வேந்தன் : 9
அத்தியாயம் : 9
வீட்டுக்கு வந்தவள் ஒரு சில வேலைகளை எல்லாம் செய்து விட்டு இவன் இன்று எடுத்த பாடத்தை படித்து கொண்டு இருந்தாள்...
வீட்டுக்கு வந்தால் அவளின் முதல் வேலையே அவனின் பாடத்தை படிப்பது தான் அப்படி இருக்க அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை தான் என்றாலும் இப்போதே படித்து வைப்போம் என புக்கை திறந்து வைத்து அமர்ந்து விட்டாள்..
முதன் முறையாக அவனோடு இரு நாட்கள் இதே வீட்டில் இருக்க வேண்டும் என்ற நிலையில் அவள் இருந்தாள்...
பொள்ளாச்சி என்றால் அவளுக்கு அந்த வேலை இந்த வேலை என அதிகம் இருக்கும் இங்கு எந்த வேலையும் அவளுக்கு பெரிதாக இல்லை அவளுக்கு வேண்டியதை சமைத்து கொள்ள வேண்டும் அவ்வளவுதான் இடையிடையே வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் மற்றபடி எந்த வேலையும் பெரிதாக அவளுக்கு இல்லை படிப்பதை தவிர...
அப்படி இருக்க இன்று அவன் நடத்திய பாடம் இலகுவாக புரிந்து விட்டது...அடுத்த சப்ஜெக்ட் திறக்கும் போது அவன் வீட்டுக்குள் நுழைந்தான்...
வந்தவன் சற்று இறுகி போய் தான் இருந்தான் காரணம் இவள் தான் எனும் நிலையில் அவளுக்கோ இவன் எதற்காக இப்படி இருக்கிறான் என ஒரு நொடி அவள் யோசித்தாலும் இவன் என்றைக்கு நல்ல முறையில் முகத்தை வைத்து இருக்கிறான் என எண்ணி அமைதியாக அவள் வேலையில் மூழ்கி இருந்தாள்...
வந்தவன் அவனும் அவள் என்ன செய்கிறாள் என ஒரு பார்வை பார்க்க அவள் பால்கனியில் அமர்ந்து இருந்தாள்...அதற்குள் அவன் படுக்கை அறையில் நுழைந்து அவனுக்கு தேவையான ஆடையை எடுத்தவன் உடை மாற்றி வந்து தனக்கான காபியை கலந்து குடித்து கொண்டு இருந்தான் ...அவளுக்கோ வேறு ஒரு பாடத்தில் சந்தேகம் வந்தது...
இந்த பால்கனியில் அமர்ந்து இருக்க அவளுக்கு ரொம்ப பிடிக்கும்... அதனால் அவள் அங்கு இருந்தாள் அதற்கு ஒரு காரணமும் உண்டு அங்கு இருப்பதே ஒரு அறை அதில் தான் பாத்ரூம் வசதி உண்டு அவள் தேவை முடிந்தால் அவள் ஒதுங்கி கொண்டாள் அவன் உபயோகிப்பான் அதனால் அவள் சும்மா இருக்கும் நேரத்தில் எல்லாம் அங்கு தான் இருப்பாள்...அங்கேயே விளக்கு வசதி எல்லாம் இருக்க அந்த சென்னை மாநகர அழகை பார்த்தபடி அமர்ந்து இருக்க அவளுக்கு ரொம்ப பிடிக்கும்...
அப்படி தான் புத்தகத்தை வைத்து கொண்டு அவள் அமர்ந்து இருந்தாள்...அப்படியே படித்து கொண்டு இருந்தவளுக்கு சந்தேகமும் வந்தது...
உடை மாற்றி வந்தவனின் மன ஓட்டமோ வேறு விதமாக இருந்தது...அவள் இங்கு வந்த நாலு நாட்களில் ஆளே மாறி விட்டாளே என அவன் எண்ணினான்...
