Share:
Notifications
Clear all

வர்ணம் 36

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

அத்தியாயம் - 36

மறுநாள் கல்லூரி விடுமுறை ஆனால் நடன பயிற்சிக்கு மட்டும் நடன ஆசிரியர் வர சொல்லி இருக்க, கயல், லாவண்யா, கிஷோர் மேலும் ஒரு சில மாணவர்கள் என அனைவரும் கல்லூரிக்கு வந்து இருந்தார்கள்.. இன்னும் மூன்று நாட்களில் போட்டி என்பதால் தான் அவர்கள் வந்து இருக்க தீயாக அவர்கள் நடனம் பயின்றனர்...

கிட்டத்தட்ட மாலை ஆகிவிட்டது..அப்போது தான் நடன ஆசிரியர் அனைவரிடமும், "நீங்க போட போற ட்ரெஸ் வந்துடுச்சு அதை செக் பண்ணிடுங்க அப்புறம் உங்களுக்கு கூல்ட்ரிங்ஸ் வாங்கி வைச்சு இருக்கேன் அதை குடிச்சிட்டு கிளம்புங்க" என அவர் மாணவர்களும் உடையை பரிசோதனை செய்து விட்டு வர வரும் மாணவர்களுக்கு எல்லாம் ஜுஸ் கொடுக்கப்பட்டது..

அதை வாங்கி அனைவரும் குடிக்க, அதே போல யாரோ லாவண்யாக்கு குடிக்க கொடுக்க அதே போல யாரோ ஒருவன் கொடுக்க கயலுக்கும் குடித்தாள்.. அந்த ஜூசை குடித்ததுமே அவளுக்கு எது தலை சுற்றுவது போல இருந்தது..தன்னை நிலை படுத்தி கொண்டு, "போலாமா" என கேட்டு லாவண்யாவுடன் நடக்கும் பொழுது குரூப் டான்ஸ் ஆடும் ஒருவன் வந்து, "கயல் உன்னோட டிரஸ் வேற ட்ரெஸ்ஸாம் சார் அதை போட்டு பார்க்க சொன்னாங்க" என்று கூற

லாவண்யா, "ஐயோ எனக்கு வேற டைம் ஆச்சுடி இந்த பஸ் விட்டா எனக்கு ரொம்ப லேட் ஆயிடும்..இப்போவே லேட்  வீட்டுக்கு போனா திட்டு விழும்" என்று கூற, "சரி டி நீ போ நான் பின்னாடியே வரேன்" என்று கூறிவிட்டு அவர்கள் சொன்ன வகுப்பறைக்கு செல்ல, அவளும் சிறிது நேரம் தேடி பார்த்தாள் அங்கு யாருமே இல்லை..

யார் இதை சொல்லி இருப்பார்கள் என சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளும் செல்வதற்குள் கிட்டத்தட்ட 30 நிமிடத்திற்கு மேல் கடந்து விட்டது வானமும் இருட்டிக் கொண்டு வர மழை வருவதற்கான அறிகுறிகளும் தென்பட்டன..

"லாவண்யா போயிருப்பா இப்போ நாம தான் தனியா போகணும்" என்று கூறி அவள் செல்லும் பொழுது அவளுக்கு தலை சுற்றுவது போல இருந்தது பஸ் ஸ்டாப் வரை எப்படியோ நடந்து சென்று இருப்பாள்..அதற்கு மேல் அவளால் முடியவில்லை..

ஆனாலும் தலைக்குள் ஏதோ சுழல்வது போல இருந்தது அப்படியே பஸ் ஸ்டாப்பில் அவள் அமர்ந்து விட்டாள்..அவளால் ஒரு அடி எடுத்து வைக்க முடியவில்லை.. சுற்றி இருக்கும் இடமெல்லாம் இருட்டாக எல்லாம் இரண்டு இரண்டிரண்டாக தெரிவது போல இருந்தது..

அவளுடன் வந்த மாணவர்கள் எல்லாம் சென்று கொண்டு இருக்க அவள் மட்டும் தான் இருந்தாள்.. அவளின் நிலையை தூரமாக நின்று வேடிக்கை பார்த்தான் கிஷோர்..அனைவரும் செல்லட்டும் என அவன் காத்திருக்க துவங்கினான்..

