வர்ணம் 10

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 56
Thread starter  

அத்தியாயம் : 10

இங்கே கயல் இவர்களோடு அவனுடைய வீட்டுக்கு வர அந்த இடமும் சுற்றி இருக்கும் நபர்களும் அவளுக்கு ஒரு வித அழுத்தத்தை கொடுக்க, பாக்கியம் அவளை வீட்டுக்குள் அழைத்து வந்து அவளின் கைகளைப் பிடித்து, "அம்மா இதெல்லாம் நடக்கும் என நாங்களும் எதிர்பார்க்கல.. உன்னுடைய அக்கா இப்படி போவானு நாங்க எதிர்பார்க்கல.. ஆனால் நீயும், அவனும் தான் சேரனும்னு இருக்கு நல்லா இருங்க.. உனக்கு என்ன தேவை என்றாலும் என்கிட்ட தாராளமா கேட்கலாம்.. அவனைப் பத்தி நீ யோசிக்காத நான் இருக்கேன்" என்று ஆறுதலாக பாக்கியம் பேச கொஞ்சம் அவளும் மனம் லேசானது போல உணர, வரும் வழியில் எல்லாம் இதை ஏற்று கொள்ள வேண்டும் நாம் எதிர்பார்த்தது போல எல்லாம் நடக்காதே எதிர்பார்க்காததையும் எதிர்பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவளே பலவிதத்தில் யோசித்து தன் மனதை கொஞ்சம் இயல்பாக்கி வைத்திருக்க அவளும் பாக்கியம் கூறவும் சரி என தலையாட்டினாள்.. பிறகு அவளுக்கு அவனின் அறையை காட்ட அவளும் அங்கு சென்று படுத்து கொண்டாள்.. அவளுக்கு அந்த அறையை பார்க்கும் போதே நெஞ்சுக்குள் திக்கென்று இருந்தது.. அவளின் இதயம் பயத்தால் நடுங்கியது..என்ன தான் அவளுடைய அம்மாவுக்காக அவள் ஒப்பு கொண்டாலும் அவளால் இந்த திருமணத்தை மனதளவில் ஏற்று கொள்ள முடியாமல் தான் தவித்தாள்.. அவனோடு ஒரு வாழ்க்கை அவளால் யோசிக்க கூட முடியவில்லை... பல வித எண்ணங்களால் அவளுக்கு உறக்கமே வரவில்லை..

அவள் உறங்கும் வரை அவன் வரவே இல்லை..காலையில் அவள் கண் விழிக்கும் போது அவன் கல்லூரிக்கு தயாராகி கொண்டு இருப்பதை பார்த்த அவளோ பக்கென்று பயந்து எழுந்து அமர அவனோ அவள் எழுந்ததை பார்த்து கொண்டே தலையை வாரினான்..

அவளோ வேகமாக எழுந்து சமயத்தை பார்த்த அவள் பதறி நின்றவளுக்கு அவனோடு ஒரே அறையில் இருப்பது மூச்சு அடைப்பது போல இருக்க, அவனை அவ்வளவு அருகே பார்த்ததும் மேலும் பயந்து போனாள்.. ஏனெனில் நேற்றைய ஒற்றை வார்த்தையில் அவளுக்கு பயம் காட்டி இருந்தான் நிரஞ்சன்..

அந்த பயம் அவளை விட்டு போகவில்லை..அவனோ அவளின் பதட்டத்தை பார்த்து அவனை சற்று இயல்பாக்கி கொண்டு நேற்று இரவு எல்லாம் நான் தானே அவள் கழுத்தில் தாலி கட்டினேன் அப்பொழுது நான் தான் கயலுக்கு உத்திரவாதம்..நான் அவ்வாறு அவளிடம் பேசி இருக்க கூடாது என எண்ணி கயலை அப்படியே விடக்கூடாது இப்பொழுது அவனால் கயலுடன் வாழ முடியவில்லை என்றாலும் கயலை காயப்படுத்தக் கூடாது.. தனக்குள் இருக்கும் பிரச்சனைக்கு கயல் என்ன செய்வாள் பாவம் அவளுக்கும் அந்த பிரச்சனைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையே அவளும் என்னைப்போல கணவனை இழந்த பெண் தானே என நினைத்தான்..

