வர்ணம் 44
அத்தியாயம் - 44
அதை பார்த்தவன், "உனக்கு தேவையில்லாத பீலிங்ஸ் எல்லாம் தோணும்.. நாலு கொட்டு வெச்சா அதெல்லாம் போயிடும்." என்று கூற அவளோ, "சார் சும்மா கிண்டல் பண்ணாதீங்க சார் நான் உங்களை எல்லோரும் லவ் பண்றேன்னு தெரியுமா?" என்க
அவனோ அதை எண்ணி உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல், "அதுக்கு நான் என்ன பண்ணனும்?" என்று கூறி விட அவளோ முறைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்..
அவனுக்கும் அவளைப் பிடிக்காமல் இல்லை ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்பொழுது அவளுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் அவள் படித்து முடித்து பின் தான் எதுவாக இருந்தாலும் என அவனை அவனை கண்ட்ரோல் செய்து இருக்கிறான்.. ஆனால் அவளோ இடையிடையே அவளின் விளையாட்டு புத்தியில் ஏதாவது அவனிடம் சில்மிஷம் செய்து விடுவாள் அதை அவன் சமாளித்து இவளோடு வாழ்ந்து வருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என ஆகிவிடும்..
அப்படி இருக்க அவளோ அறைக்குள் சென்றும், "இன்னிக்கு பிறந்தநாள் ஏதாவது செய்யலாம்னு பார்த்தா அதுவும் இப்படி ஆகிடுச்சு" என யோசித்தவளுக்கு ஒரு யோசனை போனது..
ஆனால் அவளுடைய யோசனையை செய்தால் அவனுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்க்கும்போது அவளுக்கு பயமாக இருந்தது இருந்தாலும் பரவாயில்லை பார்ப்போம் என்று முடிவோடு மீண்டும் அவன் அருகே சென்றாள்...
அதன் படி சமையலறையில் அவர்களுக்கு உணவு சமைத்து கொண்டு இருந்தவன் அருகே வந்தவள், "சார் பிறந்த நாள் அப்போ யார் என்ன கிப்ட் கொடுத்தாலும் அதை ஏத்துக்கணும் சார் அது சின்னதா இருந்தாலும் சரி பெருசா இருந்தாலும் சரி நாம சந்தோஷமா வாங்கிக்கணும் சார்" என்க
அவனோ, "எது நீ இப்போ ஒரு கரிகட்டை செஞ்சியே அதை நான் சாப்பிடணுமா?" என கேட்டு கொண்டே தோசை சுட அவளோ, "அதில்லை சார் நான் உங்களுக்கு வேற கிப்ட் வைச்சு இருக்கேன் நான் தருவேன் ஆனால் நீங்க திட்ட கூடாது" என்க
அவனோ, "எங்கே தா பார்க்கலாம்" என்ற அடுத்த நொடி அவன் உயரத்துக்கு தன் காலால் எம்பி அவனுடைய கன்னத்தில் தன் இதழ்களை பதித்து விட்டு அவன் திட்டுவானோ என பயந்து, "சார் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குது எனக்கு புரியுது.. நான் படிக்கணும்னு சொல்லி தான் நீங்க என் கிட்ட இருந்து விலகி இருக்கீங்க ஆனால் என்னால என்னோட பீலிங்ஸ் ஐ கண்ட்ரோல் பண்ண முடியல சார் ஐ லவ் யூ சார்" என்க அவளின் தீடிர் செய்கையால் அவளின் பேச்சை அவனால் கவனிக்க முடியாமல் போனது..
