வேந்தன் : 21
அத்தியாயம் : 21
அவனை தேடி சிரித்த முகத்தோடு ஓடி வந்தவளை பார்த்து," ஏன் டி லேட்???" என கேட்க,
"மாமா பிரெண்ட்ஸ் விடல ... அதுலயும் ரம்யா கெட்ட கெட்ட வார்த்தையா திட்டிட்டு இருக்கா நான் காது கொடுத்து கேட்கல ஓடி வந்துட்டேன்" என்று கூறவும் அவள் கூறிய மாடுலேஷனை பார்த்து சிரித்தான் அவன்...
"சரி எக்ஸாம் எப்படி பண்ணின???" என கேட்க
"சூப்பரா எழுதி இருக்கேன்...சொல்லி கொடுத்தது யாரு நீங்க தானே" என்று கூறியவாறே ,"என்ன இந்த பக்கம் போறீங்க???"
"ஊருக்கு போக வேண்டாமா??" என அவன் கேட்க
"போகணும் நான் இன்னும் என் டிரஸ் எல்லாம் பேக் பண்ணலையே"
" அதெல்லாம் நானே எடுத்து வச்சிட்டேன் நாம இப்பவே இங்கிருந்து கிளம்புறோம் ஓகே" என்று அவன் கூறினான்...
" அப்படியா" என கேட்டவள் முகம் சுருங்கியது... அதை கண்டும் காணாமல் ,"என்னடி ஊருக்கு போக ஐடியா இல்லையா சென்னையிலேயே செட்டில் ஆகலாம்னு நினைச்சுட்டு இருக்கியா???" என கேட்க ,"அப்படி இல்ல மாமா நாளைக்கு தானே போறோம்னு நினைச்சேன்" என்று அவள் இழுக்க
அவனோ ,"பாட்டி இன்னும் வரலைன்னு சொல்லி அங்க காட்டு கத்து கத்திட்டு இருக்காங்க புரியுதா" என்று அவன் கூறவும் ,”சரி மாமா" என அவள் குரலில் சுரத்தே இல்லாமல் அவள் கூறினாள்...அதை பார்த்தவன் உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே கண்டு கொள்ளாதது போல வாகனத்தை செலுத்தினான்...
வாகனம் சீறி பாய்ந்தது...அவளும் அவனை பார்த்து கொண்டே வர அவனோ ,"என்ன டி என்னையே பார்க்கிற??"
"ஒன்னும் இல்லை"
"இன்னியோட எனக்கு எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிருச்சு நான் படிச்சு முடிச்சிட்டேன்" என்று அவள் இழுத்து கூற,
அவனோ ,"ம்ம் குட் ரிசல்ட் வந்ததும் மாஸ்டர்ஸ் பண்றியா??" என கேட்டான் அதைக் கேட்டவளும் மனதுக்குள் பொங்கி கொண்டாள்..
அவன் வேண்டும் என்றே தான் சொல்ல அவளோ ,"வர வர மரமண்டை ஆயிட்டே வரீங்க மாமா" என வாய்விட்டு கூற, அது அவனது காதுகளில் விழுந்தாலும் அவன் விழாதது போல மேலும் அவளை சீண்டினான்…” ஏன் டி நல்லது தானே வேணும்னா அபார்டுல படிக்கிறியா???" என அவன் கேட்க
அவளோ கொதித்து,"நான் மாஸ்டர்ஸ்ஸும் பண்ணல எதுவும் பண்ணல பொள்ளாச்சி போலாம்னு இருக்கேன் அங்க போய் விவசாயம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்" என்று அவள் கடுப்போடு கூறினாள்..
அதற்கு அவனும்," குட் அதுவும் என் மனசுக்குள்ள இருக்கிற ஐடியா தான் நல்ல வேலை நீயே அதை எடுத்து நடத்துறன்னு சொல்லிட்ட இனி எனக்கு பிரச்சனை இல்லை... ரெண்டு மாடு வாங்கி தரேன் மேய்ச்சிட்டு இரு" என்று அவன் கூற அவளோ கடுப்பில் அவள் தலையில் அவளை அடித்துக் கொண்டு," இவர்கிட்ட பேசுறதுக்கு பதிலா கண்ணை மூடி தூங்கிடலாம்" என்று கண்களை மூடிக்கொண்டாள் அவனும் தன் சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டான்...
