வர்ணம் 34
அத்தியாயம் - 34
வெங்கட் ராமனும் குழந்தையை வேண்டும் என்று பிடித்து வைக்கவில்லை..இவனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று கருதி தான் அவர் அதை செய்தார்..மேலும் அவனுக்கு வரும் மனைவி தங்கள் பேர குழந்தையை நன்றாக அவளின் சொந்த மகள் போல பார்த்து கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் அவர்கள் நினைப்பது போலவே கயல் இருக்க அவர்களுக்கும் சந்தோஷம் தான்..
இப்படியே நாட்கள் செல்ல, அவர்களின் கல்லூரியில் காலேஜ் ஃபெஸ்டிவல் நடக்க இருக்கிறது..ஆம் வெளி காலேஜுடன் மோதும் போட்டி அது.. அதற்கு ஹெட் ஆக நிரஞ்சனை தான் நியமித்து இருந்தார்கள்.. அதன்படி கடந்த வருடம் இந்த போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவர்களை எல்லாம் அழைத்து இருக்க அதில் கயல், லாவண்யா, கிஷோர் அவனின் நண்பர்கள் என அனைவரும் அடக்கம்.. அப்படி இருக்க வெகு நாட்களுக்குப் பிறகு கிஷோரை கயல் சந்திக்கிறாள்..
கயல் எப்படியோ இதுதான் வாழ்க்கை என அந்த வாழ்க்கைக்குள் பழக துவங்கி விட்டாள்.. ஆனால் பாவம் கிஷோரால் அதை செய்ய முடியவில்லை அவன் காதல் உண்மையானதாலோ என்னவோ அவனால் அவள் செய்துவிட்டு போனதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை முகம் எல்லாம் தாடி வளர்த்து தேவதாஸ் போல இருந்தான்..
அவனை இப்படி பார்க்க அவளுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.. ஆனாலும் இயல்பை நினைத்து அவள் அமைதியாக இருக்க அவர்கள் இருவரும் கடந்த வருடம் ஒன்றாக இணைந்து நடனமாடியிருந்தார்கள்.. அப்படி துவங்கி இருந்தது தான் அவர்களின் காதல் பயணம் என்று கூறலாம்..
அப்படி இருக்க, அவர்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்த நடன ஆசிரியர் மீண்டும் அவர்கள் இருவரையும் ஜோடி சேர்த்து நடனம் ஆட வைக்கலாம் என கூற அதைக் கேட்டதுமே இருவரும் அதிர்ந்தார்கள் அதைவிட பேரதிர்ச்சி நிரஞ்சனுக்கு தான் இருந்தது...
அதை வெளிக்காட்ட முடியாமல் அவன் இருக்க, அவளோ நிரஞ்சனை பார்க்க அவன் எதுவும் சொல்லாமல் இருக்கவும் நடன ஆசிரியரை பார்த்து,
கிஷோர், "சார் எனக்கு இவங்க கூட டான்ஸ் ஆடுறதுல விருப்பமில்லை" என முறைத்துக் கொண்டு கூற, அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது அவளும், "சார் நான் கலந்துக்கல" என்று கூற,
அதைக் கேட்ட உடனே ஆசிரியர், "உங்க ரெண்டு பேருடைய விருப்பத்தை நான் இங்கு கேட்க நான் வரல.. இது நம்ம காலேஜுக்கு பெயர் வாங்கி கொடுக்கிற போட்டி அதனால நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா கலந்துகொண்டு தான் ஆகணும்" என்று கூற அதைக்கேட்ட நிரஞ்சனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..
அந்த நடன ஆசிரியரும் நிரஞ்சனிடம், "சார் போன தடவை இவங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு நம்ம காலேஜுக்கு டிராபி எல்லாம் கிடைத்தது இப்ப இவங்க ரெண்டு பேருக்கும் என்ன எனக்கு அதெல்லாம் தெரியாது இவங்க ரெண்டு பேரும் கலந்துக்கணும்" என்று அவர் மீண்டும் கூற,
நிரஞ்சன் இருவரையும் பார்த்து, "போட்டியில கலந்துக்கோங்க ஏன் உங்க டேலண்டை சின்ன சின்ன விஷயத்துக்காக விடறீங்க வாய்ப்புகள் வரும் பொழுது அதை பயன்படுத்திக் கொள்ளணும் இப்படி தவற விடக்கூடாது" என கூறினாலும் உள்ளுக்குள் இவர்கள் இருவரும் ஆடுவது அவனுக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்..அது ஏன் என அவனுக்கு புரியவில்லை என்றாலும் அவள் என் மனைவி என்பதில் தெளிவாக இருந்தான் நிரஞ்சன்..
