வேந்தன் : 4

 

udhra-siddharth
(@udhra-siddharth)
Member Admin
Joined: 2 months ago
Messages: 196
Thread starter  

அத்தியாயம் :4

அவன் தனக்கு தாலி கட்டுவான் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. அவள் மட்டும் இல்லை அவன் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே எதிர்பார்க்கவில்லை.. எல்லோருக்குமே இது ஒரு பேரதிர்ச்சி தான்..

தாலி கட்டி முடித்ததும் அவன் அவளை அப்படியே விட்டுவிட்டு எழுந்து சென்றவன் அவளின் அதிர்ச்சியான முகத்தை கூட பாராமல்," இப்போ இவதான் என் பொண்டாட்டி நான் தாலி கட்டிட்டேன் உங்க பாஷையில சொல்லணும்னா குடும்பஸ்தன் ஆகிவிட்டேன் போதுமா இனி யாரும் என்னை தொல்லை பண்ண மாட்டீங்களே???" என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட்டான்..

இதை அவள் முதல் யாருமே எதிர்பார்க்கவில்லை.. அவளுக்கு கண்களில் கண்ணீர் வந்து போனது.. திருமணம் என்ற ஒரு விஷயம் ஒரு பெண்ணுக்கு அவளுடைய வாழ்க்கையை எவ்வளவு முக்கியமான தருணம் அது தனக்கு இப்படி நிகழ வேண்டும் அதுவும் திருவுடனா என்று அவள் எண்ணினாள்...

அவளுக்கு தனக்கு நடந்ததை நினைக்கும் பொழுது அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை...கண்ணில் கண்ணீர் வழிந்து அவன் கட்டிய பொன் மாங்கல்யத்தில் பட்டு தெறித்தது...

அவன் சென்று விட்டான் அனைவருக்கும் அதிர்ச்சி தான் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்வான் என யாரும் எதிர்பார்க்கவில்லை இருந்தாலும் மயிலாத்தாள் தனக்கு இந்த யோசனை வரவில்லையே என நினைத்து மணமேடையில் சிலை போல அமர்ந்திருக்கும் அவள் அருகே ஓடி சென்றார்..

குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்து," எதுக்குடி இப்போ இப்படி உக்காந்து இருக்க எனக்கு கூட இந்த யோசனை போகவே இல்லையே என் பேரனுக்கு தோணி இருக்கு அதை நினைச்சு சந்தோஷப்படு.." என்க

தனக்கு வருத்தம் என்றாலும் சரி கோபம் என்றாலும் சரி சந்தோஷம் என்றாலும் சரி இவர்களை தவிர அவளுக்கு வேறு யாருமில்லை அதனால் நிமிர்ந்து பார்த்து ,"எப்படி பாட்டி அவங்கள போய் நான் புருஷனா என்னால நினைச்சு கூட பார்க்க முடியல இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை" என தன் மனதில் உள்ளதை அப்படியே பகிரங்கமாக அவள் கூறினாள்...

அவருக்கு அந்த அதிர்ச்சி இல்லாமல் இல்லை இருந்தாலும் அவரே அவளை மேலும் குழப்பக் கூடாது என எண்ணி," அவனுக்கு என்னடி குறைச்சல் அவனை பத்தி ராசாத்தி உனக்கு தெரியாதது இல்ல எல்லாமே தெரியும் தானே நீ நம்ம வீட்ல இருந்து எல்லாமே பார்த்துட்டு தான் இருக்க... உனக்காக அவன் என்னவெல்லாம் பண்ணுனான்னு உனக்கு தெரியும் தானே அவனுக்கு நீ வாழ்க்கை கொடுத்ததா நினைச்சுக்கோ தாயி.." என்று அவர் கூற அவளுடைய மனதில் ஒரு தெளிவு வந்தது...

தன் கண்களை அவள் துடைத்து கொள்ள ,"நீயே நம்ம வீட்டு மருமகளா வந்தா எவ்வளவு நல்லா இருக்கும் அவன் மனச புரிஞ்சு வச்சிருக்க இந்த வீட்ட புரிஞ்சு வச்சிருக்க.. எல்லாமே உனக்கு இருக்கு.. அப்புறம் எதுக்கு நீ வருத்தப்பட்டு இருக்க எப்படியாவது அவனை ஏத்துக்கோ" என ஏதோ ஒரு நெகிழ்வில் மயிலாத்தாவும் அவளிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார்...