பிறகு நேராக கார் பொள்ளாச்சி அருகே அவன் ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த ரிசார்ட்டுக்குள் நுழைந்தது .. அதற்குள் அவள் கண்விழிக்க அவளுக்கு எங்கு இருக்கிறோம் என்று தெரியவில்லை...எல்லாம் இருட்டாக இருந்தது..
" எங்க மாமா இருக்கோம்" என கண்ணை கசக்கி கொண்டு கேட்க ,"இவ்வளவு லேட்டா வீட்டில் போனா அங்க எதுவும் தயாரா இருக்காது இங்கேயே சாப்பிட்டு போயிடுவோம்" என்று அவன் கூற அதைக் கேட்ட அவளோ,"சரி மாமா" என்று கூறினாள்..
பிறகு இருவரும் உணவை உண்ண அந்த இடமே மிக ரம்யமாக காட்சியளித்தது... அந்த இடத்தை ரசித்துக் கொண்டே பார்க்க," நல்லா இருக்குல்ல மாமா இருட்டிலேயே இவ்வளவு அழகா இருந்தா காலையில எவ்வளவு அழகா இருக்கும் இல்ல மாமா???" என அவள் கேட்க ,”ஆமாம்” என அவனும் கூறினான்..
இருவரும் அவர்களுக்கு தேவையான உணவை உண்டு விட்டு அவனும் அவளைப் பார்த்து ,"இங்கு இருக்க ரூமெல்லாம் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வந்துடலாமா எப்பவாச்சு நமக்கு தங்கனும்ன்னா புக் பண்ண வசதியா இருக்கும் " என்று கூற
அவளும் சரி என கூறி அவனோடு செல்ல அந்த அறையை தான் அவன் அவர்களுக்காக புக் செய்து இருந்தான்.. அது தெரியாமல் அவனோடு அவள் செல்ல அவனும் அந்த அறை கதவை திறக்க அது மிக அழகாக இருந்தது...
முதல் இரவு அலங்காரம் எல்லாம் செய்யப்பட்டு படுக்கையறை முழுவதும் பல வண்ண மலர்கள் அலங்கரிக்கப்பட்டு இருக்க அதை கண்டவள் முகம் சிவக்க இது எல்லாம் இவனின் ஏற்பாடு என அவர்கள் பெயர் படுக்கையில் எழுதி இருப்பதை பார்த்ததும் அவள் புரிந்து கொண்டாள்... அவனோ அறைக்குள் நுழைந்ததும் கதவை அடைத்து கொண்டான்...
கதவு அடைக்கவும் அவள் பின்னால் இருந்து அவளை அணைக்க அதை கண்ட அவளோ வெட்கத்தில் ,"நமக்கா மாமா இந்த ரூம்" என்க
அவனோ அவளின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து,” ஆமாம்” என்றான்...
"என்கிட்ட சொல்லவே இல்லை" என்க அவனோ, "நம்ம முதல் இரவு உனக்கு எப்போவும் மறக்க கூடாது அப்படின்னு தான் சொல்லல " என்றவன் அவளை அணைத்தபடி அந்த அறையை சுற்றி காட்டினான்...
அவள் பதட்டமாக இருக்கிறாள் என்பது புரிந்தது.. இவள் வெறும் வாய்தான் ஆனால் அருகே வந்தால் அவளிடம் இருந்து காற்று மட்டும் தான் வரும் அது அவனுக்கு நன்றாகவே தெரியும் அந்த அளவுக்கு அவன் அருகே வந்தால் அவள் திணறித்தான் போவாள்...
