Share:
Notifications
Clear all

வர்ணம் 37

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

அத்தியாயம் : 37

     அவளை ஒவ்வொரு இடமாக தேடித்தேடி கலைத்து வீட்டிலிருந்து நேராக இதோ காலேஜ் வரை வந்து விட்டான் நிரஞ்சன்.. அவன் மனதில் டென்ஷன் ஓடிக் கொண்டிருந்தது.. சாலையில் எல்லாம் மழையும், வெள்ளமும் நிறைந்து இருந்தது.. அவனுக்கோ ஒரே பதட்டம் இவள் எங்கு சென்றாலோ, இல்லையோ என தவித்து கொண்டு இருந்தான்..

இதோ காலேஜ் வரை வர அதற்குள் அவனுடைய ஃபோன் அலறியது.. எடுத்து பார்க்க நடன ஆசிரியர் தான் ..அவனோ வேகமாக ஃபோன் எடுக்க, "சார் அந்த கயல் பொண்ணோட வீடியோ வந்து இருக்கு அந்த பொண்ணோட ட்ரெஸ் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கு..யாரோ ஒரு பையன் கூட தப்பான வீடியோ சம்திங் சீரியஸ்" என கூறும் போதே  அதை காது கொடுத்து கேட்க விரும்பாமல் போனை தூக்கி போட்டவனுக்கு அவள் மீது சந்தேகம் இலை.. அவளுக்கு என்ன ஆனதோ யார் இதை செய்தார்களோ என பதறியவன் அவள் இந்த நொடி எப்படி துடித்து கொண்டு இருக்கிறாளோ என பதறி கொண்டு இருக்கும் போதே கல்லூரி அருகே இருக்கும் பஸ் ஸ்டாப்பில் ஒரு சிலர் நின்று கொண்டிருந்தார்கள்..

இவனும் அவளை தேடி கொண்டே பதட்டத்தில் என்ன அங்கு என பார்க்க, "இந்த வயசுல இதெல்லாம் தேவையா? போதை மாத்திரை சாப்பிட்டு இருக்கா அந்த பொண்ணு..  சுய நினைவு இல்லை.. யாரோ இந்த பொண்ணை இப்படி பண்ணிட்டு போயிட்டாங்க அந்த பொண்ணுக்கு போதை கூட தெளியல காலேஜ் கிட்ட இந்த வியாபாரம் தூளா நடந்துக்கிட்டு இருக்கு.. இப்பதான் சோசியல் மீடியா பார்த்தேன் இதே பொண்ணு தான்" என பேசி செல்ல காரை உடனே நிறுத்தி காரில் இருந்து இறங்க அவனின் காலுக்கு கீழே மழையில் நனைந்த துணி ஒன்று கிடந்தது..

அவனின் காரின் விளக்கின் வெளிச்சத்தில் அவனுக்கு அவள் காலையில் அணிந்து சென்ற சுடிதாரின் துப்பட்டா தென்பட அதை பார்த்தவன் பதறி கூட்டத்தை விலக்கி செல்ல அங்கு அவள் கிழிந்த ஆடையுடன் படுத்து கிடந்தாள்..

அவளைச் சுற்றி சில பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அதைக் கண்டவன் அதிர்ந்து அவளின் கோலத்தை பார்த்து மனம் வெறுத்துப் போய் தன் சட்டையை கழட்டியவன் அவள் மீது போர்த்தி, "ஐயோ கயல் என்ன டி ஆச்சு உனக்கு?" என பதறினான்..

