Share:
Notifications
Clear all

எனதுயிரே 23

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 11 months ago
Messages: 108
Thread starter  

.

அத்தியாயம் : 23

    மிகக் கடினமான முடிவை ஒன்றை தாமரை அவர் வாழ்க்கையில் எடுத்தார்.. அவருக்கு அறிவழகனை பிரிந்து வருவதில் எந்த வருத்தமும் இல்லை ஆனால் அகிலனை பிரிந்து வருவதில் பெற்ற தாயாக அவருக்கு வருத்தம் இருந்தது உண்மைதான்.. ஆனால் நெடுஞ்செழியன் பேசிப்பேசி அவரின் மூளையை செலவு செய்ததிலும் நெடுஞ்செழியன் மீதுள்ள காதலிலும் அறிவழகன் மீதுள்ள வெறுப்பிலும் இப்பொழுது தாமரை நெடுஞ்செழியன் ஆக பிறருக்கு அறியப்படுகிறார்..

நெடுஞ்செழியன் அறிவழகனுக்கு கொடுத்தது மிகப்பெரிய அடி என்று கூறினால் மிகையாகாது.. அவ்வளவு பெரிய காரியத்தை தான் நெடுஞ்செழியன் அசராமல் செய்தார்..வேண்டும் என்று தான் இதை செய்தார்..

ஆம் தன்னை கைது செய்ய வைத்த அறிவழகனையும் தன்னிடம் மோதிய அறிவழகனையும் பழிவாங்க அறிவழகனின் மனைவியான தன்னுடைய காதலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் அந்த அசிங்கத்தை அறிவழகனுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தார்.. கொடுத்துவிட்டார்.. அதில் அவர் நினைத்தது போல ஜெயித்தும் விட்டார்...

மற்றபடி தாமரை அதை சொல்லி அவர் கொடுமை எல்லாம் செய்ததில்லை... ஏனெனில் தாமரை அவரின் காதலி.. தன் காதலியை மீண்டும் தன் வாழ்க்கையில் இணைந்தது அவருக்கு மகிழ்ச்சி தான்..

தாமரைக்கும் இந்த வாழ்க்கை பிடித்துப் போனது.. ஆடம்பரம் சௌகரியம் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என நினைத்திருந்தாரோ அது போல ஒரு வாழ்க்கை மற்றவர்கள் அவரை என்ன பேசுகிறார்கள் என அவர் யோசிக்க மறந்தார்... நெடுஞ்செழியன் அருகே நிற்பதால் யாரும் அவரை எதிர்த்து கேள்வி கேட்பதும் இல்லை அதனாலேயே அவருக்கு அந்த வாழ்க்கை பிடித்து போனது..

அந்த காதலுக்கு பாத்திரமாக சாணக்கியன் பிறந்தான்.. சாணக்கியனால் அவர் அகிலனை மறந்தார்.. சாணக்கியன் அப்படியே தன் தந்தையை உரித்து பிறந்திருக்க, நெடுஞ்செழியனும் மிகவும் சந்தோஷமாக தன் மகனோடும் மனைவியோடும் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தார்..

மகன் பிறந்த நேரமோ என்னவோ தெரியவில்லை அவர்களுடைய அரசியல் வாழ்க்கை மிகவும் உயரத்துக்குச் சென்றது.. யாரும் தொட முடியாத எல்லைக்கு கார்மேகமும், நெடுஞ்செழியனும் சென்றனர்...

அதேநேரம் அறிவழகன் அந்த இடத்தை விட்டு காலி செய்து வேறொரு இடத்துக்கு சென்று விட்டார்..அவர் வாழ்க்கை இருண்டது  போல ஆகி விட்டது..அனைவரும் மனைவி போன விசயத்தை பேசுவது போல அவருக்கு இருந்தது..மகனை வைத்து கொண்டு மகன் தினமும் அம்மா எங்கே என அழுது அழுது அவன் சோர்ந்து இருப்பதை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை...தன் மகன் மிகவும் இறுகிப்போய் விட்டான் என்பதை அவர் உணர்ந்தார்..