அவள் சிரித்து பேசி கொண்டிருந்த அந்த நபர் யாரென்று அவனுக்கு தெரியாது அப்படி தெரிந்தால் நடப்பதே வேறு அது வேறு விசயம் அப்படி இருக்க அவனோ என்னவோ இவள் பெரிய தப்பு செய்து விட்டாள் என்ற அளவில் அவன் கடுப்பாகி அமர்ந்து இருந்தான்...
அந்த நேரம் பார்த்து அவளுக்கு பாடத்தில் சந்தேகம் வர பேசாமல் ,"இவங்க கிட்ட போய் டவுட்டு கேட்போமா படிக்கிற விஷயம் தானே கேட்டா கண்டிப்பா சொல்லி தருவாங்க" என நினைத்தவள் நேராக அவனிடம் சென்றாள்..
அவனோ சோபாவில் அவனது ஒரு கையை சோபாவில் குத்தி மறுகையில் காபியை பருகி கொண்டிருக்க அவள் அவன் அருகே வரவும் அவளை ஒரு பார்வை பார்த்தான் எதுவும் பேசவில்லை...
பேச துடித்தாலும் அவன் அடக்கி கொண்டான்.. இதுதான் அவனுடைய பிரச்சனை சிறுவயதிலிருந்தே அவளை பார்த்து பார்த்து அவளுடைய அனைத்து தேவைகளையும் செய்து அவளை அவன் அடக்கியே வைத்து இருந்தான்..
அவள் இதை செய்யக்கூடாது அதை செய்யக்கூடாது இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்கும் வேண்டும் என பல கோட்பாடுகளை அவன் விதித்து இருந்தான் அதிலிருந்து அவள் மீறும் போது அவனால் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை...
அப்படி இருக்க அவள் அவன் அருகே வந்து ,"எனக்கு இதுல கொஞ்சம் டவுட் கொஞ்சம் சொல்லித் தரீங்களா???" என கேட்டாள்...அவளுக்கு தெரியாதே அவன் எதற்காக இப்படி முகத்தை தூக்கி வைத்து இருக்கிறான் என்று அதனால் அவள் கேட்கவும்,
அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவள் கேட்ட கேள்விக்கான விடையை அழகாக அவளுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்தான்,. அவளுக்கு மிக எளிமையாக இருந்தது எவ்வளவு அவள் முயன்றும் அவளுக்கு புரியாமல் இருந்த விஷயம் அவன் புரிய வைக்கவும் அழகாக புரிய அவளுக்கு உடனே முகம் மலர்ந்தது...
அவள் கேட்ட விஷயத்தை சொல்லிக் கொடுத்தவன் அவளை பார்க்க அவளோ மகிழ்ச்சியில் ,"ரொம்ப தேங்க்ஸ்" என்றாள்.. அதற்கு அவனோ பதில் ஏதும் கூறாமல் புக்கை திருப்பிக் கொடுக்கும் போது ,"காலேஜ் போறது படிக்கிறதுக்கு கேண்டினில் உட்கார்ந்து பசங்க கூட சிரிச்சு பேசிட்டு இருக்க இல்ல பாடம் நடத்தும் போது கவனிச்சா தானே புரியும் கவனிக்காம பேசி சிரிச்சிட்டு இருந்தா எப்படி புரியும்??? இப்படி தலையை சொறிஞ்சிட்டு நிற்க வேண்டியது தான்" என கூறிய பின் தான் அவன் சமாதானம் ஆனான் ஆனால் அவள் மனதில் பாரம் கூடிக் கொண்டது..
"இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு சொல்லி இவரு இப்படி பேசிட்டு இருக்காரு" என கோபம் தான் அவளுக்கு வந்தது...மேலும் அவளுக்கு புரிந்தது அவள் அவனோடு பேசி கொண்டு இருந்ததை இவன் பார்த்து விட்டான் என்று அதனால் இலேசான உதறல் உள்ளுக்குள் இருந்தாலும் அதை மறைத்து அவனிடம் எதிர் கொண்டாள்...ஏனெனில் அந்த பையன் தான் இவளுக்கு காதல் கடிதம் கொடுத்தவன் ஆகிற்றே!!!!