ஒரு கட்டத்தில் கிஷோர், "நான் ஆடுறேன்" என கூறி விட்டான்...அதை கேட்டு அவளுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை..
"என்னம்மா உனக்கு என்ன பிரச்சனை?" என நடன ஆசிரியர் கேட்க
"சார் அது வந்து" என அவள் இழுக்க, "ஆடு மா நீங்க ஜெயிச்சா நம்ம காலேஜ்க்கு தான் மதிப்பு" என்று அவர் கூறவும், மேலும், "கயல்விழி வாய்ப்பு கிடைக்கும் போது அதைத் தவிர விடாத" என நிரஞ்சனம் கூறினான்..
பிறகு வேறு வழியில்லாமல் அவளும் ஒப்புக் கொண்டாள் அவள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதுதான் கிஷோரின் ஆசையும் கூட ஆம் அவன் இதற்காக தான் காத்து கொண்டு இருக்கிறான்..ஆம் அவளை அவ்வளவு எளிதாக விட கிஷோருக்கு மனம் இல்லை..
அவள் ஒப்பு கொள்ளவும் பிறகு என்ன பயிற்சி இருவருக்கும் மற்றும் மாணவர்களுக்கு துவங்கியது..
அப்படி இருக்க அனைவரும் சேர்ந்து ஒரு குரூப் டான்ஸ் அதன் பின் கிஷோர் மற்றும் கயல் இருவரும் சேர்ந்து ஒரு டூயட் டான்ஸ் என முடிவு செய்யப்பட்டது..அவர்கள் ஆட துவங்கியதும் நிரஞ்சன் வேலை இருப்பதாக கூறி சென்று விட்டான்...
கயலுக்கு தான் கிஷோரின் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை ஏதோ அவள் தவறு செய்தவள் போல இருந்தாள் அவனும் அவளை கண்டு கொள்ளாமல் இருக்க, ஆசிரியர் சொல்லி கொடுக்கும் ஸ்டெப்பை முதலில் கிஷோர் வேகமாக படித்து விட்டான்.. கயலுக்கு தான் ஆட வரவில்லை.. அவளோ தயங்கி கொண்டே இருக்க, "என்ன மா இது போன வருசம் போட்ட ஸ்டெப் தானே" என கூறியவர்,
"கிஷோர் இந்த ஸ்டெப் எல்லாம் சொல்லி கொடு" என கூறி விட அவனோ ஆடி காட்ட அவளோ ஆடவில்லை..அவனோ பொறுமை இழந்து அவளின் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவளின் இடையை பிடித்து அவளின் காதுக்கு அருகே, "ஏன் டி எனக்கே விபூதி அடிச்ச உன்னை அவ்ளோ சீக்கிரம் நான் விட மாட்டேன் டி நீ அனுபவிச்சே ஆகணும்.. என்னை விட்டுட்டு போன நீ ஏன் இந்த தப்பை செஞ்சோம் அப்படின்னு யோசிக்கணும் டி அதுவரை நான் உன்னை விட மாட்டேன்" என கூறியவாறு அவளின் அதிரும் விழிகளை பார்த்து கொண்டே அடுத்த ஸ்டெப் சொல்லி கொடுக்க கயல் திகைத்து நிற்க,
நடன ஆசிரியரை பார்த்து, "சார் சொல்லி கொடுத்தா செய்யணும் இப்படி நின்னுட்டு இருந்தா என்ன செய்யறது?" என கூற, "என்னம்மா நீ இப்படி பண்ற அவன் சொன்னதை செய்.. கிஷோர் எக்ஸ்ட்ரா ப்ராக்டிஸ் வேணும்னா சொல்லு வீக் எண்ட் டான்ஸ் பிராக்டிஸ் வச்சுப்போம்" என கூறி விட அவளுக்கு வேறு வழி இல்லாமல் போனது...
ஆனால் கிஷோர் இவளை பழி வாங்க இந்த தருணத்தை உபயோகித்து கொள்ள நினைக்க அது இவர்களின் வாழ்கையில் பெரும் புயலை கிளப்ப போகும் என கயலுக்கும், நிரஞ்சனுக்கும் தெரியாது…
