வர்ணம் 12
அத்தியாயம் : 12
அவனிடம் உண்மையை சொல்வதா இல்லை வேண்டாமா என அவளுக்கு தெரியவில்லை.. என்ன இருந்தாலும் மனதுக்குள் இப்போது சொல்வது இல்லை என முடிவு செய்து கொண்டாள்..
அவனை கண்டதும், "ஏய் கயல் என்னடி காலைல வந்திருக்க என்னை பார்க்க வரல மத்தியானம் ஆச்சு அப்பவும் வரல ஆள் அனுப்பி விட்டால் தான் பார்க்க வருவியா? உன்னோட மாமா எவ்ளோ நாள் தான் உனக்காக வெயிட் பண்றது?" என அவன் கேட்க,
அந்தக் கேள்விலேயே அவன் லேசான கடுப்போடு தான் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்ட கயல், "இல்ல காலைல ஊரிலிருந்து வர லேட்டாயிடுச்சு" என்று கூற
"ஓகே என்ன ஒரு மாதிரி இருக்க?" என அவளின் முகத்தைப் பார்த்து கேட்டான்..
அவளோ, "ஒன்னுமில்லை நான் நல்லா தான் இருக்கேன்" என கூற..
"இல்லையே ஒரு மாதிரி இருக்கே.. சிரிப்பு மிஸ் ஆகுதே" என அவன் சரியாக கணிக்க,
அவளால் அவனின் அன்பை ரசிக்க கூட முடியவில்லை ஏனோ எரிச்சலாக இருந்தது..
அவனோ என்னாச்சு என்பது போல லாவண்யாவை பார்க்க, "எனக்கும் அப்படித்தான் தோணுச்சு அண்ணா ஆனால் சொல்ல மாட்டேங்கிறா" என்று கூற அவனும் எழுந்து தன் உடையை சரி செய்தவன் அவளின் கைகளை பிடிக்க போக அவளோ மறுத்தாள்..
அதை கவனம் கொண்டவனுக்கு அவளின் கைகளை அழுத்தமாக பிடிக்க, அவள் அதிர்ந்தாலும் அவனின் அழுத்தமான பார்வையை பார்த்து அமைதியாக இருந்தவள் மனம் துடித்துக் கொண்டிருந்தது..
அவள் அருகே வந்து, "என்னாச்சு சொல்லு" என்ன கேட்க, "ஒன்னும் இல்ல காலைல இருந்து வந்த டயர்டு தான் வேற ஒன்னும் இல்லை" என்க
"இனிமேல் அவள் ஹாஸ்டல்ல இருக்க மாட்டாளாம்" என கூற அதை கேட்ட அவன் அவள் சொன்னது சரியா என கேட்க
"ஆமாம் அத்தை வீட்டில் இருந்து காலேஜ் போக சொன்னாங்க" என்று கூற அதைக் கேட்டு அவன் அழுத்தமாக அவளைப் பார்த்து, "இதை ஏன் என்கிட்ட சொல்லல பரவால்ல அப்போ வீக்கண்ட் ஆனா வெளியே போலாம் தானே" என அவளின் கைகளை பிடித்து கொண்டே கேட்க,
அவளுக்கு மூச்சே இல்லை இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.. இதுவரை அவனோடு அவள் எங்கேயும் சென்றதில்லை கல்லூரிக்கு அருகே இருக்கும் ஒரு காபி ஷாப் அங்கு ஒரு மூன்று முறை போய் அவனோடு அமர்ந்து காபி அருந்தி இருக்கிறாள் அவ்வளவுதான்..
மற்றபடி எங்கேயும் அவனோடு ஜோடி சேர்ந்து அவள் சென்றதில்லை.. இனி அவள் வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, தற்போது காதல் செய்யும் நிலையில் எல்லாம் அவள் சுத்தமாக இல்லை..
அதை எண்ணி அவள், "இல்ல அத்தை கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் அப்படி எல்லாம் விட மாட்டாங்க வீகென்ட் ஆனா நான் வீட்டுக்கு போகணும் அம்மா தனியா இருப்பாங்க" என்று அவள் கூற, அவள் அவனின் கண்ணை பார்த்து பேசாததை குறித்து வைத்துக் கொண்ட கிஷோர் அவளுக்கு ஏதோ ஆகியிருக்கிறது என சந்தேகம் கொண்டான்..
மேலும் பேச்சு கொடுக்க, "அக்காவுக்கு கல்யாணம் எல்லாம் முடிஞ்சுதா?" என கேட்க திக் என்று இருந்தது அவளுக்கு என்னவென்று சொல்வாள் அக்காவுக்கு பதிலாக தனக்கு தான் கல்யாணம் ஆகிவிட்டது என கூற முடியுமா? மாறாக, "கல்யாணம் ஆயிடுச்சு" என்று மட்டும் கூற அவன் சரி என்றான்...
