வர்ணம் 13

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 56
Thread starter  

அத்தியாயம் : 13

    கயலின் மூச்சே நின்றது போல இருந்தது... இப்படி கொத்தாக அவனிடம் மாட்டிக் கொள்வோம் என அவள் எதிர்பார்க்கவே இல்லை.. அவள் மனதில் காலை முதல் ஏதோ ஒரு நெருடல் சுற்றிக்கொண்டே இருந்தது.. அது அன்று மதியம் ஆவதற்குள் பூகம்பமாய் வெடிக்க தான் அப்படி இருந்ததோ என்னவோ நிரஞ்சனின் அழுத்தமான பார்வையை பார்த்த அவளுக்கு உயிரே இல்லை இப்படியே பூமிக்குள் போய் விட மாட்டோமா என நினைத்தாள்...

தவறே செய்யவில்லை என்றாலும் அவன் முன்னே ஒரு அற்ப புழுவை போல அவள் காட்சி படுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

ஆனால் நிரஞ்சனின் நிலைமையை பற்றி கூறவே வேண்டாம் அவன் நினைத்தது போல அவள் அவனை விட சிறிய பெண் அதைவிட அவன் பயிற்றுவிக்கும் கல்லூரியில் அவள் ஒரு மாணவி இதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது? இதை எப்படி எடுத்துக் கொள்வது? தன்னை அனைவரும் சேர்ந்து ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதை அவன் புரிந்த அந்த நொடி அவனின் ஆவேசம் அதிகமானது.. அவனின் ஆத்திரம் அதிகமானது..

ஆனால் அதை வெளிப்படுத்தும் இடம் இது அல்ல என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு என்ன இருந்தாலும் அவளை சும்மா விடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் அவன் மனதில் நிலைத்து இருந்தது.. மற்ற பிரச்சனைகளை எல்லாம் வீட்டிற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் இப்பொழுது நடக்கும் பிரச்சனையை பார்ப்போம் என நினைத்தான்.

கிஷோர் மற்றும் அவனது நண்பர்கள் அனைவரும் இவன் வந்து நிற்பான் என எதிர்பார்க்கவில்லை.. ஏனெனில் கிஷோர் மற்றும் அவனுடைய நண்பர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர் தான் நிரஞ்சன்..

அப்படி இருக்க நிரஞ்சன், "என்ன இதெல்லாம் காலேஜுக்கு இதுக்கு தான் வந்துட்டு இருக்கீங்களா?" என்று கடினமாக கேட்க,

கிஷோர் மற்றும் அவனுடைய நண்பர்கள், "இல்ல சார் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பேசிட்டு இருந்தோம்" என்று கூற,

"நீங்க பேசிட்டு இருந்த லட்சணத்தை தான் பார்த்துட்டு இருந்தேனே.. இதுதான் பேசிட்டு இருக்க லட்சணமா? இது ஒரு காலேஜ்! இங்கே ஒரு டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இருக்கு அதுக்கு மீறி நடக்கக் கூடாதுன்னு தெரியாது? எதுக்கு நீங்க எல்லாம் காலேஜுக்கு வரீங்க? காலேஜுக்கு ஒரு ரூல்ஸ் இல்லையா? உங்க இஷ்டத்துக்கு நடக்கத்தான் நீங்க எல்லாம் காலேஜுக்கு வரீங்களா? இதுக்கெல்லாம் பார்க், பீச்சுன்னு பல இடம் இருக்கு அங்க போய் உங்க இஷ்டத்துக்கு பண்ணுங்க..

படிக்கிற சமயம் படிப்பை விட்டுட்டு மிச்சத்தை எல்லாம் பண்ணுங்க நல்லா இருக்கு கிஷோர்.. ஒரு நாலு கேள்வி கேட்டா பதில் சொல்ல தெரியாது ஆனால் இது மட்டும் நல்லா தெரியுது" என்று அவனை எச்சரிக்க, அவனும் தலையை குனிந்து நின்று கொண்டிருந்தான்..அவனுக்கு கொஞ்சம் அவனுடைய தன்மானம் சீண்டபடுவது போல இருந்தாலும் அமைதியாக இருந்தான்..

அவளோ தலையை குனிந்து நின்று கொண்டிருக்க அங்கிருந்த அனைவரின் பெயரையும் வகுப்பையும் கேட்டு தெரிந்து கொண்டவன் இறுதியாக அவளைப் பார்த்து, "ஏய் உன் பெயர் என்ன?"  என கேட்டான்..

அவனை கண்டதும் அவனுடைய கோபத்தை பார்த்து அவளுக்கு பயத்தில் கை கால்கள் நடுங்கத் துவங்கியது கண்களில் கண்ணீர் ததும்பி நிற்க,

"உன்கிட்ட பெயர் என்னன்னு கேட்டேன்.. செய்வதெல்லாம் செஞ்சிட்டு ஆக்டிங் வேறயா?" என அழுத்தமாக அவன் கேட்க அவளால் அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை..இப்படி ஒரு தருணத்தில் அவனிடம் மாட்டிக் கொள்வோம் என அவள் எதிர்பார்க்கவே இல்லை.. அதனால் அவள் அமைதியாக இருக்க,

"நான் கேட்டது காதில விழலயா" என மீண்டும் அவன் அழுத்தமாக கேட்டான்..

