மந்தாரம் 15
மந்தாரம்: 15
ஒரு பொன் மாலை பொழுதில் இருந்து இரவுகளை தொட சில தருணங்களே உள்ள நிலையில் தேவிகா சற்று பரபரப்பு ஆனாள்.. அவனுக்காக அவள் பார்த்து பார்த்து சமைத்த உணவை எல்லாம் ஒரு முறை சரி பார்த்து கொண்டு அங்கிருந்து கிளம்ப ஆயத்தம் ஆனாள்..
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவன் யார் என்றும் அவன் என்ன செய்கிறான் என்றும் புரிந்து கொண்டவளுக்கு அவன் மீதான மரியாதையும் யாரும் அறியாத அவன் மீது அவள் வைத்துள்ள காதலும் நிறையவே இருக்கிறது..அவனின் இலகுவான பேச்சும், அழகும், அவனின் தொழில் மீதான ஆர்வமும், வேலை என வந்து விட்டால் எந்த அளவுக்கு அவன் ஆர்வமாக அதில் ஈடுபாட்டோடு இருக்கும் அவனுடைய குணமும் அவளை வெகுவாக ஈர்த்து இருந்தது..
அதனாலேயே அவன் மீது அவள் கொண்ட நேசத்தை வெளியே சொல்லாமல் மறைத்து அவருக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் அவள் செய்து வருகிறாள்..
"சார்.. சார் நான் சமைச்சு முடிச்சிட்டேன்.. டைம் ஆச்சு நான் என்னோட வீட்டுக்கு போறேன்.. எல்லாத்தையும் மிச்சம வைக்காமல் சாப்பிடுங்க" என தேவிகா மாலை அவனுடைய வீட்டுக்கு வந்து எல்லாம் சமைத்து முடித்தவள் எல்லா வேலையும் முடித்துவிட்டு செல்வதற்காக துரிதமானாள்..
ஆனால் இவள் பேச பேச அதை கேட்க அங்கே அவன் இல்லை.. அவனுடைய அறையில் அவன் இருந்தான்.. அவள் கூறியதற்கு எந்த பதிலும் அவன் தரவில்லை..
இவளோ நேரமாக செல்லவில்லை என்றால் பாட்டி திட்டுவார்கள் இருட்ட வேற துவங்கி விட்டது என்று கருதி மீண்டும், "சார்.. சார்.. நான் போகட்டுமா?? எனக்கு டைம் ஆச்சு..உங்களுக்கான எல்லா விஷயங்களையும் செய்து முடிச்சிட்டேன்" என்று மீண்டும் கூற அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போனது..
"என்ன இவரு?? எங்க போனாரு இருக்காரா?? இல்லையா?? கதவை வேற சாத்தி வச்சிருக்காரு.. சொல்லாம போக மனசு வரல..சரி சொல்லிட்டே போகலாம்" என்று கூறி அங்கிருந்த எல்லா இடத்திலும் அவனை தேடி பார்த்து கலைத்து இறுதியாக அவனுடைய அறை கதவு லேசாக திறந்திருக்க மெல்ல அவள் திறக்கவும் கதவின் அருகே சுவற்றில் ஒரு பரண் போல இருந்தது..
அந்த பரணில் அவன் தன் கைகளை தூக்கி அதில் பிடித்து தொங்கிக்கொண்டு எக்ஸர்சைஸ் செய்து கொண்டு இருந்தான்..ஆம் கண்களை மூடி தியானத்தில் இருப்பது போல அவன் இருந்தாலும் அப்படியே தொங்கியபடி புல் - அப் செய்து கொண்டு இருந்தான்..
இவள் இதை பார்த்ததும் வாயை பிளந்து பார்த்தாள்.. ஆம் இந்த குளிரிலும் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தவன் தேகத்தில் முத்து முத்துகளாய் வியர்வை மணி துளிகள் இருக்க,
அதை கண்டவள், "இந்த குளிரில் இவருக்கு எப்படி வியர்க்குது பாரு??" என எண்ணியவள் பார்வை அவள் முன் இருக்கும் அவனுடைய காலில் துவங்கி, அப்படியே படிப்படியாக மெல்ல அவனின் பரந்து விரிந்த முதுகுக்கு போய் அப்படியே அவனின் மேனியை தழுவியது.. அவளின் பார்வை மெல்ல திருட்டு பார்வையாக மாறியது.. அவளுக்கு எதுவுமே புரியவில்லை.. தான் ஏன் அவனிடம் மட்டும் இப்படி இருக்கிறோம் என விளங்காமல் தான் அவள் இருந்தாள்..
