வேந்தன் : 6
அத்தியாயம் : 6
அங்கு அவனோ சென்னையில் எப்போதும் போல அவன் வேலையில் இருந்தான்...திருமணம் என்ற ஒன்றையே மறந்து போனான்...
அவன் ஊருக்கு வர வேண்டும் என்ற ஒன்றையே மறந்து போனான்...அவளையும் மறந்து போனான்...தான் உண்டு தன் வேலை உண்டு என்பது போல இருந்து கொண்டான்...
இப்படியே ஒரு மாதம் போனது அவனுக்கு தெரியவில்லை...எப்போதும் அவனுக்கு தேவையான காபியை தயார் செய்து கொண்டு இருந்தான்..
அந்த நேரம் பார்த்து அவனுடைய போன் அலறியது வீட்டில் இருந்து தான் அழைத்திருந்தார்கள் எடுக்க மனமில்லை கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவன் யாருடனும் பேசவில்லை பேசவும் தோன்றவில்லை...
நேற்று தான் ராமகிருஷ்ணன் அழைத்து அட்வைஸ் செய்து இருந்தார்...அதன் தாக்கம் போனை எடுப்போமா என அவனுக்கு தோன்றியது...
ஆனால் தொடர்ந்து அழைப்பு இடை விடாமல் வந்து கொண்டே இருக்க அவன் ஃபோனை எடுத்தான்...
ஏனெனில் முதல் முறையாக கார்த்திகா அவளுடைய எண்ணில் இருந்து அழைத்து இருந்தாள்...ஒரு வித தயக்கத்தில் தான் மறுமுனையில் கார்த்திகா தான் அவனை அழைத்து கொண்டு இருந்தாள்...
இனியும் பாட்டியின் தொல்லையை சகித்துக் கொண்டு அவளால் இருக்க முடியாது என்ற நிலையில் அவள் வந்து விட்டாள்..
ஆம் முதலில் பணம் தர மாட்டேன் என கூறியவர் பிறகு கல்லூரிக்கும் போக வேண்டாம் என அவளை வீட்டிலேயே அடைத்து வைத்து விட்டார்...
கல்லூரிக்குப் போகக்கூடாது என்று கூறி அவர் தடுத்திருக்க அவளோ போவேன் என்று கூற,"காலேஜ் போறேனா நீ இந்த வீட்ல இருக்க கூடாது வெளியே கிளம்பு" என்று கூறிவிட்டார்..?
அப்படி இருக்க, இதை பற்றி அவனிடம் பேசியே ஆக வேண்டும் என எண்ணி முதன் முதலாக அவள் அழைத்து இருக்க அவனும் அவளை காக்க வைக்க மனம் இன்றி போனை எடுத்தான்...
"ஹலோ" என்றவுடன் அவனது செவி வழியாக அவளை தாக்க அவளிடம் பேச்சு இல்லை அவனோ மீண்டும் ஹலோ என அழுத்தமாக கூற," நான் தான்" என்றாள்..
"சொல்லு"
"எனக்கு காசு வேணும்" இதுக்காகவா என்னை அழைத்தால் என எண்ணிய அவன் ,"பாட்டிகிட்ட வாங்கிக்கோ" என்பது போல சாதாரணமாக கூறினான்...
"அவங்க தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க" என்று கூற," அப்போ தாத்தா கிட்ட கேளு" என்க
"பாட்டி சொல்லாம தாத்தாவும் தர மாட்டாங்க" என்று குரல் மெலிந்து அவள் கூற,
"எதுக்காக தேவையில்லாமல் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க என எண்ணி எவ்வளவு வேணும்??" என கடுப்போடு அவன் கேட்டான்...
"2 ஆயிரம் ரூபாய்" என்க
"என்னோட செல்ப்ல என்னோட டிரஸ் அடியில் கொஞ்சம் காசு இருக்கும் உனக்கு தேவையானதை எடுத்துக்கோ" என்று அவன் கூற அவளோ சரி என்றாள்..
அவளுக்கு வேறொரு விசயமும் அவனிடம் கூற வேண்டும்...அதனால் போனை வைக்காமல் இருக்க அவனோ,"வேற ஒன்னும் இல்லையே சரி நான் வைக்கிறேன்" என்க
"ஐயோ வச்சிடாதீங்க" என்று அவசரமாக கூறினாள்...
"என்ன சொல்லு"
"என்னை இங்கிருந்து கூட்டிட்டு போறீங்களா???" என அவள் தயக்கமாக கேட்டாள்...
