Share:
Notifications
Clear all

அதிகாயன் 21

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 21

இவன் என்னை கொல்லாமல் விட மாட்டான் போல இவனை என்ன செய்வது என்று கூட தெரியலையே அன்று அவனை செய்ததுக்கு இன்று பழி வாங்க வந்து இருக்கிறானோ இவனை என்ன செய்து சாகடிக்கலாம் என்றுதான் அந்த நேரத்திலும் சாதனா நினைத்துக் கொண்டிருந்தாள். அவள் வயிற்றில் வேறு குழந்தை அவளை தனது பிஞ்சுக் கால்களால் இடித்துக் கொண்டிருக்க அதைக்கூட அவள் ரசித்து பார்க்கவில்லை பார்க்கவும் தோன்றவில்லை அவளுக்கு இது ஒரு அசிங்கம் தன் அழகை கெடுக்க வந்த ஒரு சாத்தான் என்றுதான் அவள் எண்ணினாள்..

அதுவும் துளிகூட பாசம் இன்றி தான் அவள் அந்தக் கருவை சுமந்துக் கொண்டு இருந்தாள். இந்நேரம் அவளது கைகளில் அந்தக் குழந்தை கிடைத்திருந்தால் கூட இவன் மீது உள்ள ஆத்திரத்தில் பெற்ற குழந்தையையே கொன்று இருப்பாளோ என்னவோ ஆனால் வயிற்றுக்குள் அல்லவா இருக்கிறது அந்தக் குழந்தை வெளியே வரும் நாளுக்காக தான் அவள் காத்து கொண்டு இருக்கிறாள்.

"இதுக்காகத்தானே நீ என்னை இந்த துயரம் செய்துட்டு இருக்க எப்படி இதை அழிச்சு நீ எதுக்காக எங்களை பழிவாங்கும் எண்ணத்தோடு சுத்திக்கிட்டு இருக்கியோ அதை நடக்கவே விடமாட்டேன் இந்த குழந்தை உயிரோடு கிடைத்தால் தானே உனக்கு அந்த சொத்துக்கள் எல்லாம் குழந்தையோட பேர்ல போய் சேரும் அதுக்கு நான் விடவே மாட்டேன் நானே இருந்தால் கூட இந்த குழந்தையை உனக்கு உயிரோட கொடுக்க மாட்டேன்" என்று தான் எண்ணினாள் சாதனா..

அப்படி தீய எண்ணத்தோடு சமைத்துக் கொண்டிருக்க அவளது உடல் உபாதைகளால் அவளால் சமைக்கக் கூட முடியவில்லை அன்றைய தினம் பூரி தான் செய்து கொண்டிருந்தாள். பூரி மாவை தேய்த்து சூடான எண்ணெயில் விடவும் அவள் ஏதோ யோசித்துக்கொண்டே எண்ணெயில் இட அந்த எண்ணெய் தெறித்தது. அது அவளது கைகள் இரண்டிலும் பட சூடான எண்ணெய் பட்டதும் கைகள் கொப்பளிக்க கதறினாள்..

அவளது கதறல் கேட்டு தணிகாசலம் மற்றும் சதாசிவம் ஓடிவர கூடவே ராவணனும் வந்தான் அங்கே அவளோ, "ஐயோ அம்மா எரியுதே" என்று கதறிக் கொண்டிருக்க அங்கு வந்து பார்த்தவனுக்கு எல்லாம் விளங்கி போக உடனடியாக அவளுக்கு தேவையான முதல் உதவி செய்ய ஒரு செவிலியை உடனடியாக அழைத்தான்.. அந்த செவிலியும் வந்து அவளது காயத்திற்கு மருந்து போட்டு இரு நாளில் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு சென்றார் ..

அதற்குள் சதாசிவம் தான் பதறித் துடித்து, "உனக்கு இந்த வேலையெல்லாம் செய்ய தெரியாதே மா உன்னைப் போட்டு இப்படி படாதபாடு படுத்துறானே அதுக்கு பேசாம நம்ம மூணு பேரையும் கொலை செய்திருக்கலாம்" என்று கூற அதைக் கேட்ட ராவணனோ சிரித்து, " கொதிக்கும் எண்ணெய் தானே கையில பட்டுச்சு வேற ஒன்னும் ஆகலையே அவ்வளவு சீக்கிரம் விடமாட்டேன் வேணும்னா சொல்லு கொதிக்கிற எண்ணையை உன்னுடைய மக மேலயும் உங்க மேலயும் ஊத்தி விடறேன்" என்று கூற அதைக் கேட்ட அவர்கள் இருவரும் அதிர்ந்தனர்..

