Share:
Notifications
Clear all

வர்ணம் 47

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

அத்தியாயம் : 47

   அவன் எதிர்பார்த்தது போல இன்றைய நாள் அவளின் கடைசி தேர்வு எழுதி முடித்து விட்டாள் கயல்..எல்லா பாடமும் அவன் சொல்லி கொடுத்தது போல சிறப்பாக செய்து இருக்கிறாள்..இன்னும் ரிசல்ட் மட்டும் தான் அவளுக்கு வர இருக்கிறது..அவள் ஒரு வழியாக படிப்பை முடித்து விட்டாள்.. இனி அவள் அவளுடைய இல்லற வாழ்கையை நல்ல படியா துவக்கலாம்...

அவள் அனைத்து நண்பர்களிடமும் விடைபெற்று வெளியே வரும் போது அவளுடைய, "அத்து" அவளை அழைத்தான்..

அவளோ, "நானே உங்களுக்கு கூப்பிடனும்னு இருந்தேன்" என்று கூற அவனும்,"எனக்கு கொஞ்சம் வேலை வந்திடுச்சு..ஒரு செமினார் இருக்கு.. காலையில் நான் கிளம்பனும் அதுக்கு பிரிபேர் பண்ணனும்.. நைட் வர லேட் ஆகும் நீ போய் ஆதிராவை பார்த்திட்டு வந்துடு..அவள் ஒரு பொம்மை கேட்டா போகும் போது அதையும் வாங்கிட்டு போ...நீ அப்படியே ஊருக்கு போறியா இல்லை தனியா மேனேஜ் பண்ணிப்பியா?" என கேட்க

அவளோ அதை கேட்டு அதிர்ந்து, "என்ன சொல்றீங்க நீங்க போறீங்களா?" என வருத்தமாக கேட்க, "ஆமாம்" என அவன் கூறினான்..

"நானும் வரட்டுமா அத்து எனக்கு நாளையில் இருந்து லீவு தான்" என்க

"இல்லை நான் பிஸியா இருப்பேன் அப்போ உன்னை கவனிச்சுக்க முடியாது" என கூறினான் அவன்..

"இல்லைங்க நானும், ஆதிராவும் சமத்தா இருப்போம்" என்க

"ஆதிரா இருப்பா நீ இருப்பியா? எனக்கு தெரியல" என அவன் கூறினான்..

"என்னங்க இப்போ இப்படி சொல்றீங்க நான் இப்போ தான் எக்ஸாம் எல்லாம் முடிச்சு கொஞ்சம் ஃப்ரீ ஆனேன் அதுக்குள்ள இப்படி சொல்றீங்களே?" என்று அவள் வருத்தமாக கூற,

"அதுக்கு என்ன பண்ண முடியும்மா? வேலை வந்தா செஞ்சுதானே ஆகணும் நீ வேணா ஒண்ணு பண்ணு.. ஆதிராவை கூட்டிட்டு அப்பா வீட்டுக்கு போய் இரு.. அங்கே அம்மாவும், அப்பாவும் தனியா தானே இருக்காங்க ஒரு 2 டேஸ் அங்க இரு திரும்ப நான் வந்து கூட்டிட்டு வந்திருக்கிறேன்" என்று அவன் கூறினான்...

அதை கேட்ட அவள் வருத்தமாக, "சரிங்க" என கூறி விட்டு நேராக ஆதிரா இருக்கும் வெங்கட்ராமன் வீட்டுக்கு சென்றாள்..அங்கு குழந்தையோடு சிறிது நேரம் விளையாடிவிட்டு, "நாளை காலையில் வந்து குழந்தை அழைத்து செல்கிறேன்" என கூறிவிட்டு வீட்டுக்கு சென்றாள்..

அவள் வருவதற்குள் இரவு ஆகி இருந்தது..வீட்டின் கதவை திறந்ததும் அந்த இடமே இருட்டாக இருந்தது..அவளோ குழம்பி போய் கதவை அடைத்து விளக்கை போட போகவும் பின்னால் இருந்து ஒரு கரம் அவளை அணைக்க அவளோ, "அத்து" என்க

அவனோ விளக்கை இட்டவன் அந்த இடமே பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அதை பார்த்து அவள் கண்கள் மிளிர அவனைப் பார்க்க அவனும் அவளை தூக்கிக்கொண்டு மெல்ல படுக்கையறைக்கு சென்றான்...

அங்கு படுக்கை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.. அதை கண்டவள் மெல்ல சிரிக்க அவனோ, "அப்போ ஆரம்பிக்கலாமா நீ ரெடியா டி என் பொண்டாட்டி" என ஹஸ்கி குரலில் கேட்டான்..

