Share:
Notifications
Clear all

நெஞ்சமெல்லாம் 34

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 5 months ago
Messages: 474
Thread starter  

அத்தியாயம் - 34

தொட வேண்டாம் என்றவள் கட்டுண்டு அவன் மார்பில் கிடக்க அவள் மீது காதல் கொண்டுள்ள அவன் அவளை விட்டு வைப்பானா அவளை மஞ்சத்தில் படுக்க வைத்தவன் அவள் மீது விழுந்தான் விழுந்தவன் அவள் முகத்தை பார்த்து "வாழ்க்கையை வாழ தெரியாமல் வாழ்ந்துட்டேன் டி மத்தவங்களுக்காக அவங்க செய்ததை எல்லாம் குழப்பி என் வாழ்க்கையை நான் என் இஷ்டப்படி வாழாமல் இருந்துட்டேன் இனி அப்படி இருக்க மாட்டேன்" என்றவன் அவளது கழுத்து வளைவில் புதைய அவளோ கூசி சிலிர்த்தாள்.

அவளது கழுத்தில் அவனது நாசியால் உரச அவளது செவியோரம் தனது மூச்சுக்காற்றால் கதை பேச அக்கதையை கேட்கும் அளவிற்கு அவளுக்கு திராணி இல்லாமல் போக அவளது விரல்கள் அவனை பலத்திற்கு அணைத்து அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவனின் அருகேயே அடைக்கலம் தேட தேன் சுரக்கும் அவளது இதழை சுவைத்தவனின் இதழ்கள் அவளது உடலோடு உடல் உரச பற்றி எரிந்த மோகத்தீயை அணைக்க இருவரும் அரும்பாடுபட காதலோடு கூடிய காமம் ஒன்று அங்கு அரங்கேறியது.

அவனை பொறுத்தவரை படிப்போ அறிவோ அழகோ பணமோ எதையும் அவன் கணக்கில் கொள்ளவில்லை.அவனை உண்மையாக நேசிக்கும் இதயத்தை தான் தேடினான். அது கிடைக்கவில்லை என்றதும் அவன் ஒதுங்கி இருக்கத்தான் தன்னை தானே பிறரிடம் தவறாக காட்டி அவன் வாழ்ந்து வந்தான்.

அவனுக்கு எல்லாமே பொய்த்து போனது போல தான் இருக்க இவர்களின் கல்யாணமும் அப்படி தானே நடந்தது எல்லாம் கலந்து அவன் அவனது தன்னிலையை இழக்க அவளோ அவன் வேதனையில் பங்கு கொள்ள நினைத்தவள் அவனை மனதில் ஏற்றி அவனுடன் அவள் வாழ்க்கையை வாழ நினைக்க பல புரிதல்கள் இல்லாமல் இருந்தாலும் அவள் சமாளித்து அவள் எப்படி இருந்தாளோ அப்படியே அவனுடன் கலந்து போனாள்.

அவன் அவளை பெரிதாக மாற சொல்லவில்லை. அவள் எப்படி இருக்கிறாளோ அப்படியே ஏற்றுக் கொண்டான்.அதன் படி அவளுடைய வெகுளித்தனத்தை இப்போது ரசிக்கிறான். அதற்கு உதாரணமாக அவளை கிட்டத்தட்ட அவர்கள் இணைந்து இரு வாரங்களுக்கு பிறகு வெளியே அழைத்துச் சென்றான்.

அது ஒரு பர்க்கர் ஷாப் அங்கு சென்றதும் அவனுடன் செல்வதே அவளுக்கு மிகவும் தித்திப்பாக இருக்க எங்கே போகிறோம் என்று கூட தெரியாமல் அவள் அவனுடன் செல்ல அவனோ பர்க்கர் ஷாப் அழைத்துச் செல்லவும் அங்கு ஒட்டப்பட்டு இருந்த படத்தை பார்த்தே என்ன உணவு என்பதை புரிந்துக் கொண்டவளோ, "எனக்கு வேண்டாம் மாமா" என்று மறுக்க அவள் எதற்காக கூறுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டவனோ, "நீ உனக்கு பிடிச்ச மாதிரி சாப்பிடு பரவாயில்லை" என்றான்.

அவளோ "இல்லை மாமா வேணாம்" என்க அவன் நிர்ப்பந்திக்கவும் அவள் அவளுக்கு பிடித்த வகையில் உண்ண அதை இந்த முறை பார்த்து ரசித்தான் அவன். மேலும் பர்க்கரை எப்படி உண்ண வேண்டும் என்று சொல்லி கொடுத்து அவளை உண்ண வைத்தான்.

அவனை பொறுத்தவரை அவனுக்கு அவள் குழந்தையாக குமரியாக மனைவியாக எல்லாமுமாக இருக்கிறாள். அவனும் அவளுக்கு காதலனாக கணவனாக ஆசானாக அனைத்து விஷயத்திலும் இருக்க அவன் ஒருவனால் மட்டும் தான் அவளை மாற்ற முடியும் என்ற நிலைக்கு அவளை கொணர்ந்து விட்டான்.

அதே போல தான் அவனும் அவள் மாமா என்றால் அடுத்தது மறு பேச்சுக்கு அங்கு இடம் இல்லை. ஒரு முன்னுதாரமாக வாழ இருவரும் முயன்று வருகின்றனர்...

