வேந்தன் : 8
அத்தியாயம் : 8
"இவரா???" என வாய் விட்டே அதிர்ச்சி மாறாமல் கேட்டாள் கார்த்திகா...
"ஆமாம் இவரு தான் ஏன் உனக்கு அவரை தெரியுமா???" என மெல்லிய குரலில் ரம்யா கேட்க இவளிடம் என்ன சொல்வது என தெரியாமல் கார்த்திகா முழித்தாள்...
அதற்குள் வகுப்புக்குள் நுழைந்து விட்டான் திரு...
அவனை கண்டதும் அனைவரும் அமைதியாக இருந்தனர் ஊசி விழுந்தால் கூட சத்தம் போடாமல் இருக்கவும் அவளுக்கு இவனை கண்டு தலை தான் சுற்றியது...
இவன் வாத்தியார் என அவளுக்கு தெரியும் ஆனால் இந்த கல்லூரியில் தான் அவன் வேலை செய்கிறான் என அவளுக்கு தெரியாது...
இவனை சிடு மூஞ்சி என்று கூறுகிறார்களே அவன் சிடுமூஞ்சி தான் என அவளுக்கு நன்றாக தெரியும் ஆனால் கல்லூரியில் எப்படி இருப்பானோ என்னவோ இதுக்கு தான் என்னை கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்ல வேண்டாம் என்று சொன்னாரா என எண்ணினாள்...
வகுப்புக்குள் நுழைந்தவுடன் அனைவரையும் ஒரு பார்வை தான் அவன் உடல் கட்டழகு அவன் அணிந்து இருக்கும் சட்டையை மீறி வெளியே தெரிய காலையில் எப்படி சுத்தமாக உடை அணிந்து இருந்தானோ அதே போல இப்போதும் இருந்தான்...அவன் தன் பாக்கெட்டில் கையை விட்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்தான்...
அனைவரின் தலையும் குனிந்த படி இருந்தது...
அவன் வகுப்பில் இது எப்போதும் நிகழும் ஒன்று தான்...அவன் வகுப்புக்குள் நுழைந்ததும் முந்தைய நாள் எடுத்த பாடத்தை பற்றிய கேள்விகளை கேட்பான்.. அந்தப் பாடம் மாணவர்களின் மனதில் பதிந்து இருக்கிறதா என அவன் ஆராய்வான் அதனால் மாணவர்களோ தன்னை கேள்வி கேட்டு விடுவார்களோ என எண்ணி தலையை கவிழ்த்து இருப்பார்கள்..
அப்படி இருக்க ஒருத்தி மட்டும் இவனை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்து கொண்டு இருக்க ,"ஹே குனிஞ்சு உட்காரு இல்லை முதல்ல உன்னை தான் கேள்வி கேட்பார்" என அருகில் இருந்த ரம்யா மெல்லிய குரலில் கூற
அவளோ இன்னும் அவனை கண்ட அதிர்ச்சி மாறாமல் இருக்க," உனக்கு கவலை இல்லை இன்னிக்கு தப்பிடுச்சுடுவ ஆனால் நாளைக்கு நிமிர்ந்து உட்கார்ந்த நீ காலி" என அவளே கூறி பதிலும் அவளே கூறினாள்...
ரம்யா கூறியது போலவே," ஹே லாஸ்ட் பெஞ்ச் செகண்ட் கேர்ள் யூ கெட் அப்" என கார்த்திகாவை எழுந்து நிற்க சொன்னான் திரு..அவன் பார்வை அவளை இதுவரை அறியாதது போல இருந்தது...