"கயல்விழி" என திக்கி திணறி கூற,

கிஷோர், "சார் அவளை விட்டுடுங்க நான் தான் இதுக்கெல்லாம் காரணம்" என அவன் அவள் அழுவதை பார்த்து தாங்க முடியாமல் கூற

"நான் உன்கிட்ட கேட்கல கிஷோர்.. யாரை விடனும் யாரை விடக்கூடாதுன்னு எனக்கு தெரியும் அதை நீ சொல்ல தேவையில்லை" என்றான் நிரஞ்சன்.. அதைக் கேட்டு கிஷோர் வாயை மூடிக்கொண்டு நின்றான்..

"எந்த கிளாஸ்?" என அவன் கேட்க,

"செகண்ட் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ்" என கூற அவனுக்கு தலையே சுற்றியது.. வேகமாக அவனுடைய மனம் அவளின் வயதை கணக்கிட அவளுக்கு 19 வயது  என்பதை உறுதி செய்தவன் அவனின் வயது 33..அப்போ 14 வயது வித்தியாசம் அறிவே இல்லையா? இப்படி ஒரு காரியத்தை செய்ய இவங்களுக்கெல்லாம் எப்படி மனசு வந்துச்சு? அதுக்கு தனக்கு எதிரே உள்ள இவளும் துணை தான் காலையில் கூசாமல் நான் பியூட்டி பார்லரில் வேலை செய்கிறேன் என்று பொய்  சொன்னவள் தானே என நினைத்தவனுக்கு எரிச்சலாக இருக்க, தன் எதிரே அழுது கொண்டிருக்கும் அவளை பார்க்கும் பொழுதே ஓங்கி அறையலாம் என இருந்தது..

சுற்றுப்புறம் யாரும் இல்லையென்றால் அவளுக்கு அவனின் கைகளின் சூட்டை அவள் உணர்ந்திருப்பாள்..அப்படி இருக்க கொதிக்கும் தன் மனதை அடக்க முடியாமல், "இதுக்கு தான் உன் வீட்ல அனுப்பி வைக்கிறாங்களா?" என கேட்க,

அவளோ தலை நிமிரவே இல்லை, "உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் காலேஜ் கேம்பஸ்க்குள்ள ஒரு ஜூஸ்ல ரெண்டு பேரும் ஸ்ட்ரா போட்டு குடிக்கிற அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கு அப்படின்னா வெளியே என்ன எல்லாம் செஞ்சிருப்பீங்க? இதுதான் நீ காலேஜ்ல வந்து படிச்ச விஷயமா?" என அவன் கேட்க அவன் முன் அவளால் நிற்கவே முடியல..

"உன்னோட பேரண்ட்ஸ் என்ன பண்றாங்க?" என கேட்டான்.. அவனுக்கு தெரிய வேண்டும் என இருந்தது..

"அப்பா இறந்துட்டார் அம்மா தோட்ட வேலைக்கு போறாங்க" என்க

அவளின் நிலைமையை பார்த்து,"இந்த நிலைமையில் இருந்து வந்து உனக்கு இதெல்லாம் தேவையா?" என கேட்க அவளுக்கு அப்படியே அவமானமாக இருந்தது..கண்களில் கண்ணீர் வழிய,

அதை கண்டவன், "அதெப்படி பார்த்தாலே தெரியுது வாயை திறந்தா பொய் தான் சொல்வன்னு .. இந்த வயசுல இந்த வேலை உனக்கு கேக்குது அது எப்படி நல்லா படிக்கணும் முன்னேறனும் வேலைக்கு போகணும் அப்படி எல்லாம் நினைப்பில்ல அப்படி தானே?" என்க

அவள் அவன் முன் கூனி குறுகி நிற்க நிரஞ்சனுக்கு இருக்கும் அழுத்தத்திலும், ஆத்திரத்திலும் இவளை ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணியவன், "இதை நான் சும்மா விடுறதா இல்ல இப்பவே உங்க எல்லாருடைய டிசியை நான் கொடுக்க ஏற்பாடு பண்றேன்" என கூற,

அவளும், லாவண்யா இருவரும் அரண்டு போய், "சார் எங்களை விட்டுடுங்க சார் தெரியாமல் பண்ணிட்டோம்" என்க,

அவன் அப்படி செய்தால் என்ன செய்வது என பயந்து அவன் முன்னே கை எடுத்து கும்பிட்டு, "சார் டிசி எல்லாம்  கொடுத்துடாதீங்க சார் நான் செஞ்சது தப்பு தான்..எனக்கு படிக்கணும் சார்.. எனக்கு படிப்பு தான் சார் முக்கியம்" என அவள் மன்னிப்பு  கேட்க அதை கண்ட நிரஞ்சனுக்கு உள்ளுக்குள் ஆத்திரம் வந்தது..தன்னை கூமுட்டை ஆக்கி விட்டு இங்கு எப்படி நடிக்கிறாள் பார் என நினைத்தான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top