வர்ணம் 32
அத்தியாயம் - 32
பாட்டியின் சப்போர்ட் அவளுக்கு இருக்கிறது என கருதி ஒரு கைக்கு மருதாணி வைத்தவள் மறு கைக்கும் மருதாணி அவனை வைத்து விட சொல்லி, "இந்த டிசைன் இல்ல.. இந்த டிசைன் வைங்க" என அவனை போட்டு படுத்தி எடுக்க, அவனை கடுப்பின் உச்சிக்கே சென்று அவள் சொன்னது போல வைத்து விட்டான்...
அதன் பிறகு தான் பாட்டி எழுந்து செல்ல அவளோ அவனைப் பார்த்து, "எப்படி சார் என்னோட பனிஷ்மென்ட்" என்று கேட்க,
"ரொம்ப கேவலமா இருக்கு இதுக்கு பதில் நாளைக்கு உனக்கு கிடைக்கும்" என்று அவன் எச்சரித்து கூறவும் அதையும், "பார்க்கலாம் சார்" என்று அவள் கூறினாள்...அவனோ அழுத்தமாக பாட்டி சென்று விட்டதை உறுதி செய்தவன் அவன் முன்னே கையை தூக்கி ஆட்டி கொண்டு இருக்கும் அவளை பார்த்து அவளின் கையை தன் பக்கமாக இழுத்தவன், "உன் மனசில் என்ன தான் டி நினைச்சுட்டு இருக்க? உனக்கு சேவகம் பண்ண தான் நான் இருக்கேனா இனி இது போல பாட்டி முன்னாடி நடிச்ச அவ்ளோ தான் சொல்லிட்டேன்" என எச்சரிக்கை செய்தான்..
அதை கேட்டு அவளோ அதற்கு பிறகும் விடவில்லை.."சார் என்னோட பிராண நாதா உங்களை விட்டால் எனக்கு வேற யார் இருக்கா? என் மனசு முழுவதும் நீங்க தான் இருக்கீங்க உங்கள தான் நினைச்சுட்டு இருக்கேன்... எனக்கு சேவகம் செய்ய இப்போ நீங்க தானே இருக்கீங்க எனக்கு மருதாணி வைத்துவிட்டு இருக்கீங்க நாளைக்கு எப்படி சிவக்கும்ன்னு மட்டும் பாருங்க பிராண நாதா" என்று கூறினாள்..
அதை கேட்டு முறைத்து கொண்டு செல்ல அவளோ, "இன்னிக்கு பாருங்க சார் முடிஞ்சிங்க" என கூறி, "சார் ஒரே ஒரு உதவி பண்றீங்களா எனக்கு தண்ணீர் தாகமாக இருக்கு கொஞ்சம் குடிக்க தண்ணீர்" என அவளுடைய கையை காட்டி கொண்டே இழுக்க,
அவனோ, "பாட்டி கிட்ட சொல்லு" என கூற,
"பாட்டி தான் உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க" என கூறவும், அதை கேட்டவன், அவளுக்கு தண்ணீர் கொண்டு வந்து குடிக்க கொடுத்தான்.. அவளோ அவனை பார்த்து, "எப்படி சார் குடிக்கிறது?" அவனோ அவள் வாய்க்கு அருகே கிளாஸை வைக்க அவளோ அந்த தண்ணீரை அருந்தினாள்..அவள் அருந்தும் வரை அவன் அவளுக்கு கிளாஸ் பிடித்து கொண்டு இருந்தான்..
அவனின் செயலை எண்ணி நக்கலாக சிரிக்க அவனோ, "இனி ஏதாவது சொன்ன அவ்ளோ தான்" என கூற அவளோ மனதுக்குள் அதையும் பார்க்கலாம் சார் என எண்ணிக்கொண்டு வெளியே எதுவுமே தெரியாதது போல நல்ல பிள்ளை போல அமர்ந்து கொண்டாள்..
அடுத்தது இரவு உணவு ஆக அவளோ, "பாட்டி நான் தான் மருதாணி வெச்சிருக்கேன்ல என்னால இப்ப சாப்பிட முடியாது எனக்கு வேண்டாம் பாட்டி" என எதுவுமே தெரியாதது போல கூற
"ஏன் உன் புருஷன் என்ன பண்றான் ஊட்டி விட சொல்லு" என்று அவர் கூறியவர் அதோடு நில்லாமல், "டேய் ஊட்டி விடுடா" என்று அவனிடம் தட்டை கொடுத்து விட அவனோ வேறு வழி இல்லாமல் உணவை ஊட்டி விட அவளோ நக்கலாக சிரிக்க துவங்கினான்..