அவனும் இவள் சத்தமே இல்லாமல் வந்ததால் அவள் உள்ளே வந்தது அவனுக்கு தெரியவில்லை..மேலும் அவனும் தன் மனதை ஒரு நிலை படுத்தி தியானத்தில் இருந்தான்..
அப்படி இருக்க, அவள் இவனின் உடற்கட்டை ரசித்து கொண்டு தான் எதற்கு வந்தோம் என்பதை மறந்து போய் அவள் நின்று கொண்டு இருக்க அப்போது எதிர்பாராதவிதமாக சுவற்றில் ஓட்டி இருந்த பல்லி ஒன்று சட்டென்று அவள் மீது விழுந்தது..
அது விழவும் இவள் பதட்டத்தில் துள்ளி அவளின் தாவணியை விலக்கி அதை தட்டி விட்டவள் ஐயோ அம்மா என குதித்து அவனுடைய காலை கட்டிக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் அவனுடைய காலை பிடித்து அவள் இழுத்து விட்டாள்..
இந்த சத்தத்தையும் அவளுடைய செய்கையையும் கண்ட அவனின் தியானம் தடைபட அவனோ எதிர்பாராமல் இவள் செய்த செயலால் நிலை தடுமாறி தன் பிடியை விட அவனும் நிலை தடுமாறி அவள் மீது சரிந்தான்..
அவள் அவன் மீது விழுந்ததால் அவளும் நிலை தடுமாறி கொண்டு கீழே விழுந்தாள்..
இப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்து இருக்க, அவனின் வியர்வையால் நனைந்த தேகம் அவளின் உடலை குளிர்விக்க, அவளோ, அந்த குளிர் தேகம் அவளின் சூடான தேகத்தில் பட்டு அவளின் உடலை சிலிர்க்க வைக்க அவளின் நாடி நரம்பு எல்லாம் என்னென்னவோ அவளை செய்து அவளை தவிக்க வைத்தது..
அவனுக்கும் இலேசான அதிர்ச்சி தான் இவளால் விழுந்து விட்டோம் என்ற கடுப்பு அவனுக்கு வந்தாலும் அவன் விழுந்த இடம் அவளின் தேகம் என்பதால் அவனுடைய கோபம் எல்லாம் கரைந்து அவளின் தேகத்தில் பதிய ஆரம்பித்தது..அவனும் பட்டென்று எழுந்து கொள்ள எல்லாம் முயற்சிக்கவில்லை..
அவள் மீது அவனது மூச்சு காற்று மோத, தன் மீது அவன் விழுந்து இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் அவள் திகைக்க, பெண்ணின் வாளிப்பான தேகத்தில் விழுந்து இருக்கும் அவன் அப்படி ஒரு உத்தமனாக இருப்பானே ஆனால் அவன் இந்நேரம் அவளிடம் இருந்து விலகி இருப்பான்..
ஆனால் விது அப்படிப்பட்ட ஒரு உத்தமன் எல்லாம் இல்லை.. அவனாக எந்த பெண்ணையும் தேடி செல்ல மாட்டான்.. அவனைத் தேடி வரும் பெண்ணையும் அவன் விட மாட்டான்.. அப்படிப்பட்ட ஒருவன் தான் அவன்..
அப்படி இருக்க, அவள் மீது உரசி அவள் தேகத்தில் அவனுடன் பதிந்திருக்க மருண்டு விழிக்கும் காந்த விழியில் சொக்கி போக அவளின் சிவந்த அதரங்கள் அவனை சுண்டி இழுப்பது போல தோன்றவும் அவளோ அவன் ஏதாவது தவறாக எண்ணிவிடுவானோ என எண்ணி, "அது வந்து சார்.. பல்லி என் மேல விழுந்துடுச்சா அது தான் பயத்தில் கத்தி இப்படி எல்லாம் ஆகிடுச்சு சார்.." என அவள் பக்கத்து நியாயத்தை அவனிடம் கூற, அதை கேட்ட அவனும் அவளை அழுத்தமாக பார்க்க,
அவனின் பார்வையை கண்டவள், "சார் என்னை மன்னிச்சிடுங்க சார்.. எப்ப பார்த்தாலும் நான் விழுந்துகிட்டே இருக்கேன்.. இந்த முறை நீங்க என் மேல விழுந்து இருக்கீங்க" உங்களையும் விழ வச்சுட்டேன் என்னை மன்னித்துவிடுங்க சார்" என்று கூற அதைக் கேட்ட அவனும் மென்மையாக தன் கோபத்தை கைவிட்டு மெல்ல எழ போகும் போது அவனுடைய கைகள் அவளின் முந்தானையில் பதிந்து இருக்க அப்படியே அவளின் தாவணி விலகியது..
