Share:
Notifications
Clear all

வர்ணம் 40

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

 

அத்தியாயம் - 40

"முதலில் அவன் என்ன தப்பு பண்ணினான்னு கேளுங்க" என்று நிரஞ்சன் ஆக்ரோஷமாக கூற,

"அவன் என்ன வேணாலும் செஞ்சு இருக்கட்டும் ஆனாலும் ஒரு மாணவன் மீது கை வைக்க உங்களுக்கு உரிமை இல்லை" என்று அவர் கூற, அதைக் கேட்ட அவனும், "ஒரு ப்ரொபசரா ஒரு மாணவனை அடிக்க உரிமையில்லை ஆனால் என் பொண்டாட்டியை நாசம் செய்த ஒரு கேடு கெட்டவனை அடிக்க எனக்கு உரிமை இருக்கு தானே?" அதை கேட்டதும் சுற்றி இருந்த அனைவரும் அதிர்ந்தனர் கிஷோர் உள்பட..

கிஷோரின் அதிர்ச்சியான முகத்தை பார்த்து, "என்ன பார்க்கிற டா பொறுக்கி நாயே? கயல் என் பொண்டாட்டி டா.. என்ன தைரியம் இருந்தால் நீ அவளை இந்த அளவுக்கு கேவலமா வீடியோ எடுத்து ரிலீஸ் பண்ணி இருப்ப உனக்கு என்ன தைரியம் இருக்கணும்?" என்று மீண்டும் தாக்க போக அவனை தடுத்து நிறுத்திய பிரின்சிபல், "அவன் தான் செஞ்சிருப்பானு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டார்..

அதைக் கேட்டதும் கிஷோர் மாட்டிக்கொண்டோமோ என பயந்து, "சார் நான் எதுவுமே செய்யல சார் இவர் பொய் சொல்றாரு" என்று கிஷோர் கூற மீண்டும் தன் காலால் எட்டி ஒரு உதை உதைத்தவன், "நேத்து இவன் தான் என் பொண்டாட்டி கிட்ட தப்பா நடந்து அவளுக்கு ட்ரக்ஸ் கொடுத்து அவள் சுயநினைவில்லாத போது அவளோட ட்ரெஸ் எல்லாம் கிழிச்சு வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் போட்டவன் இவனை சும்மா விட சொல்றீங்களா?" என கூறி தன்னிடம் உள்ள ஆதாரத்தை காட்டினான்.. அதை காட்டவும் இவனுடைய ஃபோனில் இருந்து தான் விசயம் வந்திருக்கிறது என அனைவருக்கும் புரிந்தது..

அதை விட அனைவருக்கும் கயல் நிரஞ்சனின் மனைவி என்பதை கேட்டு அனைவருமே அதிர்ந்தார்கள்...

சுற்றி இருந்த மாணவர்கள், "எல்லாம் அந்த பொண்ணு நல்ல பொண்ணு இவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கல" என பேசிக்கொள்ள விஷயம் வேறு கோணத்தில் செல்கிறது என்பதை புரிந்த பிரின்சிபல் அவர்கள் இருவரையும் அழைத்து சென்றார்..

இதோ பிரின்சிபல் ரூமில் கிஷோர் மற்றும் நிரஞ்சன் நின்று கொண்டிருக்க நிரஞ்சனுக்கு இன்னும் ஆத்திரம் அடங்கவில்லை...கொதித்து எழுந்து கொண்டு இருந்தான்..கயலின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் இவன் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆத்திரத்தில் அவன் இருந்தான்..

"இதோ பாருங்க நிரஞ்சன் நேத்து நடந்த அந்த வீடியோ மேட்டர் என் காதுக்கும் போச்சு .. உங்க கோபம் நியாயமான கோபம்தான் ஆனால் நீங்க இந்த காலேஜ்ல வச்சுக்கிட்டு ஒரு ஸ்டுடென்ட் கை வைக்கிறது தப்பு" என கூற

"இந்த மாதிரி கேவலமான வேலையை செஞ்ச இவன கையை வைக்காமல் வேற என்ன செய்ய சொல்றீங்க?" என்று அவன் கோபமாக கேட்டான்...

"கொஞ்சம் பொறுமையா இருங்க நிரஞ்சன்" என்க

"நான் ஒன்னும் இந்த காலேஜ் ப்ரொபசரா இவன் அடிக்கல என் பொண்டாட்டியின் மானத்தை விலை பேசி இருக்கான் உன்னை சும்மா விட சொல்றீங்களா?" என கேட்க

"நாங்களும் ஆக்சன் எடுக்கிறோம் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க இவனை காலேஜ் விட்டு டிஸ்மிஸ் பண்றோம்.. ஆனால் காலேஜ் குள்ள எந்த பிரச்சனையும் வேண்டாம்" என கூற,

அவனோ, "அது நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க எனக்கு அதை பத்தி கவலை இல்லை ஆனால் எனக்கு இவனை என்ன பண்ணனும் தெரியும்" என மீண்டும் அடிக்க போனான்..

அதை பார்த்து பிரின்சிபல், "இதோ பாருங்க நிரஞ்சன் காலேஜ் கேம்பஸ்க்குள்ள வச்சு நீங்க இவனை அடிக்கிறது நாங்க பார்த்துட்டு இருக்க முடியாது எதுவா இருந்தாலும் வெளியே வச்சுக்கோங்க.. இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது" என கூறி விட்டார்..

