Share:
Notifications
Clear all

மந்தாரம் 16

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

மந்தாரம் : 16

அவள் அவனோடு கலக்க துவங்குகிறாள் என்றதும் அவனின் வேகம் கூடியது.. இந்த கலவி பாடத்தில் முதன் மாணவனான அவனுக்கு தன்னை ரசிக்கும் பெண்ணை எப்படி கையாள்வது என தெரியாதா??

தேவிகா அப்படியே எதையும் யோசிக்காமல், வயதின் வீரியத்திலும் இவன் மீது அவள் கொண்டுள்ள நேசத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டு இருக்க, அவனின் வேகம் சற்றே கூடியது..

அவள் கண்களை மூடி நாம் அவனுள் மூழ்க போகிறோம் என உணர்ச்சி பிடியில் இருக்கும் போது தான் அவள் தலையில் டமார் என்று ஒரு இடி ஒன்று விழுந்தது..

அந்த இடியை எண்ணி அவள் கண்களைத் திறந்து பார்க்க, அப்பொழுது அவளுடைய பாட்டி விளக்குமாரை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.. அதை கண்டதும் அவள் அரண்டு போய் விட்டாள்..

அவர் அடித்து இருக்கிறார் என்பதை அவரின் கையில் உள்ள விளக்குமார் அவளிடம் கூற வேதனையில் தலையில் தேய்த்து கொண்டே, "ஐயோ பாட்டி இங்க வந்துட்டாங்களா.. இப்படி மாட்டிட்டேன் ஐயோ" என்று மேலும் கீழுமாக பார்க்க அங்கு அவன் இல்லை.. எங்கு போனான் என அந்த நொடியிலும் அவள் தேட துவங்கினாள்..

அது அவளுடைய வீடாக இருக்க அவர் கூட தானே இருந்தோம் எப்படி இங்கே வந்தோம் என தலையை தேய்த்து கொண்டே அவள் பார்க்க, அங்கும் இங்கும் அவள் கண்கள் அலை பாய்வதை பார்த்து, "என்னடி காலைல இந்நேரம் ஆகியும் இன்னும் தூக்கம் வேண்டி கிடக்கு?? பொட்ட புள்ளை இன்னும் எந்திரிக்காமல் இருக்க?? இந்த வீடு விளங்குமா??" என்று பாட்டி கடிந்தார்..

பாட்டி காலை என்று கூறிய பின்னர் தான் இது காலை வேளை என விளங்க, "என்னது காலையா?? நைட் இல்லையா??" என்று அவள் வாய் விட்டே கேட்டு அவள் யோசிக்க, அப்போது தான் அவள் கண்டது கனவு என அவளுக்கு புரியவே ஆரம்பித்தது..

அப்போது தான் அவள் உள்ளே இலேசான இதம் ஒன்று நேற்றைய கனவை கண்டு வர, அதனால் அவள் முகம் சிவந்தது..

அவள் மீது ஏக கடுப்பில் இருக்கும் அவளுடைய பாட்டி, "என்னது ராத்திரியா?? எந்திரிச்சு வேலையை பாரு.. அப்பன், ஆத்தா இல்லைன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தினது தப்பா போச்சு" என்று மீண்டும் தலையில் விளக்குமாறால் அடித்த பாட்டி அவள் எழுந்து அமரும் வரை அடிக்க, அவளோ இனியும் வலியை பொறுத்து கொள்ள முடியாது என்றும் இனி வேகமாக தயார் ஆகி அவனை காண செல்ல வேண்டும் என்ற நினைப்பில், "சும்மா அடிக்காத ஏதோ கொஞ்ச நேரம் தூங்கிட்டேன்.. அதுக்கு இப்படி தான் அடிப்பியா?? கொஞ்சம் தள்ளு.. எனக்கு வேலைக்கு போகணும்" என்று பாட்டியை ஒரு இடி இடித்து அங்கிருந்து சென்றாள் தேவிகா..

அதை கேட்டு அவரோ, "நீ இன்னைக்கு வேலைக்கு போக வேண்டாம்.. இங்கேயே இரு.. நான் போய் பஞ்சாயத்து தலைவர் கிட்ட பேசிட்டு வரேன்.." என்று கூறவும், அதைக் கேட்டு அவளோ உலகமே இருண்டது போல தவித்து போனாள்..