அங்கு இருந்தவர்களில் ஒருவர், "சார் மழை அதிகமா இருக்குன்னு சொல்லி இங்க வண்டியை நிறுத்தலாம்னு போனேன்.. அப்போ ஒருத்தன் என் காரை பார்த்ததுமே ஓடிட்டான்.. அப்புறம் தான் பார்த்தேன் இந்த பொண்ணு அரைகுறை ஆடையோடு படுத்து கிடந்தது அந்த பொண்ணு என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சொல்லி அப்படியே மயங்கி போயிடுச்சு நானும் யாராவது வருவாங்களான்னு பார்த்துட்டு இருந்தேன் அதுக்குள்ள கொஞ்சம் கூட்டம் ஆகிடுச்சு அந்த பொண்ணு ட்ரக் யூஸ் பண்ணி இருப்பாங்கன்னு தோணுது..நான் தான் என்னோட ரெயின் கோட்டை அந்த பொண்ணு மேல போர்த்தி விட்டேன்" என கூறவும் அதை கேட்ட அவன் அவளுக்கு உதவி செய்த அந்த நபருக்கு நன்றி சொல்லி அதிர்ந்து அவளை தூக்கி கொண்டு காரில் படுக்க வைத்தவன் காரை எடுத்து நேராக மருத்துவமனைக்கு விட்டான்..

அவனுடைய கைகள் பதட்டத்தில் துடித்தது..இவளை இப்படி செய்தது யார் என அவனுக்கு தெரிந்தே ஆக வேண்டும் அவளுடைய இந்த நிலைமையை நிரஞ்சனால் சத்தியமாக பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை..செய்த ஆள் மீது கொலை வெறியே வந்தது..

கயல் பூவை போல மென்மையான குணத்தை கொண்ட பெண் எந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன் இயல்பை மாற்றிக் கொண்டு இதுதான் வாழ்க்கை என அந்த சூழ்நிலைக்கு தகுந்தது போல வாழும் பெண்.. அவளுக்கு இந்த நிலைமை வர வேண்டுமா? என அவன் யோசித்துக் கொண்டே வாகனத்தை செலுத்தியவன் மருத்துவமனை அடைந்து அவளை அனுமதித்தவன் வெளியே காத்து இருந்தான்..

அவனுக்கு கயலை ரொம்ப பிடிக்கும்.. அவன் அவளோடு  பழகி கிட்டத்தட்ட ஒரு சில மாதங்கள் தான் என்றாலும் அவளின் விளையாட்டு புத்தியும், அதே நேரம் அவள் பொறுப்பான குணத்தையும் கொண்டவள் உண்மையில் அவனுக்கு அவளின் வயதும், அவள் யார் என்பது தெரியாது எனில் அவளுக்கு பாவம் எல்லாம் தெரியும்..

அவளுடைய அம்மா சொன்னதற்காக தான் அவள் அவளுடைய வாழ்க்கையை தியாகம் செய்து அவனை கல்யாணம் செய்து கொண்டாள் இருந்தும் அந்த வாழ்க்கைக்கு அவள் பொருத்தப்பட்டு இதுதான் அவள் வாழ்க்கை என ஏற்றுக்கொண்டு அதன் பின் அவனை சீண்டி அவனோடு வாழ அவள் பழகி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இப்படி ஒரு செயல் அவளுக்கு நடந்திருக்கிறதே  என அவனால் யோசிக்கக்கூட முடியவில்லை...

மருத்துவரும் அவளை பரிசோதனை செய்து சிறிய அளவில் அவளுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கூறினார்கள்.. அதைக் கேட்டவன் அதிர்ந்தான்... "பயப்பட எதுவும் இல்லை அவங்களுக்கு வேறு எந்த பிரச்சினையும் நடக்கல.. ஒரு நல்ல ரெஸ்ட் தேவை அதுக்கப்புறம் இதைப்பற்றி டிஸ்கஸ் பண்ணிக்கலாம்" என்று கூறவும் அவனுடைய ஃபோனில் அவளின் வீடியோ காட்சிகள் வெளிவர அதை பார்த்தவன் அதிர்ந்தான்..

இதை செய்தது யாராக இருந்தாலும் சரி அவனை சும்மா விட போவதில்லை என அவன் முடிவு செய்து வைத்திருந்தான்.. அதற்குள் போலீஸ் வர அவர்களிடம் விசயத்தை சுருக்கமாக அவன் கூற அவர்களும் கம்ப்ளைன்ட் எழுதிவிட்டு சென்றார்கள்...

