வர்ணம் 39
அத்தியாயம் : 39
காலையிலேயே அவளை பரபரப்பாக கிளப்பி விட்டார் கருணை அம்மாள்..அவளுக்கோ கல்லூரிக்கு செல்லவே மனம் இல்லை...ஒரு வித பயம் அவளை சூழ்ந்து கொண்டு இருந்தது..அந்த பயத்தை வெளியே சொன்னால் இவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் அதனால் அவளோ, "பாட்டி நீங்களாவது அவர் கிட்ட சொல்ல கூடாதா? நான் வீட்டில் இருந்தே படிக்கிறேன்" என அவள் கூற,
அதை கேட்ட அவர், "உனக்கு படிக்க கசுக்குதா டி பிச்சுடுவேன்.. ஏதோ நல்லா படிச்சா தங்கத்துல பதக்கம் கொடுப்பாங்களாம்.. நிரஞ்சன் சொன்னான் அது வாங்குற புரியுதா" என அவர் கூற,
" பாட்டி அதுக்கு இரண்டு வருஷம் இருக்கு" என அவள் சலித்து கொள்ள, "இரண்டு வருஷம் படி டி உனக்கு என்ன கேடு.. என் பேரன் காசுல உட்கார்ந்து திங்கலாம்னு நினைச்சுட்டு இருக்கியா? கொன்னுடுவேன் நல்லா படிச்சு வேலைக்கு போற வழியை பாரு கண்ட நாய் ஏதாவது செஞ்சான்னு சொல்லி வீட்டுக்குள்ள உட்கார்ந்திட்டு இருந்த துடப்பகட்ட தான் வரும்" என அவர் எச்சரித்தார்...
அதை கேட்ட அவள், "ஐயோ தாயே நான் காலேஜ் போறேன் ஆளை விடுங்க" என கூறி அவள் வெளியே சென்று விட, அவள் சென்றதும் பாட்டி கண்ணை துடைத்து கொண்டு, "இனியும் அதுங்க இரண்டுக்கும் கஷ்டத்தை கொடுக்காமல் இரு ஆத்தா" என வேண்டுதலை வைத்தார் கருணை அம்மாள்..
ஆம் நடந்த விஷயத்தை எல்லாம் நிரஞ்சன் பெரியவர்களிடம் கூற, அவர்கள் அதிர்ந்து போனார்கள்..இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என நினைத்தார்கள்.. ஆனால் அவனும் அவர்களிடம் பக்குவமாக கூறி அவள் மீது எந்த தவறும் இல்லை என்பதை தெளிவு படுத்தி பிறகு அவள் வீட்டுக்கு வரும் நேரம் யாரும் அவளிடம் ஆறுதல் கூறுகிறேன் என பழைய விஷயங்களை பேசக்கூடாது அவளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்..முக்கியமாக அழுது அவளை மேலும் கஸ்டபடுத்த கூடாது என அவன் தான் அவர்களிடம் கூறி இருக்க அவர்கள் அனைவருக்கும் வருத்தம் இருந்தாலும் அதை அவள் முன் காட்டாமல் இருந்தார்கள்..
எப்போதும் போல அவன் கிளம்பி இருக்க, அவள் பஸ்ஸில் தான் பயணம் செய்து கொண்டு இருந்தாள்..அவளுக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது..யாரும் அவளை கவனிக்கவில்லை என்றாலும் அவளுக்கு அச்சமாக இருந்தது..எல்லோரும் அவளையே பார்ப்பது போல இருந்தது..அவளால் தலை நிமிர்ந்து நடக்க கூட முடியவில்லை...
இப்படியே பல வித எண்ண குவியல்களோடு அவள் கல்லூரிக்கு செல்லும் போதே அந்த பஸ் ஸ்டாப்பை பார்த்ததும் அவளுக்கு மேலும் பதட்டம் ஆகியது..இங்கு தானே என யோசித்து அந்த இடத்தை பார்க்க விரும்பாமல் சென்றாள்..இருந்தும் அன்றைய சம்பவம் அவள் மனதை விட்டு அகல மறுத்தது..அந்த அளவுக்கு அவள் பாதிப்பு அடைந்திருந்தாள்..
அவள் இதுவரை அந்த வீடியோவை பார்க்கவில்லை என்றாலும் அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.. குனிந்த தலை நிமிராமல் கல்லூரிக்கு செல்லும் போது அந்த கல்லூரியின் மொத்த மாணவர்களும் ஒரே இடத்தில் குழுமி இருந்தனர்..
"போராடுவோம்! போராடுவோம்! நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!" என்ற முழக்கங்கள் அவளுடைய காதில் விழ அவள் நிமிர்ந்து பார்க்க ஒட்டு மொத்த மாணவர்களும் அவளை தான் பார்த்து கத்தி கொண்டிருக்க, என்ன நடக்கிறது என புரியாமல் அவள் முழிக்க கூட்டத்தை விலக்கி கொண்டு லாவண்யா ஓடி வந்தாள்..