ஆனால் அவனோ எங்கே வெளியே சென்றால் அடி விழுமோ என கருதி பிரின்சிபல் அருகிலேயே நின்று கொள்ள அவர்களோ அவனுடைய பெற்றோர்களிடம் விசயத்தை கூறி வர வைத்து விட்டார்கள்..

அவர்களும் விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து நிற்க முதலில் அவர்கள் நம்ப முடியாமல் இருந்தார்கள்.. தன் மகன் அப்படி ஒரு தவறை செய்திருக்க மாட்டான் என உறுதியாக நிற்க அவர்களிடமும் ஆதாரத்தை காட்டவும் அவர்கள் அதிர்ந்து போய் விட்டார்கள்..

அப்படி இருக்க நிரஞ்சன், "என் பொண்டாட்டிக்கு தவறே செய்யாமல் இந்த உலகத்துல அவ கூனிக்குறுகி அவமானத்தில் தன்னைத்தானே சுருக்கி வாழ்ந்துட்டு இருக்கா அவளை என்னால அந்த மாதிரி பார்க்கவே முடியல அதுக்கு கண்டிப்பா உங்க மகன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்" என்க

அவர்களோ மன்னிப்பு கேட்டார்கள், _எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுத்து விடுகிறோம் தயவு செஞ்சு என்னுடைய மகனை விட்டுடுங்க" என அவனின் பெற்றோர்கள் நிரஞ்சனிடம் கேட்க, "இதை சொல்ல வெக்கமா இல்ல நான் நீங்க கொடுப்பதை விட இரண்டு மடங்கு பணம் உங்களுக்கு நான் திருப்பி தரேன் நான் இதே மாதிரி ஒரு வீடியோவை உங்க மனைவியை வச்சு செஞ்சா நீங்க அதை பார்த்துட்டு சும்மா இருப்பீங்களா?" என கேட்கவும் அவரால் வார்த்தையே பேச முடியாமல் கூனிக்குறுகி நின்றார்...

கல்லூரி முதல்வருக்கோ இந்த பிரச்சனையை காதும் காதும் வைத்தது போல முடிக்க வேண்டும் என்று தான் அவரும் நினைத்தார். ஏனெனில் இப்படி ஒரு விஷயம் வெளியே தெரிந்தால் அவருடைய கல்லூரியின் மானம் அல்லவா கொடிகட்டி பறக்கும் அதனால் அவரும் விஷயத்தை மூடி மறைக்கத்தான் பாடுபட்டார்..

கிஷோரின் தரப்பும் விஷயத்தை மூடி மறைக்க அரும்பாடுபட இவர்கள் யாருக்கும் நிரஞ்சன் கட்டுப்படவில்லை.. இவன் ஊரறிய நான்தான் இந்த தவறை செய்தேன் என ஒப்புக்கொள்ள வேண்டும்.. அதுவும் இந்த கல்லூரியில் வைத்து அவன் சோசியல் மீடியாவில் தெரிவிக்க வேண்டும் மேலும் அவன் செய்த தவறுக்கான தண்டனையை சட்டபூர்வமாக அவன் அனுபவிக்க வேண்டும் அது மட்டும் தான் நிரஞ்சனின் வேண்டுகோளாக இருந்தது..

அந்த பேச்சுவார்த்தை தான் கிட்டத்தட்ட நாலைந்து நாட்களாக சென்று கொண்டிருக்க, நிரஞ்சனின் பொறுமையை அவர்கள் ரொம்ப சோதித்து விட்டார்கள்.. அவர்கள் எவ்வளவு முயன்றும் அவன் நினைத்த காரியத்தில் உறுதியாக இருந்தான்..

விஷயம் காட்டு தீ போல மாணவர்களிடம் பரவி, அனைவரும் அவனுக்கு ஆதரவாக களம் இறங்கி விட்டார்கள்...இதோ அனைவரும் கிஷோர் செய்தது தவறு அவன் மீடியா முன் விசயத்தை ஒப்பு கொள்ள வேண்டும் என போராட்டம் செய்யும் அளவுக்கு இறங்கி விட்டார்கள்..

விசயத்தை எல்லாம் லாவண்யா கூற, அதை கேட்ட கயல் அதிர்ந்தாள்..தனக்காக தான் அனைவரும் போராடுகிறார்களா அதைவிட நிரஞ்சன் அனைவரும் முன்னும் அவளை மனைவி என்று ஒப்புக்கொண்டதும் மட்டுமின்றி அனைவரும் முன்னும் தன் மனைவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராடுகிறானா? எந்த இடத்தில் இவள் அவனுடைய மனைவி என தெரியக்கூடாது என நினைத்து இருந்தானோ அதே இடத்தில் அவளுக்காக அவன் போராடுகிறான் என்பதை நினைத்து பார்க்க கயலுக்கு உண்மையில் வெளியே சொல்ல முடியா உணர்வில் அவள் இருந்தாள்..

அவளை ஆயிரம் அவளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும் அவள் கண்ணில் அவளுடைய கணவன் மட்டும் தான் தெரிந்தாள்..

அவனின் இந்த போராட்டத்தில் நியாயம் கிடைக்குமோ இல்லையோ அவளுக்கு தெரியாது..ஆனால் அவளுக்கு தன் கணவன் மீது காதல் பெருகியது...அன்பும் பன்மடங்கு பெருகியது..தனக்காக ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வே மிக பெரிய சக்தி அல்லவா அதை அவளுடைய கணவன் அவளுக்கு கொடுத்து கொண்டு இருந்தான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top