அவளோ, "இதுக்குத்தான் என்னை வீட்டுக்கு இப்ப வரவிடாம செஞ்சீங்களா?" என்ன கேட்டாள்..

அவனோ, "ஆமாம் இதெல்லாம் தயார் செய்ய வேண்டாமா?" என்றவன் அவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தி, "என்னால உனக்கு சிறந்த வாழ்கையை கொடுக்க முடியுமா எனக்கு தெரியாது என்னால முடிஞ்ச வரை உனக்கு உண்மையா இருப்பேன்.. உனக்கே தெரியும் எனக்கு இது இரண்டாவது வாழ்க்கை என்னால என் ஜானகியை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது...அவள் எப்போதும் என் மனசில் இருப்பாள்..

ஆனால் அவளுக்கு கொடுத்த அதே இடத்தை உனக்கு கொடுக்க முடியும்.. அது உனக்கு பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன்..நான் பிரச்சனை வர விடாமல் நான் பார்த்துப்பேன் என்கூட வாழ சம்மதமா" என்று கூற,

அவள் அவனுடைய முகத்தை பார்த்து, "அதெல்லாம் பிரச்சனை கிடையாது..எப்போவும் அக்கா உங்க மனசில் இருக்கணும்.. ஆனால் ஆதிரா நம்ம சொத்து அவளை மட்டும் என்கிட்ட இருந்து பிரிக்க முயற்சி பண்ணாதீங்க.. நான் விட மாட்டேன் உங்க அன்பை வேண்டும் என்றால் நான் பங்கு போட்டுக்குறேன் ஆனால் அவ மேல வச்சிருக்கிற அன்பை நான் பங்கு போட மாட்டேன்...அவள் எனக்கு மட்டும் தான் அவள் என்னுடைய பொண்ணு நான் அவளுக்கு அம்மா அதிலிருந்து நான் மாற மாட்டேன்" என கூற அவள் அவனை புரிந்து வைத்திருக்கிறாள் என்பதை உணர்ந்த அந்த நொடி அவன் அவளின் கன்னத்தில் தன் இதழ்களை மென்மையாக பதிக்க அவளுக்குள் ஒரு நடுக்கம்..

அவளுக்கு அவனின் செய்கை பிடிக்காமல் இல்லை.. ஆனால் அவளுக்கு இது முதல் முறை என்பதால் இலேசான பதட்டத்துடன் அவள் இருக்க, அவனோ அதை கண்டு, "ஜஸ்ட் ரிலாக்ஸ் உனக்கு பிடிக்காத எதுவும் இங்கு நடக்காது உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு" என்று அவன் மென்மையாக கூற,

அவளோ, "பிடிச்சு இருக்கு அத்து ஆனால் கொஞ்சம் பதட்டமா இருக்கு" என்று கூற, "பதட்டப்படாத..நான் இருக்கேன் இனியும் என்னால பொறுமையா இருக்க முடியும்னு எனக்கு தோணல" என்று கூறியவன் அவளின் பதட்டத்தை குறைக்கும் வண்ணம் அவளின் முகம் எங்கும் முத்தத்தால் அர்ச்சனை செய்ய, அவளோ கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழக்க துவங்கியவளின் ஆடைகள் அவனின் கரங்களால் கலையபட,  அவளோ கண்களை மூடி கொள்ளவும் அவனோ அவளை மஞ்சத்தில் கிடத்தி, அவள் மேல் படர துவங்கினான்..

அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டு இருக்க ஆரம்பம் அவனுடயதாக இருந்தாலும் இடையே அவள் அவனை கையாளவும் அவனுடைய உணர்வுகளுக்கு கடிவாளம் இட முடியாமல் கிளர்த்துக் கொண்டு எழுந்தது..

அவளுக்கோ அவனோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு மாய உலகத்தில் இருப்பது போல இருக்க அவனும் அவளோடு கூடி களிக்க, முதலில் மென்மையாக துவங்கிய அவர்களுடைய காதல் அரங்கேற்றம் இறுதியில் வன்மையில் முடிய அந்த அறை முழுவதும் முத்த சத்தங்களால் நிறைய இனிமையான கூடல் ஒன்று அரங்கேறியது..ஆம் பல நாள் ஏக்கத்தை இன்று நடத்தி முடித்து விட்டார்கள்..

எல்லாம் முடிந்து அயர்ந்து உறங்கும் அவளை பார்த்தவன் அவளின் இதழில் தன் இதழ்களை பதித்து அவளை அவன் பொக்கிஷமாக அவனுடைய வாழ்நாள் முழுவதும் பார்த்து கொள்ள வேண்டும் என நினைத்து கொண்டான்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top