வர்ணம் 48
அவளின் பிரணய வர்ணங்களில்...
அத்தியாயம் : 48
கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கு பிறகு...
கயலின் பட்டமளிப்பு விழாவில் ஆதிராவை தன் மடியில் அமர வைத்து இருந்த நிரஞ்சன், "ஆது அம்மா பாரு டா.." என சந்தோசமாக அவன் கூற ஆதிரா குட்டி, "அம்மா.. அம்மா" என சந்தோசமாக கை தட்டி கத்தினாள்...
அவளின் பட்டமளிப்பு விழாவை காண கயலின் அம்மா சாந்தி பாட்டி தாத்தா, பாக்கியம், கலையரசன், வெங்கட்ராமன் மற்றும் அவருடைய மனைவி என அனைவருமே வந்து இருந்தார்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. பின்ன இருக்காதா யுனிவர்சிட்டிலேயே முதல் மதிப்பெண் எடுத்து பாட்டி எதார்த்தமாக கூறியது போல அவன் கோல்ட் மெடல் வாங்குகிறாள் என்றால் அவர்களுக்கெல்லாம் சந்தோஷமும் பெருமிதமும் இருக்காதா?
இதோ அவளின் பெயரை கயல்விழி என்று உச்சரிக்க அவள் மேடை ஏறி நிற்கவும் முனைவர் அவளுக்கு பதக்கத்தையும் சான்றிதழையும் கொடுக்க, "அம்மா ஐ லவ் யூ" என ஆதிரா கத்தவும் மேடையில் இருந்து தன் குழந்தைக்கு கை அசைத்து பறக்கும் முத்தத்தை கொடுத்தவள் மனம் முழுவதும் மகிழ்ச்சி அலை பூத்தாலும் அவளின் கண்கள் மட்டும் நிரஞ்சனை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தது..
இந்த பட்டம் பெற அவள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் அதற்கு அவன் கொடுத்த ஊக்கமும் அவளோடு அவனும் அவளை உந்தி இந்த அளவுக்கு கொண்டு வர வைத்திருக்கிறான்..
அப்படி இருக்க, அவனுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ அதே அளவுக்கு அவளுக்கும் அதே மகிழ்ச்சியை அவளை எதிர்பார்த்து இருக்கும் அவளுடைய சொந்தங்களுக்கு கொடுத்த சந்தோஷத்தோடு கீழே இறங்கி ஓடிச்சென்று தன் கழுத்தில் இருந்த பதக்கத்தை எடுத்து ஆதிரா கழுத்தில் அணிவித்தவள், "அத்து" என அவளின் பட்டத்தை கொடுக்க அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது..
பிறகு தன் கணவனையும், தன் மகளையும் அவள் அனைத்து கொண்டவள் சந்தோஷ கண்ணீரோடு, "அத்து நீங்கதான் என்னோட லக்கி ஷார்ம் நீங்க என்னோட வாழ்க்கைக்குள்ள வந்ததுக்கு அப்புறம்தான் எனக்கு எல்லா நல்லதும் நடந்திருக்கு தேங்க்யூ சோ மச்" என்க
மேலும் அவள், "இது நான் மட்டும் கஷ்டப்பட்டு படிச்சு வாங்குனதில்ல இதுக்கு பின்னாடி நீங்க மட்டும் தான் இருக்கீங்க" என்று அவள் கூற,
அவனும் சிரித்தபடி, "உன்னோட ஹார்ட் வொர்க் நீ ஜெயிச்சிருக்க இருந்தாலும் இன்னைக்கு நீ ட்ரீட் வச்சுரு" என்று கள்ளச் சிரிப்போடு கூற அவன் எதை கூறுகிறான் என்பதை புரிந்து கொண்ட அவளோ வெட்கப்பட்டு சிரித்தாள்...
அதே நேரம் கருணை அம்மாளிடம், "பாட்டி நீங்க சொன்ன மாதிரி தங்கப்பதக்கம் வாங்கிட்டேன் போதுமா?" என்று அவள் கேட்க அவரோ அதை வாங்கி பார்த்தவர் சந்தோஷத்தோடு, "நல்லா இரு டி" என அவளை உச்சி முகர்ந்தார்...
இப்படி அவர்களின் வாழ்கையில் மகிழ்ச்சி அலை ஓங்கி கொண்டு இருந்தது...
அடுத்த ஒரு மாதத்தில் அவள் அடுத்த ஒரு நல்ல செய்தியை அனைவர்க்கும் கொடுத்தாள்..
