வர்ணம் 38
அத்தியாயம் - 38
"சார் என்னை தொடாதீங்க சார்.. நான் அசிங்கம்.. என்னை பார்க்க எனக்கே அசிங்கமா இருக்கு.. அவன் என்னை என்ன எல்லாம் செய்தான் தெரியுமா?" என நடந்த விசயத்தை எல்லாம் கூற
அதை கேட்ட அவனுக்கு கிஷோரை நினைத்து ஆத்திரம் வந்தாலும், "அதுக்கு நீ என்ன பண்ணுவ??விடு கயல்" என்க
"நான் எதுவும் பண்ணல ஆனால் என்னோட வீடியோ தான் அவன் லீக் பண்ணுவேன்னு சொன்னானே இல்லை லீக் ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன்.." என பயந்து போய் அவள் கூற,
அதைக் கேட்டவன் கண்களை மூடி திறந்து, "ஆமாம் லீக் ஆயிடுச்சு.. அதுக்கு என்ன இப்போ?" என கேட்க அது கேட்டு அவள் அதிர்ந்தாள்...
"என்ன சார் சொல்றீங்க அப்போ என்னோட மானம் எல்லாம் போச்சா? எல்லோரும் என்னை தப்பா நினைச்சு இருப்பாங்க இல்லையா இனி எப்படி சார் எல்லோரும் முகத்திலும் முழிப்பேன்.." என கூறி ஒரு மூச்சு அழுதாள்.. அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..
அவனோ அவளின் மனதில் உள்ள பாரம் முழுவதும் கொட்டி தீர்க்கட்டும் என எண்ணியவன் அவள் அருகே அமர அவளோ அவனுடைய தோள் சாய்ந்து அழ துவங்கினாள்... அவனும் ஆறுதலாக அவளுடைய தோளை அணைத்து அமர்ந்தவன் பார்த்து அவளோ, "என்னை தொடாதீங்க சார்.. நான் அசிங்கம் இனி உங்க கூட வாழ கூட நான் தகுதி இல்லாம ஆகிட்டேன் ஏன் சார் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டம் சார் அம்மாவோட கஷ்டத்தை உணர்ந்து படிக்கணும்னு ஆசைப்பட்டேன் அவங்களை நல்லா பார்த்துக்கணும்னு ஆசைப்பட்டேன் திடீர்னு உங்களை கல்யாணம் பண்ண சொன்னாங்க.. என்னோட அம்மாவுக்காக அதையும் பண்ணினேன்.. கல்யாணம் பண்ணி வந்ததுக்கு அப்புறம் தான் உங்களுடைய நிலைமை எனக்கு புரிந்தது சரி இதுதான் கடவுள் எனக்கு கொடுத்த வாழ்க்கை இந்த வாழ்க்கைக்கு வாழ பழகிக்கணும்ன்னு நெனைச்சேன்.. அதனாலதான் நீங்க எவ்வளவோ சொன்னாலும் நீங்க தான் என் புருஷன் அப்படிங்கிறத ஆணித்தரமா நம்ப துவங்கிட்டேன்..
அப்போவும் நான் என்னை காதலிச்சவனை ஏமாத்திட்டேனே அப்படின்னு ஒரு சின்ன குற்ற உணர்ச்சி எனக்கு இருந்துகிட்டே இருந்துச்சு.. நான் அவன்கிட்டயும் மன்னிப்பு கேட்டேன் ஆனால் இவ்வளவு நாள் காதலிச்சேன்னு சொல்லிட்டு என்னுடைய நிலைமையை கூட அவன் புரிஞ்சுக்கலையே அவனுக்கு கிடைக்காத நான் மத்தவங்க முன்னாடி இந்த அளவுக்கு கேவலமா அசிங்கப்படணும்னு நினைச்சிட்டானே சார் என்னால அதைத்தான் ஏத்துக்கவே முடியல" என கூற
ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை எடுத்து விட்டவன், "கயல் நீ வயசுல சின்ன பொண்ணா இருந்தாலும் உனக்கு தெரியாதது ஒன்றும் கிடையாது.. நீ நல்லா விவரமான பொண்ணு சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி வாழக்கூடிய பொண்ணு.. ஒரு தெரு நாய் உன்னை கடிச்சுச்சு அப்படின்னா நீ ஐயோ எனக்கு வாழ்க்கையே போயிடுச்சு இனி நான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் தெரு நாய் என்னை தொட்டதனால வேற யாரும் என்னை தொடக்கூடாது அப்படின்னு சொல்லுவியா?" என கேட்டான்...