"ஹே வா டி உனக்காக தான் காத்துகிட்டு இருக்கோம்" என அவள் கூற அவளோ பதறி, "என்ன டி ஆச்சு?" என கேட்க
"என்ன உனக்கு ஒன்னும் தெரியாதா? உனக்காக தான் டி போராடிட்டு இருக்கோம் வா" என கூற, அவளை கண்டதும் கூட்டத்தில் உள்ள மாணவர்கள் அவளின் வருகையை கண்டு ஆர்பரிக்க அவளோ திகைத்து போக, கூட்டத்தின் நடுவே நிரஞ்சன் மார்பில் கையை கட்டி நின்று கொண்டு இருக்க அவளோ புரியாமல் பார்க்க, அவனுக்கு எதிர் பக்கமாக பிரின்ஸ்பில் ஏதோ நிரஞ்சனிடம் பேசி கொண்டு இருக்க அவனோ கொந்தளித்த முகத்தோடு காணப்பட்டான்..
அவளுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.. "ஹே எதுக்கு டி சார் இவ்ளோ கோபமா இருக்கார்?" என கேட்க, "எல்லாம் உனக்காக தான்" என்க அவளோ, "எனக்கு எதுவும் புரியல தெளிவா சொல்லு" என்றாள்..
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு முன்பு மிக சரியாக கூற வேண்டுமெனில் கயல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்ற அடுத்த நாள் எப்பொழுதும் போல நிரஞ்சன் கல்லூரிக்கு சென்றான்...
அங்கு மாணவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.. அங்கிருந்து ஸ்டெம்ப்பை எடுத்தவன் தன் சட்டை பட்டனை அவிழ்த்து முட்டிவரை மடக்கி விட்டுக் கொண்டே பிறகு காலர் பட்டன் மேலும் இரண்டு பட்டன்களை அவிழ்த்து பின்னோக்கி சட்டையை போட்டுக்கொண்டு நடந்தான் நிரஞ்சன்..
அந்த சமயம் திமிராக தான் செய்தது யாருக்கும் தெரியாது என்று தைரியத்தில் கிஷோர் தன் நண்பர்களிடம், "பார்த்தியா அவள் பண்ணின வேலையை இதுக்குத்தான் நான் கழட்டி விட்டுட்டேன் அவள் சரியில்லடா என்ன மிதப்பா சும்மா கும்முனு இருந்தா பார்த்தியா" என்று கூற,
அதை கேட்ட ராம் கூட, "என்னால நம்பவே முடியல நம்ம கயல் தான் இப்படி பண்ணி இருக்காளா அப்படின்னு வீடியோ பார்த்ததிலிருந்து மனசே சரியில்லடா" என்று ராம் கூற,
"டேய் என்ன நீ நெனச்சிட்டு இருக்க? அவள் அப்படி நல்லவள் இன்னும் இல்லை நான் எல்லாம் தெரிஞ்சு தான் நான் விலகி இருக்கேன் புரியுதா? அவள் கல்யாணம் ஆனவன்னு சொல்லிட்டு இருக்கா அதுவே எனக்கு சந்தேகமா தான் இருக்கு அவ புருஷனும் அவளை இப்படி அனுப்பி தான் சம்பாதிக்கிறானோ அப்படின்னு நினைக்கிறேன்" என்று கூறி அடுத்த நொடி ஸ்டம்பால் அவன் முகத்தில் ஓங்கி அடிக்க எதிர்பாராத தாக்குதலால் கிஷோர் கீழே விழுந்தான்..
கிஷோரை தாக்கியது யார் என்று பார்க்க அங்கு நிரஞ்சன் நிற்க இந்த மாதிரி ஒரு கோலத்தில் யாருமே பார்த்திருக்க முடியாது கிட்டத்தட்ட ரௌடி போல அவன் இருந்தான்..அவன் முகத்தில் அவ்வளவு கோபம் நிறைந்து இருந்தது.. "எதுக்கு சார் அடிச்சீங்க?" என்று ராம் கேட்க, தனது கையில் இருக்கும் ஸ்டெம்ப்பை தூக்கி அவன் முகத்துக்கு நேராக காட்டி, "வாயை மூடிட்டு இருந்தா உனக்கு நல்லது இல்ல யாரா இருந்தாலும் வெளுத்துடுவேன்" என்று கூறியவன் சரமாரியாக கிஷோரை தாக்க தொடங்கினான்...
ஒரு ப்ரொபசர் மாணவரை தாக்குகிறார் என்றதும் அனைத்து மாணவர்களும் அங்கு கூடி நின்று வேடிக்கை பார்க்க, "எதுக்கு சார் அடிக்கிறீங்க? என்ன சார் நடந்துச்சு? ஏன் சார் அடிக்கிறீங்க? நான் என்ன பண்ணினேன் சொல்லுங்க சார் இதெல்லாம் சரியில்லை நான் கம்ப்ளைன்ட் பண்ணுவேன் சொல்லிட்டேன்" என்று கிஷோர் கேட்டான்..
"நீ என்னமோ பேசிட்டு இருந்தியே அதுக்காக தான் அடிச்சேன்" என்று மீண்டும் மீண்டும் அடித்தான்.. அவனுடைய ஆத்திரம் தீரும் அளவுக்கு அடித்தான் இவன் தானே தன் மனைவியை இந்த நிலைமைக்கு ஆளாக்கியது என்று கருதி தாக்க ஒரு சில மாணவர்கள் ஓடி சென்று வேறு பேராசிரியர்களிடம் விஷயத்தை கூற அவர்கள் ஓடி வந்து தடுத்தார்கள் அதற்குள் விஷயம் பிரின்ஸ்பல் வரை சென்று விட்டது..
அவரும் ஓடி வந்து, "மிஸ்டர் நிரஞ்சன் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ஒரு ஸ்டூடண்ட் மேல கை வைக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா?" என்றார்..
