மோகம் 1

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 8 months ago
Messages: 537
Thread starter  

மோகம் : 1

எழிலும் எழில் கொஞ்சும் அழகும் கொண்ட கோவையின் மத்திய பகுதியில் இருக்கும் ஒரு அழகிய கிராமம் இன்னும் பழமை மாறாமல் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது..

அந்த கிராமத்தில் உள்ள அந்த பெரிய நாலு கட்டு வீடு பரபரப்பாக இருந்தது. இன்னும் மூன்று நாட்களில் அந்த வீட்டின் இளைய தலைமுறையின் மூத்தவனான ஆதித்யாவிற்கு திருமணம்..

ஆதித்யாவிற்கு மட்டும் திருமணம் அல்ல.. அந்த வீட்டின் மூத்த பேத்தியான சைந்தவிக்கும் தான் திருமணம்.. ஆம்.. ஆதித்யாவிற்கும் சைந்தவிக்கும் திருமணம் வீடே கோலாகலமாக இருந்தது..

அந்த கல்யாணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் அந்த வீட்டின் பெரிய மனுஷி காளியம்மாள்..

ஆம்.. அவர் ஒரு இரும்பு பெண்..அவர் வயது தோராயமாக ஒரு 80 இருக்கும்.. ஆனால் 80 வயது பெண்மணி என யாரும் கூறி விட முடியாது.. இன்றும் திடகாத்திரமாக அந்த பெரிய குடும்பத்தை பேணி பாதுகாத்து வருகிறார்.. எப்போதும் அமைதியாக இருக்கும் அந்த நாலு கட்டு வீடு ஏதாவது விசேஷம் என்றால் கலகலவென மாறிவிடும்.. அவருடைய பிள்ளைகள் முதல் பேரன்கள் வரை அனைவரும் கூடி விடுவார்கள்.. இதர நாட்களில் அவரும் அவருடைய மருமகள் மங்கையர்க்கரசி மற்றும் அவருடைய பிள்ளைகள் மட்டும்தான் அந்த வீட்டில் இருப்பார்கள்.. அதிலும் வினோத் வெளியூரில் வேலை செய்து கொண்டிருப்பதால் மங்கையர்க்கரசி மற்றும் சைந்தவி, காளியம்மாள் இவர்கள் மட்டுமே இருக்கும் அந்த வீட்டில் கல்யாண கலை கட்டியதில் சொந்த பந்தங்களால் நிறைய துவங்கி இருந்தது..

சிவனேசன் மற்றும் காளியம்மாள் தம்பதிக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் மூத்த பெண் மனோன்மணி, இரண்டாவது சிதம்பரம், மூன்றாவது சதாசிவம்..இதில் மனோன்மணிக்கும் நீலகண்டன் தம்பதிக்கும் ஆதித்யா, விஷ்வா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு..

இரண்டாவது சிதம்பரம் மற்றும் மங்கையர்கரசிக்கு சைந்தவி மற்றும் வினோத் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்..

மூன்றாவதாக சதாசிவம் மற்றும் மாலதி தம்பதியினருக்கு கண்மணி மற்றும் அகிலன் என இரு பிள்ளைகள் உண்டு..

அப்படி இருக்க இதில் காளியம்மாளின் முடிவுப்படி மனோன்மணியின் மூத்த புதல்வன் ஆதித்யாவிற்கும் அவருடைய தம்பி சிதம்பரத்தின் மகளான சைந்தவிக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் நடக்க இருக்கிறது...

இந்த திருமணத்தில் பெரியவர்களுக்கு ஏக விருப்பம் என்றாலும் இளைய தலைமுறையினர் ஏககடுப்பில் தான் இருக்கிறார்கள்..

ஆம்.. எல்லாத்திற்கும் காரணம் அந்த வீட்டின் பெரிய மனுஷி தான்.. அந்த திருமணத்தில் ஆதித்யாவிற்கும் விருப்பமில்லை.. சைந்தவிக்கும் விருப்பமில்லை.. ஆனால் திருமண வேலைகள் எல்லாம் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன..