அவளின் இந்த தீடிர் செயலால் ஒரு நொடி நிலை தடுமாறி அவன் நிற்க அவனும் மனிதன் தானே ஒரு நொடியில் அவனுடைய உணர்வுகளுக்கு கடிவாளம் இட்டு அவளை பார்த்து முறைக்க அவளோ பயந்து, "சார் ஊருல இருக்கிறவங்க எல்லாம் என்னென்னமோ செய்யறாங்க.. நீங்க என்னோட புருசன் தானே சார் உங்களை கிஸ் பண்றதுல என்ன தப்பு சார் சொல்லுங்க.. முறையான லைசன்ஸ் எனக்கு இருந்தும், உங்க மேல காதல் இருந்தும் உங்க மேல ரொம்ப ஆசை இருந்தும் என்னை இப்படி தள்ளி வைக்கிறீங்களே சார்? ஒரு கிஸ் உங்களை பதினான்கு அதனால ஒன்னும் ஆக போறது இல்ல சார் பொண்ணு நானே கம்முனு இருக்கேன் நீங்க ஏன் சார் இப்படி கோபமா ரியாக்ஷன் கொடுக்குறீங்க?" என்று அவள் வாய்விட்டு கூறி விட,
அதைக் கேட்டவன், "நீ முதல்ல படிப்ப முடி மிச்சத்தை அப்புறம் பாத்துக்கலாம்" என்று கூறியவனை பார்த்து, "அப்போ என் மேல கோபம் இல்லையே உங்களுக்கு?" என்று கேட்க, "கோபம் இல்ல இனிமேல் என்னை சார் என்று கூப்பிடாத.. சார்ன்னு கூப்பிட்டா என்கிட்ட வராத" என்று மட்டும் சிரித்தபடி கூறினான்...
அதை கேட்ட அவள் உடனே, "சரிங்க அத்து" என கூறி விட்டு சென்று விட்டாள்..
"அத்துவா அப்படின்னா?" என அவன் குரல் கொடுக்க,
"அத்தான் அப்படின்னு அர்த்தம் கல்யாணம் ஆனதும் நம்ம ஊர்ல புருஷனை பொண்டாட்டி அத்தான் அப்படி தான் கூப்பிடுவாங்க இனிமேல் நானும் உங்களை அப்படியே கூப்பிடுறேன்" என கூறி விட்டு ஓட அதை கேட்டவன், "ஐயோ கடவுளே எதிர்பார்க்காத சமயம் இவை ஏதாவது ஒன்னு செஞ்சு வைக்கிறார். என்னை பார்த்தா உனக்கு பாவமா இல்லையா நானும் மனுஷன் தானே ரெண்டு வருஷம் என்னையும் கட்டுப்படுத்தி இவளையும் கட்டுப்படுத்தி இவ படிப்ப முடிக்க வைக்கிறதுக்குள்ள நான் ஒரு வழி ஆயிடுவேன் போல ஐயோ ஆண்டவா நீ தான் காப்பாத்தணும்" மானசீகமாக அவன் கடவுளை வேண்டினான்...
அதே நேரம் உள்ளே ஓடிய அவளுக்கு, "என்ன தைரியம் இருந்தா நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணிருக்க நல்ல வேலை அவர்கிட்ட நிக்கல இல்ல அவ்வளவுதான் அடிச்சே கொன்னு இருப்பார்.. நல்லவேளை பேசி சமாளிச்சுட்டு வந்துட்டேன்" என்று மனதுக்குள் அவள் பேசிக்கொள்ள, அவனும் அடுத்த நொடியே அவளிடம் வந்து, "நான் படிக்க சொன்னது எல்லாம் படிச்சியா?" என கேட்க அவளோ, 'இப்பதான் முத்தம் கொடுத்தேன் அதுக்கான ஒரு எக்ஸ்பிரஷன் கூட அவர் முகத்துல இல்லையே' என்பது போல யோசித்து, "படிக்கிறேன்" என்று கூற அவனும், "படிக்கிற வேலையை பாரு" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்..
பிறகு என்ன அவள் படிக்க, அவள் தவறு செய்யும் பொழுது அவன் தலையில் கொட்ட, மீண்டும் அவள் படிக்க, அவன் அவளுக்கு பாடம் எடுக்க என்று அவர்கள் வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்தது...
அவனுக்கும் எல்லாம் ஆசை இல்லாமல் இல்லை ஆனால் சிறு சலனம் கூட அவள் மனதில் வரக்கூடாது என்பதுதான் அவனுடைய எண்ணம் அதற்காகத்தான் அவன் அமைதியாக இருக்கிறான்...அவளுக்கும் படிப்பு முக்கியம் என்பது தெரியும் ஆனாலும் அவளை மீறி அவன் மீது அவள் காதல் பொங்க ஏதாவது செய்து விடுவாள்.. பிறகு அவனிடம் அதற்கு தகுந்தது போல திட்டும் வாங்கிக் கொள்வாள் இப்படித்தான் அவர்களுடைய வாழ்க்கை ஒரு வருடம் போனதே தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும்…
