வர்ணம் 29

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 60
Thread starter  

அத்தியாயம் : 29

   கிஷோர் ஆத்திரத்தோடு, "என்கிட்ட உனக்கு கல்யாணம் ஆனதை மறைச்சியா டி?"  ஆத்திரம், கோபம், அவளை இழந்து விட்டோம் என்ற தவிப்பும் எல்லாம் ஒரு சேர்ந்து கிஷோர் அவளிடம் கேட்க, அவளோ அவனுடைய மனதை புரிந்து கொண்டாலும் சில நேரத்தில் இது போன்ற அதிர்ச்சியான விஷயங்கள் இருவரின் வாழ்க்கைக்கும் நல்லது எனில் விசயத்தை கூறுவதில் தவறேதும் இல்லை என நினைத்து, "ஆமாம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இப்பவாவது தயவு செஞ்சு என்னை விடு.. உன் கிட்ட இருந்து நானும் விலகனும்னு நினைச்சேன் கிஷோர்.. பொறுமையா சொல்லலாம் அப்படின்னு நினைச்சேன்.. ஏன்னா இந்த கல்யாணம் எனக்கே ஒரு எதிர்பாராத கல்யாணம் தான்.. நான் உன்னை ஏமாத்தணும்னு நினைக்கல ஆனால் சூழ்நிலை இப்படி எல்லாம் நடந்துருச்சு இப்போ எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இனி நான் உன்னோட வாழ்க்கைக்குள்ள வரதுல அர்த்தம் இல்ல புரிஞ்சுக்கோ.. இதனால பல பிரச்சனைகள் உருவாகுது.. டிவி, நியூஸ்ல எல்லாம் அந்த வீடியோ வந்து என்னோட வீட்ல பயங்கர பிரச்சனை ஆயிடுச்சு இனி இதை மேற்கொண்டு நான் உன்கிட்ட விஷயத்தை சொல்லாமல் இருந்தால் இன்னும் பல பிரச்சினைகளை நான் சந்திக்க நேரிடும் அதுக்காகத்தான் இப்பவே சொல்றேன் கிஷோர்" என்று அந்த தாலியை காட்டி கயல் கூற,

அதை  அவன் ஏற்று கொள்ளாமல், "அப்போ உன்னை காதலிச்ச நான் கிறுக்கனா டி?" என மீண்டும் அவளுடைய கையை அழுத்தமாக ஆத்திரத்தில் அவன் பிடிக்க அந்த தருணத்தில் அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டே அவர்கள் அருகே வந்த கண்  முன் அவன் கட்டிய தாலியும் நிரஞ்சனின் செவியில் அவள் பேசியது எல்லாம் விழுந்தாலும் இவள் இப்படி தாலியை தூக்கி காட்டி விட்டாளே என முதலில் நினைத்தான்..

ஏனெனில் நேற்று இரவு அவள் அருகில் படுத்து அவனுக்கு உறக்கமே வரவில்லை.. அவன் மனதில் என்னென்னமோ எண்ணங்கள் அலை மோதி கொண்டிருந்தன.. அதனால்  காலையிலேயே அவள் எழும் முன் அவன் எழுந்து சென்று விட அவனின் மன குழப்பங்களுக்கு மத்தியில் இவள் இப்படி தாலியை தூக்கி காட்டவும் அவனுக்கே சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது..

அவளுக்கும், அவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதை பற்றி அல்ல அவளுக்கும், அவனுக்கும் இடையேனான வயது வித்தியாசம் அவனை தொல்லை செய்தது.. அவளுடைய வாழ்க்கையை சீரழித்து விட்டோமோ என்ற எண்ணம் தான் அவனுக்கு தலை தூக்கிக் கொண்டிருந்தது..

தன் கண்முன்னே தாலியை தூக்கி காட்டி அவள் பேசிக் கொண்டிருக்க, தான் வந்தது கூட தெரியாமல் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்..

அவனும் ஆழமாக அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டான்.. இன்னும் அவளுடைய கையை கிஷோர் பிடித்திருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை..ஆம் கிஷோரை சுத்தமாக உனக்கு பிடிக்கவில்லை ஏன் என்று நிரஞ்சனுக்கு தெரியவில்லை..

அப்படி இருக்க கிஷோர், "அப்போ நீ ஹாஸ்டல் விட்டு போனது எல்லாம் நாடகம் தான் அப்ப நீ உன் புருஷன் வீட்டில் இருந்து தான் வர அப்படித்தானே?" என்க

அவன் அழுத்தமாக பிடித்திருப்பது வலித்தாலும், "ஆமாம் என்னோட புருஷன் வீட்டில் தான் இருந்து தான் வரேன் அதுக்கு என்ன இப்போ. என்னோட கையை விடு" என அவள் கேட்க அதை கேட்டதும் கிஷோர் தன் வாழ்க்கையை இவள் தொலைத்து விட்டாலே என்ற ஆத்திரத்தில் அவளை அடிக்க கையை ஓங்கினான் கிஷோர்..