"இல்லை சார்.." என்க
"அந்த கிஷோர் ஒரு தெரு நாய்.. உன்னுடைய காதல் அவன் மேல உண்மையா இருந்துருக்கு ஆனால் அவன் உன் காதலுக்கு ஏத்த ஆள் கிடையாது அதனாலதான் இப்படி ஒரு ஈன செயலை அவன் செஞ்சிருக்கான்.. இப்படிப்பட்ட ஒரு ஆளுக்காக நீ இப்படி நாலு சுவத்துக்குள்ள அடங்கி இருக்கிறதை நான் என்னைக்கும் விரும்ப மாட்டேன்" என நிரஞ்சன் கூறினான்..
"இல்லை சார் நான் அவனுக்காக யோசிக்கல உங்களுக்காக யோசிக்கிறேன்.. இனி எப்படி சார் நான் உங்க வீட்ல உரிமையா உங்க மனைவியா இருப்பேன்..அன்னிக்கே வீடியோ வெளியே வந்து எல்லோரும் என்னை திட்டினாங்க மறுபடியும் இப்படி ஒரு செயலில் சிக்கி இருக்கேன்.. நீங்க மட்டும் பாக்க வேண்டிய உடம்பை எல்லாரும் பாத்துட்டாங்களே சார்.. அதைத்தான் சரி நாளைக்கு யோசித்து கூட பார்க்க முடியல" என மெல்லிய குரலில் கூறினாலும் அதன் வலியை புரிந்து கொண்டு அவனும் அவளை மேலும் அழுத்தமாக அணைத்து பிடித்து அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், "வெறும் சதையை ஆசைப்படுற ஒரு ஆள் நான் அப்படி நினைச்சுட்டியா கயல்..
அப்படி பார்த்தா என்னை நான் என்ன சொல்றது? உனக்கு இது முதல் வாழ்க்கை எனக்கு அப்படி இல்லையே இது இரண்டாவது வாழ்க்கை... அதனால இதுல எல்லாம் பெரிய விஷயம் எதுவுமில்லை.. உடல் அப்படிங்கறது நம்ம சொத்து.. நமக்கே விருப்பமில்லாமல் நம் உடல் மீது சின்ன கறை பட்டா அதை துடைச்சு சுத்தம் செய்துவிட்டு நம்ம வேலையை பார்க்க நம்ம போயிடனும்... அதிலேயே இருந்து நம்ம வாழ்க்கையை நாம எடுத்துக்க கூடாது கயல்...
இத்தனை நாள் நீ பலமுறை என்னை கிண்டல் பண்ணி இருக்க நானும் உன்னை பலமுறை ஏதாவது பேசி இருப்பேன்..ஆனால் இப்பதான் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது.. என்னுடைய மனைவியா ஆகக்கூடிய எல்லாம் தகுதியும் உனக்கு மட்டும் தான் இருக்குன்னு நான் நினைக்கிறேன் எனக்கு வயசு மட்டும் தான் இத்தனை நாள் பிரச்சனையா இருந்துச்சு இந்த நொடியில் இருந்து எனக்கு அது பிரச்சனை இல்லை...
என்னோட இறுதி வாழ்க்கை வரை நீ மட்டும் தான் கயல் வயசு நமக்கு இடையில் இனி தடையாக இருக்காது.. உனக்காக நான் இருப்பேன் என்னுடைய வீட்டு ஆளுகளைப் பற்றி எல்லாம் யோசிக்காத.. நீ என்னை பத்தி மட்டும் யோசி.. அது போதும் எனக்கு..
நீ, நான், ஆதிரா மூணு பேரும் தான் இந்த வாழ்க்கையை கடைசிவரை வாழப் போறோம் அதனால நீ நம்மள பத்தி மட்டும் யோசிச்சா போதும் மத்த எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன் அதுக்கு முன்னாடி என்னோட பொண்டாட்டி இப்படி அழுதுட்டு இருக்க கூடாது எதையும் தைரியமா எதிர்த்து நிற்கிறவளா இருக்கணும்.. இன்னும் உனக்கான பாதை வெகு தூரம் இருக்கு இந்த சின்ன முள்ளுக்காக ஒடுங்கி உட்கார்ந்து விடாதே" என்றவன் அவளுடைய கண்களை அழுத்தமாக துடைத்து கொடுத்தான் இருந்தும் அவள் முகம் வாடியே இருந்தது...