அங்கு என்னவோ நடந்திருக்கிறது அதனால் தான் அவள் இப்படி ஒரு வார்த்தை கேட்கிறாள் என எண்ணி ,"என்னாச்சு" என கேட்டான்..
" காலேஜ் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என அவள் தயங்கி தயங்கி கூற அவனுக்கு அதுக்குமேல் கேட்டுக் கொண்டிருக்க பொறுமையில்லை அந்த சிறு பெண்ணை என்னவெல்லாம் செய்கிறார்கள் என யோசித்தவனுக்கு கடுப்பு தான் வந்தது...
"நாளைக்கு அங்கே வரேன்" என்றான்...அவள் கண்ணில் கண்ணீர் வந்தது... அவளும் பொறுத்து பொறுத்து பார்த்தாள் ஆனால் முடியவில்லை... அவளால் தாக்குப் பிடிக்க முடியாமல் தான் அவனை அழைக்க வேண்டியதாகி போனது...
அடுத்த நாள் சொன்னது போலவே அவன் வந்தான்.. வீட்டிற்கு அவன் நுழையும் போது மயிலாத்தாள் கூடத்தில் அமர்ந்து இருக்க பொன்னுசாமி அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்...அவன் வீட்டிற்குள் அவன் கண்கள் அவளை தேட அவளோ எப்போவும் போல வீட்டு வேலை செய்து கொண்டிருக்க,
"கார்த்திகா இங்கே வா" என அவளை அழைத்தான் அவனது குரல் கேட்கவும் ஓடிவந்து அவள் நிற்க மயிலாத்தாள் கண்டுகொள்ளாமல் இருந்தார்..
"ஏன் காலேஜ் போகல" என அவன் கேட்க
அவளோ பாட்டியை பார்த்து தயங்கி ,"போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என்க
"அவங்க இல்லை உன்னை படிக்க வைக்கிறது நான் புரியுதா??" என்க
தனது பாட்டியை பார்த்து," நீங்க என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க கல்யாணம் கல்யாணம்னு கழுத்து அறுத்தீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா இப்போ அவளை போட்டு பாடா படுத்தி எடுக்குறீங்க ஏன் அவளை காலேஜ் போக வேண்டாமென்று சொல்றீங்க ??" என்க
"இதோ பாரு அவ படிச்சு ஒன்னும் கிழிக்க போறதில்ல அவளோட தரம் இந்த வீட்ல வேலைக்காரி.. அவ இந்த வீட்ல வேலைக்காரியா இருந்தா போதும் படிச்சொன்னும் அவ பட்டம் வாங்கி கிழிக்க வேண்டாம் என் வீட்ல அவ வேலைக்காரியா இருந்தா போதும்" என்று கூறினார்..
அதை கேட்டவனுக்கு கடுப்பு வந்தது அவள் இந்த வீட்டில் வேலைக்காரியாக இல்லை குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் இருக்கிறாள் அது தெரிந்தும் பாட்டி இப்படி கூறவும் அவனுக்கு மிகவும் கோபம் வந்தது ,"அவளை படிக்க வைக்கிறது நான் நீங்க இல்லை அவ படிச்சுதான் ஆகணும் எப்படி அவ காலேஜ் போகாம இருக்கானு நான் பார்க்கிறேன்" என்றான் அவன்...
"அப்படின்னா நீயே கூட்டிட்டு கிளம்பு என் வீட்ல அவ எப்படி இருக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன் புரியுதா அவ இங்க இருந்தா என் வீட்டு வேலையை செஞ்சுட்டு இருந்தா போதும் வீட்டில் 1008 வேலை இருக்கு அதையெல்லாம் விட்டுவிட்டு படிக்கப் போறாளாம் படிக்க இவளை எல்லாம் இவ்வளவு தூரம் வளர்த்து விட்டதே பெருசு" என்க
அதை கேட்டு அவளுக்கு கண்ணில் கண்ணீர் வந்தது..அவனுக்கோ ஆத்திரம் வந்தது...இனியும் அவனுக்கு பொறுமை இல்லை...
20 வயது பெண்ணுக்கு அவன் பண்ணியதே துரோகம் என அவன் எண்ணி கொண்டு இருக்கிறான் இந்த நேரத்தில் இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என எண்ணி," தாத்தா இதெல்லாம் என்னன்னு கேக்க மாட்டீங்களா அந்த புள்ள என்ன பாவம் பண்ணுச்சுன்னு இப்படி பாட்டி பண்ணிட்டு இருக்காங்க" என்ன அவன் கேட்கவும் அவரோ வாய் திறவா பிராணி ஆகி அமர்ந்து இருந்தார்...
