Share:
Notifications
Clear all

வர்ணம் 41

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

அத்தியாயம் : 41

   அங்கு கூட்டத்தின் நடுவே அவன் நின்று கொண்டு இருக்க அவனிடம் பிரின்சிபல் கெஞ்சி கேட்டுக்கொண்டு இருந்தார்..

"இவனால காலேஜோட மானம் போனா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாருங்க மத்த பசங்களுக்கும் இது எஃபெக்ட் ஆகாதா? கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க காலேஜ்க்குள்ள மீடியா எல்லாம் வந்தா பெரிய பிரச்சனை ஆயிடும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க நிரஞ்சன்" என கேட்டார்..

அவனோ, "எனக்கு என் பொண்டாட்டிக்கு நியாயம் கிடைக்கணும் எந்த இடத்தில் அவன் இதை செய்தானோ அதே இடத்தில் தவறை ஒப்புக்கொள்ளனும் நான் உங்களுக்கு கொடுத்த இறுதி வாய்ப்பு முடிஞ்சு போச்சு.. இன்னைக்கு அவனா இதை செய்யல அப்படின்னா செய்ய வைப்பேன்.. ஆல்ரெடி போலீஸ்ல கேஸ் கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு.. அவங்க வந்துட்டு இருக்காங்க எனக்கு தேவையானது கண்டிப்பா நடந்தே ஆகணும்" என்றான்...

"அந்த பையன் நீங்க அடிச்ச அடியில ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கான்.. நாங்க அவனை டிஸ்மிஸ் பண்ணிட்டோம் இனி அவனால  டிகிரி கம்ப்ளீட் பண்ண முடியாது அவங்க வீட்ல தனியா கேஸ் ஹாண்டில் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாங்க இதுக்கு மேல என்ன வேணும்..?"

"அவன் இங்கே வந்து மீடியா முன்னாடி எந்த இடத்தில் என்னுடைய மனைவிக்கு தீங்கு விளைவிச்சானோ அதே இடத்தில் அவன் என்ன பண்ணினான் அப்படிங்கிறதை ஒத்துக்கணும் அதுவரை நான் விடமாட்டேன்" என்று உறுதியாக இருந்தான் நிரஞ்சன்..

அவளோ இதையெல்லாம் பார்த்து அவளுக்கு காதல் பெருக எப்படி இங்கு வரும் பொழுது அவள் தயங்கி கூனிக்குறுகி தன்னை வெளிஉலகம் எப்படி அவளை ஏற்றுக் கொள்ளுமோ என தவித்து வந்தாலோ அப்படி சிறு துளி உணர்வையும் அவளுக்கு யாரும் கொடுக்கவில்லை..

அதை விட அவள் வரும் முன்னே நடந்த உண்மையை உடைத்துக் கூறி அவளை யார் முன்னிலையிலும் கூனிக்குறுகி அவன் நிற்க வைக்கவில்லை என்பதுதான் உண்மை.. அவளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய விஷயத்தை கிடைப்பதற்காக அவன் போராடுகிறான் அவ்வளவுதான்...

"ஏண்டி சாரைத்தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்னு சொல்ல வேண்டியது தானே? உன் மேல கோபம் கோபமாக வந்துச்சு இருந்தாலும் உனக்கு நடந்ததை நினைச்சு வருத்தப்பட்டேன். ஆனா சார் அந்த கிஷோர் பிளந்து எடுத்தார் பாரு..செம்ம அடி.. ஹாஸ்பிடல்ல கிடக்கிறான் இருந்தும் அவனை விடல எல்லார் முன்னாடியும் தவறை ஒத்துக் கொண்டே ஆகணும் அப்படின்னு விடாப்பிடியா நிக்கிறாரு" என்ற லாவண்யா கூறினாள்..

அதை கேட்ட அவளோ கண்கள் கலங்கி, "நான் சார்கிட்ட போறேன் டி எனக்கு அவர் கூட இருக்கணும்னு தோணுது" என கூறி அவனை தேடி ஓடினாள்..

அந்த நொடி அவளுக்கு சுற்றி இருக்கும் யாரும் அவளை தவறாக பார்ப்பார்கள் என தோன்றவில்லை.. ஒரு வாரத்துக்கு முன் நடந்த விஷயங்கள் எதுவும் அவளுக்கு நினைவில் இல்லை தனக்காக அவன் நிற்கிறான் என்ற ஒற்றை நினைப்பு மட்டும் தான் அவனருகே அவளை ஓட வைத்தது..

