வேந்தன் : 5

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் : 5

அவன் தயாராக இருக்கிறான் என்றதும் அவளுக்கு கை கால்கள் நடுங்கத் தொடங்கின. ஏற்கனவே அவன் என்றால் பயம் இதில் பாட்டி அது இது எனக் கூறி அவளின் தலையை கழுவி மேலே ஏதோ அவன் முன்னால் நிற்க வேறு வைத்து விட்டார்..

எந்த தைரியத்தில் அவள் கூறினால் என அவளுக்கே தெரியாது அவனும் பதிலுக்கு வா நான் ரெடியா இருக்கேன் என்று கூறவும் அவளுக்கு தலை சுற்றியது...

அவளின் முகம் பேய் அறைந்தது போல ஆவதை பார்த்த அவன்," என்ன நீ தயாராக இல்லையா??" என கேட்க அவளோ தலையை இருபுறமும் ஆட்டினாள்...

"அப்புறம் எதுக்கு இப்படி அலங்காரம் பண்ணிட்டு வந்து இருக்க???" என அவன் கேட்க அவளோ," பாட்டி தான்..." என இழுத்தாள்...

"உள்ளே வா உன் கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவன் அழைத்தான்.. ஏனெனில் தவறு அவன் செய்தான் இல்லையா அதனால் அவளிடம் பேசலாம் என அழைத்தான்...

ஏதோ ஒரு ஆத்திரத்தில் பாட்டிக்காக செய்து விட்டான்..அவள் தயங்கி உள்ளே வரவும் எழுந்து நின்றவன் ,"இங்கே வா" என்க..

அவளும் தயக்கத்தோடு அவன் அருகே வர மார்பில் கையை கட்டியவன் அழுத்தமாக அவளை பார்த்தான்... ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டவன் தெரியாமல் ,"தாலி கட்டிட்டேன்னு சொல்ல மாட்டேன் தெரிஞ்சுதான் தாலி கட்டினேன் நீயா இருந்தா வீட்டோட இருப்ப மத்தவங்களா இருந்தா என்னை வேணாம்னு சொல்லிட்டு போயிடுவாங்க.. ஆமாம் என்னால மாயாவை மறக்க முடியல அவளை மறந்துட்டு வேறொரு வாழ்க்கை வாழ என்னால முடியாது அதனால தான் உனக்கு தாலி கட்டினேன்"

அதைக் கேட்டதும் அவள் அதிர்ந்த பார்வை பார்க்க அப்போ என்னை யூஸ் பண்ணினாரா என அவள் யோசித்தாள்...

அவனும் ,”உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கும் எனக்கு நல்லா தெரியும் நீ எப்ப வேணாலும் இந்த வாழ்க்கையில் இருந்து வெளியே போகணும் அப்படின்னா போலாம் வயசானவங்களுக்காக கொஞ்ச நாள் மட்டும் என் கூட இரு உனக்கு விருப்பம் இருந்தா இரு இல்லேன்னா போகலாம்...உன் படிப்பு முடியும் வரை இரு அதனால தான் உனக்கு லவ்வர் இருக்காங்களான்னு கேட்டேன்" என்று கூறவும் லவ்வர் என்ற வார்த்தையே கசக்க வைத்தவன் இவன் தான்..

ஆம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன் அவள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.. அந்த சமயம் பார்த்து அவள் பள்ளியில் படிக்கும் ஒருவன் அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தான்... இவளும் கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு நாள் இவள் பள்ளி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் சமயம் பார்த்து அந்தப் பையன் ஒரு காதல் கடிதத்தை அவள் முன்னால் நீட்டினான்..

அதை அவள் ,”என்ன” என கேட்க ,"வாங்கிப்பார் உனக்கு புரியும்" என அவன் கூறவும் அவளும் சிரித்த முகத்தோடு வாங்கி கொண்டாள்.. அதை தெளிவாக திரு பார்த்து விட்டான்.. பார்த்த வேகத்தில் கடும் கோபத்தோடு அவள் அருகே வந்தவன் வெடுக்கென்று அந்த பேப்பரை பிடுங்கி படித்துப் பார்த்தான்.. அதில்,” ஐ லவ் யூ” என எழுதி இருந்தது.. அதை பார்த்தவன் ஓங்கி ஒரு அறை விட்டான் அவளுடைய கன்னம் பழுத்தது...

"முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள காதல் கேக்குதா???" என அவளைப் பார்த்து கேட்க அவளுக்கு விட்ட அறையில் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்தவனோ ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்... அந்த அறையை அவளால் மறக்கவே முடியாது நடு ரோட்டில் கிடைத்த அடி முதன் முறையாக அவளை இதற்காகத்தான் அவன் அடிக்கிறான் அப்படி இருக்க அதை இப்போது நினைத்தாலும் அவளுக்கு வலிக்கும்...

அப்படி இருக்க ஆரம்பத்திலேயே அதற்கு தடை விதித்த அவன் மறுபடியும் லவ்வர் இருக்கானா என கேட்க எப்படி இவளுக்கு காதல் வரும் என அவனும் யோசிக்க மறந்தால் ஆனால் அவளுக்கு நினைவு இருக்கிறது அல்லவா???

அவனோ,"நீ படிச்சு முடிக்கிற வரை இப்படியே இருப்போம் அதுக்கப்புறம் உனக்கு விருப்பம்னா டிவோர்ஸ் கொடுத்துடறேன் ஓகே" என்று அவன் கூறினான்..

அதைக் கேட்டவளுக்கு தலையே சுற்றியது தாலி கட்டியது அதிர்ச்சி மாறாமல் இருப்பவளுக்கு விவாகரத்து என்ற கேள்வி கேட்டதும் அவளுக்கு மேலும் அதிர்ச்சி தான் ஆனால் இவனிடம் ஏதாவது பேசப்போய் ஏதாவது பதில் கூறுவான் என நினைத்து அமைதியாக இருந்து கொண்டாள்...

"அப்புறம் முக்கியமான விசயம் நடந்ததை எண்ணி படிப்பை கோட்டை விட்டு விடாதே படிப்பு தான் முக்கியம் புரிகிறதா படிச்சு முடிக்கிற ஓகே நாளைக்கு காலேஜ் போகற வழிய பார் மனச போட்டு அது இதுன்னு யோசிச்சு கெடுத்துக்காத"என ஒரு ஆசிரியராகவும் அவளுக்கு அறிவுரை கூறினான் அதைக் கேட்டு அவளோ தலையை ஆட்ட,

அவனோ பேசியதெல்லாம் பேசி முடித்து விட்டோம் என்ற நிம்மதியில் படுக்கையில் சரிந்தான்.. அவளோ அப்படியே நின்று கொண்டிருக்க," எதுக்கு இப்படியே நின்னுட்டு இருக்க போய் உன்னோட ரூம்ல போய் தூங்கு" என அவன் கூற

அவளோ தயங்கி ,"இல்ல ரூமை விட்டு வெளியே போனா பாட்டி திட்டுவாங்க" என்று கூறினாள்..

அவனும் என்னவோ யோசித்து,"அப்போ இங்கேயே எங்கேயாவது படுத்துக்கோ" என்று அவன் கூறி கண்களை மூட அவளுக்கு அடுத்து என்னை செய்வது என தெரியவில்லை...

அந்த சமயம் பார்த்து அவளோ தயங்கி ,"உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா திருண்ணா??"

அவனோ மீண்டும் கண்களைத் திறந்தான் அவன் கட்டிய தாலியை சுழற்றிக்கொண்டு அவளை அண்ணா என அழைக்கவும் அவன் என்ன என்பது போல பார்க்க," இல்லை பாட்டி பத்து மாசத்துல குழந்தை பெத்துக்க சொல்லி இருக்காங்க" என்று கூற, அதைக் கேட்டு அவனும் அழுத்தத்தோடு அவளை பார்த்தான் உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும் பாட்டி செய்ததை எண்ணி அவனுக்கு கொஞ்சம் எரிச்சல் மண்டியது...

"அதுக்கு என்ன பண்ணனும்???" என அவன் கேட்க அவளிடம் பதில் இல்லை...

"இல்லை குழந்தை வேணும் பத்து மாசத்துல" என பாட்டியை எண்ணி அவள் கூற

"என்ன உனக்கு குழந்தை வேணுமா??" என அவன் கேட்டான்...

அதை கேட்டவளோ அவன் கேள்வியில் அதிர்ந்து ,"எனக்கு இல்லை பாட்டிக்கு" என்க

"பாட்டிக்கு குழந்தை கொடுக்க தாத்தா இருக்கார் உனக்கு வேணும்னா சொல்லு தரேன்" என்றான்...