உடனே வேகமாக பாட்டி பேச்சில் பதறி, "அதெல்லாம் வேண்டாம் பாட்டி.. நான் பக்குவமா போய் பக்குவமா வந்துடுறேன்.. அவர் என்ன ஒன்னும் கொஞ்ச நாள் தான் இருப்பார்.. நீ ஏன் பஞ்சாயத்து தலைவர் கிட்ட எல்லாம் போற??" என்று எங்கு பாட்டி எதற்கு தடை செய்து விடுவாரோ அவனை காணாமல் இருக்க அவளால் முடியுமா என்று யோசித்து அவள் கூறினாள்..

அதை கேட்ட பாட்டி அவளை முறைத்துக் கொண்டு, "அதெல்லாம் வேண்டாம்.. நீ இங்கேயே இரு.. நான் பார்த்துக்கிறேன்.. பொட்ட பிள்ளையை கண்டவன் கூட அனுப்பிவிட்டு எப்படி என்னால நிம்மதியா இருக்க முடியும் இது தெரியாமல் இவனுங்க ஊர் சட்டம் அது இதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.. எல்லாம் உன்னால வந்தது வாயை மூடிட்டு இருக்க வேண்டியது தானே இதுக்கு தேவையில்லாமல் எல்லார்கிட்டயும் பிரச்சனை பண்ணிட்டு இருக்க" என்று கூறிவிட்டு அவர் நேராக பஞ்சாயத்து தலைவரை காண சென்றார்..

அங்கு பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் அவருடைய பாட்டி, "தம்பி நான் சொல்ற விதத்தில் கொஞ்சம் யோசிச்சு பார்க்க கூடாதா?? நான் வேணும்னா அந்த தம்பி கிட்ட வேலைக்கு போறேன்.. என்ன வேலையா இருந்தாலும் நான் செஞ்சு கொடுக்கிறேன்.. என் பேத்தியை விட்டுடு.. எனக்கு என்னமோ இது சரியா படல.. அவள் நாளைக்கு வேற வீட்டுக்கு போய் வாழ வேண்டிய பொண்ணு" என்று அவர் மீண்டும் வந்து கேட்கவும் பஞ்சாயத்து தலைவருக்கு கோபம் வந்துவிட்டது..

"என்ன ஆத்தா இப்படி சொன்னதையே சொல்லிட்டு இருக்க?? ஊர் மக்கள் எல்லாம் கலந்து ஒரு முடிவு பண்ணி இருக்குன்னா அதை மீறக் கூடாதுன்னு உனக்கு தெரியாது?? சும்மா எப்ப பார்த்தாலும் இதையே சொல்லிட்டு இருக்க.. உன் பிள்ளையை என்னமோ நான் தப்பான வேலை செய்ய சொன்ன மாதிரி சொல்லிட்டு இருக்க?? அந்த தம்பிக்கு உதவியா தான் இருக்க சொல்லி இருக்கேன் அவர் நல்ல தம்பி எந்த தப்பும் நடக்காது.. இது அவளோட திமிருக்கு கொடுத்த தண்டனை.." என்று அவர் கூறினார்..

அதை கேட்ட அவளின் பாட்டியோ, "இல்ல அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கேன்.. அதனால தான் சொல்றேன்.. இந்த ஊரில் எனக்கு தெரியாத இடமா என் பேத்திக்கு தெரிஞ்சிட போது??" என்று கூறவும்,

அவரும் அதை கேட்டு நக்கலாக சிரித்து, "அதை நீ பார்க்கும் போது, உன்னுடைய பேத்திக்கு கல்யாணம் நடக்கும் போது பார்த்துக்கலாம்.. இப்போ உன் பேத்திக்கு கல்யாணம் நடக்கலல...இப்போ போ.. ஒரு வேளை அவளுக்கு அப்படி கல்யாணம் முடிவு ஆனா நானே இந்த வேலையை செய்ய வேணாம்னு சொல்லிடுறேன் இப்ப கிளம்பு.." என்றவர், மேலும் தயங்கி நிற்கும் அந்த பாட்டியை பார்த்து, "என்ன ஆத்தா உன் பேத்திக்கு 20 முடிஞ்சு 21 ஆச்சு இந்த வருஷம் கோயில் திருவிழாகுள்ள உன் பேத்திக்கு கல்யாணம் ஆகல அவளுக்கு என்ன கதி ஆகும்னு உனக்கு தெரியுமில்ல?? அதை மறந்துட்டியா?? இதைப் பற்றி யோசிக்காம உன் பேத்திக்கு சட்டு புட்டுன்னு மாப்பிள்ளை பாக்குற வேலையை பார்" என்று கேட்கவும் பாட்டி வெட வெடக்க துவங்கினார்..