"என்ன எதுக்கு எழுந்து நிக்க சொல்றாங்க" என அதிர்ச்சி மாறாமல் அவள் எழுந்து நிற்க ,"வாட் இஸ் யுவர் நேம்???" என கேட்டான்
'என்ன ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்குறாங்க ரொம்பத்தான் பண்றாங்க' என மனதுக்குள் எண்ணினாலும்," நான் உங்க பொண்டாட்டின்னு சொல்லிடலாமா" என சற்று என்று அவளுக்கு தோன்றினாலும் அதை அடக்கிக் கொண்டவள் ,"கார்த்திகா" என்று மெல்லிய குரலில் கூற
"நியூ அட்மிஷனா???" என கேட்டான் ,"ஆமாம்" என அவள் தலையாட்ட ஓகே என ரெஜிஸ்டரை பார்த்தவன் ,"கார்த்திகா கிருஷ்ணன் ரைட்" என கேட்க
அவளோ ,"ஆமாம்" என கூறினாலும் மனதுக்குள் ஆமாம் இவருக்கு ஒண்ணுமே தெரியாது பாரு நான் யாரு என்னனு இவருக்கு தெரியாது என மனதுக்குள் குமைந்து கொண்டாள்..
" ஓகே வெல் நான் நேத்து நடத்தின பாடம் பத்தி உனக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை..டெல் மீ வாட் இஸ் த டிஃபரன்ஸ் பிட்வின் சி அண்ட் சி பிளஸ் " என கேட்க அவளோ திரு திருவென விழித்தாள்...
அவனைப் பார்த்ததே அதிர்ச்சி என்றால் அவன் கேட்ட கேள்வி அதைவிட அதிர்ச்சியை அவளுக்கு கொடுத்தது..
அவள் திருதிருவென பேக்கு போல நிற்பதைப் பார்த்தவனுக்கு கோபம் தான் வந்தது.. இதுக்கு கூட வித்தியாசம் தெரியலைன்னா எப்படி இவளை எல்லாம் படிக்க வைக்கிறது எதுக்கு?? என மனதுக்குள் நினைத்து கொண்டவன் ,"என்ன இப்படியே நின்னுட்டு இருக்க பதில் சொல்லு" என அவன் அழுத்தமாக கேட்டான்..
அவன் அதட்டவும் அவளுக்கு சுத்தமாக எல்லாம் மறந்து போனது...வாயே எழவில்லை...அவள் நாவு மேலண்ணத்தில் பசை போல ஒட்டி கொண்டு பேச்சே வராமல் தவித்து கொண்டு இருந்தாள்...
"என்ன இது கூட தெரியலையன்னா எப்படி?? செகண்ட் ஈயர் தானே படிக்கிற???இது லாஸ்ட் ஈயர் சப்ஜெக்ட் இதுக்கு கூட அன்சர் தெரியாமல் முழிக்கிற??? சும்மா காலேஜ் டிஸ்கண்டினு பண்ணிட்டு இங்கே வந்துட வேண்டியது??? படிக்கணும்னு எண்ணம் இருக்கா இல்லையா??? சும்மா வருவதாக இருந்தால் காலேஜ் விட்டு நின்னுடு படிக்க வைக்கிறவங்க காசாவது மிச்சம் ஆகும்..படிக்க ஆசை இருந்தால் மட்டும் உள்ளே இரு இல்லைன்னா என் கிளாஸ்க்குள்ள வராத கிளாசுக்கு வெளியே நின்னுக்கோ நான் ஒன்னும் கேள்வி கேட்க மாட்டேன் என் க்ளாஸ்ல இருந்தா நான் சொல்லிக் கொடுக்கிறது கவனமா கேட்டுக்கோ புரியுதா??" என அவன் சற்றே அதட்டி நான் இப்படி தான் என்பது போல கூறினான்..
அவனுடைய பேச்சில் அவளுக்கு கண்ணில் கண்ணீர் முட்டி நின்றது.. பொலபொலவென கண்ணில் நிறைந்து நின்றது இப்போ விழுவேன் என இருந்தது ,"இவங்க என்ன இப்படி பேசுறாங்க" அவளுக்கு அந்த கேள்விக்கான விடை தெரியாமல் இல்லை இவனைப் பார்த்ததும் அவளுக்கு பதிலே வரவில்லை என்றுதான் கூற வேண்டும் இதுக்கு பேசாம பொள்ளாச்சிலேயே இருந்திருக்கலாம் போல இங்க வந்தது தான் தப்பா போச்சு என ஆயிரத்தி இரண்டாவது முறையாக அவள் யோசித்தாள்..