அந்த வீட்டிற்கு என பல சட்ட திட்டங்கள் காளியம்மாள் உண்டு.. முதலில் பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்கு என தனி குடும்பம் எல்லாம் ஆனாலும் அவர் வைத்தது தான் சட்டம்..

சூரியன் மேற்கே தான் உதிக்கிறது என காளியம்மாள் கூறினால் மேற்கே தான் உதிக்கிறது என அவருடைய பிள்ளைகள் ஆமாம் சாமி போடுவார்கள்.. ஆனால் அவர்களின் அடுத்த தலைமுறை பிள்ளைகள் போடுவார்களா மாட்டார்களே..

ஆனால் இன்று வரை பாட்டி செய்தது எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் அவரை எதிர்த்து பேசியது இல்லை எதுவாக இருந்தாலும் அவர்களுடைய பெற்றோர்களிடம் மட்டும் தான் முறையிடுவார்கள் அந்த அளவுக்கு அவர்களும் பாட்டி மீது மரியாதை வைத்திருக்கிறார்கள்...

ஆதித்யாவிற்கு சைந்தவி பிறந்ததுமே ஆதித்யாக்கு தான் சைந்தவி என காளியம்மாள் முடிவு செய்துவிட்டார்..

அதன்படி தான் இந்த திருமணம் நடக்கிறது அடுத்த கல்யாணமும் நடக்கும் அதாவது விஷ்வாவிற்கும் கண்மணிக்கும் அதுவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணம் தான்..

அப்படி காளியம்மாள் முடிவு செய்திருக்க அவருடைய பிள்ளைகளும் அதில் மாற்றுக் கருத்து இல்லாததால் அவர்களும் அமைதியாகிவிட்டனர்..ஆனால் அவர்களின் பிள்ளைகள் பாடு தான் அங்கு திண்டாட்டமாக இருந்தது..

மகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என மனோன்மணியிடம் ஏற்கனவே ஆதித்யா கூறி இருந்தான்.. சுருக்கமாக ஆதி.. பெயரை போல கோபத்தின் உறைவிடம் 29 ஆவது வயதுக்குள் நுழைய இருக்கிறான்.. அவனுக்கு என பல கனவுகள் உண்டு.. அந்த கனவுகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.. அவனுக்கு என்று நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களோடு இணைந்து ஒரு சிறிய ஐடி கம்பெனி நடத்தி வருகிறான்..

அவன் ஒரு மான்ஸ்தன்.. சொந்தக் காலில் வளர வேண்டும் என முயன்று அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறான்.. மேலும் இளைய தலைமுறைகளின் மூத்தவன் என்பதால் அந்த வீட்டில் அவனுடைய பேச்சுக்கு எப்போதும் மதிப்பு உண்டு..

என்ன ஒரு பிரச்சனை கோபம் என வந்துவிட்டால் அவ்வளவுதான் எதைப் பற்றியும் அவன் யோசிக்க மாட்டான் முதலில் கைதான் பேசும்..

அவனுடைய வெற்றிகள் போதாது என்று அடுத்த கட்டத்திற்கு அவனுடைய தொழிலை கொண்டு போக அவன் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் இந்த கல்யாண விஷயம் அவனுடைய சிரத்தையை கலைக்கும் விதத்தில் இருக்க, அவனுக்கு விருப்பம் இல்லை என முகத்தில் அடித்தது போல தன் தாயிடம் கூறி விட்டான்..

ஆனால் அவனின் எதிர்ப்புக்கு எதிராகத்தான் இந்த திருமணம் நடக்கிறது அந்த பதட்டம் மனோன்மணிக்கு வெகுவாக இருக்கிறது..

