மந்தாரம் 14
மந்தாரம் : 14
அவனும் அவளை விட்டு அவளின் உடல் மொழியை எல்லாம் படித்து, இது போதும் டி நான் போற வரை உன்னை வைச்சி இப்படி வேலை வாங்கணும்னு எனக்கு தெரிஞ்சிருச்சு என்று எண்ணியவன், "ஆமாம் எனக்கு சமைக்க தெரியாது.. காலையில் எழுந்ததும் எனக்கு ஒரு கப் காபி ரொம்ப முக்கியம்.. அது குடிக்கலைன்னா எனக்கு வேலையே ஓடாது.. ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி வேணாலும் நான் குடிப்பேன்.. காலையிலிருந்து காபி குடிக்காம எரிச்சலா இருக்கு.. எனக்கு சீக்கிரம் ஒரு கப் காபி போட்டுட்டு வா.." என்று கூறினான்..
அவ்வளவு நெருக்கத்தில் அவள் நின்று கொண்டு இருக்க அவன் தொட்ட அவளின் இடை இன்னும் குறுகுறுத்து கொண்டு இருந்தது..
அப்படி இருக்க அவன் சிலை போல இருக்கும் அவளை பார்த்து, "ஹே உன்னை தான்.. இவ்வளவு அழகா இருக்க நீ.. உன் கையால ஒரு கப் காபி எனக்கு கிடைக்குமா??" என அவளின் தோளை தொட்டு உலுக்க, அவளோ அவனுடைய மென்மையான பேச்சிலும் நகர்ப்புறத்தில் இருப்பவர்கள் எப்படி பேசுவார்கள் என தெரியாத தேவிகா அவன் பேச்சில் மயங்கி அவனை பார்க்கவும், "என்ன முழிச்சிட்டு இருக்க?? சீக்கிரம் போ.. என்னுடைய உடம்பை பார் குளிர்ல எப்படி சிவந்து போய் இருக்குன்னு இதுக்கு காரணம் நீதான்" என்று அவனுடைய துண்டு விளம்பர உடலை காட்டி விரட்டி விடவும்,
அவளோ அதை கண்டு, 'என்ன நான் இப்படி அவரை வெறிச்சி பார்த்து இருக்கேன்' என கூறி அவனுக்கு காபி போட சென்றாள்..
அன்றைய நாள் முழுவதும் மந்திரித்து விட்ட கோழி போல தான் சுற்றி திரிந்தாள்..அவனோ அதை வைத்தே காரியம் சாதித்து கொண்டான் என்று தான் கூற வேண்டும்..
அவன் பார்வையில் இவளிடம் இலேசாக தொட்டு பேசினால் போதும் இவள் எல்லாம் செய்து விடுவாள் போல என்றெண்ணி கொள்ள அது அறியாத அவளோ அவனின் பேச்சுகளில் அவன் பக்கம் விழுந்து கொண்டு இருந்தாள்..
அவனோடு அதன் பிறகு வெளியே போனதாகட்டும்.. அங்கு அவன் பலரை சந்தித்து பேசுவது ஆகட்டும் அப்போது எல்லாம் அவனோடு இருந்தாலும் அவனின் நெருக்கமும் அவனின் தொடுகையும் தான் அவளின் மனதை பாதித்து கொண்டு இருந்தது.. அவ்வளவு குளிரில் அவள் அவனோடு பயணித்தாலும் அவளின் உடல் அவனின் அருகாமையால் சூடாக இருப்பது போலவே இதமாக இருந்தாள் தேவிகா..
இதுவரை அவளை யாரும் தீண்டி இது போல ஒரு உணர்வை அவளுக்கு கொடுத்தது இல்லை.. அது என்னவென்று அவளுக்கும் தெரியவில்லை.. ஆனால் அந்த உணர்வு அவளுள் ஏதோ செய்து இருந்தது என்பது மட்டும் உண்மை தான்..
காலை முதல் மாலை வரை அவனுடன் தான் வேலை என்பதால் அவனுடன் இருக்க அவளுக்கு ஏனோ பிடித்து இருந்தது.. ஒரே நாளில் அவன் அவளுக்குள் புகுந்து கொண்டான் என்று தான் கூற வேண்டும்..
அதாவது விருப்பத்துக்கும் வெறுப்புக்கும் இடையே நூல் அளவு தான் வித்தியாசம் என்பது போல காலையில் கோபமாக வந்தவள் மனம் அப்படியே எதிர்ப்பதமாக மாறி அவன் மீது சாயத் துவங்கியது எப்படி என அவளுக்குமே தெரியவில்லை ஆனால் அவள் சாய்ந்து கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை..
அவன் வேலையே கண்ணாக இருந்தான்.. ஆனால் அவளோ அவன் மீது கண்ணாக இருந்தாள் என்று தான் கூற வேண்டும்..
மாலை அவனுக்கான உணவையும் ஆசையாக சமைத்து வைத்தவள் இனி அவரை விட்டுட்டு போகணுமே என எண்ணினாலும் மெல்லமாக இருட்ட துவங்கவும் மழை வரும் அறிகுறியையும் கண்டவள், "சார் நான் கிளம்பறேன்.. நேரம் ஆச்சு" எனக்கூற,
அவனோ கிட்டத்தட்ட அவளோடு சுற்றத் தொடங்கியதில் அவனும் கொஞ்சம் அவளிடம் இலகுவாக பேச துவங்கி இருந்தான்..
