வர்ணம் 27
அத்தியாயம் : 27
காலை முதல் மாலை வரை அவர்கள் இருவரையும் வைத்து செய்தது போதாது என்று இரவும் இதோ அவளை அடுக்களையில் வைத்து செய்து கொண்டு இருந்தார் கருணை அம்மாள்..அவளோ விதியே என அவர் சொல்லி தரும் போல தோசை வார்த்து கொண்டிருந்தாள்..
அந்த நேரம் பார்த்து அவளுடைய ஃபோன் அவன் அமர்ந்திருந்த சோபாவின் அருகே உள்ள மேசையில் இருந்த ஃபோன் அலறியது.. அவனுடைய கண்கள் அவளுடைய அலைப்பேசியின் மீது பதிந்தது..
"உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே.." என்ற பாடல் மொபைலில் ஒலிக்க, அதில் கிஷோர் என்ற அவனின் புகைப்படம் அவளின் போனின் திரையில் தெரிய, நிரஞ்சன் அந்த பாடலை கேட்டதுமே கடுப்பு ஆகினான்..
ஆம் அவனுக்கு அந்த பாடல் பிடிக்காது.. அதுவும் இவள் அவனுடன் வாழ வந்ததுக்கு பிறகு தான் இந்த பாடல் பிடிக்காமல் போக காரணம்..
ஆம் கிஷோர்க்காக தான் இந்த பாடலை அவள் வைத்திருக்கிறாள் என்பதை விட கிஷோர் அவள் ஃபோனில் வைத்திருக்கிறான் என்பது தான் உண்மை ஆனால் அதை எல்லாம் இப்போது அவள் நிரஞ்சனிடம் விலக்கும் மனநிலையில் இல்லை..அவள் இதை எல்லாம் கூற போனாலும் நிரஞ்சன் நம்ப போவதுமில்லை அது வேறு விடயம்..அவன் அவளுடைய போனை பார்க்காமலேயே கிஷோர் தான் அழைக்கிறான் என்பதை புரிந்து கடுகடுவென அமர்ந்திருந்தான் நிரஞ்சன்..
இவளும் போனில் ரிங் டோனை வைத்து கிஷோர் தான் அழைக்கிறான் என்பதை புரிந்தவள் முகம் பீதியில் உறைய, 'ஐயோ இவன் சும்மாவே என்னை விட மாட்டேங்குறான் பாட்டி வந்ததுனால தான் அந்த பிரச்சனை இப்ப கொஞ்சமா ஓய்ந்து இருக்கு அவர் அதுக்கு அப்புறம் எதுவும் கேட்கல.. மறுபடியும் அவருடைய கொம்பை இவன் சீவி விடுறானே' என எண்ணிக்கொண்டே சமையல் அறையில் பாட்டி சொல்வதை போல செய்து கொண்டு இருக்க,
போனோடு நிற்காமல், சரசரவென மெசேஜ்கள் வந்த வண்ணமாக இருந்தது.. அதையும் அவன் கடைக்கண்ணால் பார்த்து கொண்டே இருக்க, அதன் பின் மீண்டும் போன் அடிக்க அவளின் கவனம் லேசாக சமையலில் இருந்து சிதற, அதைக் கண்ட கருணை அம்மாள், "என்னடி பார்வை அங்க போகுது? ஒழுக்கமா தோசை ஊத்து டி தோசை வட்டமா நல்ல முறுகலா இருக்கணும் எங்கேயாவது சதுரமா, முக்கோணமாக போச்சு அவ்வளவுதான் தோசை கரண்டில வெளித்துடுவேன் சொல்லிட்டேன்.." என்றார் அவர்..
