வர்ணம் 30

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 60
Thread starter  

அத்தியாயம் - 30

அப்படி இருக்க வீட்டுக்கு சென்றதும் இரவில் அவளை பார்த்து, "இதை ஏற்கனவே செஞ்சு இருக்கணும்..ஏன் டி அவன் கையை நீட்டுறான் நீ வேடிக்கை பார்த்திட்டு இருக்கியா?" என அவன் கூற

அவளோ, "சார் அது தான் நான் சொல்லிட்டேன் தானே விடுங்க சார்..அவனுக்கும் இருக்கும்ல ஏமாற்றம்" என அவள் வருத்தமாக கூற,

அவனோ முறைத்து, "ரொம்ப சங்கடப்படுவ போல அப்படி ஏதாவது இருந்துச்சுன்னா அவன் கூட போயிடு.." என்க

அவளோ, "ஏன் சார் உங்கள மாதிரி ஒரு ஆளை நான் பார்த்ததே இல்லை..நமக்குள்ள எல்லாமே எதிர்பாராத விதமா நடந்துடுச்சு.. சும்மா அவனை மட்டும் குறை சொல்றீங்க.. அவன் கோபப்படுறான்னா அவன் ஏமாந்து இருக்கான்னு அர்த்தம்.. அவன் என்ன சொன்னாலும் நான் அதற்கு தகுதியான ஆள் தானே.. இனி அவன் என் பக்கம் வர மாட்டான் விடுங்க சார் சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதீங்க.. கிஷோர் அந்த அளவுக்கு கேவலமான ஒருத்தன் எல்லாம் கிடையாது" என்க

அதை கேட்ட நிரஞ்சனுக்கு கோபம் வந்தது.."அப்போ நான் கேவலமானவன் சொல்றியா? நான் என்னமோ உன்னை ஆசைப்பட்டு கல்யாணம் பண்ண மாதிரி பேசிட்டு இருக்க. நீ விஷயம் தெரிஞ்சு என் முன்னாடி எனக்கு கழுத்தை நீட்டி கொடுத்த அனால எனக்கு விஷயமே தெரியாது எனக்கு மொத்தமா விபூதி அடிச்சு ஆளுங்க தானே நீங்க எல்லாம்" என்றவன் மனதுக்குள் அவள் எப்படி அவனுக்கு துணையாக பேசலாம் என்ற எண்ணமும் பழைய விசயங்களும் கிளறி கோபத்தை உண்டு செய்து இருந்தது..

அவளோ அவனை பார்த்து, "என்னை சொல்றீங்களே நீங்க மட்டும் என்ன? வேற வாழ்க்கை பார்த்துக்கோ என்று சொல்லிட்டு கிஷோர் கிட்ட பேசாதன்னு சொன்னவர் தானே நீங்க.. இப்போ நானும் அவனை விட்டு பிரிந்து வந்துட்டேன் இனி நீங்க மட்டும் தான் எனக்கு புரியுதா என்னோட பிராண நாதா" என வேண்டும் என்றே வம்பு இழுக்க,

அவனோ கோபம் கொண்டு, "நீ இப்படியே பேசிட்டு இருந்தா என்கிட்ட எப்ப வாங்கி கட்ட போறேன்னு தெரியல" என எச்சரிக்கை செய்ய அவளோ, "சார் இப்போ எனக்கு எதை பத்தியும் யோசிக்க வேண்டாம்.. உங்களை பத்தி மட்டும் நினைச்சா போதும்" என மீண்டும் அவள் வம்புக்கு இழுத்தாள்..ஆம் வேண்டும் என்றே தான் அவள் இதை செய்ய அவனோ, "உன்னோட வயசு என்ன? என்னோட வயசு என்ன? இப்படி சொல்ல உனக்கு அசிங்கமா இல்லை?" என கேட்க

அவளோ, "எனக்கு எதுக்கு சார் அசிங்கம்?" என அவன் கட்டிய தாலியை தூக்கி காட்டி, "இது நீங்க கட்டினது தானே உங்ககிட்ட இப்படி பேசினா தப்பு இல்லை என்னோட பிராண நாதா" என கிண்டல் செய்ய, அவனோ கடுப்பின் உச்சிக்கு செல்ல அவளுக்கும் அது தான் வேண்டும்.. அவனை கடுப்பு ஆக்கி விட்டோம் என்ற நல்ல எண்ணத்தோடு அவளும் உறங்க செல்ல அவனுக்கு மட்டும் அவளுடைய பேச்சை கேட்டு உறக்கம் வர மறுத்தது..

ஒரு படிக்கும் பெண்ணின் மனதை நான் சலனப்படுத்தி கொண்டு இருக்கிறேனா என நினைத்தான்..அது அவனுக்கு உறக்கத்தை கெடுத்தது..ஆனால் அவள் மனமோ இனி இவர் மட்டும் தான் வாழ்க்கை அவர் சொல்வது போல வேறு ஒரு வாழ்க்கை எல்லாம் என்னால் தேடி வாழ முடியாது.. இதோ இருவரும் ஒரே படுக்கையில் படுக்கும் அளவுக்கு ஆகிற்று.. இனி என்னுடைய வாழ்க்கை இப்படியே போகட்டும்.. எங்கள் இருவருக்கும் இடையே வயது மட்டும் அல்ல.. பல விஷயங்களில் முரண்பாடு இருக்கலாம்.. ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கண்டிப்பாக ஆதரவோடு ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு அவள் இருக்கிறாள்..ஆனால் அதற்கு வெகு காலம் இருவருக்கும் இடையே தேவைப்படும்..