ஆம் அவள் கர்ப்பிணியாக இருக்க, அவர்களுடைய மொத்த குடும்பமும் மகிழ, பாட்டி மற்றும் பாக்கியத்துக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.. சாந்தியிடம், "நான்தான் அவங்க நல்லா இருப்பாங்கன்னு சொன்னேன்ல கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் இப்ப நல்லா இருக்காங்க" என்று சந்தோஷமாக கருணை அம்மாள் கூறினார்...
அதைக் கேட்ட சாந்தியும், "ஆமாம்மா நீங்க சொன்ன மாதிரியே அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க தம்பி மாதிரி ஒரு புருஷன் கயலுக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்" என கூற, என்ன குழந்தை ஆனாலும் ஆதிராவை அவள் தன்னுடைய முதல் குழந்தையாக எண்ணி இருந்தவள் அதே போல தான் அவள் இருக்கவும் செய்தாள்..
படிப்பு முடிந்ததும் ஆதிராவை வீட்டுக்கு கொண்டு வந்தவள் பிறகு அவளுக்கு ஆதிரா மட்டும் தான் உலகமாக மாறி இருந்தது...
ஆதிராவை கயல் மிகவும் நல்ல முறையில் பார்த்து கொள்வதை பார்த்து வெங்கட்ராமன் கூட சந்தோஷத்தோடு தன் பேர பிள்ளையை உரியவர்களிடம் ஒப்படைத்தார்..
அதற்கு அவளோ, "நீங்க ரெண்டு பேரும் அங்கே தனியாக இருந்து என்ன பண்ண போறீங்க? நம்ம ஃபிளாட் பக்கத்திலேயே ஒரு வீடு காலியா இருக்கு இங்க வந்து இருந்துக்கோங்க எனக்கும் நீங்க இங்க இருக்கிறது கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்" என்று கூற அதைக் கேட்டு அவர்களும் சரி என்றார்கள்..
ஏனெனில் மனதளவில் ஆதிராவை விட்டுக் கொடுக்க விருப்பமில்லை என்றாலும் உரியவர்களிடம் ஒப்படைப்பது தானே சரியான விஷயம் என கருதி ஒப்படைத்தார்கள்.. ஆனால் நிரஞ்சன் மற்றும் கயல் இருவரும் கலந்தாலோசித்து அவர்கள் இருவரையும் அவன் குடியிருக்கும் குடியிருப்புக்கு அருகிலேயே ஒரு வீட்டில் குடி அமர்த்தி விட்டான்..
அதனால் எப்போது வேண்டுமானாலும் அவர்களும் இங்கு வரலாம் அவனுக்கும் ஏதாவது உதவி என்றால் அவர்களுக்கு செய்து கொடுக்கலாம் ஆதிராவும் இருவர் வீட்டுக்கும் பொதுவாக இருக்கலாம் எங்கு வேண்டுமானாலும் அவளுக்கு சென்று கொள்ளலாம் அப்படி ஒரு இனிமையான வாழ்க்கை வாழ துவங்கி விட்டார்கள்... கயலின் அம்மாவையும் தன்னுடன் வைத்துக்கொள்ள அவர்கள் அழைக்க ஆனால் அவரோ மறுத்து விட்டார் அவருக்கு அந்த ஊரும் அந்த ஊரில் உள்ள மக்களை விட்டு வர அவருக்கு விருப்பமில்லை அதனால் அவருடைய விருப்பம் போல அவர் இருக்கட்டும் என விட்டுவிட்டார்கள்…
நிரஞ்சனை பொறுத்தவரை அவன் நினைத்த வாழ்க்கை அவனுக்கு பாதியிலேயே முடிந்து விட்டாலும், அவனுக்கு கிடைத்த வாழ்க்கையை அவன் நேசிக்க துவங்கியதும் அவன் வாழ்க்கை அழகாக மாறியது..
அவன் ஆசைப்பட்ட அவனுடைய மகளும் அவன் கைக்கு கிடைத்துவிட, கூடவே தெய்வமாக கொடுத்த ஒரு உறவும் அவனுக்கு கிடைத்துவிட்டது.. இனி என்ன அவன் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இவர்கள் இருவரும் எதிர்பாராத விதத்தில் திருமணம் செய்து இருந்தாலும் மிக மெல்ல பொறுமையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அதன் பிறகு இல்லற வாழ்க்கைக்குள் நுழைந்து ஒரு தெளிந்த நீரோடை போல ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.. இவர்கள் வாழ்க்கை இதேபோல அன்பும், அரவணைப்பும், நேசமும், பாசமும் நிறைந்து இருக்க வேண்டும் என வாழ்த்தி விடை பெறுவோம் நன்றி வணக்கம் ...
சுபம்
குறிப்பு : இக்கதையில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.. நீங்கள் எனக்கு அளித்த ஒவ்வொரு கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் 💝💝
