வேந்தன் : 3
அத்தியாயம் : 3
"கார்த்திகா ஒரு நிமிஷம் நில்லு" என்றாள் காவ்யா...
அவளோ திரும்பி அங்கு காவ்யாவை பார்த்து ,"சொல்லுங்க மேம்" என தயங்கி நின்றாள்.
"இன்னும் என்ன மேம் அது தான் உன் வீட்டுக்கு வர போறேன்ல அக்கான்னு சொல்லு" என்க
அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதுபோல உறவு எல்லாம் அவளுக்கு இல்லை அப்படி இருக்க தாமாக அவள் அக்கா என்று அழைக்க சொல்லவும் கார்த்திகாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...
"ஆமாம் திரு போய்விட்டாரா???" என்று கேட்டாள் காவ்யா..
"அவங்க நேத்து நைட்டே கிளம்பிட்டாங்க" என்று கூற ,"ஓ அப்படியா ஆமாம் திருவுக்கு லவ் பெயிலியர் தானே அதனால தானே இத்தனை நாள் கல்யாணம் பண்ணாம இருந்தாங்க???" என்று கேட்க
"இல்லக்கா லவ் பெயிலியர் இல்ல அவங்க லவ்வர் இறந்துட்டாங்க ஒரு ஆக்சிடென்ட்ல்ல இறந்துட்டாங்க மாயாக்கா ரொம்ப நல்லவங்க என்னை அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்... அக்கா இறந்ததும் அவருக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு அக்கா இல்லாத வாழ்க்கை வாழவே பிடிக்காம தான் இருந்தாரு இப்பதான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி இருக்காரு" என்று கார்த்திகா கூற
"ஓ அப்படியா அப்போ இப்போதும் மாயாவை தான் நினைச்சுட்டு இருக்காரா இல்லை மறந்துட்டாரா???" என காவ்யா ஒரு மாதிரி குரலில் கேட்கவும்,
அவளின் குரலில் உள்ள மாற்றத்தை கணக்கிட முடியாமல் திணறிய கார்த்திகா ,"அக்காவை அவளோ சீக்கிரம் திருண்ணானால மறக்க முடியாதுன்னு தான் நினைக்கிறேன்" என அவள் கூறவும் ஓஹோ என்றாள் காவ்யா...
பிறகு நாட்கள் இப்படியே செல்ல திருமணத்துக்கு ஒரு வாரம் என்ற நிலையில் காவ்யா கார்த்திகாவை சந்தித்தாள்...
இன்று தான் காவ்யா கல்லூரிக்கு வரும் இறுதி நாள் இனிய திருமணம் முடிந்த பின் தான் வருவாள் என்ற நிலையில் கார்த்திகாவிடம் காவ்யா மிகவும் சோகமாக இருந்தாள்...
அவளோ," என்னாச்சு அக்கா" என்க
"இந்த கல்யாணத்துல திருவுக்கு விருப்பம் இருக்கா இல்லையா??? பொண்ணு பார்க்க வந்துட்டு போனதோடு சரி அதுக்கப்புறம் ஒரு போன் இல்ல ஒரு ஹலோ எதுவுமே பேசல என்கிட்ட அவருக்கு விருப்பம் இல்லாத மாதிரி தான் எனக்கு தோணுது அவருக்கு விருப்பம் இல்லாதது போல எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பமில்லை அதை அவர் கிட்ட சொல்லிடு" என்று அவள் கூற,
அதுதான் தெளிவாக கார்த்திகாவுக்கு தெரியுமே ஆனால் எல்லோரும் அரும்பாடு பட்டு அவனை கல்யாணம் செய்து வைக்கத்தானே போராடுகிறார்கள் என எண்ணி அவள் இருக்கும் இடத்தை விட்டுக் கொடுக்க மனம் என்று ,"அக்கா அப்படி எல்லாம் இல்ல அக்கா அவரு பிஸியா இருப்பார்.. நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க கல்யாணம் முடிந்து அவர் கண்டிப்பா உங்க கூட பேசுவார்" என்று அவள் பதறி கூற,
"அதுக்குன்னு கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கிட்ட ஒரு வார்த்தை பேசக்கூட சமயம் இல்லாம இருப்பாங்களா???" என குறைபட்டாள் காவ்யா..
இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தடுமாறிய கார்த்திகா ,"அக்கா அவருக்கு நிறைய பிசினஸ் இருக்கு அக்கா அதெல்லாம் அவர் தானே பார்த்துக்கணும் முன்னாடி பிசினஸ் தான் பண்ணிட்டு இருந்தார் இப்பதான் அவர் ப்ரொபசர் வேலைக்கு போய் இருக்காரு" என்று கூற
"நீ என்னென்னமோ சொல்ற கார்த்திகா என்னால எதையும் ஈசியா எடுத்துக்க முடியல காதலிச்சவருன்னு சொல்ற அப்படி காதலிச்சிருந்தா மத்தவங்க மனச அவர் புரிஞ்சு நடந்து இருப்பார்.. எனக்கு என்னமோ அவருக்கு இதில் விருப்பமில்லைன்னு தான் தோணுது அவருக்கு விருப்பம் இல்லைனா ஸ்டாப் பண்ண சொல்லிடு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று அவளிடமே குறை கூறவும் அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை
"அக்கா அவர் மனசுல மாயாக்கா இருக்கிறது உண்மைதான் ஆனால் அதுக்காக கொடுத்த வாக்கை எல்லாம் தவற விட மாட்டார் அதுக்கு நான் கேரண்டி தரேன் என்னை பார்த்துக்கோ அப்படின்னு சொல்லிட்டு போன ஒரு வார்த்தைக்காக இன்னைக்கு வரைக்கும் எனக்கு கார்டியனா இருக்காரு அக்கா அப்படி எல்லாம் உங்களை விட்டு விட மாட்டார்" என்று அவளுக்கு தெரிந்த வரையில் கார்த்திகா காவ்யாவுக்கு புரிய வைக்க முயன்றாள் ஆனால் அவளுக்கு எதுவும் தலையில் ஏறினது போல இல்லை...
பிறகு ,"என்னமோ சொல்ற எனக்கு ஒன்னும் புரியல இதோ இன்னும் ஒரு வாரத்துல அவருக்கும் எனக்கும் கல்யாணம் அவருடைய நம்பர் கூட என்கிட்ட கிடையாது என்னுடைய நம்பர் கூட அவர் கிட்ட கிடையாது" என்று சலித்துக் கொண்டவள்," எப்படியும் கல்யாணத்துக்கு அவர் வருவார் தானே இந்த லெட்டரை நான் கொடுத்தேன் என்று சொல்லி அவர்கிட்ட கொடு கல்யாணத்துக்கு முன்னாடியே கொடுத்திடு புரியுதா" என்று கூறி ஒரு லெட்டரை அவரது கையில் கொடுத்தாள்..
அதை வாங்கிய கார்த்திகா சரி என்று கூறி அந்த லெட்டரை வாங்கி வைத்துக் கொண்டாள்...
"மறக்காமல் அவர் கிட்ட கொடு" என்று அவள் கூறி விட்டு இவளும் தலையாட்டி விட்டு சென்றவள் தான் அவளும் ஒரு வாரம் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை வீட்டில் வேலைகள் அவ்வளவு இருந்தன கல்யாண வீடு இல்லையா எல்லா வேலையும் அவள் தான் பார்த்துக் கொள்ள வேண்டியதாகி போனது...
அவனும் எதிலும் நாட்டம் இல்லாமல் திருமணத்திற்கு முதல் நாள் தான் வந்தான்... யாரிடமும் எதுவும் பேசவில்லை. இறுகிய முகத்தோடுதான் சுற்றிக் கொண்டிருந்தான்..உண்மையில் அவனை யாருமே தொல்லை செய்யவில்லை எங்கே ஏதாவது பேசினால் அவன் திருமணத்தை வேண்டாம் என்று மறுத்து விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு நன்றாகவே இருந்தது..