அதில் கண்ட அவளின் வாளிப்பான அழகு அவனை சொக்க வைக்க மீண்டும் வலுக்கி விழுவது போல அவள் மீதி சரிந்தவன் இப்போது மொத்தமாக அவளின் ரோஜா குவியல்கள் மீது மோதி அவளை தவிக்க வைத்து இருந்தான்..
அவனின் செய்கையால் தேவிகா மேலும் அவதியுற அவளின் காதல் கசிந்து உருகிய பார்வை அவனின் மீது பட்டு ஏன் இப்படி என்னை அவதிப்பட வைக்கிறாய்?? கொஞ்சமாக என்னை நினைத்து பார்க்க கூடாதா?? இன்னும் நெருங்கினால் என் ஆழ்மனதுக்குள் இருக்கும் உன் மீதான நேசம் வெளியே வந்துவிடும் தயவு செய்து எழுந்து விடு என்று மானசீகமாக கண்கள் வழியாக அவள் கேட்டாள்..
அவள் மீது அவன் விழவும் அவனை விலக்காமல் அவனை அவள் பார்ப்பதை அவன் கவனித்து விட்டான்.. அந்த நொடி அவனின் பார்வை மாறி அவளின் நெற்றி, கண், சீரான நாசி, கன்னம் என வலம் வர துவங்கியது.. அவள் அவனது தொடுகையை ரசிக்கிறாள் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்..
அதோடு நில்லாமல் அவளின் இதழ்கள் மீது அவன் பார்வை பட, அவளை மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கு அவன் அருகே போய் அவளின் சிவந்த அதரங்களை தொட்டு விட்டான்.. ஏற்கனவே அவள் அறியாமல் அவன் மீது அவள் வைத்துள்ள நேசம் வெளியே வர துவங்கி இருக்கும் நேரம் இவன் இதை செய்யவும் அவள் அவ்வளவு தான் மொத்தமாக அவன் பக்கம் சரிந்து தன் கண்களை மூடிக் கொண்டாள்..
இரண்டு அதரங்களும் உரசிக்கொள்ள பற்றி எரிந்த மோகத் தீ அங்கு வித்தையை காட்ட காமனின் பேரனான விதுவுக்கு ஒரு பெண் பார்வையால் எதை கூறுகிறாள் என்பதை புரிந்து கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு அவன் ஒன்றும் முட்டாள் இல்லையே..
அவளின் விழிகள் திகைக்கும் முன்னே அவன் இதழ்கள் முன்னேறியது..
ஏற்கனவே அவளின் மனதுக்குள் லேசாக குடி கொண்டிருக்கும் விது அவளின் இதழ்களை ருசி பார்க்க அவளால் அதை விலக்கவும் முடியவில்லை..
அவனிடம் இருந்து விலகவும் முடியவில்லை.. தவிக்க இதழ்கள் உரசியது தான் எதிர்பாராத விதமாக அதன் பின் நடந்த முத்த யுத்தத்திற்கு பொறுப்பு அவனே ஆவான்..
அவளையும் குறை ஒன்றும் சொல்ல முடியாது.. அவளும் அந்த முத்த யுத்தத்திற்கு அனுமதி வழங்கி, அமைதியாக அவனோடு கலந்து இருப்பதும் ஒரு வகையில் அவளும் அதற்கு உடந்தை தானே..
அப்படி அவளும் அவனோடு இதழ் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அவனின் கைகள் அவளின் ஆடைகளை விலக்க துவங்கி இருந்தது.. அவளோ உணர்ச்சிகளின் பிடியில் அவள் தமாக தன் கைகளை தூக்கி அவனின் வியர்வையால் குளித்த முதுகில் கோலம் போட ஆரம்பித்து விட்டாள்..
அந்த நொடி அவள் என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்பதை மறந்தாள்.. அவன் தான் ஒரு பெண் பித்தன் என்றால் அவன் மீது அவன் யாரென்றே தெரியாமல் அவனோடு கூடிக் கலக்கும் அவளை என்னவென்று சொல்வது?? அவன் யார் என்ன எதுவும் தெரியாமல் அவனை கண்டதும் அவன் மீது இனம் புரியாமல் எழுந்த கவர்ச்சியை காதல் என அவள் எண்ணி அவனுக்கு அவளையே கொடுக்க எண்ணி விட்டாள் தேவிகா..