மார்பில் கையை கட்டிக்கொண்டு அழுத்தமான முகத்தோடு இவர்கள் பேசியதை கேட்டு கொண்டு இருந்தவன் இதற்கு மேல் பேசவில்லை என்றால் சரியாகாது  என எண்ணி, "இங்கு என்ன பிரச்சனை?"  என கேட்டான் நிரஞ்சன்..

அப்போதுதான் அவன் நிற்கிறான் என்பதையே கயல் மற்றும் கிஷோர் இருவரும் உணர்ந்தனர்...அவனை கண்டதும் கிஷோர் ஓங்கிய கையை இறக்கி கயல் மீது தனக்கு இருக்கும் ஆத்திரத்தை அடக்க முடியாமல் திணறிக் கொண்டு கிஷோர் நிற்க, அவளோ நிரஞ்சனை அழுத்தமாக பார்த்தாள்..

பார் உன்னால்தான் எனக்கு இந்த நிலைமை என்பது போல அவள் பார்க்க, அவனும் அவளை கண்டுகொள்ளாமல் கிஷோரை பார்த்து, "இது என்ன காலேஜா? இல்ல வேற ஏதாவதா? என்ன கிஷோர் ஒரு பொண்ண பார்த்து கைய ஓங்கற அளவுக்கு நீ ஆகிட்டியா? உங்க ரெண்டு பேரையும் ஒட்டுக்கா பார்க்க கூடாது அப்படின்னு சொல்லி இருக்கேன் இல்ல?" என கூற,

"சார் பேசிட்டு இருந்தோம் சார்.. வேற ஒன்னும் இல்ல" என அவன் சலித்துக் கொண்டு கூறவும் அதை பார்த்த நிரஞ்சன் எரிச்சல் அடைந்து, "நீ பேசிட்டு இருந்த லட்சணத்தை தான் நான் பார்த்தேனே அதெல்லாம் வெளியே போய் வச்சுக்கோ இங்க நின்னு பேசிட்டு இருக்க வேலையெல்லாம் வேண்டாம் மறுபடியும் இந்த பொண்ணை பார்த்து உன்னுடைய கை ஓங்குச்சு கை ஓங்க கை இருக்காது பார்த்துக்கோ.. என்ன தைரியம் இருந்தா நீ கைய ஓங்குவ?? இனி அவ மேல கையை வச்சுத்தான் பாரேன்.. கை இருக்காது நானும் எப்பவும் பொறுமையா பேசிட்டே இருப்பேன்னு நினைக்காத சில சமயம் இந்த மாதிரியெல்லாம் பார்த்தா என் கையும் ஓங்கும்"  என எச்சரித்தான் ..

அவனுள் ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலும் அவன் போட்டிருக்கும் வேஷத்தை பொறுத்துதான் அவன் கிஷோரிடம் கல்லூரியில் வைத்து பேச முடியும்..ஆனால் கிஷோரின் மனநிலையோ வேறு விதமாக இருந்தது.. ஆனால் அவளுக்கு திருமணம் ஆனதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..

அப்படி இருக்க, அவளை பார்த்து நிரஞ்சன் கிளாசுக்கு பேசாமல் சென்று விட்டாள்...அதற்குள் விசயம் காட்டு தீ போல பரவ லாவண்யா அவளைப் பார்த்து, "ஏண்டி இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்ல அதனால தான் நீ சோகமா இருந்தியா?" என கேட்க,

"ஆமாம் டி எப்படி சொல்றதுன்னு தெரியல நான் கிஷோரை ஏமாத்தணும்னு நினைக்கல.. ஆனால் இப்போ எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இனியும் கிஷோர் உடனான ரிலேஷன்ஷிப் சரிவராது.. அதனாலதான் நான் உண்மையை சொல்லிட்டேன்" என்க லாவண்யாவுக்கும் இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், "சரி விடு" என அவளை ஆறுதல் செய்தாள்..

கயலுக்கும் இப்பொழுது விஷயத்தை சொல்லவில்லை என்றால் பிறகு அது பெரிய பிரச்சனைக்கு அவளை தள்ளிவிடும் என எண்ணித்தான் அவள் விசயத்தை போட்டு உடைத்து விட்டாள்...அப்படி இருக்க, அவள் திருமணம் ஆகி விட்டது என்று தான் அவள் அனைவரிடமும் கூறினாலே ஒழிய அவளுடைய கணவர் யார் என் என்பதை அவள் யாரிடமும் கூறவில்லை...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top