ஆம் அவன் ஜூஸில் கலந்து கொடுத்த போதை மாத்திரை அழகாக வேலை செய்து கொண்டிருந்தது.. அவளின் உணர்வுகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு, "ஏன்டி என்னை விட்டுட்டு நீ அவ்வளவு சாதாரணமா விலகி போயிடலாம்னு நினைக்கிறியா? நான் என்ன வலியை அனுபவிக்கிறேனோ அதே வலி உனக்கும் கிடைக்கணும் கிடைக்க வைப்பேன்" என்று கருவிய கிஷோர் அவள் பக்கமாக செல்வதற்குள் மழை பெய்ய துவங்கியது..அதன் உதவியாக அந்த பக்கத்தில் கரண்ட் போய் விட அந்த சுற்று புறம் முழுவதும் இருட்டாகி விட்டது..அந்த இடத்தில் அவளையும் அவனையும் தவிர வேறு யாரும் இல்லை...

இது தான் அவன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தவன் போல அவள் பக்கமாக சென்றடைந்து விட்டான்..

அதே நேரம் கருணை அம்மாள் இருட்டி மழை வருவதை பார்த்து, "உனக்கெல்லாம் ஏதாவது இருக்கா இல்லையா? படிக்கப் போனோமா வந்தோமானு இருக்கணும்.. இப்ப அவ ஆடலைனு சொல்லித்தான் யாராவது காத்துகிட்டு இருக்காங்களா? நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் ஆகுமா? பொம்பள புள்ளையை ஆடவிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க? இது எங்கேயாவது நடக்குமா? அதுக்கு வேற அவ போயிருக்க வரட்டும் இன்னைக்கு அவ முடிய ஆய்ந்து போடறேன்.. பொழுதும் சாய்ஞ்சு போச்சு இன்னும் அவளை காணோம்" என கோபத்தில் கத்தி கொண்டு இருந்தார்..

அப்போதுதான் அவளை எப்படி தொடர்பு கொள்வது என தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.. பாட்டி சொல்வது உண்மைதான் அவனுக்கும் கடுப்பாகிவிட்டது.. இருட்டி மழை வெளுக்க துவங்கி விட்டது ..இன்னும் அவளை காணவில்லை என்றால் எப்படி என யோசித்து நடன ஆசிரியரின் எண்ணுக்கு அழைத்து, "என்ன சார் எல்லா ஸ்டுடென்ஸும் போய்ட்டாங்களா?" என விசாரணை செய்வது போல விசாரித்தான்..

"அதெல்லாம் எப்பவோ போய்ட்டாங்க சார்.. நான் கூட வீட்டுக்கு வந்துட்டேன்" என்று அவர் கூறவும் இவனுக்கு டென்ஷன் அதிகம் ஆனது.. இவ்வளவு நேரம் ஆகி அவள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என அவன் மனம் பதட்டம் அடைய துவங்கியது அவள் கேட்கும் போதே அந்த போனை ஒன்னு ரெடி செய்தாவது கொடுத்திருக்க வேண்டும் இல்லை என்றால் புதிய ஃபோன் ஆவது வாங்கி கொடுத்திருக்க வேண்டும் இது இரண்டும் அவன் செய்யவில்லை அப்படி இருக்க இது போன்ற ஆபத்தான சமயத்தில் அவளை எப்படி தொடர்பு கொள்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தான் நிரஞ்சன்..எல்லாம் அவன் செய்த தவறு தான் முதலில் அவள் வந்ததும் ஒரு போனை வாங்கி கையில் கொடுக்க வேண்டும் என்று பதட்டத்தோடு நினைத்தான்...

இனியும் காத்து கொண்டு இருப்பதில் பிரயோஜனம் இல்லை என அவளை தேடி அவன் கிளம்பினான்..

ஆனால் அதே நேரம் மயக்கத்துக்குள் சென்று கொண்டிருக்கும் அவளின் துப்பட்டாவை தூக்கி மழைக்குள் எறிந்தான் கிஷோர்..

