Share:
Notifications
Clear all

வர்ணம் 43

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

அத்தியாயம் : 43

   "ஏன் டி சாருக்கும் உனக்கும் பதினாலு வயது  வித்தியாசம் இருக்கே பரவாயில்லையா? அவர் நல்லவர் தான் ஆனால் நீ அவருக்கு இரண்டாவது பொண்டாட்டி அவருக்கு ஏற்கனவே குழந்தை இருக்குன்னு சொல்ற உன்னோட வயசு 19 தான் ஆகுது" என லாவண்யா இழுக்க,

அதை கேட்ட அவள், "அவர் கூட வாழ போறது நான்தானே எனக்கே பிரச்சனையில்லை உனக்கு என்னடி கவலை? ஏஜ் ஜஸ்ட் நம்பர் அவ்வளவுதான்.. அதை பெரிசா பேசிட்டு இருக்காதே..அப்புறம் ஆதிரா அவள் என்னோட சார்மிங்.. உனக்கு ஒன்னு தெரியுமா.. என் அம்மா என் அப்பாவுக்கு இரண்டாவது தாரம் என்னோட அக்காவை எவ்ளோ நல்லா பார்த்துப்பாங்க தெரியுமா? யார் கிட்ட பேசினாலும் எனக்கு இரண்டு பொண்ணுங்க அக்காவை மூத்த பொண்ணு என்னை இரண்டாவது பொண்ணு அப்படித்தான் அறிமுகமே செய்வாங்க யாருக்குமே தெரியாது.. அதே மாதிரி தான் ஆதிரா எனக்கு அவள் வாயை திறந்து என்னைத்தான் அம்மா என்று கூப்பிட்டு இருக்கா அம்மா அப்படிங்கற வார்த்தையை நான் காப்பாற்ற வேண்டாமா? எனக்கு அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே தெரியலடி..

எனக்கு சாரை ஆரம்பத்துல புடிக்கல.. அவருக்கும் என்னை பிடிக்கல.. ஆனால் போகப் போகத்தான் எங்களுக்குள்ள பிடிக்க ஆரம்பிச்சது இப்போ ரொம்ப ரொம்ப பிடிக்குது.. அதை வார்த்தையால சொல்லவே முடியாது.. இப்ப கூட எப்படா காலேஜ் முடியும் அவர போய் பார்க்கலாம் அப்படின்னு தான் நினைச்சுட்டு இருக்கேன்" என்று கூற, அதைக் கேட்ட அவளுடைய தோழி லாவண்யா, "சரி டி நீயே உனக்கு பிடிச்ச வாழ்க்கையில சந்தோஷமா இருக்கும்பொழுது நான் ஏன் தேவையில்லாமல் குழப்பிக்கணும்?" என்று கூறி அந்த பேச்சை அதோடு விட்டுவிட்டாள்...

ஆம் அவனை வெகுவாக அவள் மிஸ் செய்தாள்.. காலையில் சென்றால் மாலையில் அவன் வரும் வரை அவள் காத்திருக்க வேண்டும்.. அவன் இப்பொழுது அந்த கல்லூரியில் வேலை செய்யவில்லை.. அந்த பிரச்சனைக்கு பிறகு அவர்களும் அவனை வேலையில் வைத்திருக்க விரும்பவில்லை.. அவனும் அங்கு வேலை செய்ய விரும்பவில்லை.. வேலையை விட்டுவிட்டு வேறொரு கல்லூரியில் வேலை செய்து கொண்டிருக்கிறான்..

ஆனால் அவளை அங்கு தான் படிக்க வேண்டும் என கூறிவிட்டான்.. கல்லூரி நிர்வாகமும் அதற்கு உடன்பட்டது ஏனெனில் இவ்வளவு பிரச்சனைக்கு பின்னர் அவளையும் அந்த கல்லூரியை விட்டு வெளியேற்றி இருந்தால் அது அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக முடியும் என்பதால் அவர்கள் அந்த வேலையை அந்த செய்யவில்லை..

மேலும் என்னதான் கல்லூரியின் பெயர் கெட்டுப்போக கூடாது என நினைத்திருந்தாலும் அந்த கயல் மீது எந்த தவறும் இல்லை என்பதை அவர்களும் உணர்ந்து தான் இருந்தார்கள் அதனால் அவள் மேற்கொண்டு அங்கேயே தன் படிப்பை தொடர்ந்து கொண்டே இருந்தாள்...

மாலை ஆனதும் எப்போதும் போல வீட்டுக்கு ஓடி வர அவனோ இன்னும் வரவில்லை...கதவை திறந்து உள்ளே சென்றவள் எப்போதும் போல ஆதிராவுக்கு வீடியோ கால் செய்து அவளிடம் சற்று நேரம் உரையாடினாள்..