இருந்தாலும் அவனுடைய வயசுக்கும் அவளுடைய வயசுக்கும் இடையே 12 வருடங்கள் இருக்க அது அவளுக்கு பிரச்சினையாக இருந்தது.. ஏனெனில் அவளுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அவன் பெரியவனாக இருந்தான்.. அப்படி இருக்க ,"அவங்க வயசு என்ன?? என் வயசு என்ன பாட்டி??? அவங்க பண்ணினது தப்பு தான் பாட்டி" என அவள் கேட்க,

இந்த முறை அவருக்கு கோபம் வந்தது ,"அப்படி என்னடி வயசு என் பேரனை பார்த்தா யாராவது 32 வயசுன்னு சொல்லிடுவாங்களா எப்படி இருக்கான் பாரு ராஜா மாதிரி உனக்கு அவன் கிடைச்சதே பெருசு அவன் தாலி கட்டி இருக்கான் நீ அவனை குறை சொல்றியா உன்னை இப்படித்தான் நான் வளர்த்தேனா சொல்லுடி ..

எனக்கும் அவங்களுக்கும் தான் 18 வயசு வித்தியாசம் ஏன் நாங்க சுகமா வாழல?? திரு அப்பாவுக்கும் திருவோட அம்மாவுக்கும் தான் 14 .வயசு வித்தியாசம் ஏன் அவங்க நல்லா வாழல இவ்வளவு பேசுற உன்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இதே 12 வயசு வித்தியாசம் இருக்கு தெரியுமா ஏண்டி வயசு அதிகமா இருந்தா யாரும் வாழ கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன??" என அவர் கடிந்து கேட்க வாயை மூடிக்கொண்டாள்...

அவரோ மெல்ல எழுந்து ,"நானே ஏதோ நல்லது நடந்திருக்கேன்னு சாமியை கும்பிட்டுட்டு இருக்கேன் இவ ஒவ்வொண்ணா குறை சொல்லிட்டு இருக்கா போடி எந்திரிச்சு வா" என கடுகடுத்தவர் அவளை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்...

அவருக்கு எப்படி ஆவது தன் பேரனுக்கு திருமணம் ஆகவேண்டும் அது எந்த முறையில் ஆனாலும் பரவாயில்லை இதோ இப்பொழுது இவள் கழுத்தில் தாலி கட்டி விட்டான் அதுவும் அவருக்கு சந்தோஷம்தான்...

ராமகிருஷ்ணன் மற்றும் பொன்னுசாமிக்கும் அதிர்ச்சி தான் என்றாலும் என்ன சொல்வது என தெரியவில்லை அவன்தான் அவளை திருமணம் செய்து விட்டானே என்று அவர்கள் எண்ணினர்...

அவளுக்கு தான் மனமே ஆறவில்லை...வீட்டுக்கு வந்தால் அவளுக்கு எல்லாமே புதிது போல இருந்தது.. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை...

மேலே அவனது அறையில் இருந்தவன் உள்ளமும் அப்படி தான் இருந்தது..என்ன காரியம் செய்து விட்டோம் என்று தன்னை விட வயதில் குறைவான பெண்ணை இப்படி திருமணம் செய்து கொண்டோமே என அவன் எண்ணி கொண்டான்... குற்ற உணர்ச்சி அவனை கொன்றது...

எப்படி அவனால் முடிந்தது..அவளை எப்படி திருமணம் செய்ய அவனால் முடிந்தது என யோசித்து கொண்டிருந்தான்... திருமணம் திருமணம் என கூறிக் கொண்டிருந்தவர்கள் ஆசையை எப்படியோ நிறைவேற்றி விட்டான்...

அதற்கு பலியாடாக அவளின் வாழ்க்கையை முடித்து கட்டி விட்டானா என்று தான் அவனுக்கு தோன்றியது.. அவனால் இயல்பாக அவளுடன் ஒரு திருமண பந்தத்தில் இணைய முடியுமா எதனால் அவள் கழுத்தில் அவன் ஆவேசமாக தாலி கட்டினான் என அவனுக்கு விடை தெரியவில்லை விடை தெரிந்தாலும் அவன் சொல்லப் போவதும் இல்லையோ என்னவோ???

திருமணம் என இவர்கள் தரும் தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்ள இவளை கட்டி இவளாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எண்ணிவிட்டானோ என்னவோ??? என்னென்னவோ யோசித்தான்.. எதற்கும் விடை அவனுக்கு கிடைக்கவில்லை யோசிக்கவும் பிடிக்கவில்லை.. ஒன்றும் செய்ய பிடிக்கவில்லை.. கோபம் மட்டும் முனுக்கு முனுக்கென வந்து அவனை தொல்லை படுத்திக் கொண்டிருந்தது...