அவனுக்கு இதில் பல மடங்கு வருத்தமும், கோபமும் அவனின் தாய் மீது உண்டு..

ஒன்று அவனால் தன் தாயை எதிர்க்க முடியாது.. இரண்டாவது கணவன் மற்றும் அவரின் மூத்த சகோதரன் சிதம்பரம் இருவரும் ஒருசேர ஒரே நாளில் இருவரும் விபத்தில் மரணம் அடைந்திருக்க, அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் இருக்கும் அவருடைய மகளான மனோன்மணி குடும்பத்தையும் மற்றும் காளியம்மாளின் மூத்த மகனின் குடும்பமான மங்கையர்க்கரசி, சைந்தவி மற்றும் வினோத் நிராதரவாக நிற்கும் பொழுது காளியம்மாள் தான் அவர்களை அவருடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்து தங்க வைத்து இருக்கிறார்.. அதனால் தாயின் பேச்சை மீற மனோன்மணியால் முடியாது..

மேலும் தன் மூத்த தம்பியின் மகளுக்கு தன் மகனை கொடுத்தால் சொந்தம் விட்டு போகாதல்லவா என்பதாலும் மனோன்மணி இந்த திருமணம் மகனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் நடந்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்..

ஆனால் திருமண தேதி குறித்ததிலிருந்து அவன் அவரிடம் பேசுவதில்லை.. அவர் அழைத்தாலும் ஏதாவது ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அப்படியே துண்டித்து விடுகிறான்.. திருமணத்தைப் பற்றி எந்த பேச்சும் அவனிடம் இல்லை..

அப்படி இருக்க உள்ளுக்குள் அவருக்கு திருமணம் நடக்குமா மகன் தன் பேச்சை மீறி விடுவானா என்ற எண்ணம் இருந்தாலும் அவருக்கு நன்றாக மகனுக்கு அவர் மீதுள்ள பாசம்.. அதனால் கண்டிப்பாக வந்து விடுவான் என்ற எண்ணமும் அவருக்கு இருக்கிறது..அவருடைய எண்ணங்கள் யாவும் அவர் நினைத்தது போல நிறைவேறுமா??? பொறுத்து இருந்து பார்ப்போம்..

இது எல்லாம் ஒரு புறம் இருக்க சதாசிவத்தின் வீட்டில் உள்ள பாத்திரத்தை எல்லாம் போட்டு உடைத்துக் கொண்டு இருந்தார் மாலதி..

அதை எல்லாம் பார்த்தாலும் சதாசிவம் வாயே திறக்காமல் அமர்ந்து இருக்க, " கல்யாணம் தான் ஒரு கேடு இவங்களுக்கு எல்லாம்..அந்த கல்யாணம் விளங்காமல் தான் போகும்.. எல்லோர்க்கும் ஒரு சாவு வருது.. உங்க அம்மாவுக்கு வரலையே..எல்லாம் பணத்திமிர்.. உங்க அம்மா சொல்றதுதான் நாம் எல்லாரும் கேட்கணுமா?? கடவுள் ஏன் தான் இப்படி என்னை வைச்சு இருக்கான் தெரியல.." என மாலதி கத்திக் கொண்டு இருந்தார்..

தன் தாயைக் கூறியதும், "ஏண்டி கல்யாணத்துக்கு சாயந்திரம் போகணும்.? மூணு நாள் என் வீட்டுல இருக்கணும் அப்படித்தானே சொன்னேன்.. எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க??" என அவர் கேட்டார்..

"இதோ பாருங்க கல்யாணம், கருமாதி இதெல்லாம் எனக்கு தெரியாது.. அந்த இடத்தை கேட்டு எழுதி வாங்கிற வழியை பாருங்க.. என்னால இந்த வாடகை வீட்டில் இங்கே மூச்சு முட்டி இருக்க முடியாது..