"நான் போகட்டுமா?" என கயல் கேட்டாள்.. அவளால் மேற்கொண்டு இந்த இடத்தில் அமர முடியவில்லை ஆனால் கிஷோருக்கு அவளிடம் காதல் பேச்சுகள் பேசியாக வேண்டும் என இருந்தது அவன் நினைத்ததை நடத்தி பார்க்கும் ரகம் அதனால் அவன் அவளை வேண்டுமென்று அமர வைத்தான்..
அவனோ, "இரு ஜுஸ் குடிச்சிட்டு போலாம்" என்க
"இல்லை டைம் ஆச்சு போகணும்" என அவள் மறுக்க, அதை கேட்ட அவனோ, "நான் தான் சொல்றேன்ல்ல ஜூஸ் குடிச்சுட்டு போகலாம் அப்படின்னு" என்று அவளின் கைகளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டே கூற,
அவள் அவனின் செய்கையில், "வலிக்குது" என கூறவும், "அப்போ நான் சொன்னதை கேட்டு நட உன்னை எப்படி எனக்கு பிடித்தது என்று தெரியவில்லை ஆனாலும் பிடிச்சிருக்கு" என்று கூறியவன்,
"டேய் இரண்டு ஜூஸ் சொல்லுங்கடா" என்று கூறிவிட்டு, "சரி வா அங்கே போய் உட்காரலாம்" என்று அவளை வம்படியாக அந்த கேண்டின்க்கு ஒதுக்குப்புறமாக மரத்தடியில் இருக்கும் இருக்கையில் அவளை அமர வைத்து அவனும் அமர்ந்தான்..
அவளுக்கோ அவனோடு இருக்கும் ஒவ்வொரு மணி வினாடியும் எங்கே உளறி கொட்டி விடுவாளோ என்றுதான் இருந்தது..அந்த சமயம் பார்த்து, "டேய் உன்னோட ஃப்ளேவர் ஜூஸ் ஒன்னு தான் இருக்காம்" என நண்பன் கூற
"அப்போ ஒன்னு போதும் இரண்டு ஸ்ட்ரா மட்டும் வாங்கிட்டு வா" என்று கூறியவன் அவளை பார்த்து கண் சிமிட்டி சிரிக்க, அவளோ உள்ளுக்குள் பீதியாக இருக்க, அதை புரிந்து கொள்ளாத அவனோ அவளிடம் காதல் செய்யும் நிலையில் இருந்தான்..
"சரி வெளியே தான் வர மாட்ட ஜூஸ் ஒட்டுக்கா குடிக்கலாம் இல்ல" என்று கூறும் போதே ஜூஸ் கொண்டுவர அதை அவள் முன்னே நீட்டி அவள் பக்கம் ஒரு ஸ்ட்ராவை கொடுத்து, "குடி" என்றான்..
மறுபக்கம் அவனும் குடிக்க முயல அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. சுத்தமாக பிடிக்கவில்லை அவளோ தயங்கி, "வேண்டாமே எல்லாரும் பார்க்குறாங்க" என்று கூற
"பார்த்தால் பார்க்கட்டும் அது தான் நீ என்னோட ஆளுன்னு இந்த காலேஜுக்கு தெரியுமே அப்புறம் என்ன?" என அவன் கேட்டான்..
அவளோ, "இல்லை எனக்கு தப்பா தெரியுது" என்க
"எது ஜூஸ் குடிக்கிறதா? உனக்கு எல்லாமே தப்பா தான் தெரியும்" என்க
"தங்கச்சி கயல் குடி அதுதான் என்னோட மாப்பிள்ளை சொல்றானே" என கூற அதைக் கேட்டு சிரித்த கிஷோர், "அதுதான் சொல்றாங்களே குடி" என அழுத்தமாக கூறினான்.. அவளோ மறுக்க அவனுக்கு கோபம் வந்தது..
சுற்றி இருப்பவர்கள் எல்லோரும், "என்னடா நீ சொன்னதை இப்பவே கயல் கேட்கல அப்போ கல்யாணம் ஆனா கயல் சொல்றத தான் நீ கேட்ப போல!" என்று கிண்டல் செய்து சிரிக்க, கிஷோருக்கு அவனின் ஈகோ தூண்டப்பட்டதை போல உணர்ந்தான்.. எப்படியாவது அவள் குடித்தே ஆக வேண்டும் என்ற ஆத்திரம் அவனுக்கு வந்தது...