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு பிறகு ஈரோட்டில் அவனது திருமணம் நடைபெற்ற அதே மண்டபத்தில் சொந்த பந்தங்கள் நிறைந்து இருக்க, தேர் போல தன் பெரிய வயிற்றை அசைத்தபடி அரக்கு வண்ண புடவை உடுத்தி அவள் நடந்து வர பெரியவர்கள் கண்களும் மனமும் நிறைந்து இருக்க காவ்யாவை இருக்கையில் அமர வைக்க பெரியவர்கள் ஒவ்வொருவராக வந்து நலங்கு வைத்துக் கொண்டு இருக்க அவனோ அவள் புடவைக்கு ஏதுவாக சட்டை அணிந்து மிடுக்காக நின்றுக் கொண்டு இருக்க அவன் பார்வை துளியும் அவனது மனைவியை விட்டு அகலவில்லை.

பொன் நிறத்தவள் மேலும் சிவந்து அவர்களது சிசுவை சுமந்து இந்த நேரத்தில் பெண்களுக்கே உரிய அழகோடு இருக்க அவளை அப்படியே அள்ளி அணைக்க துடித்த கையை அடக்கிக் கொண்டு இருந்தான்.

அவளோடு சிறு கோபம் அவனுக்கு அவன் பிரசவத்தை அங்கே வைத்துக் கொள்ளலாம் என்று கூற அவளோ அடம் பிடித்து இங்கே அவனை இழுத்து வந்து விட்டாள். அதனால் அவன் கோபம் கொண்டு இருக்க அதற்கு ஏதுவாக சுப்பு பாட்டி இப்போதும் இழுத்துக் கொண்டு இருக்க அதை கண்டவனோ அவளை பார்த்து முறைக்க அவளோ சிரித்தாள்.

சுப்பு மேலும் இழுக்க அவள் பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்க செல்லவும் அவரோ இருமி மூச்சுக்கு தவிக்க அதை கண்டவனோ, "என் கல்யாணத்துல நடிக்க ஆரம்பிச்ச இன்னும் நீ போற வழியும் இல்லை. இன்னும் இழுத்துட்டு தான் இருக்க. ரொம்ப நடிக்காத அப்புறம் சாயந்திரம் போடுற சீரியல் பார்க்க முடியாம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட போறாங்க" என்று அவள் அவ்வாறு கூறி முடிக்கவும் என்ன அதிசயமோ என்னவோ பாட்டி அமைதியாக எழுந்து அமர்ந்து விழாவை கண்டுகளிக்க அமர்ந்து விட்டார்.

அதை கண்டு அவள் சிரிக்க அதை கண்ட அவனோ அவள் அருகே நெருங்கி நின்று "சிரிக்காத டி படிக்காமல் இருக்க நீ தப்பிக்க தான் இங்கே ஓடி வந்தனு எனக்கு தெரியுது. ஆனால் நீ படிச்சே ஆகணும் சொல்லிட்டேன்" என்றான்.

"மாமா" என்று அவள் சிணுங்கவும், "ஊர்க்காரங்க முன்னாடி நீ படிச்சு பெரிய ஆள் எல்லாம் ஆக வேண்டாம். ஆனால் உனக்கு நீ தனியா நிக்க படிப்பு முக்கியம் மவளே நீ படிக்காமல் மட்டும் இருந்த அப்புறம் அவ்ளோ தான்" என கிட்டத்தட்ட மிரட்ட அவளோ ஐயோ மாட்டிக்கிட்டோமே என முழித்தாலும், "சரி மாமா இந்த கிழவி சத்தியமா நான் படிப்பேன் மாமா" என்றாள்.

"அதையும் பார்க்கலாம் நீயும் அந்த கிழவியும் இதுல ஒண்ணு தான்" என்று கூறியவனுக்கு அவளை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை அதை எப்படியாவது நிறைவேற்றியே தீருவான் அவளுக்கு கிடைக்காத அங்கீகாரம் முதல் அனைத்தும் அவளுக்கு கிடைக்க வைக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறான் துருவன்...

அதற்குள் அவனது முறை வர அவனை நலங்கு வைக்க வர சொல்ல அவனோ தன் பொய் கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து அன்றலர்ந்த மலர் போல இருக்கும் அவளுக்கு சந்தனத்தை எடுத்து பூசி விட்டவன் அவளது நெற்றியோடு நெற்றி முட்ட அவளோ அவளது நெற்றியை இலேசாக தூக்கி காட்ட அவள் எதற்காக இதை செய்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவனும் அவளது நெற்றியில் இதழ் பதித்தான்...

அவளும் அதற்கு ஈடாக ஊரார் முன்னிலையில் தன் கணவனின் கன்னத்தில் இதழ் பதிக்க அதை கண்டு பெரியவர்கள் தான் கண்ணை மூடிக் கொள்ள வேண்டி இருந்தது. அவனுக்கு அவள் என்றால் உயிர் அவள் எப்படி அவன் மீது அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறாளோ அது போன்றே அவனும் அவள் மீது அன்பை வைத்திருக்க இருவருக்கும் இடையில் காதல் கரைபுரண்டு ஓடியது என்று கூறினால் மிகையாகாது.

பெரியவர்கள் அகம் மகிழ சிறியவர்கள் இன்புற்று இருக்க இவர்கள் இருவரும் எப்போதும் இன்பமாய் வாழ வாழ்த்தி விடை பெறுவோம் நன்றி வணக்கம்...

* முற்றும்*



   
Quote
 Para
(@para)
Trusted Member
Joined: 3 weeks ago
Messages: 64
 

🥰🥰🥰🥰🙏



   
ReplyQuote
error: Content copy warning!!
Scroll to Top