"பாட்டி போன் அடிக்குது பாட்டி" என கூற, "அடிச்சா அடிச்சிட்டு போகட்டும் அதுதான் உன்னோட புருஷன் அங்க தான் இருக்கான்..அவன் எடுக்க மாட்டானா நீ தான் போய் போனை எடுக்கணுமா? டேய் நிரஞ்சா யாருடா அது விவஸ்தை இல்லாமல் ராத்திரியில கூப்பிடுறதுன்னு பாரு" என்க,
அவனுக்கு தான் இது யாரென்று தெரியுமே அதனால் அவனோ கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருக்க, மீண்டும் அவளுடைய போன் ஒலித்தது..அவனின் பொறுமையை அந்த ஃபோன் கெடுத்து கெடுத்து கொண்டு இருந்தது என்று தான் கூற வேண்டும்..
நிரஞ்சன் கொஞ்சம் கொஞ்சமாக கடுப்பாகிக் கொண்டிருக்க, "டேய் அது என்னன்னு பாருடா அதை கூட செய்ய மாட்டியா நீ?? அந்த போன் வேற கத்திக்கிட்டே இருக்கு..அதை எடுத்து தொலை இல்லை தூர போடு" என பாட்டி கத்த, இவளுக்கோ பயம் அவன் எங்கேயாவது போனை எடுத்து கிஷோரிடம் பேசி விடுவானோ என தோசையை ஊற்றிக் கொண்டிருந்தாலும் பயத்திலேயே இருந்தாள் கயல்.. அதனால் தோசை வட்டத்தில் இருந்து முக்கோணம் ஆன அவள் தலையில் அதுக்காக ஒரு இடி ஒன்று விழுந்தது..
மீண்டும் ஃபோன் ரிங் ஆகவும் பாட்டி, "அந்த போனை தான் எடுத்து தொலையேண்டா" என்று கத்தவும் சரியாக இருக்க, அதற்குள் நிரஞ்சன் கடுப்பின் உச்சிக்கு சென்று இருந்தான்..அந்த போனை எடுப்பதற்குள் கால் கட் ஆகி விட எரிச்சல் அடைந்த நிரஞ்சன் கண்ணில் கிஷோர் அவளுக்கு அனுப்பிய மெசேஜ்கள் கண்ணில் பட்டது..
ஆம் அதை பார்த்தான் நிரஞ்சன் அதில், "ஏண்டி கோபமா? பேச மாட்டியா? எத்தனை தடவை மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன்? எத்தனை தடவை கால் பண்ணிட்டு இருக்கேன்? எடுக்க மாட்டியா அவ்ளோ பிஸியா நீ.. உன்னோட அத்தை வீட்டுக்கு போனதில் இருந்து உன் கூட பேசவே முடியல டி.. நேத்து ஏதாவது பிரச்சினை ஆச்சா?
ஐ லவ் யூ டி தங்கமே.. நேத்து நான் ரொம்ப சந்தோசமா இருந்தேன்..உன்னை கிஸ் பண்ணி ஆகணும்னு நினைச்சேன்.. ஆனால் பண்ண முடியாம போயிடுச்சு.. கண்டிப்பா இந்த காலேஜ் நான் முடிக்கிறதுக்குள்ள உன்னை கிஸ் பண்ணி இருப்பேன்.. எப்படி நான் உன்னை கூட்டிட்டு வெளியே போனேனோ அதே மாதிரி இதையும் பண்ணி இருப்பேன் பார்.. உன்னை இறுக்கமா அணைச்சு முத்தம் கொடுக்கணும்னு போல இருக்கு உனக்காக என்னோட படுக்கை காத்து இருக்கு எப்போ டி என் வாழ்க்கை உள்ளே வருவ?" என்று அவன் ஓவராக அவள் மீது காதலைப் பொழிந்து காதல் மொழிகளில் பேசி வழிந்து இருக்க அது எல்லாம் அவன் கண்ணில் படவும் ஏற்கனவே கிஷோர் என்ற ஒரு பெயர் தான் இவர்களுக்குள்ளே பிரச்சனையாக இருக்க மீண்டும் மீண்டும் அவனே நிரஞ்சனின் நடுவே குறுக்கே வருவது போல இருக்க, அதிலும் அவன் அனுப்பிய காதல் மெசேஜ்கள் அவனின் ஈகோவை தூண்டி விட்டது..
