Share:
Notifications
Clear all

வர்ணம் 35

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

அத்தியாயம் : 35

   கிஷோர் அவளிடம் அத்துமீறி தொடுகிறானோ என அவளுக்கு தோன்ற துவங்கியது..நடனத்தில் தொடுவது வேறு அத்து மீறி தொடுவது வேறு .. எந்த ஒரு பெண்ணுக்கும் எந்த உணர்வோடு நம்மை தொடுகிறார்கள் என அவளால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்..

அப்படி இருக்க அவனின் தொடுகை வேறு விதமாக இருப்பது போல அவளுக்கு தோன்றியதுண்டு... இருந்தும் அவள் பலமுறை பொறுத்து கொண்டாலும் இதோ இப்போது பயிற்சியின் போது அவளின் இடையை அழுத்தம் கொடுத்து பிடித்து இழுக்க, அதை அவளால் எளிதாக எடுத்து கொள்ள முடியவில்லை..

"கிஷோர் நீ தொடுவது எனக்கு பிடிக்கல இத்தனை நாள் நான் பொறுத்து போனேன் இனியும் பொறுத்துப் போவேன்னு எதிர்பார்க்காத அவ்வளவுதான் மரியாதை சொல்லிட்டேன்" என்று அவள் நடனம் ஆடும் பொழுது அவன் தொடவும் அவள் இடையிலேயே நிறுத்தி அவளை தள்ளி விட்டு அவனைப் பார்த்து கயல் கூறினாள்...

அதை கேட்ட அவனோ அவளின் கண்களை அழுத்தமாக பார்த்து, "அப்படித்தான் தொடுவேன் தொடாம எல்லாம் நடனம் ஆட முடியாது புரியுதா நான் தொடுறது உனக்கு ஒரு மாதிரி இருந்துச்சுன்னா நீ என்னை நினைத்துக்கொண்டு இருக்க என்று அர்த்தம்.. அப்படியா நீ இன்னும் என்னைத்தான் நினைச்சுட்டு இருக்கியா? நான் ஃப்ரீயா தான் இருக்கேன் வா உனக்கு தேவையான எல்லாத்தையும் நான் சொல்லிக் கொடுக்கிறேன்" என அவன் கொச்சையாக பேசினான்..

அவளோ அவனை அருவருப்பாக பார்த்து, "வேறொருத்தரோட மனைவியான நான் உன்னை நினைச்சு பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. நான் இப்ப வர உனக்காக பீல் பண்ணிட்டு தான் இருக்கேன் நான் உன்னை ஏமாத்திட்டேன் அப்படின்னு நினைச்சுட்டு இருக்கேன் ஆனால் நீ நடந்து கொள்வதும் உன்னுடைய செய்கையும் பார்த்து இவ்வளவு கேவலமான ஒருத்தனை தான் நான் மனசுக்குள்ள நினைத்தேனான்னு என்னை யோசிக்க வச்சிடாத கிஷோர்.. உன்னோட கை தேவையில்லாமல் என்னை தொட்டா என்னோட செருப்பு உன்னோட முகத்தில் தொட்டுவிடும் அசிங்கப்பட்டு விடாத" என்றாள்..

அதை பார்த்தவன் கொந்தளித்து, "என்ன டி என்னை பார்த்தா  உனக்கு எப்படி இருக்கு? முகத்தை சுழிக்கிற? என்னை செருப்பால அடிக்கிற அளவுக்கு உனக்கு தைரியம் இருக்கா முடிஞ்சா செஞ்சு பாருடி" என்றவன் நடன ஆசிரியரை பார்த்து, "சார் என்னால டான்ஸ் ஆட முடியாது டான்ஸ் ஆடுனா கை, கால் எல்லாம் படத்தான் செய்யும் என்னமோ இந்த பொண்ண நான் என்னவோ பண்ண வந்த மாதிரி இவ பேசிட்டு இருக்கா நாளைக்கு ஏதாவது பிரச்சனை ஆயிடுச்சுன்னா நீங்க வந்து நிற்பீர்களா சார் என்னால எல்லாம் இவ கூட டான்ஸ் ஆட முடியாது" என்று கூறி விட,