ஏனெனில் ஆரம்பத்தில் அம்மா எங்கேயோ சென்றுவிட்டார் என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு தன் அம்மாவின் முகமும் மறக்கவில்லை.. தந்தையின் கவலையும் மறக்கவில்லை.. காலப்போக்கில் தன் தாய் தன் தந்தையை விட்டு சென்று விட்டார் என்பதை புரிந்து கொண்ட அவனுக்கு தன் அம்மாவின் மீது மிகவும் கோபம் வந்தது..அவனை பொறுத்தவரை அவனை பெற்றவளை கொல்லும் ஆத்திரத்தில் தான் இருந்தான்..

அதைவிட அவன் கேட்ட வார்த்தைகள் தான் அவன் இறுக்கத்திற்கு மிகவும் காரணமாகவும் அமைந்தது..ஆம் இவனை யார் பார்த்தாலும் இவள் அம்மா தான் ஓடி போனவள் என முத்திரையை அவன் மீது குத்தி விடுவார்கள் அதை கேட்கும் போது அவன் வருந்தி அவனுள்ளே ஒடுங்கி தான் வாழ்ந்து கொண்டு இருந்தான்..என்ன ஆனாலும் சரி தன் அம்மாவை கொல்ல வேண்டும் என்று ஆத்திரத்தில் தான் அவன் இருந்தான் அகிலன்... ஏனெனில் தாமரை அவருடைய சுகத்துக்காக பெற்ற மகனை பற்றி யோசிக்காமல் சென்று விட்டார்..அது சிறு வயதில் இருந்து அவன் மனதில் ஆறா வடுவாக இருந்தது..

ஆரம்பத்தில் வருத்தத்தில் இருந்த அறிவழகன் கூட போக போக அதில் இருந்து வெளியே வந்து விட்டார்.. ஆனால் அகிலன் அப்படி அல்ல அவனின் மனதில் ஆறா வடுவாக இருந்தது..எப்போதாவது எங்கேயாவது அவரை பார்த்தால் நன்றாக கேள்வி கேட்க வேண்டும் என நினைத்து இருந்தான்..

தாமரை மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடு தான் நெடுஞ்செழியன் மற்றும் சாணக்கியன் மீது அவனுக்கு இருக்கிறது.. அதனால் மற்ற அனைவரையும் விட்டாலும் நெடுஞ்செழியன் என்ன செய்கிறான் ஏது செய்கிறான் என நோண்டி நோண்டி ஆராய்ந்து ஏதாவது வழியில் அவரை ஜெயிலுக்குள் தள்ள முடியுமா பார்த்து கொண்டு இருந்தான்..

அதன் படி தன் தந்தையுடன் இணைந்து ஒரு பக்கமாக நெடுஞ்செழியனின் இல்லீகல் பிசினஸ் எல்லாம் எப்படி நடக்கிறது என குறிப்புகளும் ஆதாரங்களும் சேகரித்துக் கொண்டே வந்தான்..

அப்படி இருக்க, அகிலனே எதிர்பார்க்காத வண்ணம் சாணக்கியன் அமிர்தாவின் மீது மோதி இருக்க அதுவும் அவனின் கோபத்துக்கு ஆளானது.. என் வாழ்கையில் மோதுவதே இவர்களுக்கு பிழைப்பா என எண்ணினான்..

இனியும் பொறுமை இல்லை எனக் கருதி பப்புக்கு சென்றவன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சாணக்கியன் பேசியதை ஏற்று கொள்ள முடியாமல் அவனுடைய காதில், "ஏன் டா கேடுகெட்ட அப்பனுக்கும், மகா கேவலமான ஒரு அம்மாவுக்கும், பிறந்த உனக்கே இவ்வளவு இருந்தா ஒரு அப்பனுக்கு பிறந்த எனக்கு எப்படி இருக்கும்? போய் உங்க அம்மா கிட்ட உன்னோட அப்பன் கிட்ட வாழ்வதற்கு முன்னாடி யார் கூட வாழ்ந்துட்டு இருந்தானு போய் கேளு?..  எல்லாம் இருக்கு என்கிற மெதப்புல ஆடாத ஒரு சாக்கடைக்கு பிறந்தவன் தான் நீ...அந்த சாக்கடை வேறு யாருமில்லை உன்னோட அம்மா தான்.. உன்னோட அப்பன் ஊரை ஏமாத்துறான் அப்படின்னா உன்னோட அம்மா அவங்களோட கடந்த கால வாழ்க்கையை விட்டு பணம் தான் முக்கியம்னு ஓடி போனவள் தான் உன்னோட அம்மா" என்று தாமரையை தாக்கி பேசினான்..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top