அவன் செய்யக்கூட தயங்கமாட்டான் என்று நினைக்க ராவணன் அவளது இரு கைகளும் முதலுதவியின் தாக்கத்தால் கைகள் கட்டப்பட்டு இருக்க அதைக் கண்டவன், "வேற ஏதாவது சமைக்கிற ஆள் கிடைக்குதா அப்படின்னு பாருங்க??? இவனுங்க ரெண்டு பேரையும் சமைக்க போடலாம் ஆனால் இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து விட்டா அவனுக ரெண்டு பேருமே வேற ஏதாவது திட்டம் போடுவானுங்க அதனால வேற யாராவது சமைக்கிற ஆளை பாருங்க" என்று உத்தரவிட்டான்..

அதன்படி அடுத்த இரண்டு நாளில் மாரியம்மா என்ற ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி சமைக்க வந்தார். அவரிடம் முன்பே அவனது வேலையாட்கள் கூறிவிட்டு இருந்தனர். "சமைப்பது மட்டும் தான் உன்னுடைய வேலை வேறு எதிலும் நீ தலையிட கூடாது. அது உனக்கு தேவையில்லாத வேலை" என்று கூறி விட அந்தப் பெண்மணியும் சரி என்று கூறிவிட்டார். இரண்டு நாட்கள் அந்தப் பெண்மணி அங்கே உள்ள வேலைகளை எல்லாம் செய்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால் மேலும் ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம் என்று ராவணன் கூறி இருப்பான் போல அத்தனை பேரும் உள்ள வீடல்லவா சமைப்பதற்கு ஆள் வேண்டுமே என அவன் கூறியிருக்க வேறு ஆளுக்காக அவர்கள் காத்திருக்க துவங்கினர்..

மாரியம்மாவிடமும் தெரிந்த நபர் இருந்தா சொல்லுங்க என்றும் கூறியிருந்தனர் மாரியம்மா அங்கே இருக்கும் ஆட்களை எல்லாம் பார்த்து பீதியில் இருந்தவர் வாயே திறக்காமல் சமையலறையே சரணம் என்று அமர்ந்துக்கொண்டார். அவர் கேட்டதற்கு மேல் சம்பளம் தருவதாக அவர்கள் கூறியிருக்க அதுவே போதும் நான் எதையும் பேசல என்று அமர்ந்துக்கொண்டார் மாரியம்மா கைகளில் எண்ணெய் பட்டு இருப்பதால் சாதனாவிற்கு இருநாட்கள் ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அவளுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளையும் சதாசிவம் தணிகாசலம் இருவரிடமும் திணித்தான் ராவணன்..

ஊரை சுற்றிய ஒதுக்குப்புறமான ஒரு வீடு வீடு என்று சொல்வதை விட ஒரு மாளிகை என்று சொல்ல வேண்டுமோ இல்லை இல்லை ஒரு தீவு என்று சொல்ல வேண்டுமோ வெண்ணிற கோட்டைகள் கொண்டு அலங்கரித்த அந்த இடத்தில் என்னதான் இல்லை உனக்கு வெளியே சென்று உணவு அருந்த வேண்டுமா அதுவும் மாளிகைக்குள் உண்டு. உனக்கு சினிமா செல்ல வேண்டுமா அதுவும் அங்கே உண்டு. பார்க்,செயற்கை ஏரி, கோவில், ஒரு சிறிய மருத்துவமனை என அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் அடங்கிய ஒரு மாளிகை குட்டித் தீவு என்று கூட சொல்லலாம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது அந்த மாளிகைக்குள் நுழைந்தால் தான் இப்படிப்பட்ட அனைத்து சௌகரியங்களும் அடங்கியிருக்கிறது. அந்த மாளிகைக்குள் உள்ளவர்கள் வெளியே செல்ல தேவையே இல்லை. அங்கே வேலை செய்பவர்கள் வெளியே செல்லவும் கூடாது. அப்படித்தான் அங்கு ரூல்ஸ் போடப்பட்டிருக்க அதன்படி அந்த வீட்டிற்குள் இருப்பவர்களும் கிட்டத்தட்ட பல வருடங்களாக வெளியே சென்றது இல்லை என்று தான் கூற வேண்டும்.

இதற்கும் அந்த வீட்டில் உரிமையாளர்கள் என பெரிதாக யாரும் இல்லை இருவர் மட்டுமே உள்ளனர். ஒருவர் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அவருடைய பெயர் சாந்தி அவரும் சாந்தமாய் அவரது படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்க அவருக்கு ஒரு சில உடல் ரீதியான பிரச்சினைகள் உள்ளன. மனதளவில் எந்த பிரச்சனையும் இல்லை ஒரே மகன் நன்றாக பார்த்துக் கொள்கிறான் தாய் சொல்லை தட்டாத மகன் அவன் எந்த குறையும் இல்லை அப்படி இருக்க அப்படியே அந்த வீட்டின் மூன்றாவது தளத்தில் ஒரு பிரம்மாண்ட அறையில் ஒருத்தி அமர்ந்திருந்தாள் அவளது பெயர் யாழினி...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top