அதை கண்டவன்,"உனக்கு இருக்கு டி இதுக்கு எல்லாம் பாரு அந்தக் கிழவியை வைத்து காரியம் சாதிக்கலாம்னு நினைச்சுட்டு இருக்கியா நடக்காது டி" என்க
"பாட்டி.. உங்க பேரன் திட்டுறார்"என அவள் ராகம் பாட, "டேய் நாளைக்கு நீ வேலை செய்ற காலேஜுக்கு வந்துருவேன் பார்த்துக்கோ" என்க அவனும், "இதெல்லாம் என்னோட நேரம் கிழவி உங்களுக்கு இருக்கு" என கூறிக்கொண்டு அவளுக்கு ஊட்டி விட துவங்கினான்...
"சார் தோசையில சாம்பாரே இல்ல சார்.. நல்லா மிக்ஸ் பண்ணி தாங்க சார்" என்க
அவனோ,"ஹே உன் தொல்லை தாங்க முடியல" என புலம்ப,
"இதை நீங்க என்னை வெளியே நிற்க வைக்கும் போது யோசிச்சு இருக்கணும் சார் இனி நீங்க கிளாஸில் என்கிட்ட வைச்சுகிட்டிங்க அவ்ளோ தான் சொல்லிட்டேன்" என அவள் கூற
அவனோ கடுப்பாகி, "என்னடி மிரட்டலா?" என கேட்க,
"இல்லை இது என்னோட எச்சரிக்கை உங்களுக்காக தான் சொல்றேன்..நீங்க என்பக்கம் வந்து ஏதாவது மோதி நான் ஏதாவது உன்கிட்ட பிரச்சனை பண்ணி நீங்க தான் என்னோட பிராண நாதா அப்படின்னு நான் சொல்லி இது எல்லாம் தேவையா சொல்லுங்க" என கூற
அவனோ அவளை முறைத்து,"என் வாழ்க்கையிலேயே நான் பண்ணின தப்பு உன் கழுத்தில் தாலி கட்டினது தான்" என கூற, "அது உங்க விதி சார்" என கூறியவாறு, "எனக்கு வேற ரெஸ்ட் ரூம் போகணும்" என்க
அவனோ அதை கேட்டு கடுப்பு ஆகியவன், "அதுக்கு உன்னோட பான்ட்டை நான் அவிழ்க்கணுமா? சொல்லு டி" என கடுப்பாகி கேட்க அந்த காட்சியை மனதில் நினைத்தவளோ உடனே பதறி,"ஐயோ அது வேண்டாம்" என்க
அவனோ கடுப்பின் உச்சியில் இருந்தவன், "சொல்லு டி அதையும் பண்றேன்" என்க..
"வேண்டாம் உங்களை பார்க்க பாவமாக இருக்கு அதுனால விடுறேன்" என கூறியவள் படுக்க சென்று விட்டாள்..
மறுநாள் காலை அவன் தான் அவர்களுக்கு பாடம் எடுத்து கொண்டு இருக்க, அவளோ நேற்று நடந்த சம்பவமும், அவன் அவள் கையில் வைத்து விட்ட மருதாணியை பார்த்து மெல்லிய புன்னகை உதிர்க்க அவளின் சிரிப்பை பார்த்து லாவண்யா, "என்ன டி சிரிக்கிற" என்க
"ஒன்னுமில்லை" என கூற, "என்ன டி மருதாணியா யாரு வைச்சு விட்டா?" என்க
"என் வீட்டுக்கார் வைச்சு விட்டார் டி" என மெல்லிய புன்னகையில் சைகை மொழியில் கூற, "கயல் மனுஷன் செம்ம ரொமான்டிக் ஆன ஆள் போல ஹார்ட் வரைஞ்சு அம்பு எல்லாம் விட்டு இருக்கார்" என கூறி கொண்டே நிரஞ்சனை பார்க்க அவனுடைய கையும் சிவந்து இருக்க அதை பார்த்த லாவண்யா அதிர்ந்தாள்...
"என்ன டி ஷாக் ஆகிட்ட" என கயல் கேட்க,
"ஹே சார் கையும் பாரேன் சிவந்து இருக்கு" என கூற அவளோ அதிர்ந்து பார்க்க நிரஞ்சன் பாடம் எடுக்கும் போது கையை ஆட்டி ஆட்டி பாடம் எடுக்க, அவன் அவளுக்கு வைத்து விடும் போது அவனுடைய மூன்று விரல்களிலும் மருதாணி ஆகி இருந்தது அது அவன் கையிலும் சிவந்து இருக்க அதை பார்த்து அதிர்வது கயலின் முறையானது.. "அய்யயோ சிக்கிட்டேனே" என நினைத்தாள்…
