வர்ணம் 11

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 56
Thread starter  

அத்தியாயம் : 11

அரக்க பறக்க கல்லூரிக்கு வந்தவள் கண்கள் நாலா பார்க்கவும் சுழன்றது.. எங்கேயாவது வாத்தியார் கண்களில் தட்டுப்படுகிறானா என அவள் பார்த்துக் கொண்டே நடந்தாள் என்ன ஒரு கொடுமை..தன்னை இப்படி ஆக்கி விட்டாரே இவர் என அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை..

இந்த திடீர் கல்யாணத்தை மறைக்க தாலியை டிரஸுக்குள் பின் செய்து எதுவுமே தெரியாதது போல வந்தாள்.. எல்லோரும் இவளையே பார்ப்பது போன்ற பிரம்மை இவளுக்கு எழாமல் இல்லை..

இவளை கண்டதுமே அவளுடைய தோழி ஓடி வந்து அவளை இலேசாக தள்ளி விடுவது போல இடிக்க, அதில் பயந்த கயலை பார்த்து, "ஏய் கயல் எப்படி வந்த?" என்று கேட்க, அவளோ அதிர்ச்சி மாறாமல் இருக்க, அவளின் பயத்தை கண்ட அவளுடைய தோழி லாவண்யா, "என்ன டி ஆச்சு உனக்கு?? பேயை பார்த்த மாதிரி பயப்படுற" என கேட்டாள்..

அவளோ ஒரு நொடி தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் லாவண்யாவை கண்டு கொஞ்சம் சமாதானமாகி, "நீயா ஒன்னும் இல்ல லாவண்யா நான் இன்னைக்கு தான் வந்தேன்" என்று கூற

"சரி சரி அக்காவோட கல்யாணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா" என்று விசாரிக்க அதைக் கேட்டதுமே பக்கென்று இருந்தது..

கயல் மனதுக்குள், 'அதை என்னென்ன சொல்லுவேன் ஏதுன்னு சொல்லுவேன் என்னை வைத்து செஞ்சுட்டாங்க' என்று எண்ணினாலும் வெளியே அவளிடம், "எல்லாம் முடிஞ்சுதடி" என்று அலுத்து கொண்டு கூற,

லாவண்யா, "உன்னோட ஆளு உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காரு.. காலையிலேயே என்கிட்ட சிக்னல் கொடுத்துட்டாரு நீ வந்ததும் அவரை பார்க்க வரணும் அப்படின்னு.. சோ சீக்கிரம் அந்த அண்ணாவை போய் பார்த்துடு" என்று கூற, கயலோ ஐயோ இதை எப்படி மறந்தேன் என யோசித்தவள், அவனைக் கண்டாலே நடுங்கும் அப்படி இருக்க, அவனிடம் இந்த உண்மையை எப்படி சொல்வது அவன் என்ன செய்வான் என யோசிக்கும் பொழுதே அவளுக்கு தலை சுற்றியது இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், "சரி டி நான் போய் பார்க்கிறேன் லஞ்ச் பிரேக்கில் போறேன்" என்று கூறிவிட்டு வகுப்புக்கு செல்லும் போதே தூரத்தில் வேறொரு டிபார்ட்மெண்டுக்கு நிரஞ்சன் செல்வது அவள் கண்ணில் பட்டது அவனை கண்டதும்  தன் சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து முகத்தை மூடிக்கொண்டாள்..

அவளின் தீடிர் செய்கையை பார்த்த அவளுடைய தோழி லாவண்யா, "என்னடி ஆச்சு உனக்கு எதுக்குடி முகத்தை மூடுற?" என கேட்க,

" அ..து.. வெயில் ஜாஸ்தியா இருக்கும்ல அதனாலதான்" என்று சம்பந்தமில்லாத பதிலை கூற, "வெயிலா காலைல எங்கே  இருந்து வெயில் வருது உனக்கு?"  என தோழி கேட்க,

தொடர்ந்து லாவண்யா கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கவும் கடுப்பான கயல், "நீ பேசாம வாடி நானே டென்ஷன்ல இருக்கேன் நீ வேற ஏதாவது கேட்டு நான் உளற போறேன்" என்று கூறியவள் மேற்படி லாவண்யாவை பேச விடாமல் தடை செய்து வகுப்பறைக்கு அழைத்துச் சென்று அமர்ந்து கொண்டாள்..

இவர்கள் அனைவரும் செய்த குளறுபடிக்கு ஏதோ அவள் தவறு செய்வது போல அவள் மனம் துடித்துக் கொண்டே இருந்தது.. மற்றவர்களுக்காக பார்த்து பார்த்து அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம் என்பது போல ஆகிற்று..

நேற்றில் இருந்து இன்று வரை என்னென்னவோ அவள் வாழ்க்கையில் நடந்து விட்டது.. இதற்கு யாரை காரணம் சொல்ல எதுவுமே அவளுக்கு தெரியவில்லை.. ஒரு பக்கம் அவளுடைய அக்கா ஓடிப்போனது என்றால் மறுபக்கம் அவளுக்கு திடீர் திருமணம் ஆனது அதிலும் இவள் கல்லூரியில் படிக்கிறாள் என நிரஞ்சனுக்கு தெரியாது இதுபோக கிஷோர் வேறு இப்படி பலவித குளறுபடிகளில் அவளால் நிம்மதியாக பாடத்தைக் கூட கவனிக்க முடியவில்லை..

மதியம் எப்படி ஆனது என தெரியவில்லை மதியம் ஆவதற்குள் அவளோ தளர்ந்து விட்டாள்..அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.. தலைக்குள் பல யோசனைகள் சுழன்று கொண்டு இருந்தது..

