அதிகாயன் 22

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 3 months ago
Messages: 332
Thread starter  

அத்தியாயம் : 22

அவள் அந்த வீட்டின் உரிமையாளரின் மனைவி எல்லாம் இருந்தும் கண்களில் ஏதோ ஒரு சோகம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது அது எதனால் என அவளுக்கு புரியவில்லை. அவள் இந்த வீட்டிற்கு வந்து எட்டு மாதம் தான் ஆகிறது ஏழு மாதம் முன்பு தான் அவளுக்கு திருமணம் ஆகி இருந்தது. இப்பொழுது ஆறு மாத கருவை சுமந்துக் கொண்டு இருக்கிறாள் பிறகு என்ன சங்கடம் என்று கேட்டால் அவள் அவளுடைய கணவனை சந்தித்து ஆறு மாதங்கள் ஆகின்றன இடையிடையே தாயின் நலனையும் அவளுடைய நலனையும் யாரோ மூலமாக கேட்டு அறிவான். ஆனால் இன்றுவரையும் அவளிடம் எதுவும் அவன் பேசிக் கொள்ளவில்லை அது திருமணம் ஆகி இருந்த காலம் முதல் இப்படித்தான் அவளும் அவனிடம் பெரிதாக பேசியதில்லை. அவளும் அவனிடம் பேசியது இல்லை. ஆனால் இருவரும் ஒன்று சேர்ந்து அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெற்றோர்கள் ஆகி இருக்கின்றனர்.

அவள் கருவுற்ற விஷயத்தை தன் கணவனிடம் கூற வேண்டும் அவனது முகத்தை பார்த்து கூறவேண்டும் என காத்திருக்கிறாள். அதனால் அவளுடைய மாமியாரிடம் கூட தன் கணவனிடம் கூறக்கூடாது என்று செல்லமாக கேட்டுக்கொள்ள அந்த வயதான பெண்மணிக்கும் தன் மருமகளின் ஆசை புரிந்து போக மகன் பேசும் பொழுதெல்லாம் எப்போ வருவ என்ற வார்த்தை மட்டும்தான் அந்த தாயின் வாயிலிருந்து வரும் அவனும் வருகிறேன் என்று கூறிக்கொண்டே ஒப்பேற்றி வருகிறான் அவன் ராவணன்... அவனைக் காணாமல் அவன் மனைவி தன் குழந்தையின் அசைவை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருக்கிறாள் குழந்தை இன்று காலை தான் அவளை எட்டி உதைத்தது. அதை அவனிடம் சொல்ல முடியவில்லையே என்ற ஆதங்கம் அவள் முகத்தில் திண்டாடிக் கொண்டிருந்தது..

அவளாக அவனை அழைத்ததும் இல்லை அவனும் அவளிடம் அழைத்து நலன் விசாரித்ததும் இல்லை அப்படி இருக்க இவள் அவனை அழைக்காமல் இருந்தாள்.அப்படி இருக்கும் பொழுது தான் அவளது அந்த மாளிகைக்குள் இருக்கும் கோவிலுக்கு சென்று மனதை மாற்றிக் கொள்ளலாம் என சென்றாள். அந்த சமயம் பார்த்து தன் மாமியாரின் அறையை எட்டிப் பார்க்க அவர் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தார். அதனால் ஒரு நொடி தயங்கிய அவள் அவரை தொல்லை செய்ய வேண்டாம் என அவரிடம் கூறாமல் தன் மன ஆறுதலை கொட்ட கோவிலுக்கு செல்லலாம் என அங்கு சென்றாள் தினமும் அங்கு ஒரு ஐயர் வந்து பூஜை செய்துவிட்டு செல்வார்.

ஆனால் யாரிடமும் பெரிதாக பேசிக் கொள்ள மாட்டார் அவர். வந்தவர் வேலையை செய்து விட்டு சென்று விடுவார். அதுதான் அந்த வீட்டின் கொள்கை அவருடன் சேர்த்து ஒரு சில ஆட்கள் மட்டும் தான் அந்த மாளிகையை விட்டு வெளியே சென்று வருவர். அப்படி இருக்க அவள் வந்த சமயம் அந்த கோவிலில் அலங்காரங்கள் எல்லாம் செய்யப்பட்டு சாமிக்கு தீபாராதனை காட்டிக் கொண்டிருந்தார். அவள் வந்த நேரம் நல்ல சமயம் அந்த அம்மனின் அலங்காரமும் அவர் காட்டும் தீபாராதனைகளும் அம்மன் முகம் ஜொலித்துக் கொண்டு இருக்க அம்மனை கண்டதும் அவளது கண்கள் கலங்கியது..