அதை பார்த்தவன் அவளின் நிலையை உணர்ந்து, "ஒரு வாரம் சமயம் தருவேன் அதுவரை ஆதிரா உன்னோட இருப்பா அதுக்கு அப்புறம் நீ காலேஜ் வரணும்" என கூற,
அதை கேட்ட அவளோ தயங்கி, "எப்படி சார் நான் அங்கே வரது நான் வரல எனக்கு வேறு ஏதாவது காலேஜ்ல அட்மிஷன் வாங்கி கொடுங்க அதுவும் வேண்டாம் நான் கரஸ்பாண்டில் படிக்கிறேன்.. எனக்கு இனி வீட்டை விட்டு வெளியே வர பிடிக்காது சார்" என அவள் கூற, அதை கேட்டவன், "நான் சொன்னதை செய் அவ்ளோ தான் சொல்லிட்டேன் எங்கே நாம விழுந்தோமோ அதே இடத்தில் தான் எழனும்" என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தை கூறினான்..
அவளுக்கு மனமே இல்லை வீட்டு ஆட்களிடம் ஏற்கனவே விசயத்தை கூறி இருந்ததால் அவள் வீட்டுக்கு வரும் போது அவளுடைய அம்மா அவளுக்காக காத்து இருந்தார்..அவர் மட்டும் அவளை கண்டதும் ஒரு மூச்சு அழ அந்த இடத்திலும் கருணை அம்மாள் தான் துணையாக நின்றார்..
"ஏன் டி எவனோ ஒருத்தன் ஏதோ பண்ணிட்டேன்னு இப்படி மூளையில் உட்கார்ந்துட்டு இருப்பியா நிரஞ்சன் சொன்னான் என்று உன்னை விடறேன் இல்லனா நாளைக்கு காலேஜுக்கு அனுப்பி இருப்பேன் அந்த நாய் யாருன்னு காட்டு விளக்கமாறால நான் வெளுக்கிறேன்" என பாட்டி கூறினார்..
அனைவரையும் கண்டு அவள் மீண்டும் அழ அவர்கள் அனைவரும் அவளை சமாதானம் செய்தார்கள்..பாட்டியும் வெகுவாக தாங்கினார்..அவளுக்கு நல்ல போஷக ஆகாரங்கள் செய்து அவள் வேண்டாம் என்றாலும் வற்புறுத்தி கொடுத்தார்..
சாந்தி அம்மாவுக்கு தன் மகளின் நிலைமையை பார்த்து வருத்தம் என்றாலும் அவளின் புகுந்த வீடு அவளை தாங்குவதை பார்த்து சந்தோஷம்தான் அடைந்தார்.. அவராக தேடி இருந்தால் கூட இப்படிப்பட்ட வாழ்க்கையை தன் மகளுக்கு அவரால் கொடுத்திருக்க முடியாது இறைவனாக கொடுத்த வரப் பிரசாதம் தான் இந்த குடும்பம் என அவர் அந்த தெய்வத்தை மனதார வேண்டினார்..
கூடவே ஆதிராவை ஒரு வாரம் கொண்டு வந்து அவளோடு இருக்க வைக்க அவளோ, "அம்மா.. அம்மா" என அவள் பின்னாடியே சுற்றி கயலின் மனதை மாற்ற வெகுவாக உதவி செய்தாள் அந்த குட்டி தேவதை..
இதோ நாளை அவள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் அவளுக்கு மீண்டும் அழுத்தம் கூட இரவில் அவனோ அவளை தன் கை வளைவில் படுக்க வைத்து இருந்தான்.. ஆம் ஒரு வாரமாக அவள் அப்படி தான் உறங்குகிறாள் அவனை அருகாமை அவளுக்கு தேவை என்பது போல அவளுக்கு இருக்க அவனும் அதற்கு தடை எதுவும் விதிக்கவில்லை..
"சார் நான் போகலை" என கூற அவனோ, "நீ போய் தான் ஆகணும்" என கூறி விட்டான்.. அவளால் அவன் வார்த்தையை மீற முடியவில்லை...
வீட்டுக்குள் அவளிடம் யாரும் எந்தவிதமான கேள்விகள் கேட்டு நடந்த விஷயத்தை பற்றி ஆராய்ச்சி செய்தும் அவளை தொல்லை செய்யவில்லை என்றாலும் நாளை வெளி உலகத்தை பார்க்கும் பொழுது அவர்கள் அவளை எப்படி பார்ப்பார்கள் என்று வருத்தம் அவளுக்கு வெகுவாக இருந்தது இருந்தாலும் நிரஞ்சன் சொல்வதற்காக அவள் நாளை கல்லூரி செல்ல தீர்மானித்து இருந்தாள்... நாளைய விடியல் அவளுக்கு எப்படி பட்ட விடியலாக இருக்கும்?..