அதனால்,"நான் உங்ககிட்ட டவுட் கேட்டது தப்பு தான் திருண்ணா... நீங்களா தானே இங்கே வந்து என்னை சேர்த்து விட்டீங்க நீங்களே சொல்லுங்க நான் யார் கூட பேசணும் யார் கூட பேசக்கூடாது நீங்களே சொல்லுங்க நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு இப்ப சொல்றீங்க?? புரியலையேன்னு தானே கேட்டேன் அதுக்கு போய் ரொம்ப பேசறீங்க நீங்க தானே சேர்த்து விட்டீங்க பசங்க கூட பேசினால் என்ன தப்பு???" என கேட்டாள்...
முதன் முறையாக அவள் அவனை எதிர்த்து பேசுகிறாள் இவள் இவ்வளவு தூரம் பேசுவாள் என அவனுக்கே இப்போது தான் தெரியும் போல அப்படி இருக்க அவன் முகம் மாறியது...
அவனால் அவள் அவனை எதிர்த்து பேசியதை ஏற்று கொள்ள முடியவில்லை...
அதோடு விடாமல்," இங்கே எல்லாமே தப்பு மூச்சு விட கூட தப்புதான் சொல்லுவீங்க போல!! ஒரு லிஸ்ட் போட்டு கொடுங்க நான் அது போல நடந்துக்கிறேன் உங்களை பொறுத்தவரை நான் ரோபோ மாதிரி இருக்கணும் போல" என கூற அதை கேட்டவனோ சட்டென்று எழுந்து அவள் அருகே வந்து அவளது கையை தன் பக்கமாக இழுத்தவன் அவளை பார்க்க அவனின் தீடிர் செய்கையால் அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது...
"என்ன டி ஓவரா பேசுற??? சென்னை வந்து நாலு நாள் முழுசா முடியல அதுக்குள்ள இந்த மாற்றமா??? பரவாயில்லையே ஆமாம் தப்புன்னு தான் சொல்லுவேன் எனக்கு பிடிக்காத எதையும் நீ செய்யும் போது நான் தப்பு என்று தான் சொல்லுவேன் உன்னை என் கைய புடிச்சு குடுத்துட்டு நாங்க வர வரைக்கும் பார்த்துக்கோ என்று சொல்லிட்டு போனாங்க இல்ல அவங்க வரட்டும் நான் உன்னை அவங்க கையில் கொடுத்துட்டு போயிட்டே இருக்கேன் என்னுடைய கஸ்டடியில் இருக்கணும்ன்னா இப்படித்தான் இருக்கணும் சும்மா எகிறிட்டு எல்லாம் வரக்கூடாது...
உன்னை விட எகிற எனக்கு நல்லா தெரியும்...நான் கூட உன்னை என்னமோ நினைச்சேன் பரவாயில்லை உன்னை கூட்டிட்டு வந்ததும் நல்லதா போச்சு அப்போ தானே தெரியும் நீ எப்படி உன் குணம் எப்படின்னு இன்னிக்கு நீ பசங்க கூட பேசுவ நாளைக்கு என்ன டேட்டிங்கா?? பரவாயில்லை சென்னை உன்னை நல்லா தான் மாத்தி இருக்கு" என கூறியவன் அவளை அழுத்தமாக பார்க்க தன் அருகே நின்று கொண்டு அவன் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் பீதியில் உறைந்து நிற்கும் அவளை பார்த்தவன் அப்படியே அவளது கையை விட்டவன் ,"தொலைச்சிடுவேன் படிச்சு முடிக்கிற வரை வாலை சுருட்டி வைக்கிற இல்லை ஒட்ட நறுக்கிடுவேன்" என்று எச்சரிக்கை செய்து விட்டு அவ்விடம் விட்டு சென்றான்...
அவளுக்கோ அவன் பேசிய பேச்சில் அழுகை அழுகையாக வந்தது.. அப்படி என்ன அவள் செய்து விட்டாள் என யோசித்தவளுக்கு அழுகை வர அப்படியே தலைவலியும் அவள் வேதனைக்கு துணையாக வந்தது..
