Share:
Notifications
Clear all

வர்ணம் 45

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

அத்தியாயம் : 45

    கிட்டத்தட்ட இரு வருடங்களுக்கு பிறகு..

இப்போது நான்காம் வருடத்தில் கயல் படித்து கொண்டு இருக்கிறாள்... நிரஞ்சனின் ஆசைப்படி அவள் நன்றாக படித்து கொண்டு இருக்கிறாள்.. இன்னும் ஆறு மாதம் தான் அவளுடைய படிப்பு முடிய இருக்கிறது..அவள் ஒரு எதிர்பார்ப்புடன் அந்த ஆறு மாதம் முடிய காத்திருக்கிறாள். இந்த இரண்டு வருடங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

அவர்களுக்கு எதற்கு கோபம் வரும் எதற்கு அழுகை வரும் என்பது முதற்கொண்டு இருவரும் நல்ல அன்போடும், காதலோடும் வாழ்ந்து வருகிறார்கள்.. இருவருக்கும் இடையே அடிக்கடி செல்ல சீண்டல்களும், செல்ல முத்தங்களும், சிறு சிறு அணைப்புகளும், சிறு சிறு தொடுகைகள் இருந்தாலும் பெரிதாக எதிலும் அவர்கள் செல்லவில்லை..ஆம் அதை எல்லாம் அவள் தான் அவனுக்கு செய்து இருக்கிறாள் ஆனால் அவனாக அவளை இது வரை தீண்டியது இல்லை..தீண்டும் அவளை அவன் தடுத்ததும் இல்லை..

இன்று அவள் அவனை விட்டு பிரிந்து செல்கிறாள்.. அதனால் காலையில் வீட்டில் இருந்து செல்லும் போதே அவனின் கன்னத்தில் அழுத்தமாக தன்னுடைய இதழ்களை பதித்து கொண்டு தான் இருக்கிறாள்..அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது..அவள் எவ்வளவோ கூறியும் அவன் ஒப்பு கொள்ளவில்லை...அதில் சின்ன வருத்தம் அவளுக்கு இருந்தது..இருவருக்கும் கஷ்டம் அவரவர் மனதில் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்தனர்..

ஆம்..அவனோடு வாழத் தொடங்கிய நாள் முதல் அவனை விட்டு அவள் பிரிந்தது இல்லை என்று தான் முதன்முறையாக அவனை விட்டு பிரியப் போகிறாள் அந்த சங்கடம் அவளுக்குள் நிறையவே இருந்தது...

ஆம் அவள் கல்லூரியில் ட்ரிப் அடைத்து செல்கிறார்கள்.. அதனால் கல்லூரி டூருக்காக அவள் வெளியூர் செல்கிறாள்.. அவளுக்கு விருப்பமே இல்லை.. ஆனால் அவன் தான் வாழ்க்கையில் இது எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று வம்படியாக அனுப்பி வைத்தான்..

அவளோ, "நான் போய் தான் ஆகணுமா அத்து?" என கேட்க அவனோ, "ஆமாம்" என கூறி விட்டான்.. இன்னும் இரண்டு நாட்கள் அங்கே தான் அவள் இருக்க வேண்டும்..மனமே இல்லாமல் அவள் செல்ல அவளை அனுப்பி வைத்தவன் மனம் முழுவதும் அவள் பின்னாலயே சென்று விடுவோமா என இருந்தது..ஆனால் அவள் முன்னே காட்டி கொள்ளாமல் இருந்தான்..

ஆம்.. தன்னை கட்டுப்படுத்தி கொண்டு அவன் இருந்தான்.. அவள் சென்றாலும் அவள் இல்லாமல் அவளால் இருக்கவே முடியவில்லை.. இது என்ன மாயம் என அவனுக்கு தெரியவில்லை.. அவன் மனதில் இப்போதும் ஜானகி இருக்கிறாள்..

ஆனால் ஜானகி அவனுக்கு எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு கயலையும் அவனுக்கு பிடித்திருக்கிறது.. கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு முன்பு இதைக் கூறியிருந்தால் அவன் அதை ஒப்புக் கொள்வானோ? என்னவோ? ஆனால் இப்பொழுது ஒப்புக்கொள்கிறான்..

