வர்ணம் 16
அத்தியாயம் : 16
அதைக் கேட்ட கயல் இந்த பாட்டி என்ன இப்படி இருக்காங்க சார் ரொம்ப பாவம் என அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை மேலும் அவளால் கல்லூரியில் நடந்த விஷயத்தை யோசித்து அவன் முகத்தைக் கூட பார்க்க திராணியில்லாமல் இருக்க, பிறகு இவர்களின் குடும்ப பஞ்சாயத்தில் எப்படி அவள் தலையிட முடியும் என்னவோ இவர்களை பேசி தீர்க்கட்டும் என அமைதியாக நின்று கொண்டாள்..அவளுக்கோ அவன் அடிக்குரலில் சீறிய வார்த்தை தான் அவளின் மனதை முள்ளாக தைத்துக் கொண்டிருந்தது...
பாட்டி கூறியதைக் கேட்டு அதிர்ந்த அவன் பாட்டி செய்தாலும் செய்வார் சொல்ல முடியாது.. ஏனெனில் இத்தனை வேலையை செய்த பாட்டி இதற்கு மேலேயும் செய்வார் என அவனுக்கு நன்றாக தெரியும்.. பாட்டி கருணை அம்மாள் அவனுடைய அம்மா போல மிகவும் சாந்த சொரூபி அல்ல.. அவனைப் போல தைரியசாலி அவருக்கு புத்தி கூர்மை அதிகம்.. அப்படி இருக்க, இந்த பாட்டி செய்தாலும் செய்வார் தன் பெயரை கெடுக்க வேண்டுமென்றே செய்வார் என நினைத்த அவன், "இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை?"
"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல உன்னோட பொண்டாட்டியை நீ கூட்டிட்டு போ" என்று கூற அதைக் கேட்டவன் அவளைப் பார்த்து, "உங்களுக்கு அது தான் வேணும் நான் கூட்டிட்டு போறேன்" என்று கடுப்பாக கூறினான்.. அதன் பிறகு தான் கருணை அம்மாள் முகம் தெளிய ஆரம்பித்தது...
"அந்த பொண்ணு நல்லா இருக்காளா இல்லையா அப்படின்னு நான் இடை இடையே வந்து விசாரிப்பேன் இங்க கூட்டிட்டு போயிட்டு எங்கேயாவது கழட்டி விடலாம் என்று பார்த்த அவ்வளவுதான் நான் மனுஷியா இருக்க மாட்டேன்" என்று அவர் என்ன இவன் திடீரென ஒப்புக்கொண்டான் என யோசித்து கூற
அவனோ அவரை நக்கலாக பார்த்து, "பாட்டி என்னை ரொம்ப மிரட்டாதீங்க பண்றதை பண்ணுங்க அப்படின்னு போயிட்டே இருப்பேன்" என அவன் கூற அவரோ, "அதையும் பார்க்கலாம்" என அவர் பதிலுக்கு கூறினார்..
அவனிடம் இப்படி சரிக்கு சரியாக நிற்கிறாரே அவன் ஏதாவது செய்து விட்டால் என்ன செய்வது என பாக்கியம் மற்றும் கலையரசன் நினைத்துக் கொண்டிருக்க, ஆனால் கருணை அம்மாள் மட்டும் தைரியமாக இருந்தார்..
இவனிடம் பயந்து ஒடுங்கிப் போய் இருந்தால் இவன் நம் தலையில் ஏறி அமர்வான் அதுவே இவனிடம் எதிர்த்து நின்றால் இவன் அடங்கி விடுவான் என அவர் நினைத்தது சரியாகத்தான் இருந்தது..
அனைவரையும் ஒரு பார்வை பார்த்து கொண்டே அவன் கயல் அருகே வந்தவன் மனதில் இன்று கல்லூரியில் நடந்த சம்பவமும் அதே போல கிஷோர் மற்றும் கயல் இருவரின் காதலையும் மனதில் நினைத்து குனிந்து இருப்பவளின் கையை அழுத்தமாக வேண்டும் என்றே பிடிக்க, அவளோ திகைத்து பார்க்க அதை கண்டு கொள்ளாமல் அவரை பார்த்து, "நான் இப்போ இவளை கூட்டிட்டு போகணும் அப்படித்தானே எல்லா கூட்டிட்டு போக தயார் நானா இவளை வீட்டை விட்டு துரத்தினால தானே நீங்க கேஸ் குடுப்பீங்க என்னை அசிங்கப்படுத்துவீங்க அதுவே இதோ இவளே வெளியே போயிட்டா என்ன பண்ணுவீங்க? உங்களால ஒன்னும் பண்ண முடியாது தானே? அதுக்கு கூடிய சீக்கிரம் நீங்க தயாரா இருங்க.. நான் எதிர்பார்க்காத சமயம் நீங்க என்னை அடிச்சிட்டீங்க பாட்டி இதுக்கு திருப்பி கொடுக்காம விட மாட்டேன்.. இனி நான் தாலி கட்டின என்னோட பொண்டாட்டியை நான் பார்த்துக்கிறேன்.. நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க" என்று கூறிவிட்டு அவன் அவளுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்று விட்டான்..