பஞ்சாயத்து தலைவர் சொன்னது போல அவளுக்கு அந்த மலை பிரதேசத்தில் தெரியாத இடமே இல்லை என்று கூறலாம்..
எல்லா இடத்திற்கும் அவள் பக்குவமாக அவனை அழைத்துச் சென்று அவனுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டு அறிந்து, அந்த பொருட்கள் செய்யும் ஆட்களிடம் நேரடியாக அவனைக் கொண்டு போய் சேர்த்து அவனின் வேலையை மிகவும் பாதியாக்கி விட்டாள் என்று தான் கூற வேண்டும்..
அதனால் அவனுக்கும் ஏதோ அவளை பிடித்திருந்தது நடந்த விஷயத்தை எல்லாம் அவனும் ஒதுக்கி வைத்திருந்தான்..
அப்படி இருக்க, இரவு அவள் போகிறாள் என கூறியதும் அவனோ மென்மையாக சிரித்து, "எப்படி இருந்தாலும் நீ நாளைக்கு காலைல எனக்கு காபி போட நீ வந்து தான் ஆகணும்.. பேசாம இங்கேயே தூங்கிடு.. எனக்கும் தனியா இருக்கிற மாதிரி இருக்காது.. அண்ட் சொல்ல மறந்துட்டேன்.. நீ நல்லா சமைக்கிற.. வாழ்க்கை ஃபுல்லா உன் கையில் சாப்பிட்டுட்டே இருக்கலாம் போல தோணுது.. அவ்வளவு நல்லா இருந்துச்சு ஃபுட்..எனக்கு வாழ்க்கை முழுவதும் இந்த மாதிரி ஃபுட் செஞ்சு கொடுத்து என் கூடவே இருக்கியா??" என்று அவன் கேஷுவலாக கூறிவிட்டு லேப்டாப்பில் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்..
அவன் ஏதோ விளையாட்டாகத்தான் கேட்டான்..
ஆனால் அதைக் கேட்டு அவளுக்கோ ஏற்கனவே படபடக்கும் இதயத்தில் அவர் என்ன சொன்னார் என்ன அவர் கூடவே தங்க சொல்றாரா?? வாழ்க்கை முழுவதும் என் கையில் சாப்பிடனுமா?? என்ன இது என்று அதைக் கேட்டதும் என்னவோ ஜிவ் என்ற உணர்வு அவள் உள்ளே பாய்வது போல அவளுக்கு தோன்ற,
அந்த நொடி அது அவளுக்கும் விருப்பம் என்றாலும் அவள், "இல்ல பாட்டி தனியா இருப்பாங்க.. எனக்கு போகணும் பாட்டிக்கு நான் மட்டும்தான் இருக்கேன் மழை வர வர மாதிரி இருக்கு.. இங்கே எப்ப மழை வரும் எப்ப மழை வராதுன்னு எதுவும் சொல்ல முடியாது.. அதனாலதான் சொல்றேன்.. நாளைக்கு காலைல நேரமா வரேன்.. நீங்க வேணும்னா சாவியை வெளியே வச்சிடுங்க நான் வந்து திறந்து உள்ளே வந்துக்கிறேன் உங்களுக்கு தொல்லை இருக்காது.." என்று அவள் கூறினாள்..
அதை கேட்ட அவனும் தோளை குலுக்கி சரி என் கூறி விட்டான்.. அவளும் சென்று விட அவள் சொன்னது போல மழை வலுத்து விட்டது..
இங்கு பாட்டி இவளை காணவில்லையே என காத்துக் கொண்டு இருக்க, அவளோ மழையில் அவள் நனைந்து இருந்தாலும், அவள் மனம் என்னவோ அவன் பேசியதில் இதமாக தான் இருந்தது.. மீண்டும் மீண்டும் அவன் முகம் வந்து அவளை தொல்லை செய்தது என்று தான் கூற வேண்டும்..
அப்படி இருக்க முழுதாக நனைந்து அவள் வீட்டை அடையவும் பாட்டி ஓடி வந்து, "என்ன டி பொழுது சாய்ஞ்சு வந்து இருக்க நேரமா வரணும்னு சொல்லி இருக்கேன்ல" என கடிந்து கொண்டு அவளின் தலையை துவட்டி விட துவங்க அவளோ பாட்டியின் முகத்தை கண்டதும் தன் மனதுக்குள் எழுந்த மகிழ்ச்சியை அடக்கி கொண்டு, "என்ன பாட்டி பண்றது பஞ்சாயத்து தலைவர் சொன்ன வேலையை தானே செய்யறேன்.. விடு பாட்டி.. எல்லாம் அவர் போகிற வரைக்கும் தானே அதுக்கப்புறம் இதெல்லாம் இருக்காது" என பாட்டி முன் அலுத்து கொள்வது போல அவள் கூறினாள்..
அதை கேட்ட பாட்டி கொந்தளித்து, "இவங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா?? பொட்ட புள்ளைய எப்படி ஒரு ஆம்பிளை கூட தனியா விடுறாங்க.. பாவிங்க இதுக்கு ஒரு முடிவு கட்டாமல் இருக்கக் கூடாது" என்று அவர் முடிவு கட்டிக் கொண்டார்..
ஆனால் பாவம் இவர் என்ன நினைத்தாலும் அவரின் பேர பிள்ளை வேறு ஒன்றல்லவா நினைத்து கொண்டு இருக்கிறாள்!!! அது அவருக்கு தெரியாதே.. அவர் யாரிடம் சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் அவள் விதுவின் பின்னால் சென்று விடுவாள் என்பது அவருக்கு தெரியாதே??