திருமணத்திற்கு முதல் நாள் வந்தவன் யாரிடமும் பேசாமல் நேராக அந்த வீட்டின் போர்டிகோவுக்கு சென்றான் அங்கு பைக் கவரால் மூடி இருந்த அவனுடைய பைக்கின் மீது போடப்பட்ட கவரை எடுத்தான்..
அது அவன் ஆசைப்பட்டு வாங்கிய வாகனம் அவளுக்கு இந்த பைக் பிடிக்கும் என்று அவளுக்காக வாங்கினான் மாயா.. மாயா.... என்ற பெயரை கேட்டாலே அவனது நாடி நரம்பு எல்லாம் சிலிர்த்துக் கொள்ளும் அவ்வளவு காதலை அவன் மீது கொட்டினாள் என்று தான் கூற வேண்டும்..
அப்படி காதலைக் கொட்டியவள் இதோ இதே பைக் மூலமாகவே தன் மரணத்தை தழுவினாள்... அன்றிலிருந்து இன்று வரை இந்த பைக்கை அவன் தொட்டதில்லை.. இந்த பைக்கை தொட்டாலே அவனுடைய கைகள் நடுங்கும் அதனால் தொடுவதில்லை... விடிந்தால் வேறொரு பெண்ணோடு திருமணம் மாயாவை அவனால் மறக்க முடியாது அதே நேரம் வேறொரு பெண்ணுக்கு துரோகம் செய்யவும் முடியாது இன்னும் தத்தளித்துக் கொண்டிருந்தான் பைக்கை மெல்ல வருடினான்...
மாயாவை தொட்டது போலத்தான் அவனுக்கு தோன்றியது.. ஆனால் இதில் தானே அவள் இறந்தால் என்றதும் தீ சுட்டது போல கையை எடுத்துக் கொண்டான்...ஒருவித இறுக்கத்தோடு அவன் இருந்தான்...
அப்படி இருக்க மறுநாளும் வந்தது ... திருமணத்திற்காக அனைவரும் தயார் நிலையில் இருந்தனர்.. அவனோ மணமகன் அறையில் தயார் ஆகி கொண்டிருக்கும் நேரத்தில் அந்த மண்டபத்தில் ஏதோ சலசலப்பு கேட்டது அது என்ன என அறிந்து கொள்ள அவனுக்கு விருப்பம் இல்லை...
அதற்குள் ஐயோ இந்த கடிதத்தை கொடுக்க மறந்துட்டேனே என எண்ணிய கார்த்திகா அவசர அவசரமாக திருவை காண அவனுடைய அறைக்கு சென்றாள்...
அங்கு அவன் தயாராகி எங்கோ வெறித்தபடி அமர்ந்து இருக்க அவளோ ,"திருண்ணா" என்க
அவனோ அவளை திரும்பி பார்த்தான்.. சேலை உடுத்தி இருந்தாள் பாவாடை தாவணி அணியும் பொழுது இல்லை சுடிதார் அணியும் பொழுது சிறு பெண் போல இருப்பவள் புடவை அணியவும் பெரிய பெண்ணாக அவன் கண்களுக்கு தெரிந்தாள்..
அவனுடைய ஆழமான பார்வையை பார்த்த அவளுக்கு என்னவோ போல இருக்க," இதை காவ்யா அக்கா கொடுக்க சொன்னாங்க" என்று கூற அதை கையில் வாங்கியவன் பிரித்து பார்த்தான் அவளோ அதற்குள் கொடுத்த வேகத்தில் அந்த இடத்தை விட்டு சென்று விட்டாள்...