ஏன் மங்கை அக்கா மட்டும் தான் பாவமா?? மாமா இல்லைன்னு சொல்லி அந்த குடும்பத்தை தாங்கு தாங்குன்னு தாங்கிட்டு இருக்காங்க.. எதுனாலும் அவங்களுக்கு எழுதி கொடுக்கிறாங்க.. நம்மளை எல்லாம் அவங்க கண்ணுக்கு தெரியாதா?? ஏன் நீங்களும் தான் பிசினஸ் பண்றேன்னு சொல்லி எல்லாம் தொலைச்சிட்டு இருக்கீங்க.. அதை யாரும் கண்டுக்க மாட்டாங்களா??

கேட்டா உங்களுக்கு பிழைக்க தெரியாது.. எல்லாத்தையும் அழிச்சிடுவேன்னு சொல்லி உங்களுக்கு வர வேண்டிய சொத்தை அவங்களே பிடுங்கி வச்சுப்பாங்களா?? ஏன் என் பெயரில் எழுதுவது?? இல்ல உங்க வாரிசான கண்மணி, அகிலன் பேர்ல எழுதுறது?? அது எப்படிங்க எதுவுமே தெரியாத மாதிரி இருக்காங்க???

உங்க அக்கா குடும்பம், உங்க அண்ணன் குடும்பம் எல்லாம் அந்த பெரிய வீட்ல இருக்கு நாம மட்டும்தான் வாடகை வீட்டில் இருக்கோம்.. எவ்ளோ பெரிய ஓரவஞ்சனை??

ஒன்னு அவங்களை தனித்தனியா வச்சிருக்கணும் இல்லை நம்மளையும் அவங்க கூட வைச்சு இருக்கணும்.. நாம வாடகை வீட்டில் இருக்கோம்னு தெரிஞ்சு கூட அவங்க கண்டுக்காம இருக்காங்க அண்ணா என்ன அர்த்தம்?? "என அவர் எகிறினார்..

பெரிய வீட்டு பேச்சை எடுத்தாலே மாலதி இதைத்தான் கூறுவார் என நன்றாக சதாசிவத்துக்கு தெரியும்.. இருந்தாலும் அவருடைய அம்மா முறையாக சதாசிவத்திற்கும் எல்லாம் ஒதுக்கி எழுதி தந்திருந்தார் தான் அவர்தான் எப்படி தொழில் செய்வது என தெரியாமல் நட்டமடைந்து இப்பொழுது வாடகை வீட்டில் குடியிருக்கிறார்.. இதில் அம்மாவையோ இல்லை அவரின் குடும்பத்தாரையோ குறை சொல்ல முடியாது..

அப்படி இருக்க அவர், "ஏய் அக்காவும் அண்ணியும் தனித்தனியா தானே இருந்தாங்க மாமாவும் அண்ணனும் ஒரே நேரத்தில் இறந்ததுக்கு அப்புறம் தானே அம்மா அவங்க ரெண்டு பேரையும் ஒரே வீட்ல தங்க வச்சாங்க.. என்னமோ நம்மளை மட்டும் பிடிச்சது மாதிரி பேசிட்டு இருக்க.. நம்ம நேரம் தொழில் நஷ்டம் அடைந்து எப்படி இருக்கோம்.. அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க??"என்று அவரும் கூறினார்..

"இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...கல்யாணம் முடிஞ்ச கையோட உங்களுக்கு வரவேண்டிய சொத்து எல்லாம் வந்தாகணும் உங்க அம்மா, அக்காகிட்ட பேசுற வழிய பாருங்க.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்" என பேசிக் கொண்டு இருக்கும் போது தான் இன்று மாலை சைந்தவி அக்கா திருமணத்திற்கு செல்ல தேவையான உடைகளை எல்லாம் அவளுடைய அம்மா எடுத்து வைக்க சொல்லி இருக்க, அதை எல்லாம் எடுத்து வைத்து விட்டு திருமணம் தானே என எண்ணி கண்மணி அவளின் அழகான விரல்களில் நகசாயம் பூசி இருக்க, அதை அழகு பார்த்துக் கொண்டே வந்தாள் கண்மணி..