அவளோ தயங்க, "இப்ப நீ குடிக்கல அவ்வளவுதான் சொல்லிட்டேன் எல்லாரும் பார்க்குறாங்க" என்று கூற அவள் என்ன செய்வது என தெரியாமல் ஜூசை குடிக்க முயன்று ஸ்ட்ராவை வாயில் வைக்க அவனும் ஸ்ட்ரோவை வாயில் வைத்து குடிக்க துவங்கினான்.. அவள் ஸ்ட்ராவை வெறுமனே வாயில் வைத்திருக்க, அவனும் ஜூசை உறிஞ்ச அவளுக்கு என்னவோ போல இருந்தது அவனின் அருகாமை அவளுக்கு அருவருப்பாக இருந்தது என்று தான் கூற வேண்டும்..
இருவரின் தலையும் உரசிக்கொள்ள அந்த காட்சியை பார்த்த கிஷோரின் நண்பர்கள் அனைவரும் கைதட்டி சிரிக்க அந்த இடம் கொஞ்சம் ஆரவாரமாக இருந்தது.. மதிய இடைவேளை முடிந்து மணி அடித்தது கூட தெரியாமல் அவர்கள் ஊட்டி எடுத்துக் கொண்டிருக்க அவர்களின் சத்தம் ஸ்டாப் ரூம் வரை கேட்டது..
ஜன்னல் வழியே ஸ்டாப்ரூமில் இருந்து பார்த்த நிரஞ்சன் கண்கள் அங்கு கூட்டமாக மாணவர்கள் இருப்பதை பார்க்க கூட சேர்ந்து வேறொரு ஸ்டாப் ரமேஷ் பார்க்க அவரோ, "நிரஞ்சன் அங்கு இருக்கிற பசங்களை கொஞ்சம் கிளாசுக்கு போக சொல்லுங்க பிரின்ஸ்பல் பார்த்தார்னா நம்மளை தான் திட்டுவார்" என்க அவனும் சரி என கூறி அவர்கள் அருகே சென்றான்..
அவர்கள் ஆரவாரம் செய்யவும் கிஷோருக்கு எனர்ஜியாக இருந்தது பிறர் புகழ்வதில் இன்பம் காணும் ஒருவன் தான் கிஷோர்.. யார் முன்னிலையிலும் தன்னை தாழ்த்திக் கொள்ள விரும்ப மாட்டான் தான் செய்வது தவறே என்றாலும் அவன் கெத்துக்காக வாழ்ந்து கொண்டிருப்பவன்.. அப்படி இருக்க, அவளுக்கு அந்த செயலால் அழுகை அழுகையாக வந்தது இவனோ அவள் எழுந்து விடாமல் கையை அழுத்தமாக பிடித்திருந்தான்..
நிரஞ்சன் அந்த கூட்டத்தை மெல்ல விலக்கி பார்க்க, அவன் கண்ட காட்சி கூடை எரிகனலை அவன் தலையில் கொட்டியது போல இருந்தது..
ஆம் இருக்காதா பின்ன அவன் தாலி கட்டிய மனைவி வேறொருவன் அருகே அமர்ந்து ஒரு ஜூஸில் இரு ஸ்ட்ரா போட்டு இருவரும் உறிஞ்சி கொண்டு இருந்தால் அதைப் பார்த்து அவனுக்கு கடுப்பு வராதா?
அதோடு அவன் காலையிலேயே சந்தேகப்பட்டது போல அவளை இங்கு காலேஜில் அதுவும் காலேஜ் ஐடி கார்டு எல்லாம் அணிந்து கல்லூரி மாணவியாக பார்த்ததும் அதைவிட பேரதிர்ச்சியாக அவனுடைய முகம் மாறியது.. பாடம் கற்பிக்கும் ஆசானாக இருக்கும் ஒருவனுக்கு அவனுடைய மனைவி அவனின் மாணவியாக இருப்பாளேயானால் அவனுக்கு எவ்வளவு வலியை அந்த விஷயம் கொடுக்கும்.. அதைவிட இவர்கள் இருவருக்கும் நடந்திருப்பது வேறு இரண்டாம் கல்யாணம் எப்படியெல்லாம் அவனை அவனுடைய குடும்பம் எப்படி சிக்க வைத்து இருக்கிறார்கள் என யோசித்தவனுக்கு தலையே வலித்தது... ஆம் குடும்பமே சேர்ந்து அவனை புதைக்குழிக்குள் தள்ளி இருக்கிறார்கள் என்பதை அவன் புரிந்து கொண்டான் அந்த நொடி அவனின் முகம் இறுகியது...
அவனுடைய வரவை கண்டதும் மாணவர்கள் அமைதியாக இருக்க அப்பொழுதுதான் கிஷோர் நிமிர்ந்து பார்க்க கூடவே கயலும் நிமிர்ந்து பார்க்க, அங்கு மார்பில் கையை கட்டிக்கொண்டு அழுத்தத்தோடு கயலை பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்…