"அவங்கள ஏன்டா கத்தற நாங்களா இவ கழுத்துல தாலி கட்ட சொன்னோம் நீதானே அவ கழுத்துல தாலி கட்டினவன் நீ தானே நீ தான் அவளை பார்த்துக்கணும்... இனி நாங்க ஏன் டா பார்த்துக்கணும்???
எங்க கூட இருந்தா இந்த வீட்டு வேலைக்காரியா தான் இருக்கணும் புரியுதா???" என்ன மயிலாத்தாள் வேண்டும் என்று பேசினார்..
அதைக் கேட்ட அவனும் அவர் பேச்சுக்கு பேச்சு அவளை வேலைக்காரி என்று கூறவும் அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.." அவ என் பொண்டாட்டி ..அவ வேலைக்காரி கிடையாது...அவ ஒன்னும் இங்கே வேலைக்காரியா இருக்க வேண்டிய அவசியம் இல்லை நாளைக்கே அவளை அழைச்சிட்டு போறேன்" என்று கூறி விட்டான்...
அதைக்கேட்ட மயிலாத்தாள் மனதுக்குள் மகிழ பொன்னுசாமியும் நல்ல வேலை வாயே திறக்கல நல்லதா போச்சு என எண்ணி கொண்டார்... அவளோ சற்று என்று அவன் இப்படி கூறுவான் என எதிர்பார்க்காமல் திகைத்து நின்றாள்...
அவனோ பாட்டியை பார்த்து முறைத்து கொண்டு அவளை அழைத்து கொண்டு சென்றவன் அவளுடைய காலேஜுக்கு சென்றான்...
அங்கு அவனிடம் ,”என்ன சார் கல்யாணம் பண்ணி அந்த பொண்ணோட படிப்பை ஸ்டாப் பண்ணிட்டீங்க" என்க
அவளோ தலை குனிந்து நிற்க அவனோ," சாரி சார் அவளோட டிசி கொடுங்க" என கேட்கவும் அவளோ அதிர்ந்தாள்...
"ஏன் சார் அவ படிப்பை நிறுத்த போறீங்களா???" என கல்லூரியில் கேட்க ,"இல்ல சென்னையில சேர்த்த போறேன்" என்று கூறினான்..
அதைக்கேட்டு அவளோ மேலும் அதிர்ந்தாள்... சென்னையா என எண்ணி ,"நான் இங்கேயே இருக்கேனே" என அவன் அருகில் நின்று கொண்டு அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்...
அவனோ அவளை முறைத்து,"ஏன் உனக்கு படிக்க வேண்டாமா???" என்றவன் தன் கை சட்டையின் மடிப்பை சரி செய்தபடி ,"என்னால பொழுதன்னைக்கும் மாறி மாறி வந்துட்டு போயிட்டு இருக்க முடியாது பாட்டி சொன்னதை கேட்டில்ல அவங்க உன்னை என் தலையில் கட்டாம விட மாட்டாங்க உன் படிப்பு முடியும் வரை என் கூட இரு" என்றான்...
அவளோ அவன் கூடவா??? சென்னையிலா என எண்ணி,"அப்போ வயசானவங்க என்ன பண்ணுவாங்க???" என அவள் யோசிக்க அவளுடைய யோசனையை பார்த்து ,"என்ன யோசிக்கிற???"
"இல்லை நான் உங்க கூட வந்துட்டா வீட்டு வேலை எல்லாம் யார் செய்வா???" என்க
அவனோ அவளை பார்த்து முறைத்து ,"அதெல்லாம் அவங்க செஞ்சுப்பாங்க நீ உன் வேலையை பாரு" என்றான்...
அவளோ வாயை மூடி கொண்டாள்...
பிறகு எல்லாம் எல்லாம் மலமலவென காரியங்கள் நடந்தது...இரு நாட்களில் அவளை அழைத்து கொண்டு சென்னை சென்று விட்டான்...
சென்னை எல்லாம் அவள் வாழ்கையில் கண்டதே இல்லாத ஒரு இடம் அதனால் அந்த நகரத்தை இலேசாக வாயை பிளந்து தான் அவள் பார்த்தாள்...
அவள் வேடிக்கை பார்ப்பதை பார்த்த அவனோ ,"வாயை மூடிட்டு பாரு ஏதாவது உள்ளே போயிட போகுது" என்று அவன் கூற அவளோ வாயை மூடி கொண்டாள்...