"குழந்தையோ எப்போது வருவீங்க?" என அடம் பிடித்துக் கொண்டிருக்க அவ்வளவு குழந்தையிடம் விரைவில் வருவதாக கூறி சமாதானம் செய்தாள்.. ஆம் அவளுக்கும் ஆதிராவுக்கும் நல்ல ஒரு இணக்கமான உறவு இருந்தது... அதைக் கண்டு வெங்கட்ராமன் மிகவும் மகிழ்ந்தார். அவருக்கும் நடந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தாலும் கயல் மீது தவறில்லை என்று கருதி கயலின் நல்ல குணத்தை புரிந்ததாளோ என்னவோ ஜானகியின் மறு உருவமாகவே கயலை பார்க்க துவங்கியிருந்தார்... ஆனால் படிப்பு முடியும் வரை ஆதிரா எங்களுடனே இருக்கட்டும் என்று கூறிவிட்டார் அதற்கு நிரஞ்சனும் மறுப்பு தெரிவிக்கவில்லை..

பாட்டியும் அவருடைய வீட்டிற்கு சென்று விட்டார் பாக்கியம் மற்றும் கலையரசன் இருவரும் வாரத்தில் ஒருமுறை இங்கு வருவார்கள் இல்லை என்றால் இவர்கள் அங்கு செல்வார்கள் இப்பொழுது இவர்கள் இருவரும் மட்டும் தான் இங்கு இருக்க அவளும் வெகு நேரமாக தன் கணவனுக்காக காத்திருந்தாள்...

இன்றைய தினம் மிகவும் ஸ்பெஷல் ஆன தினம் அவனுக்கு பிறந்தநாள் காலையிலேயே அவசரத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லாமல் சென்று விட்டாள் பிறகு தான் அவளுக்கு அந்த யோசனையே வந்தது... அதனால் எதாவது ஸ்பெஷல் ஆக செய்வோம் என யூ டூப்பை பார்த்து செய்ய துவங்கினாள்..

சரி அவன் வருவதற்குள் வேகமாக சமைத்து வைத்து விடுவோம் இனி நாளை முதல் படிக்க வேண்டும் தேர்வு நடக்க போகிறது என நினைத்து அவள் சமைக்க ஆரம்பித்து இருக்கும் போதே அவன் வந்தான்.. அவனை கண்டதும் அவள் இங்கு அவனிடம் ஓடி வந்தாள்..

அவளை பார்த்து, "உன்னை யார் சமைக்க சொன்னா?" என கேட்க,

"சார் நேரமா சமைச்சு வைச்சிட்டா படிச்சு முடிச்சு சாப்பிட்டு படுத்துக்கலாம்ல சார் அதான்" என்க

"நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம் எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..பரிட்சை முடியும் வரை கிச்சன் பக்கம் நீ வராதே"  என அவன் கூற

அவளோ அப்போது தான்  ஏதோ கருகிய வாடை வர மறுபடியும் கிச்சனை பார்க்க அடுப்பில் ஏதோ கருகிய வாடை வந்தது..அவனோ பதறி, "என்ன டி அடுப்புல?" என கேட்க

அப்போது தான் பதறி போய் அடுப்பை அணைக்க அதற்குள் அவள் தயார் செய்து வைத்திருந்த பலகாரம் கருகிப் போயிருந்தது,"சார் உங்களுக்கு இன்னிக்கு பிறந்த நாள் தானே உங்களுக்கு ஸ்வீட் பண்ணலாம்னு நினைச்சு முயற்சி செய்தேன்..ஆனால் சொதப்பிட்டேன் சார்" என்று கூற,

அவனும் அதைக் கேட்டு கிச்சனுக்குள் சென்று பார்க்க பாத்திரத்தில் ஒரு கரிக்கட்டை போல ஒரு உருளை இருந்தது அதை அசைக்கவும் முடியவில்லை.. எடுக்கவும் முடியவில்லை.. அதை பார்த்தவன் பாவமாக அவன் அருகே நின்று கொண்டிருக்கும் அவளின் தலையில் தட்டி, "உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை?" என்று கேட்டான்.

"இல்ல சார் உங்களுக்கு கிப்ட் கொடுக்கலாம்னு சொல்லி தான் செஞ்சேன்" என்று கூறவும், "தேவையில்லை நீ பண்ணுன வரைக்குமே போதும்" என்று கூற அவளோ, "போங்க சார்" என்று சென்றாள்..

அவனும், "அடுத்த வாரம் முதல் பரீட்சை இருக்குது ஞாபகம் இருக்கு தானே படிக்கிற வேலையை பாரு புரியுதா" என்று கூறவும்

"எப்ப பாரு படி படின்னு சொல்லிட்டே இருக்காதீங்க சார் நான் உங்க மேல லவ் லவ்வா இருக்கேன் நீங்க என்னடான்னா என்னை படி என்று சொல்லி உயிரை வாங்குறீங்க நான் படிச்சுக்குவேன் சார் என்னோட பீலிங்க்ஸையும் புரிஞ்சுக்கோங்க சார்" என்று அவள் இழுத்தாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top