வீட்டிலும் தான் இவன் அதை செய் என அவளை விரட்டினான் என்றால் கல்லூரியிலும் அவன் தான் ஆசானாக வந்து இப்படி இரு அப்படி இரு என்ன கூறவும் அவளுக்கு லேசான கோபம் முட்டிக்கொண்டுதான் வந்தது...
எப்போதும் அவனை எப்போதாவது பார்ப்பாள் அந்த தருணத்தில் அவன் ஏதாவது கேள்விகளை கேட்டு அவளை வறுத்தெடுப்பான் பிறகு விட்டு விடுவான்...
அப்படி இருக்க இன்று அவளை வேண்டுமென்றே அவன் கேள்வி கேட்டது போல தான் அவளுக்கு தோன்றியது... இந்தப் பக்கமோ ரம்யா ,"இதுக்குத்தான் இவகிட்ட தலையை குனிஞ்சு உட்கார் டி ன்னு சொன்னேன் கேட்டா தானே" புலம்பிக் கொண்டு இருந்தாள்...
அவளுக்கும் திரு பேசியது வருத்தமாக தான் இருந்தது," வந்த புது ஸ்டூடண்ட் ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள இந்த ஆளு இந்த ஆள் வேலையை காட்டிட்டாரு ஹிட்லர்" என மனதுக்குள் வறுத்து எடுத்துக் கொண்டிருந்தாள்...
"உக்கார் எங்கிருந்துதான் இப்படி எல்லாம் வந்து சேர்றாங்களோ தெரியல" என கூறியவன் அவள் அழுவது தெரிந்தும் கண்டு கொள்ளாமல் வேறு ஒரு சிலரை அழைத்து நேற்று நடத்திய பாடத்திலிருந்து கேள்விகள் கேட்டான் அவர்களும் பதில் கூற இங்கு கார்த்திகாவுக்கு அழுகை நிக்க மாட்டேன் என்றது அழுது கொண்டே இருந்தாள் ஏனெனில் அனைவரும் முன்னாலும் அசிங்கமாகி விட்டது என அவள் எண்ணி கொண்டாள்...
ஆனால் ரம்யா தான் மெல்லிய குரலில் ,"அவர் திட்டுனாருன்னு சொல்லி அழுதா அழுதுட்டே இருக்க வேண்டியது தான் அவர் தினமும் திட்டுவார் படித்து கரெக்டா பதில் சொல்லிட்டா திட்ட மாட்டார் இப்போ அழுதுட்டு இருக்குறத நிப்பாட்டிட்டு அவர் நடத்த போற பாடத்தை கவனி..
இல்லை உன்னை வெளியே அனுப்பிடுவார்.." என கூற அதற்குள் அவன் பாடம் எடுக்க துவங்க அவளோ ரம்யா கூறியதை கேட்டு குறிப்பு எடுக்க துவங்கினாள்...
என்ன தான் ரம்யா ஆறுதல் கூறினாலும் அவளால் அவன் பேசியதை ஏற்று கொள்ள முடியவில்லை...அதையே எண்ணி கொண்டு இருந்தாள்...
அவனும் பாடம் நடத்தி விட்டு தன் வேலை முடிந்ததும் என யாரையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்..அவளுக்கு தான் என்னவோ போல இருந்தது...
வீட்டுக்கு வந்தவளுக்கு இருப்பு கொள்ளவில்லை...அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் காதில் ஒலித்து கொண்டே இருந்தது...
இவன் என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் என்ற கோபம் அவளுக்கு வந்தது...
