வர்ணம் 46
அத்தியாயம் - 46
மாலையாகிவிட்டது வீட்டிற்கு வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்..அவளை அனுப்பி வைத்தபின் தான் ஏண்டா அவளை அனுப்பினோம் என யோசிக்க துவங்கி விட்டான் கிட்டத்தட்ட நாலைந்து முறை அவன் அழைத்து விட்டான்...
அவள் வருவாள் என அவன் காத்துக் கொண்டிருக்க அவனின் பொறுமையை அவள் வெகுவாக சோதனை செய்தாள் என்றுதான் கூற வேண்டும் ஆம் இன்னும் வரவில்லை..
மாலையாகிவிட்டது இன்னும் அவள் வரவில்லை.. இருட்ட துவங்கி விட்டது அவன் அழைத்துப் பார்த்தான்.. அப்போதும் அவள் வரவில்லை நேராக வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.. அதற்கு மேல் பொறுமை இல்லை கல்லூரி வாசலில் காத்திருப்போம் என நினைத்து விட இதோ கல்லூரியில் அடைந்து விட்டான் அவர் சென்ற வாகனம் இன்னும் வரவில்லை..
திடீரென மழை வலுக்க அவனும் காத்திருந்து, காத்திருந்து ஒரு வழியாக அவளுடைய வாகனம் வந்தது..அவளும் பஸ்ஸில் இருந்து இறங்கி லாவண்யாவிடம் விடை பெற்று போனை எடுத்து அவனுக்கு அழைக்க, அவனும் அவளை தூரமாக காரில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான்..
"எங்க இருக்கீங்க?"
" கார்ல தான் இருக்கேன் சீக்கிரம் வா" என்று அவன் கூற அவளும் வேகமாக ஓடி வருவதற்குள் மழை பிடித்துக் கொண்டது..
அவள் நனைய துவங்கி விட உடனே காரில் இருந்து குடையை எடுத்துக் கொண்டு அவன் காரை விட்டு இறங்கி அவளை அழைத்து வர செல்வதற்குள் அவள் நனைந்து விட ஒரு குடையின் கீழ் அவளை அணைத்தபடி அழைத்து வந்தான்..அவளை கண்டபின் தான் அவனுக்கு கொஞ்சம் சமாதானம் ஆகியது..
அவளை அழைத்து வரும் நேரம் அவனின் கை அவளின் இடையில் தாராளமாக அழுத்தி பிடித்திருந்தான்.. அவளுக்கு அது எந்த விதமான மாறுதலான உணர்வையும் கொடுக்கவில்லை என்றாலும் அவன் அவளோடு ஒட்டி நடந்து வந்தான்..
இந்த இரு நாள் பிரிவு அவனுக்குள் அவளின் நினைவால் இருந்ததாலோ என்னவோ அவன் அவளோடு பின்னிப்பிணைந்தபடி நடந்து வந்தவன் அவளை காருக்குள் அமர வைத்துவிட்டு அவனும் அமர்ந்து கொள்ள,
அவளோ, "ஏன் தான் போனேன்னு இருந்துச்சு ரெண்டு நாள் உங்களை விட்டு எப்படித்தான் இருந்தேன் எனக்கு தெரியல அப்படி என்னதான் பண்ணுனீங்க அத்து எனக்கு தெரியல பைத்தியம் மாதிரி ஆயிட்டேன் நீங்க இல்லாம என்னால வாழ முடியும் எனக்கு தோணல இனிமேல் என்ன டூருக்கு எல்லாம் தனி அனுப்பாதீங்க கூட்டிட்டு போறதா இருந்தா நீங்க கூட்டிட்டு போங்க அங்க எவ்வளவு ரொமான்டிக்கான பிளேஸ் தெரியுமா ஆனால் நான் எதையுமே ரசித்து பார்க்கல கூட நீங்க இருந்து இருந்தீங்கன்னா நான் ரொம்ப சந்தோஷமா இருந்திருப்பேன் உங்களை ஆதராவை ரொம்ப மிஸ் பண்ணினேன் இப்போ சொல்லுங்க நீங்க என்னை மிஸ் பண்ணுணீங்களா?" என கூறி கொண்டே அவனோ எப்போதும் போல் இல்லாமல் அவளுடைய முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான்.. அவள் பேசிக் கொண்டே இருக்க,"நான் கேட்டுட்டே இருக்கேன் நீங்க சொல்லவே மாட்டேங்கறீங்க சொல்லுங்க என்னை மிஸ் பண்ணீங்களா இல்லையா?" என கேட்ட அடுத்த நொடி அவனும் சடுதியில் அவளின் இதழை தன்வசம் படுத்திக் கொண்டான்
ஆம் அவன் அவளுடைய இதழை முதன்முறையாக தீண்டியிருந்தான்.. அவளுக்கு அதிர்ச்சி என்றால் அவனுக்கோ இன்பமாக இருந்தது.. முதலில் ஒரு தயக்கமாகவே அவன் இருந்தான்.. ஆனால் அவனுடைய தயக்கத்தை அவனே உடைத்தெறிந்து இவள் என்னுடைய மனைவி என்பதை அவன் மனதில் அவனே கூறிக் கொண்டு இந்த இரண்டு நாள் பிரிவை தாள முடியாத அவனும் எப்பொழுதும் தன் உணர்வுகளை வெளிக்காட்டாத அவன் இந்த முறை வழிகாட்டி இருந்தான்..
