வர்ணம் 15

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 10 months ago
Messages: 56
Thread starter  

அத்தியாயம் : 15

          "ஏன் பாட்டி நீங்க வயசுல பெரியவங்க தானே இதெல்லாம் உங்களுக்கு தப்புன்னு தெரியலயா? உங்க மகள் இப்படி ஒரு காரியம் செஞ்சு இருக்காங்க அதை தப்புன்னு சொல்ல மாட்டிங்களா?" என கேட்க

        "எதுடா தப்பு? வயசு வித்தியாசத்தில் யாருமே கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா நாங்க யாரையும் ஏமாத்தல உன்னை தவிர மத்த எல்லாருக்கும் விஷயம் தெரியும் உன்கிட்ட சொன்னா கல்யாணம் வேண்டாம் என்று சொல்லுவ ஆனால் எங்க மகன் இப்படி தனியா அனாதையா இருக்கிறதை நாங்க பார்த்துட்டு இருக்க விருப்பப்படல அதனால தான் இப்படி ஒரு முடிவை எடுத்தோம் முடிவெடுக்கும் போது கயல் கிட்ட கேட்டுட்டு தான் முடிவெடுத்தோம்" என்று கூறினார் கருணை அம்மாள்..

"அப்போ எல்லாத்துக்கும் காரணம் நீங்க தானே பாட்டி" என அவன் கேட்டான்..

அவரோ, "ஆமாம் நான்தான் காரணம் வேற யாரும் காரணம் கிடையாது.. இப்ப என்ன பண்ண போற? போனவள் போய் சேர்ந்துட்டா அவளை நினைத்து உன்னோட வாழ்க்கையை கெடுத்துக்க போறியா? நாங்களும் நீ சொன்ன மாதிரி தானே பொண்ணு பார்த்தோம்.. பொண்ணு கடைசி நிமிஷத்துல ஓடிப் போனதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?இதோ இவளோட அம்மா சாந்தி நான் எப்பவோ இந்த பிள்ளைகளுக்கு செஞ்ச உதவிக்கு கைமாறா இவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா அதனால நாங்க கல்யாணம் பண்ணி வச்சோம் இப்ப என்ன அதுக்கு?" என்றார் அவர்.. இதெல்லாம் ஒரு  தவறா என்பது போல இருந்தது அவருடைய பேச்சு..

அதை கேட்டவன் கடுப்பு ஆகி, "அப்போ எனக்கு விஷயமே தெரிய வேண்டாம்னு நினைச்சிட்டீங்களா என்ன ஒரு மாஸ்டர் பிளான் உங்களுக்கு?" என அவன் கடுப்போடு கேட்டான்..

"நீ எப்படி நினைத்துவிட்டால் அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.. நான் உனக்கு நல்லது தான் செஞ்சிருக்கேன்.. உனக்கு உன்னோட புள்ளையை பார்க்கணும்..உன் கூட இருக்கணும்னு ஆசை.. அப்போ நீ கல்யாணம் பண்ணினா தான் உன்னுடைய மாமனார் உன் மகளை உன்கிட்ட கொடுப்பார்.. அதுக்கு நீ கல்யாணம் பண்ணிக்க சம்மதித்த இப்ப இந்த கல்யாணம் நின்னு போனால் நீ வேற கல்யாணம் பண்ணிப்பியா? பண்ணிக்க மாட்ட தானே! எங்களுக்கு நீ ஒரு இல்வாழ்க்கை வாழனும்ன்னு ஆசை.. அதனால தான் கல்யாணம் பண்ணி வச்சோம் அந்த பொண்ணே சும்மா இருக்கும்போது உனக்கு என்ன கேடு?" என்று கேட்டார்..

அதைக் கேட்டவன் ஆத்திரத்தில் தனக்கு எதிரே இருந்த பூச்சாடியை தூக்கி கருணை அம்மாள் முகத்துக்கு நேராகவே வீசினான்.. அது மிக சரியாக அவரின் கால்களுக்கு கீழே விழுந்து உடைந்தது.. அவன் ஆத்திரத்தோடு அவரை பார்த்து, "இனி ஒரு வார்த்தை நீங்க பேசினீங்க அவ்வளவுதான் உங்க மேல கொலை காண்டுல இருக்கேன் போதும் நிறுத்திடுங்க எனக்கு எல்லாம் புரிஞ்சிருச்சு எல்லாத்துக்கும் மூல காரணம் நீங்கதான்...உங்க முகத்துக்கு நேரா என்னால எரிய முடியாமல் இல்லை பேரன் கையால செத்த பாட்டி அப்படின்னு ஒரு பெயர் உங்களுக்கு கிடைக்கக்கூடாது என்று பார்க்கிறேன்" என ஆவேசமாக பேசினான்..