அதற்குள் அவனை மேடைக்கு அழைத்து விட அவனும் அந்த லெட்டரை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு மேடையில் ஏறி அமர்ந்தும் விட்டான்... ஒரு பக்கம் கல்யாணத்தை காண வந்தவர்கள் அமர்ந்திருக்க மறுப்பக்கம் பெண் வீட்டார் ஏதோ சலசலத்துக் கொண்டு இருந்தனர்...
மணமகனாக மண மேடையில் அவன் அமர்ந்திருப்பதை பார்த்த பெரியவர்களுக்கு அவ்வளவு சந்தோஷம் இதற்காகத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருப்பது போல மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர் யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என எதையும் எதிர்பார்க்காமல் அவர்கள் கண்கள் திருவை மட்டுமே சூழ்ந்து இருந்தது...
ஐயர் மந்திரங்கள் முழங்கி கொண்டிருக்க அவனோ எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தவன் கண்களுக்கு கார்த்திகா தென்பட்டாள்...அப்பொழுதுதான் அந்த லெட்டர் ஞாபகத்துக்கு வர அந்த கடிதத்தை எடுத்து படித்துப் பார்த்தான்...
அந்த கடிதத்தில்," மிஸ்டர் திரு... காதலுக்கு அர்த்தம் தெரியாதவர் நீங்க இல்ல உங்க காதல் கை கூடல ஆனால் என்னுடைய காதலையும் கை கூடாமல் இருக்க வச்சிராதீங்க எஸ் நான் ஒருத்தரை காதலிக்கிறேன்...
வீட்ல எவ்வளவோ சொல்லி பார்த்தேன் யாரும் புரிஞ்சுக்கல உங்களுடைய பணம், உங்களுடைய குணம் எல்லாம் சொல்லி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க நானும் எனக்கு இதுல விருப்பமில்லை அப்படின்னு சொல்ல எவ்வளவோ முயற்சி பண்ணினேன் கார்த்திகாகிட்ட கூட சொல்லி பார்த்தேன்...அவளாவது என் மனசை உங்ககிட்ட சொல்லுவா அப்படின்னு எதிர்பார்த்தேன்...
ஆனால் எந்த ரியாக்ஷனும் இல்ல கடைசியா தான் இந்த லெட்டர் மூலமா உங்ககிட்ட என் மனசுல இருக்குறத சொல்லனும்னு தோணுச்சு.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க.. நீங்க எப்படி அஞ்சு வருஷம் உங்களுடைய காதலிக்காக உங்க காதலை மறக்க முடியாமல் திணறிட்டு இருக்கீங்க... அதே மாதிரி தான் நானும் இருக்கேன் உங்களுக்கு என்னுடைய மனசு புரியும் என்று நினைக்கிறேன் அதனால தான் கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி இந்த லெட்டரை கொடுக்கிறேன் இந்த லெட்டர் உங்க கைக்கு கிடைச்சதும் தயவு செஞ்சு கல்யாணத்தை நிறுத்திடுங்க.. கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது அப்படி ஏதாவது நடந்தால் கல்யாணம் அன்னைக்கு நான் ஓடிப் போயிடுவேன் அது மேலும் எல்லோருக்கும் கஷ்டமா போயிடும்" என்று கூற அதை பார்த்து அவன் முகம் கடுகடுவென இருந்தது...
அதற்குள் ,"அய்யோ பொண்ணை காணோம் பொண்ணு ஓடிட்டா" என்ற பேச்சுக்கள் எல்லாம் எழ ஆழ்ந்து தன் மூச்சை இழுத்து விட்டவன் எழுந்து தான் அணிந்திருந்த வேட்டியை மடக்கி கட்டினான்...
மண மேடையில் இருந்து எழுந்து வெளியே சென்றவன் அந்த சலசலப்பை பார்த்தான்... பெண் வீட்டார்கள் எல்லாம் பதறி துடித்துக் கொண்டு இருந்தார்கள்...