அதனால் திரும்பி அவளை பார்த்து நேற்று எதுவுமே நடவாவது போல, "உன்னோட பேரு கயல் தானே" என்று கேட்க அவள் அவன் பேசுகிறான் என்றதும் அதிர்ச்சியடைந்து, "ஆமாம் கயல்விழி" என்க

"சாரி நேத்து எல்லாரும் சேர்ந்து டென்ஷன் பண்ணதுல உன்கிட்டயும் கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டேன் அப்புறம் தான் யோசிச்சேன் நீயும் என்னை மாதிரி தானே இரண்டாவது வாழ்க்கை நல்லபடியா இருக்கணும்னு நினைச்சு வந்திருப்ப ஆனால் முதல் நாளே இப்படியாகவும் நீயும் வருத்தப்பட்டு இருப்ப.. ஐ அம் சாரி இனிமேல் இப்படி நடக்காது.. என்னால உடனடியா இரண்டாவது வாழ்க்கைக்குள் நுழைய முடியாது ஆனால் நாம கொஞ்ச நாளைக்கு குட் பிரண்ட்ஸா இருப்போம் திரும்ப போகப் போக பார்த்துக்கலாம்.." என்று அவன் அவளைப் பார்த்துக் கூற,

அதைக் கேட்டு அவளுக்கு தலையே சுற்றியது என்ன இரண்டாவது கல்யாணமா என்னோட முதல் கல்யாணமே இதுதானே என அவள் மனதுக்குள் யோசனை செய்தாள்..

"ஆமாம் நீ என்ன வேலை செய்ற உன்ன பத்தி எனக்கு எதுவுமே தெரியாது பெயர் கூட நேத்து யாரோ சொன்னாங்க அப்பத்தான் உன்னோட பேரு கூட எனக்கு தெரியும் நீ என்ன பண்ணிட்டு இருக்க?" என அவன் கேட்டான்

"படி...." என இழுத்தவளுக்கு அவன் முகம் கூர்மையாவதை பார்த்து அப்பொழுதுதான் நினைவு வந்தது இவள் படிக்கிறாள் என அவனுக்கு தெரியாது அதனால், "பார்லரில் வேலை செய்கிறேன் பியூட்டி பார்லர்" என்று கூற, அதைக் கேட்ட அவனும் அவளை பார்த்து, "மேக்கப்ன்னா ரொம்ப பிடிக்குமா உன்னை பார்த்து அப்படி தெரியலையே..ஓகே ஆனால் உன்னை பார்த்தா ரொம்ப சின்ன பெண் மாதிரி இருக்கு நேத்து சாரீல அப்படி தெரியல.. இப்போ பார்க்கும்போது ரொம்ப சின்னதா இருக்க என்ன வயசு உனக்கு" என்றான் சந்தேகமாக..அதை பார்த்து அவளோ மூச்சை உள்ளே இழுத்து கொண்டு, "என் வீட்ல எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்க" என்று தயங்கி கூறியவள் மறந்தும் அவளுடைய வயதை அவனிடம் கூறவில்லை.. அவனும், "ஓகே போகப்போக கொஞ்சம் கொஞ்சமா பேசலாம்..

நான் மெட்ராஸ் காலேஜ்ல ப்ரொபஸரா இருக்கேன்.. ஏற்கனவே ரெண்டு மூணு காலேஜ்ல ஒர்க் பண்ணி இருக்கேன் இந்த காலேஜ்ல ஜாயின் பண்ணி ஒரு மாசம் தான் ஆகுது" என்று நிரஞ்சன் தன்னை பற்றி அவளிடம் அறிமுகம் செய்து கொண்டான்..

நேற்று அவன் பேசியதற்கு கைமாறாக அவளிடம் இயல்பாக பேச முயல்கிறான் அவ்வளவுதான் மற்றபடி அவனுக்கு வேறொன்றும் இல்லை...

அவளோ மனதுக்குள், 'அதுதான் எனக்கு தெரியுமே சார் தயவு செஞ்சு இன்னும் நீங்க என்கிட்ட இயல்பா பேசறேன்னு சொல்லி என்னுடைய வாயை கிளறாதீங்க சார் எனக்கு பொய் சொல்ல வராது நான் மாட்டிப்பேன் இன்னும் என்ன எல்லாம் பார்க்க இருக்கோ?' என்று அவள் மனதுக்குள் நினைத்து கொண்டாள்..

அவள் அமைதியாக இருப்பதை பார்த்த அவனுக்கு இன்னும் என்ன பேசுவது என தெரியவில்லை. "ஓகே பார்க்கலாம்.". என்று கூறிவிட்டு அவன் கிளம்பி விட்டான்..