அவரோ அவனின் பாட்டி அப்போ அவனுக்கு இருக்கும் அதே ஆவேசம் அவருக்கு இருக்காதா அவர் இம்மி அளவும் நகராமல் சிலை போல கம்பீரத்துடன் நின்றார்..

அவரின் திமிரான பார்வையை பார்த்த அவன், கடுப்பில் ஏதாவது செய்து விடுவோமா என நினைத்து தன் அம்மா, அப்பாவை பார்த்து, "அவங்களுக்கு தான் அறிவு இல்ல உங்களுக்கு அறிவில்ல என்னை பத்தி நல்லா உங்களுக்கு தெரியும் தானே? தெரிஞ்சும் நீங்க இப்படி ஒரு வேலையை  செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கல.. யாரைத்தான் நம்ப சொல்றீங்க? பெத்தவங்களே இப்படி மகனுக்கு எதிரா ஒரு காரியத்தை செஞ்சிருக்கீங்க உங்களை எல்லாம் இனி எப்படி நம்ப முடியும்? போதும்.. இனி நான் நம்ப மாட்டேன்.. இனி எனக்கு நீங்க யாரும் வேண்டாம் நான் இனி இந்த வீட்டுக்கு வர மாட்டேன் என் மகளை எப்படி அவர்கிட்ட இருந்து மீட்டெடுக்கனும்னு எனக்கு தெரியும் நான் பார்த்துக்குறேன் இதுவரைக்கும் நீங்க செஞ்ச ஆணி எல்லாம் போதும் இனி என் பிரச்சனையை நானே பார்த்துக்கொள்கிறேன் சொந்த குடும்பமே முதுகுல குத்தினதை முதல் முறையா இங்க தான் பார்க்குறேன்" என்று கூறியவன் அதிர்ச்சியோடு அங்கு நின்று கொண்டிருக்கும் அவளைப் பார்த்து, "சீ நீ எல்லாம் ஒரு பொம்பளை? மனசுல ஒருத்தனை வச்சுக்கிட்டு என்கிட்ட தாலி வேற வாங்குற உனக்கு அறிவு இல்ல முளைத்து மூணு இலை விடல அதுக்குள்ள ஒருத்தன் கூட காதல் வேறொருத்தம் கூட கல்யாணம்" என்று அவள் அருகே சென்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவளை காரி உமிழாத குறையாக கூற அவளுக்கு அப்படியே செத்து விடலாம் என இருந்தது..

அவனுடைய செயலை பார்த்து அனைவரும் அதிர அவனோ அந்த வீட்டை விட்டு வெளியேற அந்த சமயம் பார்த்து கருணை அம்மாள்,"நீ போறதுனா போ போகும்போது உன்னுடைய பொண்டாட்டியும் கூட்டிட்டு போ..அதாவது நீ தொட்டு நீ தாலி கட்டின பொண்டாட்டி" என்று கூற,

அவனுக்கு உள்ளுக்குள் ஒரு கத்தியை எடுத்து தன் பாட்டியை கொன்று விடலாமா என்ற ஆத்திரம் கூட எழுந்தது இருந்தும் தன்னை அடக்கி அவரைப் பார்த்து முறைக்க, "என்னடா முறைக்கிற? எங்களை வேண்டாம்னு சொல்லிட்ட இவ உன்னோட சொத்து தானே இவ்வளவு கூட்டிட்டு போ" என்று கூற,"அம்மா கொஞ்சம் கம்முனு இருங்கம்மா" என்று பாக்கியம் கூற,

"வாய மூடிட்டு இருடி நான் பேசிக்கிறேன்" என்றார் கருணை மிகுந்த கருணை அம்மாள்...

"யாருக்கு யார் பொண்டாட்டி? இவ எனக்கு பொண்டாட்டியா?" என அவன் கொதித்தெழுந்து கேட்டான்..