அவன் சொன்னது போல அவன் வந்தால் கூறி விட வேண்டும் எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் என கூறி விட வேண்டும் இவர்கள் வீட்டில் இருந்தால் இவர்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டுமா என எண்ணி கொண்டாள்..
பொள்ளாச்சியில் இருந்த நிம்மதி கூட இங்கு இல்லாதது போல அவளுக்கு தோன்றியது நேற்று அவள் ரசித்த இந்த வீடு அவளுக்கு சுடுகாடு போல காட்சி அளித்தது...
அந்த நேரம் பார்த்து மயிலாத்தாள் அழைத்தார்...அவள் ஃபோன் அலறுவதை பார்த்து போனை எடுத்து காதில் வைக்க அவரோ," என்ன டி போனவ போன மாதிரி ஒரு ஃபோன் இல்லை எதுவும் இல்லை எங்களை எல்லாம் மறந்துட்டியா??" என்க
அவளுக்கு அழுகை முட்டியது அழுதாலும் சந்தோசம் கொண்டாலும் இந்த வீட்டு ஆட்களிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும் அதனால் ,"இல்லை பாட்டி" என கூற
அவள் குரல் என்னமோ போல இருப்பதை பார்த்து ,"ஏன் டி உனக்கு அங்கே பிடிக்கலையா??" என கரிசனமாக கேட்டார்.. அவருக்கும் அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை அப்படி இருக்க அவரும் அவளிடம் கரிசனமாக கேட்க அவளோ எல்லா விஷயத்தையும் போட்டு ஒடைத்து விட்டாள்...
அதை கேட்ட அவரோ கடுப்போடு ,"தாம்பத்தியம் பாடம் எடுக்க சொன்னா புத்தக பாடம் எடுத்து கேள்வி கேட்கிறான் மடப்பையன்...இவனெல்லாம் சாமியாராக போக வேண்டியவன் ... நீ அவன் கிட்ட நெருங்கி பழகு டி எல்லாம் சரியா போயிடும்" என அவர் எங்கே சுற்றி வந்தாலும் அந்த இடத்திலேயே வந்து நின்றார்..
அவளுக்கோ அதுவும் பிடிக்கவில்லை அதனால் போனை வைத்து விட்டாள்...
என்ன என்னவோ யோசித்தாள்..அந்த சமயம் பார்த்து அவன் வந்தான்..அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் அவனை பார்த்து அவள் மனதில் இருந்த கோபத்தில் இருந்து அவனை கண்டதும் அவன் மீது பயத்தால் ஒரு படி குறைந்து இருந்தாலும்," நீங்க அங்கே தான் வேலை பார்க்கறீங்களா??" என கேட்டாள்..
“ஆமாம்” என சர்வசாதாரணமாக அவன் தன் ஷர்ட் பட்டன்களை அவிழ்த்து கொண்டு கூறினான்..அவள் முகம் அழுது வீங்கி இருப்பதை கவனித்த அவனுக்கு கடுப்பு தான் வந்தது...அழ வேண்டிய விசயம் என்ன நடந்தது என அவன் எண்ணினான்...
அவனது செய்கையை பார்த்து அவளோ அந்த பக்கமாக திரும்பி நின்று கொண்டாள்..
ஏனெனில் அவள் சிறு வயதில் இருந்தே அவனை பார்த்து இருக்கிறாள்..அதனால் அவன் அவளுக்கு புது விதமான ஒருவன் இல்லையென்றாலும் அவனை ஏனோ இப்படி அவளால் பார்க்க முடியவில்லை..அது பாட்டி அவளிடம் தொடர்ந்து இப்படியே பேசி கொண்டு இருப்பதாலோ என தெரியவில்லை...
அப்படி இருக்க அவளோ திரும்பி நின்று," என்கிட்ட ஏன் சொல்லல??" என அவள் கேட்க
"ஏன் சொன்னா என்ன பண்ண போற???" என அவன் கேட்டான்..