அதே நேரம் கீழே அவளுடைய அறையில் அமர்ந்திருந்த அவள் அருகே மயிலாத்தாள் வந்து அமர்ந்தார்..

அவளோ தனக்கு என்ன நடந்தது ஏது நடந்தது என ஒரு துளி சிந்தனையும் இன்றி அவள் அமர்ந்திருந்தாள் ..வெறுத்து எங்கோ பார்த்துக் கொண்டிருக்க அவளின் அதிர்ச்சி அவருக்கு புரியாமல் இல்லை இருந்தாலும் இப்பொழுது இவளிடம் கருணையாக பேசினால் அவள் உடைந்து விடக் கூடும் என எண்ணினார்...

அவருக்குமே இந்த திருமணம் அதிர்ச்சி தான் இருந்தாலும் அவர் வளர்த்த இரு பிள்ளைகளும் ஒரு சேர்ந்து ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவருக்கும் சந்தோஷமே என எண்ணிய மயிலாத்தாள் ,"எதுக்குடி இப்படி உட்கார்ந்து இருக்க இது என்ன எழவு வீடா கல்யாணம் நடந்த வீடு??" என கடிக்க,

அவளோ வேகமாக தன் கண்களை துடைத்துக் கொண்டு பாட்டியை பார்த்தாள்...

"கண்ணை துடை டி நல்ல காரியம் நடந்திருக்கு கண்ணை கசக்கிட்டு இருக்க உன்கிட்ட எத்தன தடவ தான் சொல்றது" என கடிந்தார்... இவளைப்போல பேரனை அவரால் ஆட்டி வைக்க முடியாது அதனால் இவளை ஆட்டி வைக்க முடிவு செய்தார்... அவர் திட்டுவதை கேட்டு வேகமாக தன் துடைத்துக் கொண்டாள் கார்த்திகா...

"இதோ பாரு அவன் என்ன நினைச்சு உன் கழுத்தில் தாலி கட்டினான் எனக்கு தெரியாது எனக்கு என்னோட பேரன் நல்லா இருக்கணும் புரியுதா??? இந்த கல்யாணத்தை வைச்சு அவன் கிட்ட சண்டை போடாமல் கூட சேர்ந்து வாழற வழியை பாரு புரியுதா"

"எப்படி பாட்டி உங்களால சொல்ல முடியுது என்னால அவரை அப்படி நினைச்சு கூட பார்க்க முடியாது" என்று கூற

"ஏண்டி நினைத்துப் பார்க்க முடியாது அவன் உன் புருஷன் தானே உனக்கு தாலி கட்டி இருக்கான்டி எல்லா உரிமையும் உனக்கு இருக்கு" என்று அவர்களின் உறவை இணைக்க பாட்டி பார்த்தார்...

அதைக் கேட்கவே அவளுக்கு என்னவோ போல இருக்க, அவள் மனதை அவளால் சரியாக வெளிப்படுத்த கூட முடியவில்லை அவரும் அவள் மனம் புரிந்தாலும் புரியாதது போலவே நடித்தார் என்றுதான் கூற வேண்டும்...

"இங்க பாரு நீ நான் சொல்றதை கேளு புரியுதா அவன் சொக்கத்தங்கம் உனக்கு அதுல ஏதாவது சந்தேகம் இருக்கா??" என கேட்டார்

"இல்ல அதுல எல்லாம் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை" என்று அவள் கூற ,"அப்போ அவன் கூட சேர்ந்து வாழற வழியை பாரு எண்ணி பத்தாவது மாசம் இந்த வீட்ல தொட்டில்ல ஒரு குழந்தை தூங்கணும் புரியுதா" என அவர் கூற அதைக் கேட்டு அவளோ மேலும் அதிர்ந்தாள்...

திருமணமே அவளுக்கு அதிர்ச்சி என்றால் இது ஒரு பேரிடியாக இருக்க ,"என்ன நான் சொல்றது கேட்டுச்சா இல்லையா??" என அதட்டி கேட்க அவளோ மெல்ல தலையை ஆட்டினாள்...

"தலையை ஆட்டினால் மட்டும் பத்தாது புருஷனை கைக்குள் வைத்து எண்ணி பத்தாவது மாசத்துல குழந்தை பெத்து போடுற வழியை பாரு" என்றார்..