"ஆமாம் நீ தான் தாலி கட்டின அந்த ஊர்ல எல்லாருக்கும் கயலோட புருஷன் நிரஞ்சன் அப்படின்னு பேசிட்டு இருக்காங்க" என்று அவர் கூற,

அதைப் பார்த்து மேலும் கடுப்பானவன் ஆத்திரத்தில் ஏதாவது கிடைக்குமா என அங்கும் இங்கும் தேட கலையரசன், "அத்தை கொஞ்சம் அமைதியா இருங்க பேசிக்கலாம்" என்று கூறவும், "மாப்பிள நான் உங்களை எதிர்த்து பேசுறேன் அப்படின்னு தப்பா நினைக்காதீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க நான் இவனை பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.. அவரும் அமைதியாக இருந்தார்..

"என்ன தேடுற ஏதாவது கிடைக்குமான்னா நீ என் தலையில் கல்லை போட்டு கொன்னாலும் பரவால்ல இப்போ நம்ம ஊருக்கு மட்டும் தெரிஞ்ச விஷயத்தை உலகம் ஃபுல்லா தெரியிற மாதிரி பண்ணிடுவேன்..பார்த்துக்கோ.. மரியாதையா நீ எங்க போறியோ அங்க இவளை கூட்டிட்டு போய்டு அவ்வளவுதான் சொல்லிட்டேன்.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கல்யாணம் பண்ணினதையும் தாலி கட்டினத்தையும் நியூஸ் பேப்பர்ல குடுக்க போறேன் அப்போ நாலு செவுத்துக்குள்ள தெரிஞ்ச விஷயம் ஊர் அறிய தெரிஞ்சுடும் செய்யட்டா?" என்று கேட்க அவனும் ஆத்திரத்தில் கத்தி பாட்டியை அடிக்க முடியாத கோபத்தில் சுவற்றில் ஓங்கி ஒரு குத்து விட்டான்..

அப்படியே அவன் குத்திய விதத்தில் அவனுடைய கைகளில் ரத்தம் வழிந்தது.. அவனது ஆவேசத்தை பார்த்த கயல் ஒரு அடி பின்னால் நீங்கி நின்று கொண்டாள்..

மகனின் கோபத்தை பார்த்த பாக்கியம் மற்றும் கலையரசன் செய்வதறியாது தடுமாறி நின்று கொண்டிருந்தார்கள்..

அவனோ அப்படியே அங்க போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்தவன் கண்களை மூடி அழுத்தமாக தன் தலையை கோதிக் கொண்டான்..

தன்னைப் பற்றியும் தன் மனதைப் பற்றியும் புரிந்து கொள்ளாமல் இவர்கள் இப்படி செய்கிறார்களே என்ன செய்வது என அவன் யோசித்தான் இப்படி சுத்தி சுத்தி அவனுக்கு அழுத்தத்தை கொடுக்கிறார்களே என அவன் நினைத்தான்..

அதற்கெல்லாம் அவர் துளியும் சளைக்காமல், "நீ போறதா இருந்தா போன் நிரஞ்சா உன்னுடைய பொண்டாட்டியும் கூட்டிட்டு போ அவ்வளவுதான் அதுக்கப்புறம் உங்க வாழ்க்கையாச்சு என்னவோ ஆச்சு நாங்க யாரும் தலையிட மாட்டோம் அவளுக்கு ஒரு வழி பண்ணு அவ்வளவுதான்" என்று அவர் கூறினார்..

அதைக் கேட்டவன் தன்னை நிலைப்படுத்தி, "என்ன என்னை மிரட்டி பார்க்குறீங்களா?" என்க

அவரோ அசராமல், "அப்படித்தான் நினைச்சுக்கோ" என்றவர், "இப்ப நீ இவள விட்டுட்டு போனேன்னு வை நான் நேரா போலீஸ் ஸ்டேஷன் போவேன் உனக்கு எதிரா கேஸ் கொடுப்பேன் கல்யாணமும் பண்ணிட்டு இந்த பொண்ணை அம்போன்னு ரோட்ல நிக்க வச்சுட்டு போயிட்டான் அப்படின்னு கேஸ் கொடுப்பேன் அப்போ உன் மானம் மரியாதை எல்லாம் எங்க போகணும் நீயே யோசிச்சுக்கோ" என்று அவர் மேலும் அவனுக்கு ஆப்பை நேரடியாகவே சொருகினார்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top