Share:
Notifications
Clear all

வர்ணம் 33

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

அத்தியாயம் : 33

      "ஐயோ கடவுளே அவர் கையில வேற மருதாணி..இதை எப்படி மறந்தேன்" என எண்ணி அவள் இருக்க, "அதெப்படி டி அவர் கையிலும் மருதாணி இருக்கு?" என லாவண்யா எடுத்து கேட்க

அவளோ, "என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும்? அவர் அவரோட பொண்டாட்டிக்கு வைச்சு விட்டாரோ என்னவோ?" என கயல் உண்மையை போட்டு உடைக்க லாவண்யா, "இருக்கும் டி ஆனாலும் இந்த மனுஷன் இதை பண்ணி இருப்பாரு எனக்கு தோணலை டி இவரு தான் சரியான சிடுமூஞ்சி ஆச்சே" என கூற அதை கேட்டதும் கயல் சிரித்தாள்...அவளின் சிரிப்பு சத்தம்  யாருக்கு கேட்டதோ இல்லையோ தெளிவாக நிரஞ்சனுக்கு கேட்டது.. இவர்களின் பேச்சு அவனுடைய வகுப்புக்கு தடையாக இருக்க அவனோ கடுப்பின் உச்சிக்கு சென்று, "லாவண்யா அண்ட் கயல் கெட்டப்" என்க

அவர்கள் இருவரும் எழுந்து நிற்கவும், "என்ன உங்க இரண்டு பேருக்கும் வாயே அடங்காதா? வந்ததில் இருந்து பேசிட்டே இருக்கீங்க? அப்படி என்ன தான் பேசுவீங்க?" என்க

"சார் சாரி" என்க

அவனோ விடுவதாக இல்லை.."டெல் மீ இப்போ நான் என்ன கிளாஸ் எடுத்தேன்?" என கேட்க இருவரும் பேய் முழி முழிக்க அதை கண்டு அவன் கடுப்பு ஆகி விட்டான்..

புக்கை மூடி வைத்து விட்டு, "ஒன்னு நீங்க இரண்டு பேரும் பேசினதை சொல்லுங்க இல்லை நான் கிளாஸ் எடுத்ததை எக்ஸ்பிளைன் பண்ணுங்க.." என கையை கட்டி நின்று கொண்டான்..

மொத்த வகுப்பும் அவர்களை தான் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க, கயல், "சாரி சார்" என அவனிடம் கெஞ்ச,

லாவண்யா, "சார் இனி பேச மாட்டோம் சார்" என கூற எதுவும் அவன் கேட்கவில்லை ..

"எங்களுக்கும் டைம் போகல கிளாஸ் எடுக்க எனக்கும் பிடிக்கல  சும்மா பேசிட்டு இருப்போமே சொல்லுங்க என்ன பேசிட்டு இருந்தீங்க?" என கூறவும் இவளோ மனதுக்குள், "சார் பிளீஸ் எங்களை விட்டுடுங்க சார்" என கண்களாலேயே அவள் இரைஞ்ச அவனோ விடுவதாக இல்லை..

"நீங்க சொன்னா தான் நான் கிளாஸ் எடுப்பேன் இல்லைனா இப்பவே போய் பிரின்ஸ்பல் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன்" என்று அவன் கூறினான்.. அவன் கடுப்பாகி விட்டான் என அனைவருக்கும் புரிந்து விட்டது..

கயல், "எல்லாம் உன்னால தான்" என முணுமுணுக்க, அதை பார்த்த அவளோ, "சார் நாங்க உங்க கை சிவந்து இருந்துச்சா மருதாணி யாருக்கு வைச்சு விட்டு இருப்பீங்க அப்படினு பேசினோம் சார் அப்போ இவள் தான் சொன்னா நீங்க உங்க பொண்டாட்டிக்கு வைச்சு விட்டு இருப்பீங்கன்னு சொன்னா" என தயங்கி தயங்கி அவள் கூற அதை கேட்டவன் அதிர்ந்து அவனது அதிர்ச்சியை யாருக்கும் வெளி காட்டாத படி தன் பின்னந்தலையை இலேசாக தட்டி தன்னை நிலைப்படுத்தியவன் தன் கையை அப்போது தான் கவனிக்க கை சிவந்து இருந்தது..