கொஞ்ச நேரத்தில் அழுது அழுது அப்படியே உறங்கி போனாள்... அதை அவன் பெரிதாக கண்டு கொள்ளவில்லை...
அவனோ எப்பொழுதும் போல விடுமுறை நாள் இரவு லேசாக மது அருந்துவான்... அது அவன் எதைப் பற்றியும் யோசிக்க கூடாது என எண்ணி அவன் அருந்துவான்... வாரத்தில் ஐந்து நாட்களும் ஒரே ஓட்டமாக இருக்கும் மீதம் இருக்கும் இரு நாட்களில் தனிமை அவனை மட்டும் அந்த சமயங்களில் மாயாவின் எண்ணம் அதிகமாக இருக்கும் அதை தவிர்ப்பதற்காக விடுமுறை நாட்களில் இரவு நேரங்களில் மது அருந்திக் கொண்டிருப்பான்..
அவளை நினைக்கக் கூடாது மறக்க வேண்டும் என எண்ணி அவன் தொடர்ந்து இந்த பழக்கம் இன்று வரை அவனால் மாற்ற முடியாமல் தொடர்ந்து வருகிறது அப்படி இருக்க இன்று இவள் கொடுத்த எரிச்சல் தாளாமல் அவன் மது அருந்த துவங்கினான்..
அவள் எப்படி என்னை எதிர்த்து பேசலாம் என்பது தான் அவனுடைய கேள்வியே அவனைப் பொறுத்தவரை அவள் சிறு பெண் அவளுக்கு என்ன தெரியும் ஊர் உலகத்தைப் பற்றி தெரியுமா?? இல்லை என்ன தெரியும்?? அப்படி இருக்க,
அவன் அவள் தவறான பாதையில் போய் விடக்கூடாது என்பதற்காக கொடுக்கும் ஒரு சில அறிவுரைகள் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் அவள் இப்படி எதிர்த்து பேசுவாளா அப்போ இவளை நான் ஒன்றும் சொல்லக்கூடாதா அவனை கார்டியனாக மதிக்க வேண்டாம் ஆனால் தாலி கட்டியவனாக மதிக்கலாமே.. எல்லாம் வயசு கோளாறு அப்படித்தான் இருக்கும் என்று எண்ணம் அவனுக்கு வந்தது..
கார்டியன் ஆக இருக்கும்போதே ஏதோ ஒருவன் அவளுக்கு லெட்டர் கொடுத்ததை பார்த்து அவளை அறைந்தவன் இப்பொழுது அவள் அவன் தாலி கட்டிய மனைவி என்னதான் அவன் மனைவி இல்லை என்று கூறினாலும் அவளுக்கு தேவையான கடமைகளில் இருந்து அவன் விலகாமல் தான் இருக்கிறான்...
அப்படி இருக்க, யோசித்து யோசித்து பார்த்தவன் குடித்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அவனுக்கு போதை தலைக்கு ஏறி அவன் அமர்ந்து இருந்த சோபாவில் படுத்து விட்டான்...
அவளும் உறங்கி போய் விட எப்போதும் குடிக்கும் அளவை விட கொஞ்சம் அதிகமாக குடித்து விட்டான் திரு...
இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க இடையே திருவுக்கு தான் உறக்கம் பாதிக்க பட்டது.. அவன் இவள் வந்தது முதல் சோபாவில் தான் படுத்து இருக்கிறான் அவனுடைய பிளாட்டில் இருப்பதே ஒரு படுக்கையறை அப்படி இருக்க அவனால் புரண்டு கூட படுக்க முடியவில்லை...
அதில் வேறு இயற்கை உபாதை காரணமாக அவனுக்கு பாத்ரூம் வேறு செல்ல வேண்டும் பாத்ரூம் செல்ல வேண்டும் எனில் அவள் படுத்திருக்கும் அறையில் உள்ள கழிவறையை தான் அவன் உபயோகிக்க வேண்டும் என்ற நிலையில் அவன் அவள் இருக்கிறாள் என்பதையே மறந்தான்...