அதைக் கேட்ட சார் அவளிடம், "என்னமா ஏன் மா இப்படி பிரச்சனை பண்ணிட்டு இருக்க? ஏதோ நல்ல ஆடுறியே அப்படின்னு உன்னை சேர்த்தா என்ன பேச்சு இதெல்லாம்? இன்னும் எந்த காலத்தில் ம்மா இருக்க கை, கால் மேல பட்டா  தான் என்ன? உங்க ரெண்டு பேருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சு இந்த முறையும் நமக்கு கப் கிடைக்கும் அப்படின்னு நான் பார்த்துட்டு இருக்கேன்.. சும்மா கையை மேல பட்டாலே ஏதாவது ஒன்னு கிளப்பி விடாதமா.. இங்க இருக்கவங்க எல்லாம் அப்படிப்பட்ட ஆளுக எல்லாம் கிடையாது" என்று அவர் எச்சரிக்கை செய்ய,

அவளை போல நடன பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் எல்லாம் அவளை திரும்பி பார்க்க துவங்கினர்.. அவளுக்குத்தான் அதை கேட்டு ஒரு மாதிரியாக இருந்தது.. என்னவோ அவனை அவள் தவறாக கிளப்பிவிட்டது போல அந்த இடத்தில் அனைவரும் பார்க்க, அவளுக்கு என்னவோ போல ஆகவும் அதை பார்த்த கிஷோர், "என்ன ஆடலாமா?" என்றவன் மேலும் அவளை இழுத்து அவளின் இடையை பிடித்து அழுத்த அவளுக்கு ஒரு மாதிரியாகி விட அவள் கண்கள் இலேசாக கசிய துவங்கியது..

அந்த தருணத்தில், "பிராக்டிஸ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?" என பார்க்க வந்த நிரஞ்சன் கண்களில் இவர்கள் இருவரும் கிலோஸாக இருப்பது போல நடன அசைவுகள் இருக்க அதை பார்த்த அவனுக்கு அழுத்தம் கூடியது..

ஆம் அவனுடைய கண்கள் அதிர, அதை பார்த்த அவளுக்கு கை, கால்கள் நடுங்க கிஷோர் அதை எதையும் கண்டு கொள்ளாமல் அவளின் தேகத்தில் அவனின் கை படர்ந்து கொண்டு இருக்க அதை பார்த்தவன் கொதித்து எழுந்து கொண்டு இருந்தாலும் வெளியே அதை காட்டி கொள்ள முடியாமல் இருந்தான்..

அவளுக்கும் அவன் முன்னால் கிஷோருடன் நெருக்கமாக நடனம் ஆடுவது மிகவும் தயக்கமாக இருந்தது.. இருந்தும் வேறு வழி இல்லாமல் ஆட, நிரஞ்சனின் கண்களில் தெரியும் கோபத்தை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது..

அவன் ஏதோ நடன ஆசிரியரிடம் பேசுவது போல இருந்தது..பிறகு அவன் அங்கு நிற்க பிடிக்காமல் சென்றும் விட்டான்..அதை கண்டவள் அவன் இங்கு இருந்திருக்கலாம் என நினைத்தாள்..அதன் பிறகு நடன ஆசிரியர் தான் சொல்லி கொடுக்க வந்தார்..

அவர் வந்த பிறகு கிஷோர் ஒண்ணுமே செய்யாமல் நல்ல பிள்ளை போல நடந்து கொள்ள, அவர் வந்த பிறகு அவனின் தொடுகையின் மாற்றத்தை அவள் உணர்ந்தாள்.. அவளுக்கு அவன் வேண்டும் என்று தான் இதை எல்லாம் செய்கிறான் என புரிந்தது..

ஆம் கிஷோர் வேறு விதமாக இருந்தான்.. கயல் அவன் வாழ்க்கையில் இல்லை என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஒன்று அவன் அவள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் இல்லை ஏன் இவளை பழிவாங்கியாக வேண்டும் என்ற நிலைமையில் அவன் இருந்தான்.. அப்படி இருக்க, அவளை ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்து அதற்கான விடையையும் அவன் கண்டுபிடித்து விட்டான்...அதை செயல்படுத்த அவன் இறங்கி விட்டான்..

ஆம் கல்லூரியில் டான் போல இருந்தவன் இவள் மூலம் அவனை அனைவரும் ஏளனமாக பார்ப்பதை அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை அவனின் நண்பர்களின் கேலி, கிண்டல்களை அவனால் சகித்து கொள்ள முடியவில்லை..

