வர்ணம் 31
அத்தியாயம் : 31
அவனோ பாடம் எடுத்து முடிக்கும் வரை அவர்கள் இருவரையும் அவனுடைய வகுப்புக்கு அனுமதிக்கவில்லை..அதை நினைத்து அவளுக்கு கோபம் வர, அவனோ கூலாக பாடத்தை எடுத்து விட்டு பீரியட் முடிந்ததும் வெளியே வந்தவன் அவர்கள் இருவரையும் பார்த்து, "இனி என் கிளாஸில் நீங்க பேசிட்டு இருக்கிறதை பார்த்தேன் அவ்ளோ தான் சொல்லிட்டேன்" என எச்சரித்து விட்டு கடைசியாக அவன் செல்லும் போது இது உனக்கான தண்டனை என அவளிடம் சொல்லாமல் அவளை ஒரு பார்வை அழுத்தமாக பார்த்து விட்டு சென்றான்..
அதை எண்ணி அவள் வீட்டுக்கு போனதும், "உங்களுக்கு இருக்கு சார் பாருங்க நான் யாருன்னு காட்டுறேன்" என நினைத்து கொண்டவளுக்கு வீட்டுக்கு போனதும் பாட்டி, "என்ன டி இத்தனை நேரம் ஆவுது..."என்க அவளோ, "பஸ்ல வர வேணாமா கூட்டம் பாட்டி" என்க,
"ஏன் நீயும் அவனும் ஒரே இடத்துக்கு தானே போறீங்க அவன் கூட போக வேண்டியது தானே?" என அவர் கேட்க,
அவளோ, "ஆமாம் உங்க பேரன் கூட்டிட்டு போயிட்டாலும் விடிஞ்சிடும்..அங்கே எல்லாம் அவரு யாரோ நான் யாரோ.." என அலுத்து கொள்ள அதை கேட்ட அவரோ,"அவன் இப்படி மாறினதே பெரிய விஷயம் தான்..நீ படிப்பை முடி அப்புறம் சரி ஆகிடும்" என முணுமுணுத்தார்..
அவளோ, "எங்களை சேர்த்து வைக்கணும்னு மட்டும் சொல்றீங்கல இதை கேளுங்க.. என்னை ஏன் காலேஜுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குறாரு ஏன் பொண்டாட்டி அப்படிங்குறத மறுக்கிறார் என்று கேளுங்க" என்றவளை பார்த்து, "கேட்க தானே நான் இங்கே வந்து இருக்கேன்" என்றார்..
அவளும்,"நீங்க என்னத்த கேட்டு உங்க பேரன் திருந்தி.." அலுத்து கொண்டு, "என்ன பாட்டி இது?" என அவர் கையில் இருக்கும் பாத்திரத்தை பார்த்து கேட்க,
"மருதாணி டி நல்லா சிவக்கும் உனக்கு தான் அரைச்சு வைச்சு இருக்கேன் இதை வை" என அவர் கூறும் போதே அவன் வீட்டுக்குள் நுழைந்தான் நிரஞ்சன்..
"பாட்டி கேட்கனும்னு சொன்னிங்களே கேளுங்க உங்க பேரன் கிட்ட"என அவள் எடுத்து கொடுத்தாள்...
ஏனெனில் அவன் காலையில் வைத்து அவளை செய்ததற்கு இன்று ஏதாவது செய்து விட வேண்டும் என அவள் துடியாக துடித்தாள்...ஆம் அவனை ஏதாவது பழி வாங்கியே ஆக வேண்டும் என அவளுக்கு இருந்தது..
அதனால் அவள் பாட்டியை தூண்டி விட அவரோ, "ஏன் டா நீயும், அவளும் ஒரே இடத்துக்கு தானே போறீங்க அவளையும் கூட்டிட்டு போக வேண்டியது தானே?" என கருணை அம்மாள் கயலை பார்த்துக்கொண்டே நிரஞ்சனிடம் கேட்டார்...
அவனும் அவளை முறைத்துப் பார்த்து,"இது இவளோட வேலை தானே வீட்டுக்குள்ள அவளை பொண்டாட்டியா ஏத்துக்கிட்டது பெரிய விஷயம் இனி வெளியே போய் என் மானத்தை நானே வாங்கணுமா?.. அரைப்படி சைஸில் இருக்கிறேன் இதை என்னோட பொண்டாட்டியா?" என அவன் கேட்டான்.. அதை கேட்டவர்,"எப்படி இருந்தாலும் அவ உன்னோட பொண்டாட்டி தான அது இல்லைன்னு ஆகிடாதே" என தன் மோவாயை இடித்து கூறினார்..