பாட்டியிடம் மட்டும் அவளுக்கு சிறு விபத்து பயப்பட எதுவும் இல்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு நேராக அவனின் நண்பன் சைபர் கிரைமில் வேலை செய்கிறான் அவனிடம் விஷயத்தை கூற, அவன் அந்த வீடியோ எந்த இடத்தில் இருந்து வந்திருக்கிறது மற்றும் அந்த வீடியோவை யாருடைய போனிலிருந்து வந்திருக்கிறது என்பது வரை கண்டுபிடித்து கொடுத்துவிட்டான்..

கிஷோர் தான் இதை செய்து இருக்கிறான் என்பதை புரிந்த அவனுக்கு ஆத்திரம் தாளவில்லை...மீண்டும் அவனின் நண்பனிடம், "இந்த வீடியோவை எப்படியாவது சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருப்பதை கட்டுக்குள் கொண்டுவர முடியுமா?" என கேட்க நண்பனும், "முடியும்" என கூறி அவனுக்கு வாக்குறுதி கொடுத்தான்.. அதன் பிறகு தான் கொஞ்சம் அவனுக்கு சமாதானம் ஆனது..

அவனால் அந்த வீடியோ காட்சியை பார்க்க முடியவில்லை..சுயநினைவு இல்லாத போது இந்த கயவன் தான் இதை எல்லாம் அவளுக்கு செய்து இருக்கிறான்..அவன் வாழ்கையில் இனி அவன் அனுபவிக்க போவதை கிஷோர் நினைத்தாலும் அவனால் தடுக்க முடியாது அந்த அளவுக்கு கொலை காண்டில் இருந்தான் நிரஞ்சன்..

காதலித்தவள் எதிர்பாராத தருணத்தில் அவளுக்கு திருமணம் நடந்து விட்டது அவள் அவனுடைய கையை விட்டு வேறொருவன் கைக்கு சென்று விட்டால் எனில் இப்படித்தான் பழி வாங்குவார்களா என யோசித்தான்...

இவனுக்கு கண்டிப்பாக இவன் செய்த இந்த ஈன செயலுக்கு தண்டனை கொடுத்தே ஆகவேண்டும்.. அதற்கு முன் இவள் என் கைக்கு பாதுகாப்பாக கிடைக்க அது மட்டும் தான் நிரஞ்சனின் வேண்டுதலாக இருந்தது.. ஏனெனில் அவளை எப்படி சமாதானம் செய்து மீண்டும் பழையபடி கொண்டுவரப் போகிறோம் என்பதை யோசிக்கும் போதே அவனுக்கு தலை சுற்றியது...

அவள் கண் முழிக்கும் வரை அவனுக்கு உயிரே இல்லை.. கிட்டத்தட்ட மறுநாள் மதியம் போல தான் அவள் கண் திறந்தாள்... கண் திறந்து அவள் எங்கு இருக்கிறாள் என்பதை பார்த்தவளுக்கு நேற்றைய சம்பவம் ஒவ்வொன்றும் ஞாபகத்துக்கு வந்து போனது..அவளை அறியாமல் அவளுடைய கண்கள் நனைய துவங்கியது..

என்னதான் அவளால் அவனை எதிர்க்க முடியவில்லை என்றாலும் அவன் பேசிய பேச்சுக்கள் அவள் காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது..

அதை யோசித்து கொண்டே நிரஞ்சனை கண்டவள், "சார்" என தன்னுடைய இதழ்கள் துடிக்க கூற,

அவள் அருகே வந்தவன் அவளுடைய கையை பிடித்ததும் அவள் உடைந்து போய், "சார் அந்த கிஷோர் என்னை என்னை நாசம் செய்துட்டான் சார் என்னை அசிங்கமா வீடியோ எடுத்து என்னை பழி வாங்க.." என கூறும் போதே அவளுடைய வாயை அடைத்தவன், "போதும் நீ எதுவும் பேசாதே எனக்கு எல்லாம் தெரியும்" என்றான் நிரஞ்சன்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top