புரியுதா? இல்லை பேப்பர்ல உங்க இரண்டு பேரோட ஃபோட்டோ தான் வரும்" என்றவர் அவனை பார்த்து நக்கலாக சிரிக்க அவனோ அவரை பார்த்து முறைத்தான்.. அதை கண்டு அவரோ, "போடா" என கூறி விட்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டார்..
அவர் ஒரு முடிவோடு தான் இங்கு வந்திருக்கிறார் அவரின் திருவிளையாடல்கள் ஆரம்பம் ஆகும் போது நிரஞ்சன் மற்றும் கயல் இருவரின் நிலைமை அதோ கதிதான்.. இவர்கள் இருவரையும் அவர் இணைக்காமல் செல்ல மாட்டார் என்ற உறுதியோடு வந்திருக்கிறார் கருணையே இல்லாத கருணை அம்மாள்..