"இதோ பார் நீ நினைக்கிற மாதிரி இது பொள்ளாச்சி கிடையாது சென்னை இங்கே யாருக்கும் எதுக்கும் நேரம் இருக்காது எல்லோரும் அவங்கவங்க வேலையை தான் பார்த்துட்டு இருப்பாங்க நீயும் உன்னுடைய வேலையை மட்டும் பார்த்தால் போதும் புரியுதா!! உனக்கு ஒரு காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சிருக்கு .. நாளைக்கு அந்த காலேஜுக்கு போகணும் புரியுதா???" என அவன் குடியிருக்கும் குடியிருப்பின் அவனுடைய பார்க்கிங் ஸ்லாட்டில் அவனுடைய காரை பார்க் செய்தவன் அவளிடம் கூற அவளோ தலையை மட்டும் சரி என்பது போல ஆட்டினாள்...
அவனோ காரில் இருந்து இறங்கியவன் அவளை அழைத்து கொண்டு அவனுடைய பிளாட்டுக்கு செல்ல இது போன்ற உயரமான கட்டிடங்களை பார்த்திராத அவளோ வாயைப் பிளந்தாள்...
அவளின் பிரமிப்பை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டு அவளை அழைத்து அவனுடைய பிளாட்டுக்கு சென்றான்..அங்கு அவனுடைய வீடு வெகு சுத்தமாக இருந்தது...அவனுக்கு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற கோட்பாடு அந்த வீட்டில் எல்லா இடத்திலும் நிறைந்து இருந்தது...
"இதுதான் வீடு எனக்கு தேவையான பொருட்கள் எல்லாம் இங்கே இருக்கு உனக்கு என்னென்ன வேணும்னு சொல்லு வாங்கிடலாம்" என்றவன் ,"இங்கே ஒரு பெட்ரூம் தான் இருக்கு நீ அந்த பெட்ரூம் யூஸ் பண்ணிக்கோ நான் இங்க சோபால படுத்துகிறேன்" என்று கூறினான்...
அவளோ அதற்கும் தலையாட்ட அன்றைய இரவு மட்டும் வெளியே இருந்து உணவை ஆர்டர் செய்தவன் வேறு எதுவும் தேவை இன்றி பேசவில்லை... ஒரு புக்கை திறந்து கொண்டு அமர்ந்து விட்டான்...
அவளோ அந்த வீட்டின் ஒவ்வொரு அறையாக சுற்றிப் பார்த்து கொண்டு இருந்தாள்... அங்கு இருப்பதே மூன்று அறை ஹால், கிச்சன், பெட்ரூம் பெட்ரூமில் இருந்து ஒரு பால்கனி சென்னை மாநகரமே தெரியும்படி மிக அழகாக இருக்கும் அப்படி இருக்க அதையெல்லாம் ரசித்துக் கொண்டு அவள் இருந்தாள்...
உணவு வந்ததும் இருவரும் சேர்ந்து உணவை உண்ணும் போது கூட எதுவும் பேசி கொள்ளவில்லை...மறுநாள் அவன் சொன்னது போல அவளை அவன் அழைத்து சென்ற இடம் ஒரு கல்லூரி அங்கு ஆண்களும் , பெண்களும் இருக்க இருபாலர் படிக்கும் கல்லூரியில் தன்னை சேர்க்க போகிறான் என எண்ணி ,"இங்கே வுமன்ஸ் காலேஜ் இல்லையா???" என கேட்க
அவனோ ,"ஏன் பசங்க இருந்தா நீ படிக்க மாட்டியா???"என அவன் திருப்பி கேட்க,
அவளோ திக்கி,"படிப்பேன்" என்று கூற ,"அப்போ படி இங்கே தான் அட்மிஷன் கிடைச்சது" என்று கூறியவன் அவளை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவத்தை நிரப்பினான்...
அதில் எப்பொழுதும் போல அவள் பெயரை கார்த்திகா கிருஷ்ணன் என்று எழுதியவன் கார்டியன் என்ற இடத்தில் திருவேந்தன் என அவனது பெயரை குறிப்பிட்டான்...
அனைத்திற்கும் வாயை மூடி கொண்டிருப்பவளுக்கு தெரியாது நாளை இவன்தான் அவளை படிப்பிக்க வரப் போகிற ஆசான் என்று அவளை எப்படி இவள் எதிர் கொள்வாள்????
