நெஞ்சமெல்லாம் 1
நாயகன் : துருவன் வணங்காமுடி
நாயகி : காவ்யாஞ்சலி சாரங்கபாணி
அத்தியாயம் : 1
இளம்காலை பொழுது சூரியன் உதிக்க இன்னும் ஒரு மணி நேரமாவது இருக்கும்.இருட்டு இன்னும் விட்டபாடில்லை. சூரியன் உதிக்குமா என்று கூட சரியாக தெரியாது ஏனெனில் மழையும் இன்னும் விட்டபாடில்லை கிட்டத்தட்ட இரண்டு நாட்களாக இப்படி தான் பெய்துக் கொண்டு இருக்க இனியும் பெய்து தீர்ப்பேன் என அடம் பிடித்து பெய்துக் கொண்டு இருக்க அது ஒன்றும் எனக்கு கவலை இல்லை என்பது போல ஒருவன் ஈரோட்டில் ஒரு பிரசித்திபெற்ற ஒரு மண்டபத்தில் மணமகனாக அமர்ந்து இருந்தான்.
அமர்ந்து இருந்தானா இல்லை அங்கு கூடி இருந்த அனைவராலும் அமர வைக்கப்பட்டானா என தெரியாது. ஆனால் அவன் முகம் தனக்கு முன்னால் எரிந்துக் கொண்டிருக்கும் ஹோம குண்டத்தை விட அதிகமாக கோபத்தால் எரிந்துக் கொண்டிருந்தது.
அது ஒரு அவசர கல்யாணம் திட்டமிடல் ஏதுமின்றி அவசரமாக அந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க பணமுதலைகளின் வீட்டு திருமணம் என்பதால் என்னவோ யாருக்கும் எந்த குறையும் பெரிதாக தெரியவில்லை அவன் ஒருவனை தவிர.
அந்த திருமண மண்டபத்தில் இருக்கும் சமையல்காரன் முதல் இதோ தன்னருகே அவன் கோபத்துக்கு ஏதுவாக ஹோம குண்டத்தை நெய் விட்டு எரித்துக் கொண்டே அவன் கண்ணை எரிச்சல் அடைய வைத்துக் கொண்டு இருக்கும் இந்த ஐயர் வரை அவனுக்கு பிடிக்கவில்லை...
அவனால் எழுந்து போக முடியாத சூழ்நிலை காரணம் எமோஷனல் பிளாக்மெயில் அவனது குடும்பம் முழுவதும் செய்த எமோஷனல் பிளாக்மெயில் அவனை இங்கு வர வைத்திருக்கிறது.
இது எல்லாம் அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. அது வேறு விஷயம் ஆனால் அவனது அம்மா பெற்ற மகன் என்று கூட பாராமல் அவனது காலில் விழுந்து, "இந்த திருமணத்தை நிறுத்தி விடாதே" என்று கூறும் போது அவனால் தவிர்க்க முடியவில்லை.
அவனாக நிறுத்த கூடாது என்று அவன் எண்ணியதாலும் இந்த திருமணம் குடும்ப வாழ்க்கை ஒரு கூட்டுக்குள் வாழ்வது இனி அவனுக்கு ஆகாத ஒன்று என அவனாக விரும்பியதாலும் அவன் அவன் போக்கில் ஒரு வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துக் கொண்டு இருந்தவனின் தலையில் ஒரு கூடை மிளகாய் பொடியை கொட்டியது போல இருந்தது துருவனுக்கு.
ஆம் அவன் துருவன் வணங்காமுடி எல்லோரும் அவனை அழைப்பதோ துருவ்...வயதோ இருபத்தி எட்டு தந்தையின் தொழிலை தற்போது பார்த்து வருகிறான் அவனுக்கு இந்த தொழிலை அவனது பெற்றோர்கள் பார்க்க சொன்ன போதும் கூட அவனுக்கு அதில் பெரிதாக விருப்பம் இல்லை.
தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி தன்னை சுற்றி வேலி போடும் வேலையோ என்று தான் எண்ணிக் கொண்டிருக்க அதே போன்ற வேலை தான் கல்யாணம் என்ற பெயரில் தற்போது நடந்துக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் அவனுக்கு எழாமல் இல்லை.
ஏனெனில் கிட்டத்தட்ட பதினாறு வயதில் தவறான பாதையில் இருந்தவன் வயது இருப்பதியெட்டு ஆகியும் இனியும் அப்படி தான் இருக்கிறான் குடும்பத்தின் மீது மரியாதை உண்டு அதற்காக அவனுடைய சொந்த வாழ்க்கையில் தலையிட கூடாது என்று அவனுடைய இருபத்தி மூன்று வயதில் நேரிடையாகவே இதுவரை அவனது தந்தையிடம் எதிர்த்து பேசியிராதவன் அன்று பேசி விட இதை எதிர்பார்க்காத வணங்காமுடி அன்றிலிருந்து மகனிடம் ஒரு அடி தள்ளி நின்றே பேசுகிறார்.
அது தான் அவருக்கும் மரியாதை என்று எண்ணி விட்டாரோ என்னவோ...அவனது தாய் தாமரை தான் மகனிடம் நீ செல்லும் பாதை தவறு என்று கூற அதை அவன் காதிலேயே போட்டான் இல்லை.
வீட்டில் இருந்தால் ஏதாவது பேசி அவனை தொல்லை செய்வார்கள் என எண்ணி அவனுக்கு என்று தனியாக ஒரு பிளாட் பார்த்து குடியிருக்க துவங்கியவன் இன்று வரை அங்கு தான் இருக்கிறான். ஆனால் இவர்களிடம் இன்று வசமாக மாட்டிக் கொண்டான்.