அவளும் அவனின் இந்த அதிரடியான மாற்றத்தை எதிர்பார்க்காத அவள் முதலில் தடுமாறினாலும் பிறகு அந்த இதழ் ஒற்றலில் முழுவதுமாக மயங்கி போனாள் என்று தான் கூற வேண்டும்.. மூச்சுக்கு தடைப்பட்ட அவளுடைய இதழை மெதுவாக விட்டவன் எதுவும் பேசாமல் வாகனத்தை எடுத்தான்..
பிறகு அவனோ வாகனத்தில் கவனம் செலுத்த அவளுடைய முகத்தை கூட பார்க்க முடியாமல் அவனுக்கு ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டது. அவள் அவனை மறுக்கப் போவதில்லை இருந்தாலும் ஏதோ ஒரு தடை அவனை அவளுடைய முகத்தை பார்க்க விடாமல் தடை செய்ய,
அவளோ இது கனவுதானா என நினைத்துக் கொண்டிருந்தவள், "அத்து" என்று கூற, "ஒருவேளை அவளுக்கு பிடிக்கவில்லையோ என நினைத்து உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு நான் இனிமேல் தொட மாட்டேன் எதோ ஒரு ஃபீலிங்ஸ்ல பண்ணிட்டேன்.. இதுதான் நீ நேத்து இருந்து கேட்டுட்டு இருந்த கேள்விக்கான அர்த்தம் நானும் உன்னை மிஸ் பண்ணினேன்" என்று கூற,
அதைக் கேட்டு அவளோ அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து, "இத போய் நான் வேண்டாம் என்று சொல்வேனா நான் கிஸ் பண்ணும் போது மட்டும் என்னை திட்டுவீங்க இப்போ நீங்களா என்ன கிஸ் பண்ணி இருக்கீங்களா நான் கொஞ்சம் கிள்ளி பார்த்துக்கிறேன் இது கனவா நினைவா என்று தெரியலையே" என அவனை கிண்டல் செய்தாள் ..
ஆம் அவள் சொல்வது உண்மைதான் அவள் அருகே வரும் பொழுது அவன் பெரும்பாலும் நழுவி சென்று விடுவான் இருந்தும் அவள் ஏதாவது சில்மிஷம் செய்து அவனுடைய கன்னத்தில் பலமுறை தன் இதழ்களை பதித்து இருந்தாலும் முதன் முறையாக அவன் அவனுடைய உணர்வை அவளுக்கு வழிகாட்டுகிறான் அதில் அவளுக்கு மிகவும் சந்தோஷம் மட்டும்தான்...
இப்படியே நாட்கள் செல்ல அவன் ஏதோ ஒரு உணர்வில் அவளுக்கு இதழ் ஒற்றல் கொடுத்திருந்தாலும் அவனுக்கு அவளுடைய முகத்தை பார்க்கவே அவனுக்கு தயக்கமாக இருந்தது.. அந்த சமயத்தில் தான் அவளுக்கு கல்லூரியில் ஃபேர்வெல் தினம் கொண்டாடினார்கள்.. அதற்காக அவள் புடவை அணிந்து கொண்டு வெளியே வர அதை பார்த்தவன் இமை மூடாமல் பார்த்தான்..
"என்ன அத்து நல்லா இருக்கா முதல் முறையா புடவை கட்டுறேன் கல்யாணத்துல கட்டி இருக்கேன் ஆனாலும் நானா ஃபர்ஸ்ட் டைம் எனக்கு ட்ரை பண்றேன்" என்க
அதை கேட்ட அவனோ, "நீதான் பியூட்டிஷியன் ஆச்சே அழகா கட்ட உனக்கு தெரியுமே முதல் முறையா நான் நீ புடவை கட்டி பார்க்கிறேன் அன்னைக்கு புடவை கட்டி இருப்ப ஆனால் அன்னைக்கு இருந்த மனநிலையில் நீ எந்த புடவை உடுத்தினேன் கூட எனக்கு தெரியாது ஆனால் இப்போ பார்க்க பெரிய பொண்ணு மாதிரி இருக்க" என கூற
அதை கேட்டவள் மெலிதாக சிரித்து, "நான் எப்பவும் பெரிய பொண்ணு தான் நீங்க தான் என்னை குட்டி பொண்ணா மாத்திட்டு இருக்கீங்க" என்று அவள் கிண்டலுக்காக கூறினாள்.. அதை கேட்ட அவனும் சிரித்து, "இனிமேல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் புடவையை கட்டு பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்க" என்று உண்மையாகவே அவளை அழகை புகழ் அவளுக்கு அவனின் புகழ்ச்சி நாணத்தை வரவழைத்தது...
அன்றைய தினம் அவளை புடவையில் பார்த்தபின் அதோடு அவன் விடவில்லை அன்று அவளை அழைத்துக் கொண்டு அவன் கடைக்கு சென்று பல புடவைகளை வாங்கி கொடுத்தான் நிரஞ்சன்…
