Share:
Notifications
Clear all

வர்ணம் 42

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

 

அத்தியாயம் - 42

    கை கால்கள் கட்டு போடப்பட்டு யாரையும் நிமிர்ந்து பார்க்க திராணியில்லாமல் இப்படி சிக்கி விட்டோம் என எண்ணி தலை குனிந்து கிஷோர் நடந்து வர மார்பில் கையை கட்டி தன் மனைவியை தன்னருகே நிறுத்தி அவன் வருகையை பார்த்துக் கொண்டிருந்தான் நிரஞ்சன்..

கயலுக்கு அவனுடைய முகத்தை பார்க்கக்கூட பிடிக்கவில்லை ஆனால் நிரஞ்சன் அதை கவனித்து, "நீ அவனை முகத்துக்கு நேரா எதிர்கொள்ளணும் இப்படி நீ குனிஞ்சு நிக்க கூடாது" என்று கூற, "எனக்கு அவனை பார்க்க பிடிக்கவில்லை சார் பயம் எல்லாம் இல்லை" என்று கூற பிடிக்கலைனாலும், "சில விஷயங்களை நாம் பார்த்து தான் ஆகணும் இல்லையா அது மாதிரி இவனையும் பார்" என்று கூறினான்..

"பிரஸ் முன்னால் நான்தான் அந்த வீடியோவை எடுத்தேன். கயல் எதுவும் பண்ணல மார்பிங் பண்ணினதெல்லாம் நான் தான் அவளை தப்பு தப்பா போட்டோ எடுத்து வீடியோ எடுத்து நெட்ல போட்டேன்.. அவளும், நானும் காதலிச்சிட்டு இருந்தோம்.. திடீர்னு ஒரு நாள் அவளுக்கு வேற கல்யாணம் நடந்துச்சு அது என்னால ஏத்துக்க முடியல அவளை பழி வாங்கத்தான் இதெல்லாம் செய்தேன்" என்று கூறவும் அதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து நிற்க சில பேர் காரி உமிழ்ந்தனர்...

எந்த இடத்தில் அவளுடைய பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டதோ அதே இடத்தில் வைத்து அவளுடைய பெயரை கலங்கமற்றவள் என அவன் நிரூபித்து விட்டான் நிரஞ்சன்... அவன் அதை கூறிய பின் தான் நிரஞ்சன் அமைதி பெற அதை பார்த்த அவள்,

"சார் ஒரே ஒரு நிமிஷம் அவன் கூட பேசலாமா?" என கேட்க,

"போ" என நிரஞ்சன் கூற

அவன் கொடுத்த தைரியத்தில் அவள் அவன் அருகே செல்ல அவளோ கிஷோர் அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..

பிறகு அவள் அவனை நேருக்கு நேராக எதிர்கொண்டு, "பழிவாங்குறதுக்காக நாம செய்யற விஷயம் எந்த அளவுக்கு உன்னை கொண்டு போய் நிறுத்தி இருக்குன்னு பார்த்தியா? இப்ப சொல்றேன் உன்னை போய் என் மனசில் நினைச்சதை கூட பாவமா நினைக்கிறேன்? உன் வீட்டிலேயும் ரெண்டு பொண்ணுங்களை வச்சுக்கிட்டு நீ இந்த வேலை எனக்கு பண்ணி இருக்க? எவ்வளவு வக்கிரம் உன் மனசுல இருந்திருக்கும்? என்னுடைய முகத்தை பார்க்க கூட உனக்கு தைரியம் இல்லை அந்த அளவுக்கு நீ அசிங்கப்பட்டு இப்ப நிக்கிற..

நீ எதை நினைச்சு இதை செய்தியோ ஆனால் அது எனக்கு நடக்கல? நான் அசிங்கப்படல! நீதான் இப்போ என் கண் முன்னாடி அசிங்கப்பட்டு இருக்க! நான் இப்பவும் அப்படியே தான் இருக்கேன் உலகத்துல எத்தனை பேர் என்னை தப்பா பார்த்து இருந்தாலும் அந்த வீடியோ லீக் ஆகி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. ஏனென்றால் எனக்கு அது பாதிப்பை கொடுக்கல..