இப்படி பேசுவதால் அவன் மீது காதல் இருக்கிறதா எனக் கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும்.. இனிதான் அதை பற்றி எல்லாம் அவளுக்கு யோசிக்க வேண்டும்.. ஆனால் இந்த நொடி அவனை சீண்டுவது பிடித்திருக்கிறது அப்படியே சீண்டிக் கொண்டிருக்கிறாள் அவ்வளவுதான்...

அப்படி இருக்க, எப்போதும் போல மறுநாள் நிரஞ்சன் கல்லூரிக்கு செல்ல அப்போது அவனுடைய டிபார்ட்மெண்ட் ஹெட் அவனைப் பார்த்து, "நிரஞ்சன் நீங்க செகண்ட் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் கிளாஸ் ஹாண்டில் பண்ணனுமே.. இந்த கிளாஸ் ஹாண்டில் பண்ணிட்டு இருந்த டெய்சி மேம் டெலிவரிக்கு போய் இருக்காங்க.. நாங்க ஸ்லாட் பார்த்ததுல நீங்க மட்டும் தான் அந்த டைம்ல கொஞ்சம் ஃப்ரீயா இருக்க மாதிரி இருக்கு" என கூற,

அதை கேட்டு அவனோ, "எந்த செக்ஷன் சார்?" என கேட்கவும் அவர் மிக சரியாக கயல்விழியின் வகுப்பை கூற, அவனும் பட்டென்று, "ஓகே சார்" என்று கூறிவிட்டான்... அவள் நேற்று பேசிய பேச்சுக்கு அவளுக்கு இப்படி ஒரு அதிர்ச்சி நல்லது தான் என அவன் எண்ணி கொண்டான்..

அப்படி இருக்க, எப்போதும் போல வகுப்புக்கு அவள் வர, "கயல் நம்ம இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பேப்பர் எடுக்குற மேம் டெலிவரிக்காக போய்ட்டாங்க இன்னைக்கு புதுசா ஸ்டாப் வர போறாங்க யாருன்னு தெரியல" என லாவண்யா கூற

"யாரா இருந்தா என்னடி படிக்க போறோம் அவ்வளவு தானே" என கயல் கூறி கொண்டு இருக்கும் போதே தன் உடலில் கம்பீரத்தையும், முகத்தில் அழுத்தத்தையும் கொண்டு நிரஞ்சன் அவளுடைய வகுப்புக்கு நுழைய அவனை கண்டதும் முதலில், "ஐயோ இவரா" என லாவண்யா தான் அதிர்ந்தாள்.. அதற்கு பிறகு, "ஐயோ இவரா" என கயல் அதிர்ந்தாள்..

நிரஞ்சன் வகுப்புக்குள் நுழைந்ததும் அவன் எல்லோரையும் பார்க்க அவன் கண்களுக்கு கயல் படவும் அவளின் பீதியான முகத்தை பார்த்து அவனுக்கு திருப்தி ஆனது..

"ஹலோ ஸ்டுடென்ட்ஸ் என்னோட பெயர் நிரஞ்சன் நான்தான் இனிமேல் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கிளாஸ் ஹேண்டில் பண்ண போறேன்.." என அவனை அவர்களுக்கு அறிமுகம் செய்ய இவர்கள் அவனை கண்டு திகைத்து கொண்டு இருந்தனர்..

"என்ன டி இவரா இவருக்கும் நமக்கும் ஏற்கனவே வாய்க்கா தகராறு இருக்கு அதை நியாபகம் வைச்சு இருப்பாரா?" என லாவண்யா கேட்க கயல், "தெரியவில்லையேடி எனக்கும் பயமா தான் இருக்கு" என இருவரும் பேசிக் கொள்வதை அவன் பார்த்து விட்டான்..

கயலோ மனதுக்குள், 'அய்யயோ நான் மானாவாரியா இவரை பேசி இருக்கேனே நேத்து இராத்திரி கூட பேசினேன் கண்டிப்பா என்னை வைச்சு செய்வார்' என நினைக்க அதே போல அவர்கள் இருவரையும் எழுப்பி விட்டான் நிரஞ்சன்..

இருவரையும் பார்த்து,"என்ன பேச்சு வேண்டி கிடக்குது உங்க ரெண்டு பேத்துக்கும் என்றவன் நேத்து லாஸ்ட் கிளாசில் என்ன எடுத்தாங்க?" என கேட்க,

லாவண்யா திருதிருவென விழிக்க கயலுக்கு நியாபகம் இருந்தாலும் அவனை கண்ட அதிர்ச்சியில் எதுவுமே நியாபகம் வரவில்லை... அப்படி இருக்க, அவனோ சரமாரியாக பாடத்தில் கேள்விகள் கேட்க, இருவரும் திருதிருவென விழிக்க இருவரையும் பார்த்து, "படிக்க துப்பு இல்லை கிளாசில் பேச்சா? அவுட்.. இனி யாராவது என்னுடைய கிளாசில் பேசினீங்க இதுதான் நடக்கும்" என்று வெளியேற்ற அதைக்கண்ட இதர மாணவர்கள் நன்றாக படிக்கும் கயலுக்கே இந்த நிலைமை என்றால் நமக்கும் இதே நிலைமை தான் என உணர்ந்து கொள்ள வெளியே நிற்கும் போது அவள், 'என்னை வேணும்ன்னு பழி வாங்கிட்டிங்க சார் உங்களை சும்மா விட மாட்டேன்.' என மனதுக்குள் கருவி கொண்டாள்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top