ஆம் அவருக்கு நன்றாக தெரியும்.. அது தான் அவருக்கு பயமே.. இப்படி திருமணம் ஆகாமல், கன்னி கழியாமல் இருக்கும் பெண்ணை ஊர் கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுவார்கள்.. அவர்கள் ஊரை பொறுத்தவரை அந்த பெண்கள் ராசி இல்லாதவர்கள்.. சாமிக்கு நேர்ந்து விட்டால் அந்த ஊருக்கு எந்த களங்கமும் வராது..

அதன் பிறகு அவள் கோவில் சொத்து என்று ஆகி விடுவாள்.. அதன் பின் அவளுக்கு திருமணம் செய்து கொள்ள முடியாது.. அவளின் மரணம் வரை அந்த கோவிலுக்கு தான் அவள் சொந்தம்.. அது ஊரைப் பொருத்தவரை நல்லது என்றாலும் அந்த பொண்ணை பொருத்தவரை அது மிகவும் கொடுமையான விஷயம் தான்..

அதை நினைத்த அவளுடைய பாட்டி அப்படியே அதிர்ந்து இந்த நிலைமை தன்னுடைய பேத்திக்கு வர கூடாது.. என அதிர்ந்து போய், அவள் இப்பொழுது வேலைக்கு செல்வதை விட அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயம் தான் முக்கியம் என கருதி அப்படியே வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டி கொண்டு வீட்டுக்கு வந்தார்..

பாட்டிக்கு போகும் போது இருந்த தைரியம் இப்போது இல்லை..

அவளோ இடியே விழுந்தது போல அமர்ந்து இருந்தாள்.. அவளுக்கு எந்த வேலையும் செய்ய தோன்றவில்லை.. பாட்டி பேச்சை எதிர்க்கவும் முடியவில்லை..

அவன் இந்த அளவுக்கு அவளை பாதித்து இருப்பான் என அவளால் நினைக்க முடியவில்லை..அப்படி இருக்க பாட்டி அவளை பார்த்து ஒரு மாதிரியான குரலில், இப்போ வேலைக்கு போ" என்றார்.. ஆம் போகவில்லை என்றால் ஊர் கூடி தன் பேத்திக்கு எதிராக ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் அவருக்கு வந்தது..

பாட்டி தன்னை அனுப்ப மாட்டார் என எண்ணி கொண்டு இருந்த அவளுக்கு அதை கேட்டதும் அவள் அவரின் முகமாற்றத்தை கூட பார்க்க விரும்பாமல் அவள் ஒரே ஓட்டமாக ஓடி நினைத்த அவளை பார்த்து, "நான் கூடிய சீக்கிரம் உனக்கு மாப்பிள்ளையை பார்க்கிறேன்.. கோயில் விசேஷம் வரதுக்குள்ள உனக்கு கல்யாணம் முடிஞ்சு இருக்கணும்" என்று கூறவும் அவளின் முகம் தொங்கி போனது..

"பாட்டி இப்போ என்ன அவசரம்??" என அவள் கேட்க

அவரோ பதட்டத்தில், "வாயை மூடு கழுத எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும்" என்றவர் மீண்டும் அவளுடைய ஜாதகத்தை எடுத்து கொண்டு சென்றார்..

இங்கு அவளோ முழுவதுமாக மனதுக்குள் அவனை கொண்டு வந்தவள், அவனை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்து விட்டாள்..

அவள் மனதில் உள்ள ஆசை இது.. அவனுக்கு இதில் சம்பந்தம் இல்லையென அவளுக்கு நன்றாக தெரியும்.. அவனுக்கு பிடித்தாலும் சரி பிடிக்கவில்லை என்றாலும் அவன் ஒருவன் தான் அவளின் கணவனாக முடியும் என அவள் முடிவு செய்து விட்டாள்.. அவனுக்கு பிடித்தால் அவனுடன் ஒரு வாழ்க்கை இல்லையென்றால் அவனை நினைத்து ஒரு வாழ்க்கை என அவள் முடிவு செய்துவிட்டாள்..

இந்த அளவுக்கு அவன் அவளை பாதித்து இருக்கிறான்.. அப்படி இருக்க இவள் நினைப்பதை பற்றி எல்லாம் அவனுக்கு தெரியுமா என்ன?? அவளுடைய ஆசை நிறைவேறுமா?? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ??



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top