இந்த ஒரு வருட காலமாக பல இதழ் முத்தங்களும் பல அணைப்புகளும் பல செல்ல சீண்டல்களும் இருவருக்கும் அரங்கேறி இருக்கின்றன... அப்படியெல்லாம் அவனது தொடுகைக்கு அவன் அவளை பழக்கப்படுத்தி வைத்திருந்தாலும் அவள் அவன் அருகே வந்தால் விதிர்விதிர்த்துதான் போவாள்...
அப்படி இருக்க மெல்ல அவளின் கண்களை பார்த்தவன் ,"என்ன டி பயமா இருக்கா" என்க
அவளோ ,"இல்லை மாமா" என்க
அவளை அணைத்தவன்," இனி என் பொறுமையை சோதிக்காதே எதைப் பற்றியும் யோசிக்க முடியாத நிலைமையில நான் இருக்கேன் இந்த ஒரு தருணத்துக்காக ஒரு வருஷம் காத்திருந்தேன் இனி உன்னுடைய பயத்தை நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்" என்று கூறியவன் அவளை தன் கைகளில் ஏந்தி மஞ்சத்தில் படுக்க வைத்தான்...
அவனது வார்த்தைகளும் அவனது செயல்களும் அவளை கூச்சத்தில் தள்ள அதை கண்டுகொள்ளாமல் அவள் மீது சரிந்தவனின் இதழ்கள் அவளின் தேகம் எங்கும் அர்ச்சனை செய்ய கூச்சத்தில் நெளிந்தவளின் ஆடைகள் கூச்சமே இன்றி அவனது கைகளால் விலக்கப்பட ஒரு போர்வைக்குள் அவளும் அவனும் மட்டுமே முதலில் கூச்சத்தில் நெளிந்தவள் பிறகு அவனது தொடுகைக்கு அவளது உணர்வுகளையும் கொட்ட அதில் மனம் நிறைந்தவன் வேகம் கூட முதலில் வலியால் துடித்தவளை மெல்ல தன் மென்மையான செயல்களால் சாந்தம் செய்தவன் அவள் சரியானதும் வன்மையை கூட்ட அங்கே நதி போல சீராக அழகிய கூடல் ஒன்று அரங்கேறியது...
வீட்டுக்கு வந்த பின்னும் இரவும் பகலும் இரு நாட்களும் இருவருக்கும் தெரியவில்லை என்று தான் கூறலாம்..."ஹே கார்த்திகா என்னடி பண்றீங்க அங்க திருவிழாவுக்கு சமயம் ஆயிடுச்சு வந்ததே லேட்டு இதுல ரூம் அடிச்சிட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க" என்ன கேட்டார் பாட்டி...
"இதோ வந்துட்டேன் பாட்டி" என புடவை அணிந்தவள் கண்ணாடியில் சரியாக இருக்கிறதா என பார்க்க அவள் அணிந்த புடவைக்கு மேட்ச் ஆன கலரில் சட்டை அணிந்து கொண்டிருந்த அவனும் ,"எனக்கு திருவிழாவுக்கு வர விருப்பமே இல்லை" என்று கூற ,
"மாமா வாங்க மாமா இப்பவே லேட் ஆயிடுச்சு" என்று கூற," பேசாம எனக்கு உடம்பு சரியில்லைன்னு போய் சொல்லு போ" என்று கூற ,"அப்போ நான் வேணா போயிட்டு வரட்டுமா" என்க
" என் மக்கு நீ என் கூடவே இருந்து என்ன கவனிச்சிக்கடி" என்று கூற அவன் கடைசியாக கூறிய வரியில் முகம் சிவந்தவளோ," போங்க மாமா நேத்து நைட் இருந்து நீங்க ரொம்ப மோசமாக நடந்துக்கிறீங்க" என்று கூற
"இதுதான் பிரச்சனை நான் விலகி இருந்தாலும் ஏன் விலகி இருக்கேன்னு கேக்குற சேர்ந்து இருந்தாலும் மோசம்னு சொல்ற நான் என்னதான் பண்ணட்டும் சொல்லு" என்று திரு சிரித்தப்படி கேட்க அவனின் சிரிப்பில் தன்னை இழந்த அவளோ ,"போங்க மாமா என்னை ஏதாவது பேசிப் பேசியே கவுத்துட்டீங்க" என்று கூறியவள் அவன் மூலம் கசங்கிய புடவையை சரி செய்தபடி பேசினாள்...