ஒரு பக்கம் அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் மறுபக்கம் மயிலாத்தாள் மற்றும் பொன்னுசாமி இருவரும் பதறிக்கொண்டு இருந்தனர்... ராமகிருஷ்ணன் மற்றும் அவர் மனைவி கூட அதிர்ச்சியில் தான் உறைந்து நின்றனர்... ஏனெனில் திருவை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்க அவர்கள் போராடியது அவர்களுக்குத்தான் தெரியும்..
அப்படி இருக்க அவன் முகம் நடந்த சம்பவத்தில் மேலும் இறுகி இருப்பதை பார்த்து தனக்கு என்ன நடந்தாலும் இப்படித்தான் அபசகுனமாக நடக்குமா என்ற எண்ணம் அவனுக்கு தோன்றாமல் இல்லை இருந்தாலும் அதை கண்டு கொள்ளவில்லை...
பெண் வீட்டாரை பிடி பிடியென பிடித்துக் கொண்டார் பொன்னுசாமி.. "என்னங்க இதெல்லாம் கவனிக்க மாட்டீங்களா பொண்ணுக்கு இதுல விருப்பம் இல்லைனா அப்பவே சொல்லி இருக்க வேண்டியதுதானே இப்படி எங்களை கஷ்டப்படுத்துறீங்களே" என அவர் கேட்டார்...
மயிலாத்தாள்," என்ன இவங்களுக்கு மரியாதை வேண்டிக் கிடக்கிறது என்னையும் என் குடும்பத்தையும் அசிங்கப்படுத்த இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டாங்க மணமேடை வரை வந்த மணமகனுக்கு இப்படி ஒரு காரியம் நடக்குதுன்னா இது என்னன்னு சொல்ல???" என அவர் கொந்தளித்து கேட்டார்...
எதற்குமே அவர்களிடத்தில் பதில் இல்லை ஏனெனில் பெண் வீட்டார் இடத்தில் தானே தவறு இருக்கிறது அதனால் அவர்கள் தலை குனிந்து நிற்க ராமகிருஷ்ணன் தான் சமாதானம் செய்து அவர்களை அனுப்பி வைத்தார் இப்பொழுது மண்டபம் முழுவதும் அவனுடைய ஆட்கள் மட்டும் தான் நிறைந்து இருந்தனர்...
திருமணம் நின்று விட்டது என்று கூறியதும் கார்த்திகா அதிர்ந்த நிலையிலேயே இருந்தாள்... அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை ஆனால் அவனும் இறுகி முகத்தோடு அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தான்..எதுவும் அவன் பேசவில்லை...
அவளுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது ஏறிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க அவனும் முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளுக்கு ஒன்னும் விளங்கவில்லை கல்யாண வீடு சற்று நேரத்தில் அலங்கோலமாக மாறிவிட்டது.. எங்கே மறுபடியும் இவன் கல்யாணம் செய்து கொள்ளாமல் போய்விடுவானோ என நினைத்துக் கொண்டிருக்கும் போது அவன் ,”கார்த்திகா” என அழைக்க அவளோ வந்தாள்...
."என்ன எல்லாம் பண்ணிட்டு அமைதியா நின்னுட்டு இருக்க??? அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லைன்னு உன்கிட்ட சொன்னாளா"
அதை கேட்ட அவளோ யோசித்து ,"ஆமாம்...ஆனா திருண்ணா நான் உங்கள பத்தி எல்லாமே சொல்லி அவங்களுக்கு புரிய வச்சிட்டேன்... உங்களுக்கு பிடிக்கலைன்னா எனக்கும் பிடிக்கலைன்னு சொன்னாங்க கல்யாணத்தை நிறுத்த சொன்னாங்க" என்க
அதைக் கேட்டு அவனும் ,"என்னை பத்தி உனக்கு அப்படி என்ன தெரியும்னு அவ கிட்ட சொல்லி இருக்க??? பெரிய இவ !!! அவ இப்படி ஒரு விஷயத்தை உன்கிட்ட சொன்னான்னா என்கிட்ட சொல்லனும்னு உனக்கு அறிவு இல்லையா வீட்லயாவது சொல்லி இருக்க வேண்டியதுதானே இப்படி எல்லாரையும் கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துறியா யோசிக்க மாட்டியா??" என கடுமையாக கேட்டான்...