அவளோ அவன் பேச்சில் அதிர அவனோ ,"என்ன வேணுமா???" என்க

இல்லை என தலையாட்ட ,"அப்போ மூடிட்டு போய் படுத்து தூங்கு குழந்தை வேணுமாம் குழந்தை ஆளையும் சைசையும் பாரு" என்றான்...

அதற்கு மேல் அவள் வாயே திறக்க வில்லை...அவன் படுக்கைக்கு கீழே படுத்து கொண்டாள்...

அவளுக்கு தான் உறக்கமே வரவில்லை... புரண்டு புரண்டு படுத்தாள்...

அவனுக்கு உறங்கா இரவானது...என்னவோ அவனுக்கு ஒரு குற்ற உணர்வு மாயாவுக்கு துரோகம் செய்தது போலவும் அதே போல் இந்த சிறு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்தது போலவும் அவனுக்கு ஒரே வருத்தமாக இருந்தது...

அதனால் இங்கு இருந்தால் சரி வராது என்று எண்ணியவன் அடுத்த நாளை விடியும் முன்னே எழுந்து சென்று விட்டான்...அவள் துயில் கலையும் போது அவன் இல்லை...தாத்தாவிடம் மட்டும் கூறி விட்டு திரு சென்னைக்கு சென்று விட்டான்...

அவன் சென்றது கூட அறியாமல் உறங்கி கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து அவனுடைய படுக்கையை பார்க்க அங்கு அவன் இல்லை...

"எங்க போய்ட்டாரு??" என அவள் யோசித்து கொண்டு இருக்கும் போதே ,"கட்டின புருஷன் போனது கூட தெரியாமல் தூங்கிட்டு இருக்கா பாரு" என கத்தி கொண்டே மேலே வந்தார் மயிலாத்தாள்...

அவர் கூறியதை கேட்டு வேகமாக எழுந்து கொள்ள அவள் படுத்த இடத்தையும் அவளையும் பார்த்த அவர் எதுவும் இருவர்களுக்குள் நடக்கவில்லை என்பதை புரிந்து கொண்டார்...

"அவர் எங்க பாட்டி??" என அவள் கேட்க

"என்கிட்ட கேக்குற உன்னோட புருஷன் தானே புருஷன் எங்க போனான்னு கூட தெரியாம ஒரு பொட்ட புள்ள இவ்வளவு நேரமா தூங்கிட்டு இருக்க???" என்று அவர் குறை கூற

அவளோ ,"அசதியில் தூங்கிட்டேன் பாட்டி சாரி மன்னிச்சிடுங்க" என்று கூற ,'அவன் போயிட்டான் சென்னைக்கு விடிய காலைலயே தாத்தா கிட்ட சொல்லிட்டு போயிட்டான்" என்று கூறினார் மயிலாத்தாள்...

என்ன போய்ட்டாரா என அவள் முழிக்க, "என்ன டி இப்படி தேவாங்கு மாதிரி பார்த்திட்டு இருக்க???" என கேட்கவும்

"அவர் போனதுக்கு என் மேல ஏன் கோபப்படுறீங்க???" என அவள் கேட்டாள்..

"புருஷன் கூட வாழுன்னு சொன்னா கழுதைக்கு பேச்சை பாரு" என கூறியவர் ,"அவன் என்ன டி சொன்னான்???" என கேட்டார்..

அது தான் எதுவும் நடக்கலையே பிறகு தன் பேரனின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையாவது அறியலாம் என எண்ணி அவர் கேட்டார்...

அதற்கு அவளோ," அவருக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையாமா எனக்கு எப்போ விருப்பமோ அப்போ விவாகரத்து தரேன்னு சொன்னார்" என்று உள்ளதை உள்ளது போல போட்டு உடைக்க அதைக் கேட்டவரோ நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார்...

" அடி ஆத்தே நான் என்ன கேட்கிறேன் விடிஞ்சும் விடியாமல் கேட்கிற வார்த்தையா இது விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொன்னானா அவன் கொடுத்திடுவானா அதையும் நான் பார்க்கிறேன்" என்று அவிழ்ந்த அவரது கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு அங்கிருந்து சென்றார்...

அவளோ இதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் அவள் பாட்டுக்கு அவளுடைய வேளையில் ஐக்கியம் ஆகிவிட்டாள்...