அவளோ கண்களை திறக்க முடியாமல் திறக்க அங்கு கிஷோர் தெரிய அவனை பார்த்ததும் அவள் மூளை அதிர்ந்தாலும் செயல்பட மறுத்தது.. அவளின் திகைத்த விழிகளை பார்த்து, "என்ன டி பார்க்கிற நான் தான் உன்னோட முன்னாள் காதலன்...எப்படி என்னோட ரிவெஞ்ச்?" என கேட்க,

அவளோ, "என்னை விடு" என கூறும் போதே அவனோ அவளின் இடையை பிடித்து தன் பக்கமாக இழுக்க அவளோ போதை மருந்து உட்கொண்டதில் அவனின் இழுவைக்கு அவளாக அவன் மீது சரிய அவனோ அதை ஃபோட்டோ எடுத்து கொண்டான்.. அவளின் உடைகளை ஆவேசமாக கிழித்தான்..

அதன் பிறகு அவளை அவனின் நெஞ்சில் படுக்க வைத்தவன்  மீண்டும் அதை புகைப்படம் எடுத்தான்..பிறகு அவளின் கழுத்து, கன்னம், இதழ் என அனைத்து இடத்திலும் முத்தமிட்டான்..கூடவே அதை எல்லாம் புகைப்படம் எடுத்து கொண்டான்..அவளின் உடையை சற்று அங்கும் இங்குமாக விலக்கி அதையும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தவன் சரியாக அவனுடைய முகம் மட்டும் தெரியாத படி வீடியோ புகைப்படம் எடுத்து கொண்டவன்,

அவனுடைய முகம் தெரியாதபடி அதை மட்டும் எடிட் செய்தவன் அவள் யாரோ ஒருவனுக்கு முத்தம் இடுவது போலவும் அவளின் அங்கங்கள் எல்லாம் வெளியே தெரிவது போல புகைப்படம் எல்லாம் எடுத்தவன் அவள் மறுக்க மறுக்க இதை செய்தான்..

வீடியோ, புகைப்படம் எல்லாம் எடுத்தவன் வேக வேகமாக எடிட் செய்து அதை நெட்டில் உலவ விட்டு விட்டான்.. அது படு வேகமாக பரவியது.. அதன் பிறகு தான் அவனுக்கு சமாதானம் ஆகியது.. எனக்கு கிடைக்காத எதுவும் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தை கொண்டவன் ஆனதால் ஒரு பெண்ணின் மானத்தை விலை பேசி விட்டான் கிஷோர்..

ஆம் மிகக் கேவலமான செயல் தான் அதை செய்தான் கிஷோர்..அவன் அவளின் மேனியில் அத்து மீறும் போதெல்லாம் அவள் துடித்து அவள் அழ அதை பார்த்து ரசித்தவன், "என்னை விட்டுட்டு போகும்போது நீ இதையெல்லாம் யோசித்து இருக்கணும்.. என்னை செருப்பால அடிப்பியா.. இப்போ உன்னுடைய போட்டோ வீடியோ இன்டர்நெட்ல உலா வந்துட்டு இருக்கு இதை பார்த்த உனக்கு தாலி கட்டுன புருஷன் உன்னை எப்படி கூட வச்சுப்பான்னு நானும் பார்க்கிறேன் டி.. என்னை கழட்டி விட்டுட்டு நீ மட்டும் வேற வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சு எவ்வளவு ஜாலியா சிரிச்சு பேசிட்டு இருக்க.. அது எப்படி நான் கஷ்டப்படும்போது நீ மட்டும் சந்தோசமா இருப்ப? இதோ இதுதான் நீ என்னை விட்டு போனதுக்கு வேறொரு வாழ்க்கைக்குள் நுழைஞ்சதுக்கும் நான் உனக்கு கொடுக்குற கிப்ட் வச்சுக்கோ" என்று கூறியவன்,

மேலும் அவளை ஏதேதோ செய்ய வேண்டும் என தோன்றினாலும் ஏதோ வண்டியின் வெளிச்சம் அந்த இடத்தில் பட வேகமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டான் பாவம் கயல் அதே இடத்தில் அலங்கோலமாக படுத்து கிடந்தாள்... அவளை கொன்று இருந்தால் கூட அவள் கவலைபட்டு இருக்க மாட்டாளோ என்னவோ அவளின் மானத்தை அவன் வாங்கி விட்டான்..ஆம் அவளின் பெண்மையை அவன் கடை விரித்து விட்டான் என்று அவளுக்கு புரிகிறது ஆனால் அவளின் மூளை செயல்பட மறுத்தது கண்கள் மட்டும் அந்த நிலையிலும் நனைந்து கொண்டு இருந்தன...இது தெரியாமல் அவளை தேடி கொண்டிருந்தான் நிரஞ்சன்…



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top