அவளோ அவன் தொட்ட இடத்தில் குறுகுறுப்பாக அவளோ கையை அவனிடம் இருந்து உருக முயற்சி செய்ய அவனும் வீட்டிற்குள் கையை விடாமல் அழுத்தமாகப் பிடித்தவன் வாசல் வந்ததும் கையை விட்டு அவளிடம் அழுத்தமாக, "இதோ பார் தெரிந்தோ தெரியாமலோ நீ என் வாழ்க்கைக்குள் நுழைஞ்சிட்ட இதுக்கு நீ அனுபவிப்ப.. என் கூட வாழ்றது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது" என அவன் எச்சரிக்கை செய்தான்..
பதிலுக்கு அவளோ, "சார் என்னை நம்புங்க இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அக்கா ஓடிப்போனதும் அம்மா ரொம்ப அழுது நன்றி கடனுக்காக கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு சொல்லி கெஞ்சினாங்க அதுக்காக தான் நான் ஒத்துக்கிட்டேன் நானா விருப்பப்பட்டு இந்த திருமணத்துக்குள் இணையல" என்று அவள் கூற, அதை கேட்க அவன் தயாராக இல்லை.. அவளுடைய வயதையும், அவனுடைய வயதையும் யோசித்துப் பார்த்தே அவனுக்கு தலை சுற்றி போயிருந்தது...
அப்படி இருக்க அவனோ போதும் நிறுத்து என்பதை போல கையை தூக்கி, "என்னோட சொந்த குடும்பமே என் முதுகுல குத்துவாங்கன்னு நான் எதிர்பார்க்கல அவங்களையே நம்பாத போது உன்னையா நம்ப போறேன் இனி யாரையும் நான் நம்புவதா இல்லை ..
நீதானே இதை தொடங்கி வைத்த நீயே இதை முடிச்சு வச்சிடு" என்றவன் என்ன சொல்கிறான் என புரியாமல் விழிக்கும் அவளது விழிகளை பார்த்துக் கொண்டே பலமாக யோசித்தான் இவர்கள் கொடுத்த அடியை இவர்களுக்கு திருப்பி கொடுத்தாக வேண்டும் என நினைத்து அவன் அவளையும் அழைத்துக் கொண்டு அவனுடைய பிளாட்டுக்கு சென்று விட்டான்.... அவளோ பூம்பூம் மாடு போல அவனின் இழுவைக்கு பின்னால் சென்றாள்...
அவன் சென்றதும், "என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க?" என்று பாக்கியம் கூற, "அந்த ஜோசியர் சொன்னதை கேட்டில அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும் அப்படின்னா அவங்க ரெண்டு பேரும் இணைந்து இருக்கணும்.. அவனுக்கு இப்ப நம்ம மேல கோபம் இருக்கலாம் ஆனால் அவன் வாழ வேண்டிய பையன் இப்படி அவன் வாழ்க்கையை தொலைத்து நிற்கும் போது நாம எப்படி சமாதானமா இருக்க முடியும்?" என்று கூறினார்..
"அதுக்காக இப்படியா அத்தை?" என்று கலையரசன் கேட்க
"மாப்பிள்ளை உங்களுக்கு என் மேல வருத்தம் இருக்கும்னு எனக்கு நல்லா தெரியும் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தாத்தான் எனக்கு சந்தோஷமா வாழ முடியும் என்னுடைய பேரக் குழந்தையின் நல்லதுக்காகத்தான் நான் இதை செய்தேன்.
நீங்க வேணா பாருங்க கொஞ்ச நாள்ல அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துருவாங்க ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும் போகப் போக சரியாயிடும்" என ஜோசியர் கூறியதை வெகுவாக நம்பி அவர் கூறினார்...
கயலுக்கு இங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை அவன் இழுத்த இழுவைக்கு அவனோடு பயணம் செய்து கொண்டிருக்கிறாள் இந்த பயணம் எது வரை என அவளுக்கும் ஒரு ஐடியாவும் இல்லை..
ஆனால் அவனுக்கு நல்ல ஐடியா இருக்கிறது.. வாழ்க்கையில் ஒருமுறைதான் ஏமாறுவார்கள் தொடர்ந்து ஏமாறுவார்களா என்ன நினைத்து இந்த திருமணம் நடந்தது என அவனுக்கு தெரியாது ஆனால் இந்த திருமணத்தை அவனின் தேவைக்காக அவன் உபயோகித்துக் கொள்ள போகிறான் அவ்வளவுதான்..
இவளோ கிஷோரை காதலிக்கிறாள் அவனாக துரத்த தேவையே இல்லை.. அவளாகவே கிஷோரிடம் கொஞ்ச நாளில் சென்று விடுவாள் அந்த இடைப்பட்ட காலத்தில் இருவரும் ஒரே வீட்டுக்குள் வாழ்கிறார்கள் அவ்வளவுதான்.. அந்த இடைப்பட்ட காலத்தில் அவன் தன் மாமனாரை நம்ப வைத்து தன் குழந்தையை அவரிடம் இருந்தது மீட்டெடுக்க வேண்டும் அது மட்டும் தான் அவனுடைய நோக்கமாக இருந்தது அதற்கான முதற்படியாகத்தான் கயலை அவனுடைய பிளாட்டுக்கு அழைத்து செல்கிறான் நிரஞ்சன்…