" அம்மா தாயே எனக்கு ஏன் இந்த நிலைமை பிறந்த அப்பவே என்னுடைய அம்மா அப்பா இறந்துட்டாங்க பாட்டியோட தயவில்தான் வாழ்ந்தேன் வீட்டு வேலை செய்துதான் பிழைத்தேன் அப்பொழுது கூட எனக்கு மனக் கஷ்டம் மன பாரம் இல்லை சந்தோஷமாகத்தான் இருந்தேன் எப்போ இந்த வீட்டுக்குள்ள வந்தேனோ அப்போ இருந்து என் மனசுக்குள்ள ஒரு படபடப்பு அது ஏன்னு எனக்கு தெரியல. அதுவும் என்னுடைய பாட்டி இறந்த பின் எனக்குனு யாருமே இல்லை அப்படிங்கிற ஒரு உணர்வை எனக்கு கொடுக்குது. நான் என்ன பாவம் செய்தேன் இப்போ கல்யாணம் ஆகி இவ்வளவு பெரிய அரண்மனையில் தான் நான் இருக்கேன். ஆனால் ஒரு சிறு துளி சந்தோஷம் கூட எனக்கு வரலை அது எதனால அவர் என்னை நன்றாக பார்த்துக்கிறார். அவர் எந்தக் குறையும் எனக்கு வைத்தது இல்லை.

ஆனால் என்னமோ ஒரு தடுமாற்றம் கரு உருவாகி 6 மாதம் ஆகிடுச்சு. இன்னமும் நான் அவர்கிட்ட இதைப் பத்தி சொல்லல சொல்ல ரொம்ப ஆசையா இருக்கு. அவரது முகத்தைப் பார்த்து தான் சொல்லணும்னு ஆசைப்பட்டுட்டு இருக்கேன். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று கூட எனக்கு தெரியல அவரது குரல் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு எதுக்காக என்னை இப்படி அவர் ஒதுக்கி தள்ளி வச்சிருக்கார். ஒருவேளை அவங்க அம்மா சொன்னதுனால என்னை திருமணம் செய்துக்கிட்டாரோ என்னவோ அவருக்கு நான் சரியான ஜோடி இல்லை தான் ஆனால் பாழா போன மனசுக்கு அது தெரியலை.. அவரைப் பார்க்கணும் அவர்கிட்ட எங்க குழந்தை வந்த விஷயத்தை சொல்லணும் அப்படின்னு நான் ஒவ்வொரு நொடியும் துடிச்சுட்டு இருக்கேன் எப்படியாவது அவரை என் கிட்ட கொண்டு வந்து சேர்த்துடு தாயே" என்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருக்க ஐயர் வந்து அவளை பார்த்து ,

"எல்லாம் நல்லபடியா நடக்கும் நீங்க நினைச்சது நடக்கும் தீபாராதனையை எடுத்துக்கோங்க" என்று கூற அவள் தன் மாங்கல்யத்தை தீபாராதனையில் காட்டியவள் அவர் கொடுத்த பிரசாதத்தை நெற்றியிலும் வகிட்டிலும் வைத்து கொண்டாள்..

பிறகு கொஞ்ச நேரம் அந்த கோயில் வாயிலிலே அமர ஐயர் அவளை பார்த்துக்கொண்டே அருகில் வந்தவர் இன்று காலை வேறு ஒரு கோவிலில் செய்த பூஜையின் பிரசாதத்தை அவளிடம் கொண்டுவந்து கொடுத்து , "அம்மா இது துர்க்கை அம்மன் கோவில் பிரசாதம் எடுத்துக்கோங்க நீங்க நெனைச்சது நடக்கும்" என்று கூறி கொடுத்துவிட்டு அவர் வேலை முடிந்தது என செல்ல அந்த பிரசாதத்தை பார்த்தாள்..

அந்த பிரசாதத்தின் அடியில் ஒரு நியூஸ் பேப்பர் வைத்திருக்க அதன்மேலே இலையில் சந்தனம் குங்குமம் துளசி எல்லாம் இருந்தது. அதை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தவளின் கண் அடியில் உள்ள பேப்பருக்கு செல்ல அதைக் கண்டதும் அதிர்ந்தாள் அவள். ஆம் அது அவளது கணவனின் புகைப்படம் ஆறு மாதமாக கண்ணால் காணவில்லையே என துடித்த அவளுக்கு தெய்வம் கண்ணை காட்டி விட்டது என எண்ணி அந்த பேப்பரை பார்க்க அதில் ராவணன் சாதனாவுடன் நிற்பதை கண்டதும் அதிர்ந்தாள் யாழினி..



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top