எத்தனை நாளைக்கு இதெல்லாம்? கடவுள் என்னை ஏன் இப்படி கோர்த்து விட்டார் என நினைத்தாள்..

"ஏய் கயல் கிஷோர் அண்ணாவை பார்க்க போலையா அண்ணா காலையிலேயே உன்னை மத்தியானம் வர சொல்லியிருந்தார்.." என லாவண்யா கூட அவனை காண போக வேணுமா ஐயோ என்று தான் அவளுக்கு இருந்தது..

அவளுக்கு எங்கேயும் போகாமல் வகுப்புக்குள் இருந்தால் என்ன என்று இருந்தது.. அதற்குள், "ஹே கயல் கிஷோர் உன்னை வர சொன்னான்" என கிஷோரின் நண்பனும் வந்து கூறி விட்டு சென்றான்..

இனி அவனை பார்க்க செல்லவில்லை என்றால் அவனுக்கு கோபம் வரும் மிகப்பெரிய கோபக்காரன் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என எதுவுமே பார்க்க மாட்டான் எடுத்ததுமே கை நீட்டி விடுவான்..அப்படி இருக்க, அவனை காண துணைக்கு எப்போதும் போல லாவண்யாவை அழைத்து கொண்டு சென்றாள்..

போகும் போது அவள், "நான் இனிமேல் ஹாஸ்டல்ல இருக்க மாட்டேன் டி" என்று கூற, அதைக் கேட்டு லாவண்யா, "என்னடி சொல்ற அப்ப எங்க இருக்க போற?" என்று கேட்டாள்..

"அது வந்து நான் என்னுடைய அத்தை வீட்டில் இருந்து படிக்க வரப் போறேன்" என்று கூற, "அத்தை யா உனக்கு யாரும் இல்லை என்று தானே சொன்ன?" என்க

"ஏண்டி ஏன்?? எனக்கெல்லாம் அத்தை இருக்க மாட்டாங்களா சும்மா கேள்வி கேட்டுட்டே இருக்காத லாவண்யா கடுப்பாயிடுவேன்" என்று மேற்கொண்டு அவள் கேள்வி கேட்டு விடுவாளோ என அவளின் வாயை கட்ட,

அவளோ, "நானும் பாத்துகிட்டே இருக்கேன் நீ வந்ததுல இருந்து ஒரு மார்க்கமாக தாண்டி இருக்க என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லிடு இல்ல உன்னோட ஆள் கிட்ட போட்டு கொடுத்துடுவேன்" என்க

அவளுக்கும் கிஷோரை நினைத்து பயம் இல்லாமல் இல்லை.. அவளுக்கே இந்த கல்யாணம் எல்லாம் நம்ப முடியாமல் இருக்க, உடனே கிஷோரிடம் கூறினால் அவன் கோபத்தில் நேராக நிரஞ்சனிடம் ஏதாவது பிரச்சினை செய்து விடுவானோ என்ற பயம் வேறு கயலுக்கு இருந்தது..

ஏனெனில் அவன் அப்படி எல்லாம் செய்யக்கூடிய ஒருவன் தான் அப்படி இருக்க, "நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இரு நான் அவர்கிட்ட பேசுகிறேன் நீ எதுவும் பேச வேணாம்" என்று கயல் கூறினாள்..

அவனோ எப்போதும் போல கேன்டீன் பின்புறம் இருக்கும் மரத்தடியில் போடப்பட்டு இருக்கும் இருக்கையில் நண்பர்களோடு அமர்ந்து இருந்தான்..

அவன் இன்ஜினியரிங் இறுதி வருட மாணவன்.. இன்னும் ஒரு ஆறு மாதத்துக்குள் அவனுடைய படிப்பு முடிந்துவிடும் கயலுக்கும், அவனுக்கும் எல்லாமே எதிர் எதிர் தான் எப்படி இவர்கள் இருவரும் காதலித்தார்கள் என யாருக்குமே தெரியவில்லை..

கயலோ பொறுமையான, எளிமையான, ஜாலியாக இருக்கும் பெண் தனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அதெல்லாம் முறியடித்து அவள் சுயம்பு போல மேலே வர முயற்சி செய்யும் பெண் மற்றும் தனக்கு வரும் அனைத்து இன்னல்களையும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கை என்றால் இப்படித்தான் வாழ்க்கையின் ஓட்டத்தில் நாமளும் ஓட வேண்டும் என்ற கொள்கை கொண்ட பெண்.. படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைத்து தீயாக வளர்த்துக்கொண்டு இருக்கும் ஒரு பெண்

ஆனால் கிஷோர் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வது, கை நீட்டுவது, எப்ப பார்த்தாலும் கடுகடுவென இருக்கும் ரகம், எதையும் யோசித்து செயல்படாத ஒருவன் பிறர் அவனைப் புகழ்த்தி துதி பாட அதில் இன்பம் கொள்ளும் ஒருத்தன், அவனுக்கு படிப்பு முன்னேற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை இந்த காலேஜில் ஹீரோ போல வலம்  வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவன் எப்படி இவர்கள் இருவரும் இணைந்தார்கள் என அவர்களுக்கே புரியவில்லை என்றாலும் கயல் இதோ அவன் முன்னே நின்று கொண்டிருந்தாள்..

அவனை காண போகிறோம் என்றதும் அவளின் துப்பட்டாவை கழுத்து வரை போட்டு கொண்டு தாலி தெரிகிறதா என மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்துவிட்டு அவள் அவன் முன்னே பதட்டத்துடன் நின்றாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top