என்ன அவன் கையால் தாலி ஏறி இருக்கிறது அவ்வளவுதான் மற்றபடி அவளுடைய வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமும் நிகழவில்லை அதைவிட அவன் இங்கு இல்லை அதுவே அவளுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது...

அவள் எப்போதும் போல கல்லூரிக்கு சென்று வந்தாள்...வீட்டில் தேவையான வேலைகளை எல்லாம் செய்து முடித்தவள் அவள் பாட்டுக்கு சுற்றி திரிந்தாள்...

பொன்னுசாமியும் தான் உண்டு தன்னுடைய தோட்டம் உண்டு என இருந்துகொள்ள மயிலாத்தாளுக்குத்தான் இருப்பு கொள்ளவில்லை...

அதனால் என்ன செய்யலாம் என யோசித்து கொண்டே வந்தவருக்கு இருக்கவே இருக்காளே கார்த்திகா அவள் தான் கண்ணுக்கு தெரிந்தாள்...

அதனால் அவளை போட்டு படுத்தி எடுக்க முடிவு செய்து விட்டார்... இன்றைய தினம் அவர் வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கும் தினம் அப்படி இருக்க எப்பவும் போல மயிலாத்தாள் தான் அனைவருக்கும் பணத்தை கொடுத்துக் கொண்டிருந்தார்..

அவளும் எப்பொழுதும் போல அனைவருக்கும் கொடுத்து முடித்ததும் மயிலாத்தாள் எழுந்து கொள்ள ,"பாட்டி என்னோட சம்பளம்???" என கேட்டாள்

அதைக் கேட்டு அவரோ ,"உனக்கு எதுக்குடி சம்பளம்??" என்க

"பாட்டி என்ன தெரியாம கேக்குறீங்க என்னோட செலவுக்கு காசு வேண்டாமா" என அவள் கேட்கவும் ,"அப்படி என்னடி உனக்கு செலவிருக்கு எனக்கு காலேஜ் போக பஸ்சுக்கு எல்லாம் காசு வேணும்ல இரண்டு சுடிதார் கூட எடுக்கணும்" என்றாள்..

ஏனெனில் இவள் மாசம் சம்பளம் என்ற பெயரில் இந்த வீட்டில் வாங்கும் பணத்தை வைத்து தான் அவளுக்கு தேவையான பொருட்களை எல்லாம் அவள் வாங்கி கொள்வாள்...

மயிலாத்தாவும், பொன்னுசாமியும் அவளுக்கு வருடத்தில் இரண்டு முறை துணி எடுத்துக் கொடுப்பார்கள் அது அவர்களின் பங்காக இருக்கும் அவள் அவளுக்கு தேவையான விஷயங்களை எல்லாம் அவள் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தான் வாங்கிக் கொண்டு வந்தாள்..

அப்படி இருக்க இன்று அவர் பணம் தராமல் போகவும் அவளோ," பாட்டி சும்மா விளையாடாதீங்க காசு கொடுங்க" என்று கூறினாள்..

"காசு வேணும்னா உன் புருசன் கிட்ட கேளு.. நீ என்னப்பா இந்த வீட்டு வேலைக்காரியா என்ன இந்த வீட்டு மகாராணி உனக்கெல்லாம் நான் சம்பள காசு கொடுக்க முடியுமா???" என கேட்க அவர் எங்கே சுற்றி எங்கே வருகிறார் என அவளுக்கு புரிந்தது...

"சரி நீங்க சம்பள காசு தர வேண்டாம் கொஞ்சம் செலவுக்காவது காசு குடுங்க" என அவள் கேட்க ,"அதெல்லாம் நான் தர முடியாது ஏன் உன் புருஷன் சம்பாதிக்கலையா அவன்கிட்ட வேணும்னா கேட்டு வாங்கிக்கோ" என அவர் மோவாயை இடித்தபடி சென்று விட்டார்...

இதையெல்லாம் பொன்னுசாமி அறைக்குள் இருந்து கேட்டுக் கொண்டிருக்க ,"அவ கேட்கிற காசை தான் கொடுத்தா என்ன??" என தன் மனைவியை கடிய ,"உங்களுக்கு என்ன தெரியும் கொஞ்சம் சும்மா இருங்க.. இவங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு திசையில இருந்தா உங்களுக்கு போதுமா இரண்டும் ஒன்றாக சேர வேண்டாமா" என அவர் கேட்க பொன்னுசாமி எப்போதும் போல வாயை மூடி கொண்டார்...



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top