அவன் சென்றதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.. நேற்று அத்தனை பேர் முன்னிலையில் அவன் அப்படி பேசுவான் என எதிர்பார்க்கவில்லை.. ஆனால் இன்று காலை இயல்பாக அவளிடம் பேசவும், "சார் கொஞ்சம் நல்லவங்க தான் போல" என்று அவளுடைய மனம் ஏனோ இயல்பாக துவங்கியது.. ஆனால் அவளை ஏற்கனவே திருமணம் ஆகி கணவனை இழந்த பெண் என நினைத்துக் கொண்டு இருப்பதை தான் அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை ..

அவனைப் பொறுத்தவரை இவள் அவனுக்கு இரண்டாவது மனைவியாக இருக்கலாம் ஆனால் அவளுக்கு இவன் தானே முதல் கணவன்..அதை விட அவளை பார்த்து பார்க்க சின்ன பெண் என கூறி விட அதை நினைத்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியாமல் அவள் இருந்தாள் 24 மணி நேரத்துக்குள் அவள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறிவிட்டது என நினைத்தாள் ஆனால் இது எல்லாம் ஒன்றும் இல்லை இனி தான் அவளுக்கு தலைவலி இருக்கப் போகிறது என அவளுக்கு இந்நேரம் தெரியவில்லை..

"ஐயோ கடவுளே இனி காலேஜ்க்குள்ள போய் அவர் கண்ணுல பட்டுட்டா முருகா என்னை ஏன் இப்படி எல்லாம் பண்ற?" என்று மானசீகமாக கயல்விழி வேண்டினாள்.. அதற்குள் சமயம் ஓடவும், "ஐயோ காலேஜுக்கு டைம் ஆச்சு" என வேகமாக தான் கொண்டு வந்திருந்த பேகிலிருந்து துணியை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கி ஓடினாள் கயல்விழி...

கீழே தயாராகி வந்தவன் அருகே வந்த பாக்கியம், "எப்பப்பா வந்த? என்னப்பா நீ நேத்து அப்படி நடந்துகிட்ட நமக்கு இருக்கிற பிரச்சினை எப்படி கயல்விழிக்கு தெரியும்?" என்று கேட்க

"அம்மா ஐ நோ அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது பாவம் நான் அவளை கஷ்டப்படுத்திட்டேன்னு எனக்கு தெரியும் முழுசா எதையும் என்னால மறக்க முடியல அதிலிருந்து வெளியே வர முடியல கொஞ்சம் கொஞ்சமா நான் முயற்சி பண்றேன்" என்றவன் உண்டு விட்டு எப்பொழுதும் போல காலேஜுக்கு சென்று விட்டான்...

இங்கு அவளும் தயாராகி வர பதட்டத்தோடு இருந்த பாக்கியம், "அவன் ஏதாவது கேட்டானா" என கேட்க, "இல்லை என்ன பண்ற என்ன வேலை செய்யறேன்னு?" என்று கேட்டார்

அதைக் கேட்டு கருணை அம்மாள், "நீ என்ன சொன்ன என்ன?" பதட்டத்தோடு கேட்க, "நான் பார்லரில் வேலை செய்கிறேன் என்று சொல்லி இருக்கேன்" என்க..

"ஓகே ஓகே அதுவே மெயின்டெய்ன் பண்ணிக்கோ" என கூறிய பாக்கியத்திற்கும் பதட்டம் தான் இருந்தாலும் என்ன செய்வது என தெரியாமல் முழித்தார்..

"அவர் பார்த்தா சின்ன பொண்ணு மாதிரி இருக்க அப்படின்னு சொன்னார்.. எவ்வளவு நாளைக்கு இந்த பொய்?"  என்று கூற

"அம்மா எவ்வளவு நாளைக்கு இதை மறைத்து வைக்க முடியும் எனக்கு தெரியல" என்று கூறவும் கயல்விழிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ..

அவளும், "எனக்கு காலேஜ் போகணும்" என்று கூற பாக்கியம், "சரிமா போயிட்டு வா இதோ உனக்கான ஃபுட் ப்ரிப்பேர் பண்ணி இருக்கேன் எடுத்துட்டு போ" என்று பாக்கியம் கொடுக்க ஆனால் பாக்கியத்துக்கும் தெரியாது.. அவள் இரண்டாவது வருடம் கல்லூரியில் படிக்கிறாள் என்று மட்டும்தான் பாக்கியத்துக்கு தெரியுமே தவிர இவனும், அவளும் ஒரே இடத்தில் தான் இருக்கப் போகிறார்கள் என்று கயலும் அதை சொல்லவில்லை என்பது கூடுதலான தகவல்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top