இத்தனை நாட்கள் அவன் அவளுக்கு உறுதுணையாக இருந்தான்.. ஆனால் அப்பொழுது எல்லாம் அவன் எதுவுமே கூறவில்லை இப்படி தனக்காக இங்கு போராடிக் கொண்டிருக்கிறான் என அவன் வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை அவள் வெளியே வந்த பிறகுதான் அவளுக்கு விஷயமே தெரிந்தது தனக்காக இவ்வளவு தூரம் செய்யும் இவனை தான் அடைந்ததற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என நினைத்தாள்..

அன்று அவளுக்கு இருந்த அவனின் வயது பிரச்சனை இப்பொழுது அவளுக்கு இல்லவே இல்லை... இதுதான் வாழ்க்கை என அந்த வாழ்க்கையில் ஒத்துப் போக பழகி இருந்தபோது கூட அதைப்பற்றி யோசிக்கவில்லை.. அவன் மீது காதலும் இல்லை, எதுவுமில்லை அன்பு இருந்தது.. அவன் என் கணவன் என்பதை உணர்ந்து இருந்தாள்.. ஆனால் இப்பொழுது தான் அவளுக்கு காதலும், அன்பும் பன்மடங்கு பெருகியது.. தனக்காக கடைசிவரை அவன் இருப்பான் என்ற நம்பிக்கை நிரஞ்சன் அவளுக்கு கொடுத்திருந்தான்...அவன் அருகே ஓடியவள் அவன் முன்னே நிற்க அவளை கண்டதும் என்ன என கேட்டான்..

அவளோ அவன் செய்ததை எல்லாம் நினைத்து கண்கள் நிறைந்து, "சார் எனக்கு உங்ககிட்ட பேசணும்" என்க

அதை கேட்டவன் பிரின்சிபலிடம் ஒரு நிமிடம் எனக்கு ஒரு அவளை அழைத்துக் கொண்டு தனியே சென்றவன், "என்ன சொல்லு" என கேட்க என்கிட்ட, "இதை சொல்லவே இல்லையே சார் நீங்க" என்று கலங்கிய கண்களுடன் கூற

"என்ன சொல்லணும்?" என்க

"நீங்க இப்படி போராட்டம் எல்லாம் பண்றதை"

"அப்புறம் தப்பு செஞ்சவனை அப்படியே விட சொல்றியா? இல்ல உனக்கு ஆறுதலா நீ வெளியே வரணும் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்காதுன்னு சொல்லிட்டு நீ அனுபவிச்ச வலிக்கு உரிய நியாயத்தை வாங்கி கொடுக்க வேண்டாமா? இன்னைக்கு நீ நாளைக்கு வேறொரு பெண் இந்த மாதிரி மறுபடியும் வேற எந்த பொண்ணுக்கும் நடக்க கூடாதுன்னு சொல்லித்தான் நான் இங்கே நின்னுட்டு இருக்கேன்.. இப்படியே ஏதாவது ஒரு பொண்ணுக்கு நடந்தாலும் உன்னை முன் மாதிரியா வச்சு அவங்களும் வெளியே வரணும் அதுக்காகத்தான் நான் பேசிட்டு இருக்கேன்" என்று அவன் கூற, அதைக் கேட்டவள் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, "சார் இதே இடத்துல கட்டி பிடிக்கனும்னு ஆசையா இருக்கு சார்... உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்குது சார் என்னால வார்த்தையால சொல்லவே முடியல.. கட்டிப்பிடிக்கணும்னு இருக்கு ஆனால் நீங்க திட்டுவீங்களேன்னு கம்முனு இருக்கேன்" என்று அவள் கூற

அதை கேட்டவன், "என்னை எங்கேயாவது கட்டிப்பிடிச்ச அடி வெளுத்திடுவேன் அது வேற விஷயம் அதனால கையை பிடிச்சதோடு நிறுத்திக்கோ இப்போ நான் சண்டை போடுற மோட்ல இருக்கேன்" என்று கள்ளச் சிரிப்போடு கூற அதைக் கேட்டவள் மெல்லிய புன்னகை பூத்தாள்...

அதன் பிறகு அவன் கூறியது போல போலீசார் கிஷோரை கைது செய்து அவனை அழைத்து வந்தனர்.. போராட்டம் வலுப்பெற கிஷோரை கல்லூரி முன்னாள் அழைத்து வர அதற்குள் மீடியாக்களும் சூழ்ந்து கொண்டன..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top