அதிகமாக குடித்து விட்டோம் என்பது மட்டும் அவனுக்கு நினைவிருக்கிறது வேறு எதுவும் நினைவில்லை உறக்கத்தின் பிடியில் நேராக அவள் படுத்து இருக்கும் அறையின் கதவை திறந்து கழிவறைக்கு சென்றவன் வெளியே வந்து எப்போதும் படுப்பது போல அவள் அருகே படுக்கையில் சரிந்தான்...
படுத்தவன் மனமோ மாயாவை தேடியது.. தன் அருகில் யார் இருக்கிறார்கள் என்ற நினைவு கூட இல்லாமல் தன் அருகே படுத்து இருக்கும் கார்த்திகா மீது அவனின் காலையும் அவனின் வலுவான கையை போட்டவன் அவள் உடலை அப்படியே தன்னோடு சேர்த்து இழுத்தான்... அவள் இடையை பிடித்து இழுத்தவன் விரல்கள் அவளின் இடையில் கோலமிட்டன...
அதுவரை உறக்கத்தின் பிடியில் இருந்தவள் அவன் மீது அவள் கை கால்களை போடவும் அவள் உறக்கம் கலைந்து கண்ணை திறக்க அவள் மீது ஒரு வலுவான கையும் காலும் இருக்க அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து படுத்து கொண்டு இருக்கும் திருவை பார்த்தவள் அதிர்ந்தாள்... அதிலும் அவனின் வலுவான கை அவளின் வெற்று இடையை வெகுவாக ஆக்கிரமித்து அவளை தொல்லை செய்தது...
அதுவும் அவன் அருகாமை அவளை விதிர்விதிர்க்க செய்ய அதுவும் அவனின் மூச்சுக்காற்று வேறு அவளின் கழுத்தில் பட்டு அவளை மூச்சடைக்க வைத்தது... அவனின் விரல்களின் ஜாலம் அவளை என்னென்னவோ செய்தது இதை எல்லாம் விட அவளுக்கு இந்த எண்ணமே ஒரு பயத்தை கொடுத்தது...
இவங்க எப்படி இங்கே என யோசித்து அவனை அவளிடம் இருந்து விலக்க அவள் முயலும் போதே அவளால் முடியாமல் போனது..அவனுடைய சிறு விரலைக் கூட அவளால் அசைக்க முடியவில்லை...
அவனிடம் இருந்து அவனின் நாசியில் கலந்து வந்த மதுவின் வாசனை அவன் குடித்து இருக்கிறான் என்பதை அவளுக்கு உணர்த்த இவரு குடிப்பாரா என யோசித்தாலும் அவனின் அருகாமை அவளுக்கு என்னவோ செய்ய மீண்டும் அவனிடமிருந்து அவள் விலக பார்த்தாள்...
அதற்குள் அவனோ அவள் இடையை மேலும் அவனோடு சேர்த்து இழுத்தவன் ,"ஹே ஏன் டி என்கிட்ட இருந்து விலகுற மரியாதையா என்கூட படு இல்லை அவ்ளோ தான்" என போதையின் வீரியத்தில் உலறினான்... அவனுக்கு அவளை அணைத்து கொண்டு படுப்பதில் இன்பம் கண்டான்...
அவன் யாரிடம் பேசுகிறான் என அவளுக்கு புரியவில்லை...தன்னிடம் தான் கூறுகிறானோ என எண்ணியவள் ,"திருண்ணா" என மெல்லிய குரலில் கூற அவனோ அதை கேட்கும் நிலையில் இல்லை ,"ஏன் டி என்னை விட்டு போன???" என்றான்...
அதை கேட்கவும் அவளுக்கு எல்லாமே விளங்கியது...மாயாவை எண்ணி தான் அவன் பேசுகிறான் என புரிந்தது...
ஏனோ அந்த நொடி அவன் மீது அவளுக்கு பரிதாபம் வந்தது…