அதை கேட்ட அவனோ ,"பிரம்மச்சரியத்தை விட்டு ரெண்டு நாள் முழுசா முடியல இன்னும் எவ்வளவு பார்க்க வேண்டியது இருக்கு" என்று அவன் கூறவும் அதைக் கேட்டு அவளோ நாணி சிவக்க," அடியே கார்த்திகா ஏலே திரு" என பாட்டி கத்த,
" இந்த கிழவியை என்ன பண்றேன்னு பார் " என்று கூறி விட்டு அவன் முன்னால் செல்ல அவனுக்கு பின்னாலயே வந்த அவளை பார்த்து ,"ஏண்டி கோவிலுக்கு விரசா போகணும்னு தெரியாதா" என பாட்டி திட்ட அவனும் ,"குழந்தை வேணும் குழந்தை வேணும்னு சொல்லி ஊரை கூப்பிட்டு அழுதா பத்தாது குழந்தை உருவாகிற சமயத்துல வந்து தொல்லை படுத்த கூடாது புரியுதா" என்று சிரித்தபடி கூற ,
"சீ விரசம் புடிச்சவனே" என்று பாட்டி திட்டினார்..." கோவிலுக்கு போகும் போது என்ன பேச்சு பேசறான் பாரு இவன் எல்லாம் படிச்சு என்னத்த கிழிச்சான் தெரியல" என்று வாய்க்கு வந்ததை பேசினார் பாட்டியை வம்பு இழுத்த சந்தோஷத்தில் தாத்தா பாட்டி மற்றும் தன் மனைவி அழைத்துக்கொண்டு திருவிழாவுக்கு சென்றான்..அங்கு ராமகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவியும் கலந்து கொள்ள மொத்த குடும்பமாக திருவிழாவுக்கு சென்று வந்தனர்...
அங்கு சென்று இளம் ஜோடிகள் காதலாக சுற்றி கொண்டிருக்க அதை கண்ட பெரியவர்கள் மகிழ அவன் காதலோடு அவளிடம் இருப்பதில் அவள் வாழ்க்கையே மிகவும் அழகாக மாறியது...
அப்படியே நாட்கள் சந்தோஷமாக போக, அடுத்த மூன்று மாதத்தில் அவள் கர்ப்பம் அடைந்து இருக்க அந்த வீட்டில் மகிழ்ச்சி அலை மோதியது...
அவனோ கூறவே வேண்டாம் தன் மனைவியை தாங்கு தாங்கென்று தாங்க அவளோ அவனின் அன்பில் மூழ்கி தான் போனாள்...
அவளை எந்த வேலையும் செய்யாமல் அவன் தாங்க பாட்டியோ புள்ளதாச்சி புள்ள வேலை செய்யணும் என அவளை வேலை வாங்க அங்கேயும் பாட்டிக்கும், அவனுக்கும் முட்டி கொள்ள அவளும், தாத்தாவும் தான் அங்கே இடைநின்று அவர்கள் இருவரையும் பிரித்து வைப்பர்...
எப்படியோ ஒன்பதாவது மாதம் முடிவில் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட அவளை தூக்கி கொண்டு அவன் மருத்துவமனைக்கு விரைய அவளின் பிரசவ வலியை அவனால் கண்கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை அவனால் எதுவுமே செய்ய இயலாத நிலையில் தவித்து வந்தான் அவளுக்கும் வலியால் என்ன செய்வது என தெரியவில்லை...
அப்படி இருக்க பாட்டி தான் அவனை சாமதானம் செய்தார் ராமகிருஷ்ணனின் குடும்பமும் அங்கு வந்திருந்தது அவர்களுக்கு யாரும் இல்லாததால் அவர்கள் கார்த்திகாவைவைத் தான் தங்களுடைய சொந்த மகளாக கருதினர்...