அதற்குள் இரவும் ஆகிவிட அவர் அவளிடம் ஒரு புடவை கொடுத்து அணிந்து வர சொன்னார்.. பிறகு அவளுக்கு தலைநிறைய பூவை வைத்துக் கொடுத்து அவரின் பரம்பரை சொத்தான சில பாரம்பரிய நகைகளை அவளுக்கு அணிவித்து அழகு பார்த்தார்...

அவளை அந்த அலங்காரத்தில் பார்க்கும் பொழுது பேரழகியாக தெரிய அவர் கண்ணே பட்டுவிடும் போல இருந்தது.. அவருக்கு எப்படியாவது பேரமகன் ஒரு இல்வாழ்வு வாழ்ந்தால் போதும் என்று தான் இருந்தது.. அதனால் அவர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருந்தார்... அதிலும் பேர மகனுக்கு இவளை போன்ற ஒரு பெண் கிடைக்க கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும் என அவருக்கு நன்றாகவே தெரியும் ஏனெனில் அவர் வளர்த்த பிள்ளையாயிற்றே!!

அப்படி இருக்க அவளை தயார் செய்து ,"திரு மேலே இருந்து கீழே இறங்கவே இல்லை சாப்பாடு கொடுத்தோம் அதை சாப்பிட்டானா என்னன்னு தெரியல அந்த ரூமே கதின்னு கிடக்கிறான் நீ போய் அவனை பேசி சமாதானம் செய் அவன் ஏதாவது கத்தி பேசினாலும் எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான் சொல்லு புரியுதா நான் சொன்னதை எல்லாம் மனசுல வச்சுக்கோ எண்ணி பத்து மாசம் புரியுதா" என அவர் கூற அவரின் அதட்டலில் பயந்த கார்த்திகா சரி என்பது போல தலையை ஆட்டினாள்...

மெல்ல அவளை இல்லாத தெய்வத்தை எல்லாம் வேண்டி அவர் அனுப்பி வைக்க அவளின் மனதுக்குள் ரயில் தடக் தடக் என ஓடிக்கொண்டிருந்தது...

அவள் இந்த சீனை எல்லாம் அவளுடைய மனதில் நினைத்துக் கூட பார்த்ததில்லை..அப்படி இருக்க இப்படி ஒன்று நடக்கும் என்றே அவள் உணராத சமயத்தில் அவளுக்கே இப்படி ஒரு காரியம் நடக்கவும் அவள் இடி விழுந்தது போல செல்ல அவனது அறை அடைத்து இருந்தது...

அவள் மெல்ல கதவை திறக்க கதவு வேறு திறந்து கொள்ள, அதுவும் அவளுக்கு பயமாக இருக்க, அங்கு கையில் பிடித்து பால் டம்ளரை பார்த்து அவள் எதுக்கு வந்து இருக்கிறாள் என அவனுக்கு புரிய,

அவள் உள்ளே கால் எடுத்து வைக்கும் முன்னே ,"என்ன??" என எரிச்சலாக கேட்டான்... அவளால் எப்படி முடிந்தது இப்படி ஒரு தம்ளரை தூக்கிக் கொண்டு இவன் முன்னால் அலங்கரித்து நிற்க அவளால் எப்படி முடிந்தது என எண்ணினான்..

என்ன என கேட்டால் அவள் என்னவென்று பதில் சொல்லுவாள்...இருந்தாலும் பாட்டி சொன்னதை சொல்லித்தானே ஆக வேண்டும் ,"இன்றைக்கு சாந்தி முகூர்த்தம்" என்று கூற அதைக் கேட்டவனோ முகம் இறுகியது..

கல்யாணத்தையே இப்படி செய்து விட்டேன் என்ற குற்ற உணர்ச்சியில் இருப்பவன் இவள் முகத்தை எப்படி பார்ப்பேன் கார்டியனாக இருந்தவன் கணவனாக மாறிப் போனேனே என தவித்துக் கொண்டிருப்பவன் மனது மேலும் அமிலத்தை ஊற்றுவது போல அவள் கூறவும் அவனோ சாந்தி முகூர்த்தம் தானே உள்ளே வா நான் ரெடியா தா இருக்கேன்" என்றான் கோபமாக,

இப்போது அதிர்வது அவள் முறையானது!!!!



   
Quote
error: Content copy warning!!
Scroll to Top