அதை கண்டவன் அவளை பார்த்து முறைக்க கயல் கண்களாலேயே மன்னிப்பு கேட்டாள்..அவனோ என்ன சொல்வது என தெரியாமல், "இதுக்கு தான் காலேஜ் வரீங்களா? நான் எடுக்கிற பாடத்தை கவனிங்க.. பாடம் எடுக்கிற ப்ரொபசர் என்ன டிரஸ் பண்ணி இருக்காங்க? என்ன அவங்க கையில் இருக்கு காலுல இருக்குன்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்காதீங்க.. இனி ஒரு முறை இப்படி நடந்துச்சு அவ்வளவுதான் சொல்லிட்டேன் சிட் டவுன்" என அவன் அவர்களை எச்சரித்தாலும் இதற்கெல்லாம் காரணம் அவள் தானே என கடுப்பாகினான்.. அவளோ அதன் பிறகு அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்கவில்லை எப்படி பார்ப்பாள் அவள் செய்த காரியமாயிற்றே..

வீட்டுக்கு வந்து அவளை பிடிப்பிடியென பிடித்து கொள்ள அவளும், "சாரி சார் இனி இதுபோல நடந்து கொள்ள மாட்டேன்" என கூறிவிட்டாள்...ஆம் அவளுக்கும் பயம் ஆகி விட்டது.. எங்கே அவளுக்கே தெரியாமல் உளறி மாட்டி விட்டு விடுவோமா என பயந்தாள்..

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க, கிஷோருக்கு தான் அவளுக்கு திருமணம் ஆனதை ஏற்று கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அவனுக்கு அவள் மீது கொலை காண்டே வந்தது..ஏற்கனவே புகழ் வெறியில் இருக்கும் அவனுக்கு அனைவரையும் இதையே பேசி கொண்டு இருப்பது போல தோன்ற என்ன செய்வது என தெரியாமல் தவித்தான்..

அதே நேரம் இங்கு நிரஞ்சன் மற்றும் அவளுடைய வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சென்று கொண்டு இருந்தது..

வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு வெங்கட்ராமன் வீட்டுக்கு சென்று ஆதிராவை இங்கு அழைத்து வருவார்கள்..

அப்படி இருக்க அவளை இங்கு அழைத்து வந்து இருக்க கருணை அம்மாள் பாக்கியம் மற்றும் கலையரசன் அவரையும் அழைத்து வந்து இருக்க அவர்களும் வீட்டு வந்து இருந்தார்கள்..

ஆரம்பத்தில் அவன் பெரிதாக முகம் கொடுக்கவில்லை என்றாலும் பாக்கியம் போய் மன்னிப்பு கேட்க அவனோ, "தப்பு செஞ்ச ஆளே நடு வீட்ல வந்து உக்காந்துட்டு என்னை அதிகாரம் பண்ணிட்டு இருக்கும் போது நீங்க என்ன பண்ணுவீங்க உங்களை மட்டும் ஒதுக்கி வைச்சிட்டு நான் என்ன பண்ண போறேன்" என்று கூறி அந்த பேச்சே அதோடு விட்டான் அவனுக்கு என்ன அவனுடைய மகள் அவன் கையில் கிடைத்து விட்டாள் அது போதுமானதாக இருந்தது..

அங்கு இருப்பவர்கள் எல்லாம் ஆதிராவை கொஞ்சினாலும் அவள் ஏனோ கயலிடம் மட்டுமே கூடுதலாக ஒட்டி கொள்ள அவளும் அவளிடம் நன்றாக விளையாடவும் குழந்தையை நன்றாக கவனிக்கவும் செய்தாள்..

வெங்கட்ராமன் குடும்பம் இடையே வந்து கவனித்து விட்டு போகும் போது ஏனோ அவர்களுக்கு கயலின் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது...அவர்களும் ஆதிராவிடம் கயலை அம்மா மற்றும் நிரஞ்சனின் போட்டோவை காட்டி அப்பா என சொல்லி கொடுத்து இருக்க குழந்தை அதை சொல்ல முயற்சி செய்து கொண்டு இருந்தாள்.. அவனுக்கும் கொஞ்சம் சந்தோசமாக இருந்தது..என்ன தான் இருந்தாலும் அவன் குழந்தை அவன் கையில் வாரத்தில் இரு நாட்களாக இருக்கிறாள் எனில் அதற்கு காரணம் கயல் என்பதில் அவனுக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை..

அவள் அவன் மீதுள்ள அன்பினால் தான் இதை எல்லாம் செய்கிறாள்..ஆம் நியாயமாக அவனுக்கு கிடைக்க வேண்டிய விசயம் அவனுக்கு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாள் அவ்வளவு தான்.. அவளும் அந்த வாழ்க்கைக்கு அவளை அழகாக பொருந்தி கொண்டாள்..தாயில்லா குழந்தை என பாவம் ஆதிரா மீதும் அவளுக்கு அளவு கடந்த அன்பு தான் வந்தது..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top