அவன் கூறினால் அவள் ஒன்றும் செய்ய போவது இல்லை தான் என்றாலும் ஒரே இடத்தில் அவனும் அவளும் சரிபட்டு வராது என்றே அவளுக்கு தோன்றியது...
"வேற ஏதாவது காலேஜில் என்னை சேர்த்து விடுங்க இல்லாட்டி நான் பொள்ளாச்சி போறேன்" என்க
அவனுக்கு இப்போது கோபம் வந்தது.. "இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி பேசுற" என கேட்டான்...
அவளோ ,"உங்களுக்கு நான் ஏன் இங்கே வந்தேன்னு தெரியாதா அப்புறம் எதுக்காக அப்படி ஒரு கேள்வி கேட்டீங்க???" என கேட்டாள்...
அவனோ அவளை பார்த்து ,"இதோ பார் காலேஜ் வேற இது வேற இரண்டையும் போட்டு குழப்பிக்காத அங்கே நான் உன்னோட புரோபசர் இங்கே நான் உன்னோட என அவள் கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்து கொண்டே உன் கார்டியன் புரியுதா?? நல்லா படிச்சு நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருந்தா நீ இந்த கேள்வியை என்கிட்ட கேட்க வேண்டிய அவசியம் இல்லை" என கூற அதை கேட்ட அவளோ வாயை மூடி கொண்டாள்...
அவனோ அவள் திகைத்து நிற்பதை பார்த்து அறைக்குள் சென்று விட்டான்...
அவளுக்கு எல்லாம் விளங்கி விட்டது இனி இப்படி தான் போக போகிறது அவளுடைய வாழ்க்கை என தெளிவாக புரிந்தது...இப்படியே நான்கு நாட்கள் நான்கு யுகம் போல சென்றது..
அவளும் மற்ற வகுப்பு தோழர்கள் போல அவன் கிளாஸ் வரும் போதே பீதியில் உறைய துவங்கி விட்டாள்...அவனும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் தான் இருந்தான் எனலாம்..
அப்படி ஒரு நாள் அவளும் ரம்யாவும் காலேஜ் முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரம் பார்த்து ரம்யா அவளிடம் ,"கார்த்திகா இந்த சிடு மூஞ்சி ஹிட்லர் கிளாஸால் சரியான தலை வலி டி ஒரு காபி குடிச்சிட்டு போலாமா" என கேட்டாள்...
அவளும் சரி போகலாம் என கூறி இருவரும் கேன்டீன் செல்ல ரம்யா இருவருக்கும் காபி ஆர்டர் செய்ய போக அந்த சமயம் ,"ஹே கார்த்திகா இங்கே என்ன பண்ற???" என்ற குரல் கேட்க அவளோ திரும்பி பார்க்க அவளுக்கு 15 வயதில் காதல் கடிதம் எழுதி கொடுத்தவன் நின்று கொண்டிருந்தான்..
அவன் தான் அவளை அழைத்தது அவனை பார்த்து அவள் அதிர அவனோ இயல்பாக ,"எங்கே இந்த பக்கம்??" என கேட்க
"நான் இங்கே தான் படிக்கிறேன்" என அவள் கூறினாள்.. அவனும்," நானும் இங்கே தான் படிக்கிறேன்" என நலம் விசாரித்து கொண்டு இருக்க அந்த சமயம் கேன்டீன் வந்த திருவுக்கு இவள் ஒருவனோடு பேசி கொண்டு இருப்பதை பார்த்ததும் கடுப்பு வந்தது...அதற்குள் ரம்யா காபியோடு வந்து விட மூவரும் சேர்ந்து அமர்ந்து பேசி கொண்டு இருக்கவும் இவன் வரவை கார்த்திகா காணவில்லை...ஆனால் திரு அவளின் சிரிப்பையும் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்து விட்டான்... "வந்து நாலு நாள் முழுசா முடியல அதுக்குள்ள பசங்க பிரெண்ட்ஷிப் கேட்குதா உனக்கு" என எண்ணி கடுப்பானான்…