அதைக் கேட்டவன், "நீ இந்த வேலை பார்ப்பேன்னு சொல்லித்தான் எப்ப கிளம்புறேன்னு நான் கேட்டுகிட்டு இருக்கேன்.. எப்ப கிளம்புற" என அழுத்தமாக கூற,
அவரோ,"நான் இங்கே தான் இருப்பேன் உன்னால முடிஞ்சத செய் டா.. போடா கிறுக்கு பயலே" என கூற அவளோ, "என்ன இப்படி சப்புன்னு ஆகிடுச்சு நான் என்னமோ நினைச்சேனே" என எண்ணி மருதாணி வைக்கும் பாத்திரத்தை பிடித்தபடி நிற்க,
"என்னடி மசமசன்னு நின்னுட்டு இருக்க..போய் மருதாணி வைக்கிற வேலையை பாரு.. அது காய்ஞ்சி போச்சு.. உன் மண்டையை நாம் வீங்க வைத்துடுவேன்" என்க
அவளோ, "உங்க பேரனுக்கு என்னை பார்த்தா எப்படி இருக்கு? ரொம்பத்தான் கேவலமா பேசுறாரு என்னை கூட்டிட்டு போனால் அந்த வண்டி போகாதா?. அவரு ரொம்ப உயரமா இருக்கு அதனால என்னை அரைப்படின்னு சொல்றாரு" என அவள் கேட்க,
அவரோ,"விட்டு தொலையேன் டி..அவன் கொஞ்சம் கொஞ்சமா மாறுவான்" என சலித்து கொள்ள,
அவள் விட்ட பாடில்லை... அவளுக்குத்தான் ஏதாவது செய்ய வேண்டுமே.."மிஸ்டர் பிராண நாதா உங்களை அப்படி விடுற ஐடியா இல்லை" என எண்ணி, அவன் உடலை சுத்தம் செய்து விட்டு வரும் போது அந்த மருதாணி பாத்திரத்தை கையில் வைத்து கொண்டு, "பாட்டி எங்க அம்மா சொல்லுவாங்க கல்யாணம் ஆன பொண்ணுங்களுக்கு அவங்க புருஷன் மருதாணி வைச்சு விட்டா ரொம்ப சிவக்குமாம்.. பொண்டாட்டி எவ்ளோ மனசுல புருசன் மேல ஆசை வைச்சு இருக்கானு தெரியுமாம்..அதுனால உங்க பேரனை மருதாணி வைச்சு விட சொல்லுங்க" என பாட்டியை எங்கு அடித்தால் எங்கு விழுவாரோ அந்த இடம் பார்த்து அவள் அடித்தாள்..
அதை கேட்ட அவனோ, "என்னால முடியாது.." என கூற
அவரோ அதை கேட்டு,"அவள் சொல்றதும் சரிதான் நிரஞ்சா நீதான் அவளுக்கு மருதாணி வெச்சு விடனும்" என கூற அவனோ மறுத்தார்..
பிறகு விடுவாரா பாட்டி, "அது எப்படி தாலி கட்டுன பொண்டாட்டிக்கு நீ வச்சு விட மாட்டேன்னு சொல்லுவ? அவளை வெளியில வண்டியில தான் காலேஜுக்கு கூட்டிட்டு போக மாட்ட வீட்டுக்குள்ள ஒரு மருதாணி வெச்சு விட மாட்டியா?" என கேட்டவர், "வைச்சு விடு டா" என அதட்ட துவங்கி விட்டார்..
அவளோ உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல், "நான் என் புருசன் கிட்ட ஆசையா கேட்கும் போது அவர் செய்யலையே பாட்டி" என அழும் நிலைக்கு ஆளாக அவள் நடிப்பை பார்த்த அவரோ,"ஏண்டா உன் பொண்டாட்டி ஆசைப்படுற நீ இதைக்கூட செய்ய மாட்டியா? நீ செய்யாம தான் இருந்து பாரு நாளைக்கு நானே உன்னோட காலேஜுக்கு வந்து இவதான் உன்னோட பொண்டாட்டி சொல்லிடுவேன் பார்த்துக்கோ" என மிரட்ட,
அதை கேட்டவன் அவளை முறைத்து கொண்டு,"இப்போ உங்களுக்கு என்ன? நான் மருதாணி வைத்துவிட வேண்டும் அவ்வளவு தானே வச்சு விடுறேன் போதுமா" என கூற,
அவளோ பாத்திரத்தை கொடுக்க, அவனோ அவளை முறைத்து வாங்க, அவளும் அவன் அருகே அமர, அவள் கையை அவனிடம் அவனோ மருதாணி எடுத்து அவள் கையில் வட்டமாக வைக்க போக, அவளோ,"சார் ஹார்ட் போட்டு அம்புக்குறி வைத்து விடுங்க சார்" என கூற அவனோ அவளை பார்த்து முறைக்க,"எதுக்கு சார் முறைக்கறீங்க போட்டு விடுங்க சார்" என இழுத்தாள்.. அவனுக்கு புரிந்து போனது இவள் வேண்டும் என்று தான் செய்கிறாள் என ஆனால் அவனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவன் இருந்தான்.. அவளோ அவனின் முகத்தைப் பார்த்து அவனின் கோபத்தை ரசித்து சிரித்தாள்
ஏனெனில் பாட்டியோ அவர்கள் இருவருக்கும் இடையே அமர்ந்து விட்டார் அவன் வைத்து விடுகிறானா இல்லையா என பரிசோதனை செய்ய அமர்ந்து விட்டார்.. அதனால் அவன் எதுவும் பேசாமல் அவள் சொன்னது போல வைக்க ஆரம்பிக்க ஆனால் அவள் அவனை வைத்து செய்து விட்டாள் என்று தான் கூற வேண்டும்..