அவளும் அவர்களை தன்னுடைய பெற்றோர் ஸ்தானத்தில் வைத்து தான் பார்த்தாள்.. ஒரு வழியாக அவள் ஒரு அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள்...
குழந்தையையும் அவளையும் பார்த்த அவனுக்கு கண்களில் கண்ணீர் வந்து போக அவளுக்கு அவனுடைய அன்பில் நெகிழ்ச்சி தான் வந்தது.. பாட்டி சம்பவ இடத்திலேயே அனைத்து சாமிக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்க பெரியவர்களுக்கு மிகப்பெரிய சமாதானமாக இருந்தது.. ராமகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவிக்கும் இவன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதில் மிகவும் மகிழ்ச்சி தான்..
இப்படி அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்க தன் வாழ்க்கை எப்படி போகுமோ என திக்கு தெரியாமல் இருந்தவன் வாழ்க்கையை மீண்டும் அழகாக்கி கொடுத்த தன்னுடைய மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து ,"தேங்க்ஸ் டி" என்றான்....
அவள் முகத்தின் மீது அவனுடைய முகம் இருக்க அவனுடைய கண்களில் கண்ணீர் வருவது அவளுக்கு புரிந்தது...குழந்தையை கையில் வாங்கிய தருணம் முதல் மாயாவின் எண்ணம் அவனை வெகுவாக தாக்கியது...
மாயா தான் திரும்ப அவன் கைக்கு அவனுடைய மகளாக கிடைத்து இருக்கிறாள் என எண்ணினான்...கார்த்திகாவோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும் மாயா அவனுள்ளே மிகவும் பாதுகப்பாக தான் அவளை பாதுகாத்து வர இப்போது அவன் எதிர்பாராதது போல பெண் குழந்தை வரவும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...
அதை அவள் உணர்ந்தாலோ என்னவோ," குழந்தைக்கு மாயான்னு பெயர் வைப்போமா மாமா" என அவளாக கேட்டாள்...அதை கேட்ட அவன் உடைந்து விட்டான்...
ஏனெனில் காதலி இறந்து விட்டாலோ இல்லை ஆண்களின் காதல் தோற்று விட்டாலோ ஆண்கள் பொதுவாக ஆண்கள் அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு காதலியின் பெயரை வைத்து விடுவார்கள் அது பல மனைவிமார்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என தெரியாது அவர்களின் சம்மதத்தை கூட கேட்டிருக்க மாட்டார்கள்..
அப்படி இருக்க, அவர்களுக்கு விஷயம் பின்னால் தெரிந்தால் அவர்கள் அதை எளிமையாக எடுத்துக் கொண்டால் பரவாயில்லை..
அதுவே அவர்களுக்கு அது ஒரு வலியை கொடுத்தால் அது மிகவும் மோசமாகிவிடும்.. இவர்களோடு வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும்.
அதனால் அவன் அப்படி ஒரு எண்ணமே இல்லாமல் தான் இருந்தான்.. ஆனால் இவளாக இதை கூறவும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...
அப்படி இருக்க, மூன்று மாதம் கழிந்து ஒரு நன்னாளில் திருவேந்தன் மற்றும் கார்த்திகா அவர்களின் செல்ல மகளுக்கு மாயா திருவேந்தன் என பெயர் சூட்ட அதை கண்ட ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது..
அவர்களும் தங்களுடைய மகள் மீண்டும் அவர்கள் கையில் கிடைத்துவிட்டால் என்ற சந்தோஷத்தோடு இருக்க, அவனும் அவன் வாழ்க்கை முடியும் வரை மாயாவின் பெற்றோர்களை கைவிடப் போவதில்லை.. அவனின் சொந்த பெற்றோர்களாகத்தான் பாதுகாக்கப் போகிறான் அது வேறு விசயம் ...
அப்படி இருக்க மொத்தத்தில் திருவின் குடும்பமே மகிழ்ச்சியாக இருந்தது...அவர்கள் இதே போல மகிழ்ச்சியோடு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்தி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்!!!!
** சுபம்**