கண்மணி.. 18 வயது.. கல்லூரியில் முதல் வருடம் படிக்கிறாள்.. அழகென்றால் சொல்லி மாளாது.. அவ்வளவு அழகை கொண்ட பெண்.. யாராவது அவளை முதன் முறையாக பார்த்தால் ஒரு நொடியாவது திரும்பி பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.. அந்த அளவுக்கு அழகை கொண்ட பெண்ணுக்கு தான் இவ்வளவு அழகாக இருக்கிறோம் என்று கூட தெரியாது இன்னும் குழந்தை மனம் மாறாமல் அவள் இருக்கிறாள்.. குழந்தைத்தனம் நிறைந்த பெண்.. வெகுளி.. அம்மா மீது அவ்வளவு பயம் கொண்ட பெண்.. அம்மா என்றாலே பத்தடி தள்ளி நின்று கொள்வாள்.. அப்படி ஒரு பயம் அவளுக்கு மாலதி மீது உண்டு.. மாலதியும் எப்போதும் அவளிடம் கடினமாக தான் நடந்து கொள்வார்..

கண்மணி தன் அம்மாவிடம் வந்து மெல்லிய குரலில், "அம்மா நீங்க சொன்ன மாதிரி சைந்தவி அக்கா கல்யாணத்துக்கு என்னுடைய டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன்" என்று அவளுடைய விரல்களை பார்த்துக் கொண்டே கூறினாள்..

அதுவரை அடித்து பெய்த மழை போல அவர் பேசிக்கொண்டே இருந்ததில் கண்மணி வந்து சிக்கவும் அதுவும் அவள் விரல்களில் பூசிய நகச்சாயத்தை பார்த்த அவர், "எவனை மயக்கடி இதை எல்லாம் போட்டுட்டு மினுக்கிட்டு இருக்க??" என அவளின் சிவந்த கையை பிடித்து இழுத்து அவளின் முதுகிலே ஒரு அடி வைத்தார் மாலதி..

அவளோ திடீரென எதிர்பார்க்காமல் கிடைத்த அடியில், "அம்மா அடிக்காதீங்க மா பிளீஸ் மா.. அக்கா கல்யாணம் சொல்லி தானே போட்டேன்.. இல்லைனா இதெல்லாம் பண்ண மாட்டேன்ல்ல" என அவள் அழுக, "எவ டி உனக்கு அக்கா.. அவளே ஒரு அடங்காப்பிடாரி எது சொன்னாலும் எதிர்த்து பேசுவா?? அவ கல்யாணத்துக்கு நீ மினுக்கிட்டு போறியா??

இங்க பாரு உன்னோட ஆத்தா காரி மாதிரி ஏதாவது ஓடிப் போகலாம்.. அது இதுன்னு நினைச்ச அவ்வளவுதான் சொல்லிட்டேன்.. என்னோட வளர்ப்பு என்னைக்குமே பொய்யா போக கூடாது.. அதனால நான் சொல்றதைத்தான் நீ கேட்டு நடக்கணும் புரிஞ்சுதா.. உன்னோட பாட்டி வீட்டுக்கு போனதும் எங்கேயாவது நான் சொல்றத மீறி நடந்த அவ்வளவுதான்.. தொலைச்சிடுவேன்" என மாலதி அகங்காரத்தோடு கூறினார்..