அவளிடம் பதில் இல்லை... உண்மையில் காவியா விருப்பமில்லை என்று கூறியதை திரு அவளிடம் பேசாமல் இப்படி இருக்கிறான் என எண்ணித்தான் அவள் கூறுகிறாள் என கார்த்திகா எண்ணி விட்டாள்..
அவளுக்கு என்ன தெரியும் இவளுக்கு திருமணத்திலேயே விருப்பமில்லை இவள் வேறொருத்தனை காதலிக்கிறாள் என கார்த்திகாவுக்கு தெரியாதே அதை இங்கே விளக்கிக் கொண்டிருக்க முடியாது.
அப்படி இருக்க," இங்கே நான் அசிங்கப்பட்டு நிற்பதற்கு நீ ஒருத்தி தான் காரணம்" என அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கடுகடுத்தான்.. அவளுக்கு பதிலே இல்லை தவறு செய்த காவியாவை விட்டுவிட்டு எந்த விதத்திலும் அவன் பக்கமே வந்திராத கார்த்திகாவை பிடி பிடியென பிடித்துக் கொண்டான்...
அவன் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களுக்கும் யாரைக் குறை சொல்வது என தெரியாமல் தன் முன்னால் நிற்கும் அந்த சிறு பெண்ணை குறை கூறினான்...
இவள் ஏற்கனவே கூறியிருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டாம் அல்லவா என எண்ணிக் கொண்டிருக்க அதற்குள் மயிலாத்தாள் அழுது புலம்ப துவங்கிவிட்டார்... அவளோ ஏதோ குற்றம் செய்தவள் போல கையை பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்...
"ஐயோ கஷ்டப்பட்டு என் பேரனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய ஆசைப்பட்டேனே அதை இப்படி பாழாகி போயிடுச்சு இனி என்ன ஆகுமோ இனி அவன் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டானே நான் என்ன பண்ணுவேன்" என அவர் வாய்விட்டு கதறிக்கொண்டு இருந்தார் அதை அவனால் செவிகொடுத்து கேட்க முடியவில்லை ராமகிருஷ்ணன் மற்றும் பொன்னுசாமிக்கு கூட என்ன செய்வது என தெரியவில்லை...
"பாட்டி இங்கே என்ன எழவா நடந்துருச்சு எதுக்கு அழுதுட்டு இருக்க வாயை மூடு" என தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவன் கூற ,"சாமி உனக்கு ஒரு நல்லது பாக்காம போயிடுவேன்னு எனக்கு தோணுது ஏன் சாமி உனக்கு மட்டும் இப்படி நடக்குது??" என கேட்க கார்த்திகா திருமணம் நின்று போனதிலும் எல்லாரும் வருத்தப்பட்டு கொண்டு இருப்பதிலும் இவன் தன்னை குற்ற படுத்தியதிலும் கண்கள் நிறைந்து குனிந்து தலை நிமிராமல் நின்று கொண்டிருக்க, அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.. தன்னருகே வருத்தப்பட்டு நின்று கொண்டிருக்கும் அந்த சிறு பெண்ணை பார்த்தான்..
அவனோ அவள் அருகே நின்றபடி கண்ணை துடைத்து கொண்டு இருக்க,"யாரையாவது லவ் பண்றியா???" என கேட்டான்...
"இல்லை" என பயந்து அவள் கூறியதும் அவளின் கையை பிடித்து நேராக இழுத்து சென்றவன் மணமேடையில் அவளை அமர வைத்தான்...
சற்றும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு இருந்த பொன் மாங்கல்யத்தை எடுத்து கார்த்திகாவின் கழுத்தில் கட்டினான் திருவேந்தன்....