கயல் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. இந்த இரண்டரை வருடம் அவன் அவளுடைய படிப்புக்காக எடுத்துக் கொண்டாலும் அவனை பொறுத்தவரை அவன் அவனுக்காகவும் தான் இந்த இரண்டரை வருடம் எடுத்துக் கொண்டான்.. ஆம் என்னதான் அவளுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் கிடைக்க வேண்டும் என எண்ணி அவளுக்காக, பல உதவிகளை அவன் செய்திருந்தாலும், அவன் மனதில் ஜானகியை விட்டு இவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாமல் அவன் தத்தளித்த நாட்களும் உண்டு...

அதை அவன் மறுப்பதற்கு இல்லை..அவனும் மனிதன் தானே? அவனால் எப்படி சட்டென்று வேறொரு வாழ்கையை வாழ  முடியும்..

ஆனால் அவளாக அவன் அருகே வரவும் இவன் திமிறிக்கொண்டு அவளை ஒதுக்கி வைத்த நாட்களும் உண்டு.. அதிலிருந்து எல்லாம் மெல்ல மெல்ல அவன் வெளியேறி முழுதாக கயலின் கணவனாக அவன் இப்பொழுது மாறி இருக்கிறான் என்று தான் அவன் நினைக்கிறான் இந்த இரு நாட்களும் அவனுக்கு மிகவும் சோதனை காலமாக இருந்தது..

ஆம் டூரில் லாவண்யா மற்றும் அவளுடைய தோழிகள் தோழர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்க, இவள் மட்டும் சோகமாக இருந்தாள்.. சதா அவனின் நினைப்பு தான்..அவனை அணைத்து கொண்டு உறங்கிய பின் அவன் இல்லாமல் அவளுக்கு உறக்கம் வர மறுத்தன..

அவள் சென்று ஒரு நாள் ஆகி விட அன்றைய இரவு அவனுக்கு ஃபோன் செய்தவள், "அத்து" என்க

அவனோ, "என்ன ஊர் எல்லாம் சுத்தி பார்த்தியா?" என்க

அவளோ, "எனக்கு மனசே இல்லை எனக்கு உங்க கூட தான் இருக்கணும்னு இருக்கு" என கூறினாள்..

அவனுக்கும் அப்படி இருந்தாலும் அவன், "எப்போ வருவ?"

"நாளைக்கு காலையில கிளம்புறோம் அத்து" என கூற அவனோ ம்ம் என்றான்..

"நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்..நீங்களும் என்னை மாதிரி மிஸ் பண்றீங்களா?" என கேட்க அவனோ, "உண்மையை சொல்லனுமா இல்லை பொய் சொல்லனுமா?" எனக் கேட்டான்..

"நீங்க உண்மையை சொன்னா சந்தோஷப்படுவேன்" என அவள் கூற,

அவனோ, "நீ நேர்ல வரும் போது சொல்றேன்" என்க

"சொல்லுங்க அத்து பிளீஸ்..என்னால நாளை வரை காத்து இருக்க முடியாது" என்க

"நீ நேர்ல வா டி சொல்றேன்" என கூறி போனை வைத்து விட்டான்..அதற்கு மேல் அவனால் அவளோடு பேச முடியவில்லை.. பேசினால் எங்கே அவனுடைய மனதை அவனாகவே வெளிப்படுத்தி விடுவானோ என்ற பயம் அவனுக்கு வெகுவாக இருந்தது.. இந்த சிறு பெண் அவனுடைய வாழ்கையை எப்படி எல்லாம் மாதிரி இருக்கிறாள் என எண்ணினான்.. அதனால் அவன் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை நாளை காலை அவள் வருகைக்காக அவன் காத்திருந்தான்..

ஆனால் பாவம் எதிர்பாராத விதமாக சுற்றுலா சென்ற அவர்கள் வந்து கொண்டிருந்த வாகனம் பஞ்சர் ஆகி விட அவனும் அவளுக்கு அழைத்துப் பார்க்கும் பொழுது அவள், "வண்டி பஞ்சர் சரி பண்ணி தான் வரணும் நைட் ஆயிடும் போல" என்று கூறினாள்.. அதைக் கேட்டவன் உள்ளுக்குள் அவளை காணாமல் எரிச்சல் அடைந்தாலும், "சரி" என்று கூறிவிட்டு காலேஜுக்கு சென்று விட்டான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top