இது கண்மணிக்கு ஒரு எச்சரிக்கையும் கூட.. வீட்டுக்குள் தான் மாலதி ரவுடி போல நடந்து கொள்வார்.. அதுவே காளியம்மாள் முன்னால் இது எல்லாம் நடக்கவே நடக்காது.. ஆனால் ஓரளவு மாலதியின் குணம் அவர்களின் குடும்பத்தாருக்கு தெரிந்தாலும் காளியம்மாள் சில நேரங்களில் மாலதியை கண்டிப்பதும் உண்டு.. அப்போதெல்லாம் ஒன்றுமே தெரியாதது போல மாலதி பேசினாலும் வீட்டிற்கு வந்ததும் அவ்வளவுதான் வெளுத்து வாங்கி விடுவார்..

அப்படி இருக்க, ஒரு தவறும் செய்யாமல் அம்மா அடித்ததில் அந்த 18 வயது பெண்ணான கண்மணி பரிதாபமாக தன் தாயை பார்த்தாள்..

ஆம் மாலதி கண்மணியின் பெற்ற தாயல்ல.. மாலதி சித்தி தான்.. சதாசிவத்துக்கும் மாலதியின் அக்கா நிர்மலாவுக்கும் பிறந்த பெண் தான் கண்மணி.. கண்மணி பிறந்ததும் நிர்மலா காதலித்த காதலனோடு ஓடிவிட்டார்..

அதனால் வீட்டில் சதாசிவத்திற்கு மாலதிக்கும் திருமணம் செய்து வைக்க, கண்மணியை தன் மகளை போல மாலதி பார்த்துக் கொண்டாலும், அவள் ஏதாவது அவருக்கு பிடிக்காத விஷயத்தை செய்து விட்டால் அவ்வளவுதான் அடித்தே துன்புறுத்தி விடுவார்..

அப்படி இருக்க, அவரிடம் வெகுவாக மாட்டி கொள்வது என்னமோ கண்மணி தான்.. அவள் நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என்பது போல அவர் அவளை நடத்துகிறார்..

அதாவது உதட்டளவில் தான் கண்மணி தான் அம்மா.. மற்றபடி அவர் அவளுக்கு சித்தியாக தான் நடந்துக் கொள்கிறாள்.. அவருக்கு என்னவென்றால் அவருடைய அக்கா ஓடிப்போனது போல மாலதி வளர்த்து இவள் எந்த தவறும் செய்து விடக்கூடாது அவ்வளவுதான் அவருக்கு வேண்டும்.. அதனால்தான் இவளுடன் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்கிறார்...

மாலதிக்கு எதிர்பாராத தருணத்தில் சதாசிவத்துடன் அவருக்கு நடந்த திருமணமும் அவரின் அக்கா குழந்தையான கண்மணி எங்கே அவருடைய அக்காவைப் போல ஆகி விடுவாளோ என்ற பதட்டமும் சித்தி வளர்ப்பால் குழந்தை இப்படியாகிவிட்டால் என நாலு பேர் நாலு விதமாக கூறி விடக்கூடாது என்ற படபடப்பும் எல்லாம் கலந்து கண்மணியிடம் ஒரு கொடூர அரக்கியை போலத்தான் அவர் நடந்து கொண்டு வருகிறார்..

அவரின் துன்பமும் சரி கோபம் சரி அதுக்கு பலிகடா ஆவது என்னவோ கண்மணி தான்.. தன் அம்மாவிடம் வாங்கிய அடிக்கு அழுதுகொண்டே கையில் உள்ள நகசாயத்தை பிளேடால் சுரண்டி கொண்டு இருந்தாள் கண்மணி.. இனி இந்த நக சாயத்தை பார்க்கும்போதெல்லாம் மாலதி அடிப்பார்.. அதனால் எதற்கு வம்பு என அதை நீக்கி விட்டாள்..

இப்படி எதற்கு எடுத்தாலும் அடி வாங்கும் கண்மணிக்கு அவள் வாழ்க்கையிலேயே ஒரே ஒரு ஆசை தான் இருக்கிறது.. அதுவும் இந்த வீட்டில் இருந்து தப்பித்து எங்கேயாவது சென்று விட வேண்டும் என்பது மட்டும் தான்.. அது நடக்குமா??



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top