அவளோ, ஃபோன் வர கூடாது என அவள் மானசீகமாக வேண்டி இருந்தாள்..
நேற்றுதான் ஒரு பிரச்சனை ஓய்ந்திருக்க மீண்டும் அவனுடைய அழைப்பும் அவனுடைய மெசேஜ்களும் நிரஞ்சனுக்கு ஆத்திரத்தை கிளப்ப அதிலும் அவன் அனுப்பிய செய்திகள் தான் அவனை கடுப்பின் உச்சிக்கு சென்று விட, அதன் பிறகு அவன் வேறு எதுவும் யோசிக்கவில்லை ஓங்கி தரையில் அந்த மொபைலை கீழே போட்டு உடைத்து விட்டான்..
அந்த போன் கீழே விழுந்த நொடி சிதறு சிதறலாக சிதறிவிட்டது.. போன் உடைந்த சத்தத்தை கேட்டு பதறிப் போய் அவளும் பாட்டியும் வந்து பார்க்க இருவருமே திகைத்து நிற்க, அவள் அவனை மட்டும்தான் பார்த்தான் அவனுடைய முகமே அவளுக்கு விளங்கி விட்டது அவன் கோபத்தில் இருக்கிறான் அதற்கு காரணம் கிஷோர் என்று ஆனால் இது தெரியாத பாட்டி, "ஏன்டா போனை கீழே போட்டியா பாரு எப்படி உடைந்து இருக்குன்னு" என்க
அவனோ அந்த மெசேஜ்களின் தாக்கத்தில், "சிலது உடையறதும் நல்லதுக்கு தான்" என்று அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூறியவன் அவ்விடம் விட்டு நகர்ந்தான்...
அவளுக்கோ ஆத்திரம் தாளவில்லை.. அப்படி என்ன கிஷோர் அழைத்ததும் தன் போனை கீழே போட்டு உடைக்கும் அளவுக்கு அவருக்கும் எனக்கும் என்ன இருக்கிறது இதைப் பற்றி பேசியதாக வேண்டும் என கடுப்போடு அவள் இருந்தாள்..
அனைவரும் இரவு உணவை உண்டு விட்டு பாட்டி படுக்கச் செல்ல அவளும் அந்த தருணத்திற்காக காத்திருந்தவள் போல அவனுடைய அறைக்குள் நுழைந்த அவள் கதவை தாழிட அவனும் கடுப்பாகி படுத்து இருந்தான்..
அவனுக்கு அவளை தன் அறைக்குள் விட மனமே இல்லை.. இருந்தாலும் பாட்டி இருப்பதால் அமைதியாக இருக்க அவளோ உள்ளே நுழையவும் அவன் அருகே இருந்த தலையணையை தூக்கி எறிந்து, "அங்கேயே படு" என்றான்..
அவளோ அந்த செயலில் மேலும் ஆத்திரமுற்றவள், "ஏன்" என கேட்க அதை கேட்டு நிரஞ்சன் திகைத்தான்..
"ஏன்னு சொன்னா அப்போ என் பக்கத்தில் படுக்கிற ஐடியாவா?" என்க
அவளோ, "படுத்தா என்ன தப்பு?" என அவள் கேட்க அதை கேட்டு மேலும் அதிர்ந்து படுத்துக் கொண்டிருந்தவன் சட்டென்று எழுந்து நின்றான்.. "என்னடி சொன்ன?" என கேட்டான்.. ஏனெனில் அவள் கூறியது சரிதானா என்பது போல அவன் திகைத்தான் என்பதுதான் உண்மை...
அவளும் தன் போன் போய்விட்டதே என்ற ஆத்திரத்தோடு, "யாரை கேட்டு என்னுடைய போனை கீழே போட்டு உடைச்சீங்க?" என கேட்டாள்..