இதற்கெல்லாம் காரணம் இவள் தன்னை நம்ப வைத்து கழுத்து அறுத்து விட்டு சென்றவளை சும்மா விட அவனுக்கு மனமில்லை..

இந்த வாரம் வீக் என்ட் சனிக்கிழமை பயிற்சி செய்ய, ஆசிரியர் வர சொல்லி இருக்க அவளுக்கோ ஏன் தான் சேர்ந்தோமோ என இருந்தது..

லாவண்யாவிடம் வாய்விட்டே புலம்பி விட்டாள்.."அவன் தொடுவது எல்லாம் ஒரு மாதிரி இருக்கு டி" என்க

"நானும் பார்த்திட்டு தான் இருந்தேன் அவன் வேணும்னு செய்வது போல இருந்துச்சு..நம்ம நிரஞ்சன் சார் தான் ஸ்டெப்ஸ் கொஞ்சம் மாத்த சொன்னார்" என கூற அதை கேட்ட அவளோ, "அது தான் அதுக்கு பிறகு சார் வந்து ஸ்டெப்ஸ் சொல்லி கொடுத்தாரா..?"

"ஆமாம்" என்றாள்  லாவண்யா..

அவன் தன் மீது அக்கறை செலுத்துகிறான் என நிரஞ்சன் மீது இலேசான அன்பு அவளுக்கு வெளிப்பட்டது.. வீட்டுக்கு அதே மனநிலையில் அவள் சென்றால் அங்கு அவன் கடுப்பாக இருக்க அவளோ இரவில், "ரொம்ப நன்றி சார்" என கூற,

"எதுக்கு நான் தாலி கட்டி என் பொண்டாட்டியை அவன் தொட்டு டான்ஸ் அப்படிங்கற பேர்ல ஏதோ ஒரு கருமத்தை ஆடுகிறான் அதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன் இல்ல அதுக்கு தேங்க்ஸ் சொல்றியா? அவனை பார்த்தாலே கடுப்பாக இருக்கு" என அவன் கடுப்பாக கேட்டான் அதைக் கேட்டதும் அவளுக்கு ஏனோ சிரிப்பு வந்துவிட்டது...

"சார் காலேஜ்ல நான் வேண்டாம்னு சொல்லவும் நீங்க தானே சார் வாய்ப்பு வரும்போது தவற விட கூடாதுன்னு சொன்னீங்க இப்போ டான்ஸ்ல சேர்ந்தா இப்படி சொல்றீங்க? நான் என்னதான் சார் செய்யட்டும்" என கேட்க,

அவனோ, "என்னமோ பண்ணி தொலை உன்னையும், அவனையும் சேர்த்து பார்த்தா கடுப்பா தான் வருது.. நானும் அதுக்கு இன்சார்ஜா ஆகி போயிட்டேன் வேற வழி இல்லாம தான் சம்மதம் சொன்னேன் இல்லைன்னா அவ்ளோ தான்" என கடுப்பாக கூற, அதைக் கேட்டு அவள் சிரித்து கொண்டு, "சார் எனக்கு என்னமோ ஒரு சந்தேகம் உங்களுக்கு என் மேல லவ் வருதோ அப்படின்னு சந்தேகப்படுகிறேன்" என்று கூறவும் அவன் முகம் உடனே மாறி, "லூசு மாதிரி பேசிட்டு இருக்காத ஏதோ தாலி கட்டிட்டேன் உன்னை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு அதுக்காக இதை எல்லாம் பேசிட்டு இருக்கேன் மத்தபடி உன் மேல எனக்கு லவ்வெல்லாம் கிடையாது" என அவன் கூறினான்..

அதைக்கேட்ட அவளோ, "சும்மா சொல்லாதீங்க சார் அது தான் நீங்க புசுபுசு கோபத்தோடு  நீங்க இருந்ததை பார்த்தேனே..வெட்கப்படாமல் சொல்லுங்க நான் உங்க பொண்டாட்டி தானே" என கிண்டல் செய்தாள்..

அதை கேட்டவன், "ஆமாம் டி அவன் தொட்டு தொட்டு ஆடுவான் அதை பார்த்து நானும் கை தட்டி சிரிக்கிறேன் இதை கேட்டா எனக்கு உன் மேல லவ்வா?" என்க அவளும் சிரித்தாள்.. இதே சிரிப்பு நாளை இருக்காது என அவளுக்கு இந்நேரம் தெரியவில்லை..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top