பிறர் பார்வைக்கு எப்படியோ அவனை பொறுத்தவரை அவன் சரியே அவன் ஒன்னும் யாருக்கும் தெரியாமல் அவன் வாழ்க்கை பக்கத்தை மறைத்து வைக்கவில்லையே நான் இப்படி தான் என வெளிச்சம் போட்டு காட்டியும் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்து இருப்பதை பார்த்தால் என்னவென்று சொல்வது கல்யாண பெண் முதல் அவளது தந்தை வரை எல்லாம் பேசியாகிற்று.
அவள் என்னவோ அவன் கூறும் போது தலையை தலையை ஆட்டினாள். ஆனால் இந்த நொடி வரை ஒன்றும் நடந்தபாடில்லை.
இனி ஒன்றும் செய்ய முடியாது என்பது இல்லை இப்போது கூட போங்கடா என எழுந்து சென்று விடுவான் ஆனால் இந்த எமோஷனல் பிளாக்மெயில் அது அவனுக்கு தடையாக இருந்தது.
அவன் தந்தை தான் உடல்நிலை சரியில்லாதவர் என்று பார்த்தால் இப்போது வேறு ஒன்றும் கூட்டு சேர்ந்துக் கொள்ள அவன் எதிரே வேறு அமர்ந்துக் கொண்டு அவன் உயிரை வாங்கிக் கொண்டு இருந்தது. அதை பார்க்க பார்க்க கழுத்தை அறுத்து கொன்று விடலாமா என்று கூட அவனுக்கு ஆத்திரம் எழுந்தது.
சாவு என்பது இன்று இவர்களுக்கு வரும் நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரும் இவ்வளவு ஏன் எனக்கு மட்டும் சாவு வராதா என்ன அதை வைத்து பிளாக் மெயில் செய்யும் இந்த பாதகர்களை என்ன செய்ய என்று நினைக்கும் போது தான், "பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ" என அவனது செவிப்பறையை கிழித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஐயர் கத்த,
அங்கே மணமகள் அறையில் மணமகளான காவ்யாஞ்சலி என்கிற காவ்யா இரண்டு மசால் வடையை மொக்கிக் கொண்டு இருக்க அவள் வாழ்ந்த ஊரிலேயே மிக பெரிய பார்லர் கடை வைத்திருக்கும் கனகா அக்கா அவளுக்கு கரகாட்டத்துக்கு செல்வது போல அலங்காரம் செய்துக் கொண்டு இருக்க அவளது தாயோ, "கனகா கொஞ்சம் கம்மியா பவுடரை போடு அவ மூஞ்சியே தெரிய மாட்டேங்குது" என்க
மசால் வடையை மொக்கிக் கொண்டிருந்தவளோ தன் தாயை முறைத்து, "அக்கா நீங்க பண்ணுங்க அக்கா இவங்களுக்கு எல்லாம் என் மேல பொறாமை" என்று கூறியவள் அவளது தாயை பார்த்து, "எங்க ஊருல இந்த அக்கா தான் எல்லோர்க்கும் மேக்கப் பண்ணுவாங்க தெரியுமா??" என்று வம்புக்கு நிற்க,
அதை கேட்டு கற்பகமோ, 'ஆமாம் பொறாமைப்பட்டுட்டாலும்' என்று எண்ணியவர் தன் மூத்த மகளான கீதாவை பார்க்க அவளோ தனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்பது போல அவள் இருக்க 'ஒண்ணும் ஒவ்வொரு விதமா இருக்கு ஒண்ணு ஓவரா படிச்ச திமிரை காட்டுது ஒண்ணு ஒண்ணுமே படிக்காமல் என் உயிரை வாங்குது' என எண்ணிக் கொண்டவர் எப்படியோ துருவன் இவளை மாற்றினால் போதும் என எண்ணிக் கொண்டார்.
மீண்டும் ஐயர், "பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ நாழி ஆகிடுத்து" கூற
"அடியே அப்புறம் தின்னு தொலை ஐயர் கூப்பிட்டுட்டாங்க வா" என்க அதற்குள் தின்னு முடித்தவள் அவளது கனகா அக்கா செய்த மேக்கப்பை பார்த்து சிலாகித்தவள், "அக்கா அந்த ரோஸ் பவுடரை மட்டும் கொஞ்சம் கன்னத்துல போட்டு கொஞ்சம் ஜிகினா பொடியை தூவி விடுங்க அக்கா, அப்படியே மசால் வடை தின்னதுல லிப்ஸ்டிக் போயிடுச்சு அக்கா அதையும் போட்டு விடுங்க அக்கா" என்க
அதை கேட்டதும் கற்பகம் தலை தெறிக்க, "கனகா அதெல்லாம் வேணாம் மா இப்போவே எல்லாம் அதிகமா தான் இருக்கு ஐயர் வேற கூப்பிட்டுட்டாங்க" என்று கனகா மேக்கப் சாதனங்களை எடுக்கும் போதே கற்பகம் தடுக்க…
கனகாவோ, "அக்கா ஏன் பயப்படுறீங்க? என்னோட மேக்கப் பத்தி தெரியாமல் பேசறீங்க நான் மேக்கப் பண்ணினா போதும் மாப்பிள்ளைங்க எல்லாம் பொண்ணுங்க அழகுல மயங்கிடுவாங்க" என்று கூறி சிரிக்க
"மாப்பிள்ளை இவளை பார்த்து ஓடாமல் இருந்தா சரி மா" என்று மேக்கப் செய்யாமல் வர மாட்டேன் என்று நின்ற மகளை ஒரு வழியாக இழுத்து வந்த கற்பகத்துக்கு அவரது இளைய மகள் காவ்யா இந்த நிலையில் வளர்ந்து இருப்பதற்கு தான் மட்டுமே காரணம் என நொந்துக் கொண்டார்.