எனக்கு பாதிப்பை கொடுக்காத எந்த விஷயத்துக்கும் நான் கவலைப்பட மாட்டேன்.. ஏன்னா என் பின்னாடி என் புருஷன் இருக்கார் அவர் என் மேல நம்பிக்கை வைத்திருக்கிறார் அது போதும்.. எனக்கு நீ என் வாழ்க்கை போகணும் தானே ஆசைப்பட்ட இனிமேல் தான் என்னோட வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும் அதை பார்க்க நீ என் கண் முன்னாடி இருக்க மாட்ட இதுதான் நீயும் நானும் கடைசியா சந்திக்க போறேன் தருணம்..

என் வாழ்க்கையில இவ்வளவு கேவலமான ஒருத்தன் கிட்ட நான் சில காலம் பழகி இருக்கேன் அப்படிங்கறத கேவலமா நினைக்கிறேன்" என்று கூறியவள் வேகமாக தன் கணவனின் கையைப் பிடித்து நின்று கொள்ள அவனும் அவளுடைய கரங்களை கோர்த்து நின்றான்..

இதோ அவனை அடித்து இழுத்து செல்வதையும் அவனை பல கேமராக்கள் சூழ்ந்து இருப்பதையும், அவன் எப்படிப்பட்டவன் என்ன செய்தான் என்பதை வரிவரியாக சம்பவ இடத்தில் இருந்தது போல விவரிப்பவர்களையும் பார்த்துக் கொண்டு தன் கணவனின் கைகோர்த்து நின்று கொண்டிருந்த கயலை பார்த்து, "இப்போ இந்த உலகம் உன்னை நல்ல விதமா தான் பார்க்கும் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கனும்னு அவசியமில்லை" என்று கூறியவன்,

"இனி நீ சந்தோஷமா படிக்கலாம் படிக்கிறது மட்டும்தான் என்னுடைய குறிக்கோள் நீ எதை நினைச்சு இந்த சென்னைக்கு வந்தாயோ அந்த வேலையை முடி புரியுதா" என்று கூற

அவனைப் பார்த்து, "சார் சத்தியமா சொல்றேன் நான் உங்களோட குணத்துல விழுந்துட்டேன் சார் இப்படி எல்லாம் ஒருத்தர் இருப்பாரா என தெரியல ஆனால் நீங்க எனக்கு பொக்கிஷம் மாதிரி என் வாழ்க்கைக்குள் வந்து இருக்கீங்க.. நீங்க எனக்கு கிடைக்க நான் தான் கொடுத்து வைச்சு இருக்கணும் சார்.. என்னோட நிலைமையை புரிஞ்சு என்னை அதிலிருந்து வெளியே கொண்டு வந்ததும் இல்லாமல் என்னை எல்லோர் முன்னிலையில் என் மேல தப்பு இல்லைன்னு கொண்டு வந்துட்டீங்க சார்..ஏற்கனவே நான் நீங்க பெஸ்ட் அப்பா மெட்டீரியல் அப்படின்னு நினைச்சு தான் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சது.. ஆனா இப்போ நீங்க ஹஸ்பேண்ட் மெட்டீரியலா ஆயிட்டு இருக்கீங்க. எங்க உங்களை நானே காதலித்து உங்க மேல பாய்ந்துடுவேனோன்னு பயமா இருக்கு" என்க

அதை கேட்ட அவனோ அதை கேட்டு சிரித்து, "என்கிட்ட வந்த அவ்ளோ தான் அடி தான் விழும் மூடிட்டு இரண்டு வருஷம் படிக்கிற வழியை பாரு... இந்த ஒரு வாரத்துல உனக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி ஆயிடுச்சு கவனிச்சுக்கிறேன்" என கூறி சிரித்தான்.. அவளும் அதைக் கேட்டு வெட்கப்பட்டு சிரித்தாள்...

அவனுக்கும் அப்போதுதான் மனம் நிம்மதியாக இருந்தது அவளுக்கு தேவையானதை இந்த சமூகம் அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என நினைத்திருந்தான்...அதை அவன் மாற்றி விட்டதில் மகிழ்ச்சி அடைந்தான்..

இருவர் மனதுக்குள்ளும் இருவரின் மீதும் அன்பும், காதலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.. அது ஒருவரை ஒருவர் தெளிவாக அவர்கள் புரிந்து வைத்துக் கொண்டார்கள்... ஏற்கனவே இந்த திருமண பந்தத்தில் இணைந்ததால் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து இருவரும் ஒருவரை ஒருவர் இந்த பிரச்சனைக்கு பிறகு ஆழமாக புரிந்து கொள்ள முயன்றனர்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top